Tuesday, December 17, 2019

திருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்?

திருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்?

தாலி கட்டுவது ஏன்?

தாலி கட்டுவது ஏன்?
-------------------------------
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.
பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

தாலியில் உள்ள ஒன்பது இழையின் குணங்கள் என்ன

பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது.
தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது.
திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
தாலியில் உள்ள ஒன்பது இழையின் குணங்கள் என்ன?
தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
மேன்மை குணம்
தொண்டு குணம்
தன்னடக்க குணம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்பொழுதும் அவன் கட்டிய தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அந்த பெண் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அர்த்தமாகும்.
பெண்ணின் மார்பில் உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி பட்டுக் கொண்டு இருக்க, அது ஒரு சீன மருத்துவ முறையில் அக்குபஞ்சர் முறை போன்று செயல்படுகின்றதாம்.

Monday, August 5, 2019

பிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.

இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், 'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் 'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள் 'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.
பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.
கும்பாபிஷேகத்தின் வகைகள்:
ஆவர்த்தம் – புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது. இது மும்மூர்த்திகளுக்காகச் செய்யப்படுகிறது.
அனாவர்த்தம் – வெகுநாட்கள் யாராலும் முறையாக பராமரிக்கப்படாமல், பூஜை, புனஷ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும் ஆலயங்களைப் புனரமைப்பு செய்து பின்னர் செய்யப்படுவது. மேலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.
புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.
அந்தரிதம் – ஆலயத்தினுள்ளே தகாத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் செய்யப்படும் பரிகாரம்.
கும்பாபிஷேகத்தில்
கும்பம் - கடவுளின் உடலையும்,
கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் - 72,000 நாடி, நரம்புகளையும்,
கும்பத்தில் ஊற்றப்படும் நீர் - ரத்தத்தையும்,
அதனுள் போடப்படும் தங்கம் - ஜீவனையும்,
மேல் வைக்கப்படும் தேங்காய் - தலையையும்,
பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள் :
அனுக்ஞை – ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
சங்கல்பம் – இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.
பாத்திர பூஜை – பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்.
கணபதி பூஜை – கணபதியை வழிபடுதல் .
வருண பூஜை – வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
பஞ்ச கவ்யம் – பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபடுதல்.
பிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.
மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடுவது.
அங்குரார்ப்பணம் – எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களை வழிபடுதல். மேலும் சந்திரனையும் வழிபடுதல்.
ரக்ஷாபந்தனம் – ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டுதல்.
கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்தல்.
கலா கர்ஷ்ணம் – விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.
யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடுதல்.
மண்டப பூஜை – யாகசாலையை பூஜை செய்தல்.
பிம்ப சுத்தி – விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.
நாடி சந்தானம் – இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.
விசேஷ சந்தி – 36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.
பூத சுத்தி – பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.
ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.
அஷ்டபந்தனம் – (மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.
பூர்ணாஹுதி – யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
கும்பாபிஷேகம் – யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.
மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.
மண்டலாபிஷேகம் – இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.
யாக குண்டத்தின் வகைகள்:
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைப்பது
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைப்பது
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைப்பது
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைப்பது
யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை
விநாயகர் - பஞ்சகோணம்
முருகர் - ஷட்கோணம்
சிவன் - விருத்தம்
அம்மன் - யோணி
பரிவாரம் - சதுரம்
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம். ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது.

Saturday, June 8, 2019

விதியை வெல்ல வேண்டுமா?

விதியை வெல்ல வேண்டுமா?
பெரியவர்களின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை​.
முன்னொரு காலத்தில் சோழ நாட்டு அரசன் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு சென்றார். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்த படி கத்தியது. அதைப் பார்த்த அரசர் பறவைகளின் மொழி அறிந்த வீரன் ஒருவரை அழைத்தார்.
இந்த பறவை என்ன சொல்கிறது? என்று கேட்டார். அதற்கு அந்த வீரன் அரசே! அந்தப் பறவை நம்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உழவன் ஒருவர் புல் வெட்டுவதற்காக வருவார். அவர் பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று சொன்னது! என்றான்.
அப்போது கையில் அரிவாளுடன் உழவன் ஒருவர் அந்த வழியாக சென்றார். பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. மீதியும் நடக்கிறதா? என்று அறிய ஆவல் கொண்டார் அரசர். அதற்காக தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினார். மாலை நேரம் வந்தது. தலையில் புல் கட்டுடன் அந்த உழவர் திரும்ப வந்தார். இதைப் பார்த்த அரசர் குறி சொன்ன வீரனை அழைத்தார்.
இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்து விட்டதா அல்லது இவன் எமனை ஏமாற்றி விட்டானா? உன்னால் எனக்கு ஒரு நாள் வீணாயிற்று. சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான். காரணம் சொல். இல்லையேல் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது! என்று கோபத்துடன் கத்தினார்.
அந்த வீரன், அரசே! பறவை சொன்ன மொழி இது வரை தவறியது இல்லை. இவர் உயிர் பிழைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். இவரை விசாரித்தால் உண்மை தெரியும்! என்றார்.
உழவர் தலையில் புல் கட்டுடன் அவர்கள் அருகில் வந்தார். அந்தப் புல் கட்டில் அரிவாள் ஒன்று செருகப் பட்டு இருந்தது. உழவனே! புல் கட்டைக் கீழே போடு! என்றார் அந்த வீரன். அவரும் புல் கட்டைக் கீழே போட்டான். புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் கட்டியிருந்த கயிறு அறுந்தது. உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வெட்டப் பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது.
இதைப் பார்த்து எல்லாரும் வியப்பு அடைந்தனர். அந்த வீரன், அரசே! இந்தப் பாம்பு இவரைக் கொல்ல வந்திருக்கிறது. இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை? என்றான். அந்த உழவனைப் பார்த்து அரசன், நீ புல் வெட்டக் காட்டிற்குள் சென்றாய். அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா? என்று கேட்டான்.
அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை. வழியில் முதியவர் ஒருவர் வந்தார். நான் அவரைப் பணிவாக வணங்கினேன். நீடூழி வாழ்க என்று என்னை வாழ்த்தினார்! என்றார் அந்த உழவர்.
இதைக் கேட்ட அந்த வீரன், அரசே! அந்த முதியவரின் வாழ்த்து தான் இவரைக் காப்பாற்றி உள்ளது. உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை! என்றார். அதை ஏற்றுக் கொண்ட அரசர் அந்த வீரனுக்கும், உழவனுக்கும் பரிசு அளித்து சிறப்பித்தார்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

அலெக்சாண்டரிடம் இந்தியாவிலிருந்து வரும் போது,நான்கு வேதங்களையும் எடுத்து வருமாறு அவருடைய குரு கேட்டுக் கொண்டார்.யாரிடம் இந்த வேதங்கள் உள்ளன என்று விசாரித்ததில் ஒரு பிராமண குடும்பத்தில் இருப்பதாகவும் அதை அவர்கள் நிச்சயம் தர மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.
அலெக்சாண்டர் படையுடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டு நான்கு வேதங்களையும் கொடுக்காவிடில் வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டினார். குடும்பத் தலைவன், மறுநாள் காலை தருவதாக வாக்களித்தான்.
இரவு குறிப்பிட்ட பிரார்த்தனை செய்த பின் தான் தர முடியும் என்று கூற அவர்களால் தப்பிச் செல்ல முடியாது என்ற நிலையில் அலெக்சாண்டர் அதற்கு ஒத்துக் கொண்டார்.
மறுநாள் காலை அலெக்சாண்டர் வீட்டினுள் சென்று பார்த்த போது,நான்கு வேதங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.'நீ என்ன செய்கிறாய்?'என்று அவர் வினவ,குடும்பத்தலைவன் சொன்னார்,
''இந்த நான்கு வேதங்களும் நெருப்புக்கு இரையாகி விட்டன.இங்கே இருக்கும் நால்வரும் என்னுடைய மகன்கள்.இரவு முழுவதும் இந்த வேதப் புத்தகங்களை நான் படிக்க,அதை இவர்கள் கவனமாகக் கேட்டு ஞாபகத்தில் வைத்துள்ளனர்.
நீங்கள் இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ''கவனித்துக் கேட்டது அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலுமா? அலெக்சாண்டரால் நம்ப முடியவில்லை.
வேறு சில பிராமணர்களை வரவழைத்து இவர்கள் ஞாபகத்தில்வைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பதனை சோதித்துப் பார்த்தார்.
அவர்கள் வேதத்தில் உள்ளதை எழுத்துப் பிசகாமல் திரும்பச் சொன்னார்கள். எப்படி அவர்களால் அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிந்தது? இதன் ரகசியம்.
இது தான்; உங்கள் ஞாபக சக்தியில் 90% பயனற்றவைகளாக இருக்கின்றன. நீங்கள் குப்பைகளையெல்லாம் மறந்து போகக் கூடிய தகுதி உள்ளவர்களாக இருந்தால், பிறகு எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி வந்து விடும்.
பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் நன்கு வாதங்களை மட்டுமல்ல,அதற்கு மேலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது.
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம். சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.
சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை, குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள். உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.
            மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.
                           -ஓஷோவின் பாரத தேசத்தின் சொத்து வேதங்கள் உரையில் இருந்து.....

கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்

கையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
 
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் செம்பு காப்பு அணிவது நீங்கள் எதிர்பார்க்காத பல பலன்களை வழங்கக்கூடும். இந்த பதிவில் செம்பு காப்பால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
காப்பர்:
********
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது உடலின் அத்தியாவசியமாக உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆர்திரிடிஸ்:
**************
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செம்பு காப்பு அணிவது எலும்புகள் தேய்மானம் அடைவதை தாமதப்படுத்துகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு:
*********************
செம்புக்கென்று ஒரு தனிவரலாறு உள்ளது. நமது முன்னோர்கள் காலத்திலே காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆன்டி பாக்டீரியாவாக செய்லபடும் இது உடலில் இருக்கும் 99 சதவீத பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கிறது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. அதற்கு செம்பு காப்பு சிறந்த தேர்வாக இருக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலம்:
***************************
இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும், இதனால் நமது உடல் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு ஆகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்டிஆக்ஸிடண்ட்:
***********************
நமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் நமது இணைப்பு திசுக்களுக்கு மட்டுமின்றி நமது எலும்புகள் மற்றும் தோலின் கட்டமைப்பிற்கும் உதவுகிறது. வயதாவதை தாமதப்படுத்துவதற்கும்சருமத்தில் சுருக்கங்களை குறைப்பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.
கார்டியோவஸ்குலர் ஆரோக்கியம்:
**************************************
உடலில் தாமிர குறைபாடு என்பது உயர் இரத்த அழுத்தத்திற்கும், கொழுப்பிற்கும் காரணமாக அமைகிறது . ஆய்வுகளின் படி தாமிர குறைபாடு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிகளவு தாமிரமும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே மிதமான அளவில் தாமிரம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நரம்பு மற்றும் மூளை செயல்பாடு:
************************************
சமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அல்சைமர் நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்

அதிகாலையில் கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க

அதிகாலையில் கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்…!

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு…!! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்.
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!
‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை “”Ora Science””என்று சொல்வாங்க!!
எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)….. இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள்!!!
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!
இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே அதிர்வுகளாக (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! இதுவும் அறிவியல்தான்!!
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!
அனைவருக்கும் பகிருங்கள்

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.
மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.
கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.
இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.
மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.
மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.
மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.
இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.
கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.
பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.
பூஜைவேளையில் கோயிலில் 
காண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும்.
பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும்.
 இறைவன் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும்
ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.
புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது.
இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் "ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி" என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.
மணியோசை எழுப்பும் இடத்தில்
தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி
ஒலிப்பது நன்மை தரும்.

பொய் விளக்கு வேண்டாம்:-

பொய்(நெய்)விளக்கு வேண்டாம்:-
நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம்  ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல் …..
ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …
இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:
அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள் …
முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?
இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி,ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?
உண்மையான பசு நெய் கொண்டு, ஏற்றப்படும் விளக்கின் ஒளி, ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும். அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.
ஆனால் இந்தமாதிரி, தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதை கவனியுங்கள்.
முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி, அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற
“நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்போழுது, நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை... கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவ செயல்களை செய்ய வேண்டாம்.
நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட, அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…
மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..
              
பொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!!!
                      ஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன  வேறுபாடு?l

Friday, June 7, 2019

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை.
தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த வைகாசி விசாகம் நாளில் தெரிந்து கொள்வது அவசியம். தூய்மையாக ஓடும் ஆறுகளையும், சுத்தமான குளங்களையும் சீரழித்து தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறோம். தண்ணீரை சுத்தமாக பாதுகாத்தால் அந்த முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். வைகாசி விசாகம் இன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.
பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருநாளின் முக்கிய அம்சமாக இன்றைக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. வைகாசி விசாகம் புராண கதை பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார். மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

#சிலர் காலில் கறுப்பு கயிறு கட்டிகொள்வது ஏன் தெரியுமா..?

##சிலர் காலில் கறுப்பு கயிறு கட்டிகொள்வது ஏன் தெரியுமா..?
பலர் கறுப்பு நிறத்தை துக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடை அணிய மாட்டார்கள்.
ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆபத்தா? எனக்கேட்டால் கிடையவே கிடையாது. அவ்வாறு கட்டி கொள்வதால் நம்மை சுற்று தீய சக்திகள் நெருங்காது. அதேபோல் செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. அது மட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.
கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.
கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும். நீண்ட கால தீராத நோய் இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும். இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.
எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும். பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகப் சிறப்பு.
         - மஹா மந்த்ர போதிணி நூலில் இருந்து..
பலர் கறுப்பு நிறத்தை துக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடை அணிய மாட்டார்கள்.
ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆபத்தா? எனக்கேட்டால் கிடையவே கிடையாது. அவ்வாறு கட்டி கொள்வதால் நம்மை சுற்று தீய சக்திகள் நெருங்காது. அதேபோல் செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. அது மட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.
கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.
கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும். நீண்ட கால தீராத நோய் இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும். இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.
எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும். பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகப் சிறப்பு.
         - மஹா மந்த்ர போதிணி நூலில் இருந்து..

Thursday, May 30, 2019

அம்மனுக்கு பொங்கல் பொங்குவது ஏன்
அம்மனுக்கு பொங்கல் பொங்குவது ஏன்?


பொங்கல் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களுக்கு ஒப்பிடுகின்றனர். மண்பானை என்பது நிலம், அதில் நிரப்பப்படுகின்ற தண்ணீர், பற்ற வைக்கப்படுகின்ற நெருப்பு, அது எரிய துணைபுரிகின்ற காற்று, அதன் புகை செல்கின்ற ஆகாயம் என்று பஞ்ச பூதங்களும் பொங்கலுடன் நிறைந்து நிற்கிறது.

 பச்சரியில் பசு நெய் ஊற்றி, அதனுடன் வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலம் சேர்த்து மணக்க மணக்க பொங்கல் வைப்பார்கள். இந்த பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்கின்றனர் முன்னோர்கள். பச்சரியும் பசுநெய்யும்... பொங்கல் வைக்க பச்சரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். பச்சரிசி என்பது ஒருவரது பக்குவமில்லாத நிலையை காட்டுகிறது. அது பொங்கி வெந்த உடன் சாப்பிடும் நிலைக்கு வந்து விடுகிறது.

அரிசியுடன் வெல்லம், நெய், ஏலம், சுக்கு, உலர் திராட்சை என்ற அன்பு, அருள், சாந்தம், கருணை உள்ளிட்ட நல்ல குணங்களையும் கலந்து விடும்போது அது அருட்பிரசாதமாகி விடுகிறது.

மனம் என்ற அடுப்பில் இறை சிந்தனை என்ற நெருப்பை பற்ற வைப்பதின் மூலம் அது ஆண்டவன் விரும்பும் நிவேத்தியமாகிறது.

Monday, May 27, 2019

மடிப்பிச்சை எடுப்பது ஏன்

வீடுகளில் மடி ஏந்தி பிச்சை எடுக்க செல்வதால் ஒருவனுக்கு உள்ள தான் என்ற அகங்காரமே இல்லாமல் போக வேண்டும் என்ற எண்ணதினாலும் தன்னை மிஞ்சினவன் எவனும் இல்லை என்ற எண்ணமே மானிடனுக்கு வரக கூடாது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க பிச்சை எடுத்து திருப்பதி செல்வது விசேஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது

Sunday, May 19, 2019

ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்

ஆசிர்வாதம் மூலம் அனைத்து
செல்வங்களும் பெறலாம் ..!!
நாம வீட்ல உள்ள பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது உண்டா..?
சில வீடுகள்ல பொறந்த நாள், கல்யாண நாள், வெளியூர் வெளிநாடு போறப்ப, தீபாவளி அன்னிக்கு புது புடவை கட்டினப்ப இது மாதிரி சந்தர்ப்பங்கள்ல பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது உண்டு.

பெரியவங்க - வயசானவங்க - கால்ல விழுந்து ஆசி பெற்றால் நம்ம சக்தி அதிகப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.
அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல.. ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விஷயம் இருக்கிறது.
100 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..அவர் தீர்க்காயுசா இருப்பா என்றார். ரெம்பவே  சந்தோஷமா இருந்துச்சு ..! 
ஐயா எவ்வளவு நாளா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி பண்றீங்க என்றேன்.
அது ஒரு 30 - 40 வருசமா அப்படித்தான் ஆசி பண்றேன் என்றார்.
அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்..!!.
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.
அய்யோ என் கால்ல போய் விழுந்துட்டு என பதறுவர்.
இதெல்லாம் தவறு. ஆசி வழங்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும் ,தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி வழங்கலாம் ...
வயதானவர்கள், சகல தோசங்களும் நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் , நீண்ட ஆயுளுடன் வாழுங்க  -- "வாழ்க வளமுடன்" -- என்று ஆசிர்வாதிக்கலாம் ...
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள்.
அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை வந்து சேரும்..இது பிரபஞ்ச விதி .
"வாழ்க வளமுடன்"  என்பது ஒரு மந்திரச் சொல்லாகும்..!  இப்படி வாழ்த்துவதால் பிரபஞ்சசக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை..
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின்படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது -  வாய்ப்பு கிடைத்தால்  - அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.
மேலும் சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது.
பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது.
பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள் ..!
உங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, May 15, 2019

பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?


பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

 

இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

 

இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.

 

மூக்கில் பஞ்சு வைப்பது

இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

 

விளக்கேற்றுவது

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

 

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

 

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

 

மூங்கில் பாடை

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

 

கால்கள் சேர்த்து கட்டப்படுவது

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

 

மண்பானை

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை