Monday, August 31, 2015

சம்ஸ்க்ருதமும்,தமிழும் சைவத்தின் இரு கண்கள்

சம்ஸ்க்ருதமும்,தமிழும் சைவத்தின் இரு கண்கள்
சம்ஸ்க்கிருதம்,தமிழ் ஆகிய இரு மொழிகளையும் எமக்கருளியவர் சிவபெருமான் என்பதை முதலில் சைவர்கள் நன்றாக கருத்தில் கொள்ளவேண்டும். இன்று தாம் சைவர்கள் என்று கூறுவோர் பலர் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது மனம் வேதனையடைகிறது. காரணம் சைவரல்லாதவர்கள் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிக்கலாம், ஆனால் சைவர்கள் அவ்வாறு செய்வது தன தலையிலேயே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலை ஒக்கும். சம்ஸ்க்ருத பாஷையை வெள்ளையர்கள் படித்து நூற்களை எழுதுவதைப் பார்த்த பிறகும் சைவர்கள் அதைப்படிக்காமல் அல்லது சம்ஸ்க்ருத மஹிமையறியாது இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
சம்ஸ்க்ருதம் என்பது ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதல்ல அது சத்சைவர்கள் வாழும் இடமெங்கும் உயிரோட்டமாக இருக்கும். நன்னூல் சேனாவரையம் முதலிய இலக்கண நூல்கள் சம்ஸ்க்ருதம் எல்லா தேசத்திற்கும் பொது என்று கூறுகின்றன. திருமுறையாசிரியர்களும்..
• “ஆரியத்தோடு செந்தமிழ் பயனறிகிலா அந்தகர்
• ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
• செந்தமிழோடாரியனைச் சீரியானை
• ஆரியந் தமிழோடிசை யானவன்
• வடமொழியுஞ் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்
• வடசொலும் தமிழ்ச்சொலும் தாள் நிழல் சேர”
என்றெல்லாம் கூறியிருப்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். இதுவரையில் நம் நாட்டில் மற்ற சமயங்களால் தான் சைவசமயத்திற்கு கஷ்டங்கள் நேர்ந்ததை வரலாற்றால் அறிகிறோம். ஆனால் இன்றோ ஒரே சமயத்துக்குள் இருந்துகொண்டு மொழியின் பெயரால் அழகிய சமயத்தை பிரிக்க நினைக்கும் இவர்களை பார்க்கும் பொழுது இது கலியின் கொடுமையோ ஆணவத்தின் வலிமையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இவர்கள் எல்லாம் சிவபக்தர்கள் தானா என்றும் ஐயம் உண்டாகிறது. சம்ஸ்க்ருதம் சைவர்களுக்கு தேவை இல்லை என்றால் ஞானசம்பந்தப்பெருமான் முதல் சிவனடியார்கள் அனைவரும் அதைப் போற்றுவானேன்? சிந்தியுங்கள். உண்மைநூற்களை படியுங்கள்.தெளியுங்கள். பிறரால் பேசப்படுவதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மை என்று நம்பாதீர்கள். உண்மை என்ன என்று நீங்களும் ஆராயுங்கள்.
சைவசமயம் சார்பான சம்ஸ்க்ருத நூற்கள் பல இன்னும் வெளிவராமல் ஓலைச்சுவடிகளாகவே இருக்கின்றன. காரணம் நம் நாட்டுச் சைவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நூல் என்று ஒதுக்குகின்றனர், அவற்றை வெளியிடுவதும் சத் சைவர்கள் கடனே. இதுவரை எளியேனால் கூறப்பட்ட கருத்துக்களை மனத்தில் கொண்டு
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்னும் பொய்யாமொழிக்கிணங்க திருமுறைகள்,மெய்கண்ட சாஸ்த்திரங்கள், தாயுமானவர், அருணகிரிநாதர் போன்ற அநுபூதிச் செல்வர்களின் நூற்களில் எங்காவது ஓரிடத்தில் சம்ஸ்க்ருதம் சைவர்களுக்கு அல்ல என்றோ அது வடநாட்டிற்குரியது என்றோ கூறுகிறார்களா என்று ஆராயுங்கள். அப்படியொரு கருத்தை உங்களால் காணவே முடியாது.
சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்து சைவத்தையும், தமிழையும் போற்றிவளர்த்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆகியோரது நூற்களைப் படியுங்கள். உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். பிறகு குறுகிய மனம் படைத்து இக்காலத்து அறிஞர்கள் சிலரின் நூற்களைப் படியுங்கள். சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை மறைக்கமுயலும் அவர்களது இயல்பு உங்களுக்குத் தானாகவே விளங்கும்.
“சமயம் நமக்கு என்ன செய்தது என்று பார்க்காமல் சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்” இதனை மையமாக கொண்டு சைவசமயம் வளர ஒவ்வொரு சைவரும் தங்களால் இயன்றளவும் பணியாற்ற வேண்டும். அதுவே நமது கடன். இவைகளை செய்தால் மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சாந்தி செய்வது ஏன்,

சாந்தி செய்வது ஏன்,
ஆகமங்களிலும் புராண தர்ம சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு உரியனவான 41சடங்குகள் சொல்லப் பட்டிருக்கிறது. இவற்றில் பல சடங்குகள் மனிதன் குழந்தையாக, பாலகனாக இருக்கும் போதிலிருந்து யௌவனப் பருவம் வந்த ஒரு பெண்னை பாணிக்ரஹணம் என்று கைகோர்த்து சேர்த்து வைக்கும் வரை அவருடைய தகப்பனார் செய்யக் கூடியவை. மற்ற ஏனைய சடங்குகள் அவனே முன்னின்று ஏற்று நடத்தக் கூடியவை.
"ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்" என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்" என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும். 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு " பீமரத சாந்தி " எனும் சடங்கு செய்தல் வேண்டும்.
78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன" சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று பெயர் பெற்ற சடங்காகும். இது "அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்" எனப்படும்.
இவற்றில் ஷஷ்டியப்த பூர்த்தி செய்வதில் ஆகமப்படியும் புராணப்படியும் 5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 என்ற கிரமத்தில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் நடத்தப்படுகிறது. பிரதானமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக ப்ரும்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்சிரஞ்சீவிகள், ஆயுள்தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்ரஹும், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜைகள் சிறப்பானதாகும். இதில் சிவதீட்சதை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவ பூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும் பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1 ம், பஞ்சகங்கைக் கலசங்களாக 5 அல்லது 1 ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது சிறப்பாகும். அதன்பிறகு தைலதானம், ஆஜ்யதானம், உதகபாத்ரதானம், வஸ்திரதானம், நவதான்யதானம், பூதானம், கோதானம், திலதானம், தீபதானம், ருத்ராட்சம் அல்து மணிதானம் என்னும் தசதானம் செய்து உமா மகேஷ்வர பூஜை என்னும் வயோதிக தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
இப்படி விதிக்கப்பட்டுள்ள சாந்திகளை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது.

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.7. தெய்வீகத்தன்மை,சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்குநல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள

நாம் பேசுவதை பற்றி விதுரர் சொன்னது .

நாம் பேசுவதை பற்றி விதுரர் சொன்னது ....
விதுரர் எம தர்மராஜரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.
பேசுவதில் சிறந்தது எது என விதுர நீதியில் விதுரர் என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்..
நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும்.
மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.
படித்து ரசித்தது .....

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும்

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் .
* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரி ப்பதுநல்லதா
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

Sunday, August 30, 2015

ஆணும் பெண்ணும் சமம் அல்ல;;

ஆணும் பெண்ணும் சமம் அல்ல;;;
----------------------------------------------------
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால்,
தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில்
பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும்.
( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில்
ஒரு பணியை செய்யக்கூடியவகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால்
தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில்
பேச முடியாது! ( அவர்களின் கவனம்
தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும்.
இரண்டிலும் இருக்காது! )
மொழி;
----------
பெண்களால் இலகுவாக பல
மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த
மொழி பெயர்ப்பாளர்கள் பலர்
பெண்களாக இருக்கின்றார்கள். 3
வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும்
போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும்
மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
----------------------------------------------------------------
ஒரு பிரச்சனையை அல்லது பல
பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய
படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில்
பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.
அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான
தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின்
மூளையால் இலகுவாக
ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால்
இதை செய்ய முடியாது.
அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும்
உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்;
------------------------------
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட
இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல்
நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால்
முடியும்.
ஆனால், பெண்களின்
மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின்
“ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும்
போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும்.
பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும்.
அதனால் வாகனங்களை செலுத்துவதில்
பெண்கள்
சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).
பொய்ப்பேச்சு;
-----------------------
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய்
என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள்.)
காரணம் பெண்கள் பேசும் போது 70% முக
மொழியையும் 20% உடல்
மொழிகளையும் 10% வாய்
மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின்
மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்:
-------------------------------------------
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும்
தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும்
தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.
இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள
ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக
பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம்
தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக
திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர்,
பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள்
நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்:
-------------------
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய
செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை:
------------------------------
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/
உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில்
பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில்
கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்;
---------------------
பெண்கள் உரையாடும் போது மறைமுக
மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆனால், ஆண்கள்
நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.
நடவடிக்கை;
---------------------
பெண்கள் சிந்திக்காமல் அதிகம்
பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம்
செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

Friday, August 28, 2015

வரலக்ஷ்மி விரதம்

வரலக்ஷ்மி விரதம்
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
விரத முறை: இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
விரதம் பிறந்த கதை
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண
மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து
வந்தாள்,
அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது.
மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்
புரிந்தாள். என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பவன் என்று சாருமதிக்கு அருளிய
வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியேச் செய்தாள்
சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பது ஏன்?

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பது ஏன்?
ம்

பொய்யால் ஏற்படும் தீமைக்கு அளவில்லை. இதன் கொடுமையைத் திருவள்ளுவர், பொய்யை மனதால் நினைப்பதும் கூடாது என்று குறிப்பிட்டார். "உள்ளத்தால் உள்ளலும் தீதே' என்கிறார் அவர். இதனை உணர்ந்தே பெரியவர்கள், "பொய் சொன்ன வாய்க்கு போஜனம்
(உணவு) கிடைக்காது என்றார்க

Thursday, August 27, 2015

குற்றம் செய்து விட்டால் கடவுளிடம் மன்னிப்பு கேட்பது, பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பது இதில் எது சரி?

 குற்றம் செய்து விட்டால் கடவுளிடம் மன்னிப்பு கேட்பது, பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பது இதில் எது சரி?
ஒரு முறை செய்தால் தவறு. அது தொடர்ந்தால் தப்பாகி விடும். தவறைத் திருத்திக் கொள்ளும் முயற்சியே மன்னிப்பு கேட்பது. தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையில் இருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்டவரிடம் கேட்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே, கடவுளிடம் மன்னிப்பு கேட்கலாம்

எந்த திசை நோக்கி சாப்பிடுவது சிறப்பானது

எந்த திசை நோக்கி சாப்பிடுவது சிறப்பானது?
கிழக்கு நோக்கி சாப்பிட ஆயுள் வளரும். மேற்கு என்றால் செல்வமும், தெற்கு என்றால் புகழும் உண்டாகும். வடக்கு நோக்கி சாப்பிடக் கூடாது. 

பவுர்ணமி தவிர எந்த நாட்களில் கிரிவலம் செய்யலாம்?

பவுர்ணமி தவிர எந்த நாட்களில் கிரிவலம் செய்யலாம்?
எல்லா நாளும் ஏற்றவை தான். இருந்தாலும், பவுர்ணமியன்று புனிதமான மலைகளின் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அன்று தேவர்களும் பூலோகத்திற்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். திங்கள்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் பகலில் கிரிவலம் செல்வது சிறப்பு
எல்லா நாளும் ஏற்றவை தான். இருந்தாலும், பவுர்ணமியன்று புனிதமான மலைகளின் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அன்று தேவர்களும் பூலோகத்திற்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். திங்கள்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் பகலில் கிரிவலம் செல்வது சிறப்பு

வயதான எனக்கு எமதர்மனின் ஸ்லோகம் இருந்தால் சொல்லுங்கள்?

வயதான எனக்கு எமதர்மனின் ஸ்லோகம் இருந்தால் சொல்லுங்கள்?.
வயதான காலத்தில் நிம்மதியாக வாழ மிருத்யுஞ்ஜய, நரசிம்ம ஸ்தோத்திரங்களைப் படிக்க வேண்டும். மரண பயமில்லாமல் இறைவனடி சேர தினமும் கோவிலுக்குச் செல்லுதல், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், மற்றவர் மனம் புண்படாமல் நடத்தல் வேண்டும். எம பயம் நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, எமனுக்கென ஸ்லோகம் சொல்லி திருப்தி செய்யத் தேவையில்லை. 

கல்வித்தடை நீங்க எந்த வழிபாடு மேற்கொள்ள வேண்டும்?

கல்வித்தடை நீங்க எந்த வழிபாடு மேற்கொள்ள வேண்டும்?
.

சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தியும், சரஸ்வதியும், பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோரையும் வழிபட கல்வியறிவு வளரும். நல்ல முயற்சியுடன் படிப்பவர்களுக்கு இந்த வழிபாடு உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்கும்.

தீமையும், நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?

தீமையும், நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?
கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்று வரி இது. நமக்கு உண்டாகும் நன்மை, தீமைக்கு காரணமாக மற்றவரை நினைப்பது உலக இயல்பு. ஆனால், உண்மையில் நாம் செய்த முன்வினைப் பயன் காரணமாகவே நன்மை, தீமை உண்டாகிறது.எல்லா ஊரும் நம் ஊரே! 
எல்லாரும் நம் உறவினரே என உலகத்தையே ஒரே குடும்பமாக கருதினால் தீமைக்கு இடமில்லை.

யோகா ஆன்மிகம் சார்ந்ததா அல்லது அறிவியல் சார்ந்ததா?

யோகா ஆன்மிகம் சார்ந்ததா அல்லது அறிவியல் சார்ந்ததா?
யோகாசனம் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். அஷ்டாங்க யோகம் என்னும் எட்டு படிகளில் யோகாசனம் முக்கியமானது. நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டி உடலின் இயக்கத்தை இது சீர்படுத்துகிறது. ஆன்மிகம், அறிவியல் அடிப்படையில் அமைந்த இதற்கு இணையான உடற்பயிற்சி வேறு ஏதுமில்லை. மகரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்ட யோகப்பயிற்சியை பல நாடுகள் ஏற்றுள்ளன

பணப்பெட்டியை வீட்டில் எந்த மூலையில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டு

 பணப்பெட்டியை வீட்டில் எந்த மூலையில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?
வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கில் பணப்பெட்டி வைக்கும் இடம் அமைய வேண்டும். வடக்கு நோக்கி வைத்தால் உத்தமம். அது குபேர திசை. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.

திருப்பதியை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே

திருப்பதியை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே....
"ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை! ஈரேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை' என்று பக்தர்கள் நாளும் அலைமோதும் திருப்பதியின் மகிமையை ஆழ்வார்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். திருப்பதிக்குச் சென்றவர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு இருப்பது அனுபவ உண்மையே. இதனையே, "திருப்பதி சென்றால் வாழ்வில் திருப்பம் நேரும்' என்று சொல்லி வைத்தனர். 

நீறில்லா நெற்றி பாழ் என்னும் அவ்வையின் வாக்கை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?

நீறில்லா நெற்றி பாழ் என்னும் அவ்வையின் வாக்கை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?
திருநீறுக்கு "ஐஸ்வர்யம்' என்று பெயர். இதை அணிந்தால் செல்வம் பெருகும். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயைப் போக்க சம்பந்தர் திருநீறு கொடுத்து அருள்புரிந்தார். அது போல நாமும் திருநீறு பூசினால் நோய் உண்டாகாது. திருநீறு பூசியதும் சம்பந்தரின் திருநீற்றுப்பதிகத்தை படிப்பது விசேஷமான பலனைக்கொடுக்கும். 

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன?

 சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன? 
"சரவணம்' என்றால் தர்ப்பை. "பவ' என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் "சரவணபவ' என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன. அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

* கணவரை இழந்த தாயிடம் முதலில் ஆசி வாங்கலாமா?

* கணவரை இழந்த தாயிடம் முதலில் ஆசி வாங்கலாமா?
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ... என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா! "மாத்ரு தேவோ பவ' என்று வேதம் அம்மாவை முதல் தெய்வமாகப் போற்றுகிறது. தன் குழந்தை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்த தாய்க்கு இணை யாருமில்லை. எந்த நிலையிலும் தாயே முதல் தெய்வம். தாயிடம் ஆசி பெற்ற பின்பே மணவாழ்வைத் துவங்க வேண்டும்

தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபலம் உண்டாகுமா?

 தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபலம் உண்டாகுமா?
திருமணம், புத்திரப்பேறு, தொழில் வளம், பொருளாதாரம் சிறக்க குரு பகவானின் அருள் தேவை. இதையே குருபலம் என்று குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் ஒன்றான இவருக்கு தேவகுரு என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இவர் பெயர்ச்சியாகிறார். சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி உலக குருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உலக குருவை வழிபட்டால், தேவகுருவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?

 தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?
செய்ததை பாவம் என்று உணர்வதே சிறந்த பரிகாரம் தான். இனி வாழ்வில் பாவச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியெடுத்தாலே போதும். அன்னதானம், பிதுர் தர்ப்பணம், தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு, பசு தானம் போன்ற புண்ணிய செயல்களாலும் பாவம் நீங்கும். கங்கையில் நீராடுவதை சிறந்த பாவநிவர்த்தி பரிகாரமாக சாஸ்திரம் கூறுகிறது.

தெற்கு பார்த்த வாசல் வீட்டை சிலர் விரும்புகிறார்களே! ஏன்?

தெற்கு பார்த்த வாசல் வீட்டை சிலர் விரும்புகிறார்களே! ஏன்?
"வடக்கு பார்த்த மச்சைக் காட்டிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு மேல்' என்று ஒரு சுலவடையே சொல்வதுண்டு. தென்றல் வீசுவது தெற்கில் இருந்து தான். தெற்கு பார்த்த வீட்டிற்குள் காற்றோட்டம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது. "வாயு புகாத வீட்டில் வைத்தியம் புகுவான்' என்பது இதனால் தான்.

பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்?

பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்?
தேய்பிறை அஷ்டமியன்று ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை, விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். விரத நாளில் காலையில் நீராடி பைரவருக்கு மலர் சூட்டி பால் பாயாசம், சுண்டல், பழங்கள் நைவேத்யம் செய்து வழிபடுங்கள். ஞாயிறன்று ராகு காலத்திலும்(மாலை 4.30- 6.00) இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அமாவாசை, பவுர்ணமி இரண்டில் சிறப்பாக வணங்க தனித்தனி தெய்வங்கள் உள்ளனவா?

அமாவாசை, பவுர்ணமி இரண்டில் சிறப்பாக வணங்க தனித்தனி தெய்வங்கள் உள்ளனவா?
தேய்பிறையின் முடிவு அமாவாசை. வளர்பிறையின் முடிவு பவுர்ணமி. சிவம் என்பது ஒடுங்குதல்(தேய்தல்) தத்துவம். சக்தி என்பது விரிதல்(வளர்தல்) தத்துவம். விதை நிலையில் உயிர் சிவமாக ஒடுங்கி இருக்கிறது. அதே விதை வளர்ந்து மரமாகி விரியும் போது சக்தி பெருகுகிறது. இதன் குறியீடாகவே சிவராத்திரியை ஒரு நாளும்(ஒருமை), நவராத்திரியை ஒன்பது நாளும்(பன்மை) கொண்டாடுகிறோம். அமாவாசையில் சிவனையும், பவுர்ணமியில் அம்பிகையையும் வழிபடுவது சிறப்பு.

கோவிலில் பிறர் ஏற்றி வைத்த விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா?

கோவிலில் பிறர் ஏற்றி வைத்த விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா? 
மிகவும் புண்ணியம். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோவில் கருவறையில் ஒரு எலி திரிந்து கொண்டிருந்தது. அங்கே விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அதிலிருந்த நெய்யைக் குடிப்பதற்காக விளக்கில் எலி ஏற, அதன் மூக்கு திரியில் பட்டு அணைய இருந்த தீபம் சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த புண்ணியம் காரணமாக மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பு எடுத்து, திருமாலின் திருவடியை அடையும் பேறு பெற்றது. இதன் அடிப்படையில், அணைந்த தீபத்தை ஏற்றி வைப்போருக்கு சக்கரவர்த்தி யோகம் உண்டாகும் என்பதை அறிய முடிகிறது.

பக்தியில் ஈடுபட முடியாது என்று மறுக்கும் இளைஞர்கள் பற்றி

பக்தியில் ஈடுபட முடியாது என்று மறுக்கும் இளைஞர்கள் பற்றி...
ஆடம்பரம், கவர்ச்சி என இந்தக் காலத்தில் இளைஞர்கள் மணிக்கணக்காக பயனற்ற விஷயத்தில் ஈடுபடுகின்றனர். தினமும் அரை நிமிடமாவது கடவுளை நினைக்க வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். காலையில் எழும் போது "முருகா, ஜனார்த்தனா, 
நமசிவாய' என்று ஒரு விநாடி கூட சொல்லவா இவர்களுக்கு நேரமிருக்காது... பக்தி இல்லாதவனை உயிரற்ற ஜடப்பொருளாகவும், அறிவற்ற முட்டாளாகவும் குறிப்பிடுகிறார் அருணகிரியார். இளமையில் பொருளுடன் அருளையும் தேட வேண்டியது கடமை. 

விஞ்ஞான வளர்ச்சியால் ஆன்மிக ஈடுபாடு குறைந்துள்ளதா?

விஞ்ஞான வளர்ச்சியால் ஆன்மிக ஈடுபாடு குறைந்துள்ளதா?
விஞ்ஞானம் உண்மையை வெளியுலகில் தேட முயற்சிக்கிறது. ஆன்மிகமோ உண்மையை தனக்குள்ளேயே தேடுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அருட்சக்தி இருப்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்வர். ஆன்மிகத்தில் மூடநம்பிக்கை சேரும் போது மட்டுமே விஞ்ஞானம் அதை மறுக்கிறது. 

சர்க்கரை நோய் இருப்பதால், காலை டிபனை முடித்தபின் வீட்டு பூஜையைச் செய்கிறேன். இது சரியா?

 சர்க்கரை நோய் இருப்பதால், காலை டிபனை முடித்தபின் வீட்டு பூஜையைச் செய்கிறேன். இது சரியா?
தாராளமாக சாப்பிட்ட பிறகே பூஜை செய்யுங்கள். வழிபாட்டை தவறாமல் செய்தாலே போதும். 

விநாயகருக்காக அருகம்புல் மாலை வாங்கி வைத்திருந்தேன். மாடு பிடுங்கித் தின்றுவிட்டது. இதனால் தோஷம் நேருமா?

* விநாயகருக்காக அருகம்புல் மாலை வாங்கி வைத்திருந்தேன். மாடு பிடுங்கித் தின்றுவிட்டது. இதனால் தோஷம் நேருமா?
மாட்டுக்கு புல் கொடுப்பதை "கோக்ராஸம்' என்னும் விசேஷ தர்மமாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.பசுவைப் பார்த்தாலே தோஷம் விலகும் போது, அதற்கு புல், அகத்திக்கீரை, பழம் கொடுத்தாலோ, அது தானாக எடுத்துக் கொண்டாலோ நன்மை உண்டாகும். லட்சுமி கடாட்சம் நிலைக்கும். சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்கி வளம் மிக்க வாழ்வு அமையும். இன்னொரு மாலை வாங்கி விநாயகருக்கு சூட்டி விடுங்கள்.

புண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா?

புண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா? 
அறிந்தே கூட செய்து இருந்தாலும், மனம் வருந்தி கடவுளிடம் சரணடைந்தவர்கள் கடல், நதிகளில் நீராடபாவம் நீங்கும். அறியாமல் செய்த பாவம் நிச்சயம் அகலும்.

தூக்கம் வராத சமயத்தில் படுத்தபடி ராமநாமம் ஜெபிக்கலாமா?

தூக்கம் வராத சமயத்தில் படுத்தபடி ராமநாமம் ஜெபிக்கலாமா?
"ராமா' என்னும் இரண்டெழுத்தை ஜெபித்தால் நன்மையும், செல்வமும் வாழ்வில் சேரும். தீமையும் பாவமும் பறந்தோடும். ராம நாமத்தை எப்போதும் எந்த சூழலிலும் ஜெபிக்கலாம்.
கல்லால மரம், ஆலமரம், இச்சி மரம் என்று தட்சிணாமூர்த்தி பலவிதமான மரங்களின் நிழலில் அருள்புரிவதன் நோக்கம் என்ன?


கல்லால மரமே ஆலமரம் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. இச்சிமரம் என்றாலும் ஆலமரமே. சங்கப் பாடல்களில் "ஆலமர் செல்வன்' என்று தட்சிணாமூர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளார்.

மனதில் அடிக்கடி விரக்தி எண்ணம் மேலோங்குகிறது. பரிகாரம் கூறுங்கள்

** மனதில் அடிக்கடி விரக்தி எண்ணம் மேலோங்குகிறது. பரிகாரம் கூறுங்கள்.
எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டால் விரக்தி உண்டாகாது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற உண்மையை உணர்ந்தால், நிம்மதிக்கு எப்போதும் குறை இருக்காது. திங்கள் அல்லது பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மன் சன்னிதியில் தீபமேற்றி வழிபடுங்கள்.

வீட்டிலுள்ள சுவாமி படங்களை எத்தனை ஆண்டுக்கொரு முறை மாற்ற வேண்டும்?

வீட்டிலுள்ள சுவாமி படங்களை எத்தனை ஆண்டுக்கொரு முறை மாற்ற வேண்டும்?
இத்தனை ஆண்டு என்ற கணக்கு கிடையாது. படம் உடைந்து போனாலோ, மிக பழுதாகிப் போனாலோ மாற்றுவது அவசியம். மற்றபடி, படத்தை மாற்றாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் பெரியவர்கள் வழிபட்ட படங்களில் தெய்வ சாந்நித்யம் நிறைந்திருக்கும்.

பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?

பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?
பாடத் தெரிந்தவர்கள் பாடலாம். மற்றவர்கள் மவுனமாக வழிபடலாம். இரண்டுமே சிறந்தவை தான். செய்வன திருத்தச் செய் என்பார்கள். அதை நினைவில் கொண்டால் போதும். வழிபாடு முழுமை அடையும்.

அமாவாசையன்று சமையலில் வாழைக்காயை ஏன் பயன்படுத்துகிறோம்?

 அமாவாசையன்று சமையலில் வாழைக்காயை ஏன் பயன்படுத்துகிறோம்?
அமாவாசையன்று சமைக்கும் சாப்பாட்டை நம் முன்னோர்களுக்கு அளிப்பதாக எண்ணி காக்கைக்கு வைக்கிறோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு மூன்றும் இடம் பெற வேண்டும். இவற்றில் முக்கியமானது வாழைக்காய். ஏனெனில் முன்னோர் 
ஆசியால், நம் குலமும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான்

கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது உண்மை தானா?

கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது உண்மை தானா?
உண்மை தான். வாக்கு கொடுத்ததை நம்பி ஏமாறுபவர்களின் வயிற்றெரிச்சல், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத சாபமாக மாறி விடும். 

நல்ல விஷயம் பேசும் போது தும்மினால் பிரச்னை வருமா?

 நல்ல விஷயம் பேசும் போது தும்மினால் பிரச்னை வருமா?
தும்மல் வந்தால் யாரால் அடக்க முடியும்? நல்ல விஷயம் பேசும் போது மணி சத்தம் கேட்டால் சந்தோஷப்படுகிறோம். தும்மல் கேட்டால் சங்கடப்படுகிறோம். தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து பேசலாம்

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்படி பெறலாம்?

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்படி பெறலாம்?
நம் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், மற்றவர்களும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். அதாவது நமக்கு கிடைத்திருப்பதைக் கொண்டு முதலில் நாம் திருப்தியடைய வேண்டும். பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை 
கொள்வதோ, தாழ்ச்சி கண்டு கேலி செய்வதோ கூடாது. சுருக்கமாகச் சொன்னால் இறையருளால் நாம் நன்றாயிருக்கிறோம். நம்மைப் போல பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற கடவுளிடம் பிரார்த்திக்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் இருக்கிறதே. அந்தச்சிலைகள் அங்கு நிற்பதன் தத்துவம் என்ன?

கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் இருக்கிறதே. அந்தச்சிலைகள் அங்கு நிற்பதன் தத்துவம் என்ன?
அவை துவாரபாலகர் சிலைகள். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபு. 

யோகா என்பதன் பொருள் என்ன?

 யோகா என்பதன் பொருள் என்ன? 
யோகா என்பது "அஷ்டாங்க யோகம்' என்னும் எட்டு படிநிலைகளைக் கொண்டது. இதில் ஆசனம் என்பதையே தற்போது யோகா என்று குறிப்பிடுகின்றனர். கீதையில் கிருஷ்ணர் இதன் பெருமையை அர்ஜூனனுக்கு உபதேசித்துள்ளார். "யோகா' என்பதற்கு "இணைதல்' என்பது பொருள். உடலையும், உள்ளத்தையும் இணைத்து சமநோக்கில் வாழச் செய்யும் யோகா படித்தால் மனிதன் மாமனிதனாக மாற முடியும். 

லலிதா நவரத்தின மாலை

லலிதா நவரத்தின மாலை
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கன வான தவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

2. நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

3. முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

4. பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்
மந்திரவேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

5. மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரிதபதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

7. கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. புஷ்பராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணீ
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாறொலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே 
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

பயன்
எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார் 
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.

கருவறையில் திரையிட்டிருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா?

கருவறையில் திரையிட்டிருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா?
கருவறையில் திரையிட்டிருக்கும் சமயத்தில் வலம் வருதல், நமஸ்காரம் செய்தல் போன்றவை செய்யக் கூடாது. விளக்கேற்றி விட்டு காத்திருக்கலாம். திரை நீக்கிய பின்னர் தரிசிக்கலாம்

சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?
விரதம் என்றாலே உடலை வருத்தி கடவுள் மீது பக்தி செலுத்துவது தான். உப்பில்லாமல், சோறு இல்லாமல் பட்டினி இருப்பதே விரதம். இதன் மூலம், ஒவ்வொரு விநாடியும் உடலும், மனமும் விழிப்புடன் இருக்கும். அதாவது சுவாமியின் நினைவிலேயே இருப்பது, சுவாமியின் அருகிலேயே வாசம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அது எளிதில் கைகூடும்.

* கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தடியில் ஐந்து முறை வணங்க வேண்டும்.

பொதுவாக தெய்வங்கள் கிழக்கு நோக்கியிருக்க, தட்சிணாமூர்த்தி தெற்கிலும் துர்க்கை வடக்கிலும் இருப்பது ஏன்?

பொதுவாக தெய்வங்கள் கிழக்கு நோக்கியிருக்க, தட்சிணாமூர்த்தி தெற்கிலும் துர்க்கை வடக்கிலும் இருப்பது ஏன்?
தட்சிணாமூர்த்தி ஞான வடிவமானவர். வேதம் முதலிய ஞான நூல்களை உபதேசிப்பவர். உபதேச குருவாக சிவன் வீற்றிருக்கும் நிலையே தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு. உபதேசிக்கும் போது தென்முகக் கடவுளாக காட்சியளிக்கிறார். துர்க்கை தீய சக்திகளைப் போரிட்டு அழித்ததால் கோபவடிவில் வீற்றிருக்கிறாள். உக்ர தெய்வங்கள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இந்த நியதி சுவாமியின் கருவறையைச் சுற்றி உள்ள கோஷ்டங்களுக்கான பொதுவிதி. துர்க்கை, காளி, மாரி போன்ற தெய்வங்கள் தனி கோவில்களில் பிரதிஷ்டை செய்யும் போது மட்டும் கிழக்கு நோக்கி வைக்கலாம் என்கிறது சாஸ்திரம்.

தற்போது வரும் விபூதி கலப்படமாக இருக்கிறதே... இதற்கு மாற்று வழி என்ன?

தற்போது வரும் விபூதி கலப்படமாக இருக்கிறதே... இதற்கு மாற்று வழி என்ன? 
நாமே விபூதி தயாரிக்கலாம். தொண்டுள்ளத்துடன் பல சிவனடியார்கள் இதனைச் செய்தும் வருகிறார்கள். தற்போது சிலர் பெரிய அளவில் கோசாலை நடத்தி பஞ்சகவ்யம், விபூதி முதலியன தயாரிக்கிறார்கள். பசு மாடுகளை பால் கறப்பதற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு 
அடிமாடாக விற்று பாவத்தை சுமக்காமல், அவை உயிரோடு இருக்கும் காலம் வரை சாணத்தைப் பயன்படுத்தி விபூதி தயாரிக்கலாம். 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தானா?

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தானா?
முற்பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப உயிர் மறுபிறவி அடைகிறது. இந்த அடிப்படையில், புண்ணியம் அதிகம் செய்ததால் நாம் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம். எனவே மனைவி மட்டுமல்ல...நமது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், பிள்ளைகள் என 
எல்லாருமே கடவுள் அளித்த வரம் தான். 

கோவில், ஆலயம் என்பதன் பொருள் என்ன?

கோவில், ஆலயம் என்பதன் பொருள் என்ன?
கோ+இல் என்பது கோவில். "கோ' என்பது அரசன். "இல்' என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு. ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அதாவது உயிர்கள் இறை பக்தியில் ஒன்றியிருக்கும் இடம்

வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் தீய சக்தி வருவது தடுக்கப்படுவது உண்மையா?

 வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் தீய சக்தி வருவது தடுக்கப்படுவது உண்மையா?
மாவிலைக்கு தீய சக்தியைத் தடுப்பதோடு, தெய்வீக சக்தியை வரவழைக்கும் தன்மை உண்டு. இதனால் தான் பூஜைக்கு கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காய் வைக்கிறார்கள். இது விஷ்ணு அம்சம் பொருந்தியது. மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். அங்கு மகாலட்சுமி நிலைத்திருப்பா

மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது உண்மையா?

* மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது உண்மையா? 
உண்மை தான். மனதைப் பொறுத்தே பாவ, புண்ணியம் மனிதனுக்கு உண்டாகிறது. மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்பதால், மறுபிறவி இல்லாமல் போவது உண்மையே

என் பக்கம் நியாயம் இருந்தும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். கடவுள் இருந்தும் ஏன் இந்த நிலை...!

 என் பக்கம் நியாயம் இருந்தும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். கடவுள் இருந்தும் ஏன் இந்த நிலை...! 
நேர்மையான வழியில் நடப்போருக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. தினமும் "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து வாருங்கள். குற்றச்சாட்டில் இருந்து விரைவில் விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.

பக்தி இருப்பவர்களுக்கு கஷ்டம் அதிகமாக இருக்கிறதே.... பரிகாரம் என்ன?

 பக்தி இருப்பவர்களுக்கு கஷ்டம் அதிகமாக இருக்கிறதே.... பரிகாரம் என்ன?
"கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' என்கிறது தேவாரம். 
திருநாவுக்கரசரை கல்லுடன் சேர்த்துக் கட்டி, மகேந்திர பல்லவன் கடலில் வீசிய போதும் "சிவனே எனக்குத் துணை' என்று சரணடைந்தார். பக்தி ஆழமாக இருந்தால், துன்பக் கடலும் கடைக்கால் அளவே என்பதை அருளாளர்களின் வாழ்க்கை உணர்த்துகிறது. இதை மனதில் கொண்டு நம் வாழ்வை நடத்த வேண்டும். 

கர்ப்பவதியான பெண்கள் தெய்வீக நூல்களைப் படிப்பதால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகுமா?

கர்ப்பவதியான பெண்கள் தெய்வீக நூல்களைப் படிப்பதால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகுமா?
கண்டிப்பாக கிடைக்கும். பிறக்கும் குழந்தை புத்தி கூர்மையுடன் பிறக்கும். பிரகலாதன் கர்ப்பத்தில் இருக்கும் போது, அவனது தாய் பாகவதம் கேட்டதால் விஷ்ணு பக்தனாகப் பிறந்து நாட்டை அரசாட்சி செய்தான். நல்லதைப் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும். கொடுமையான தொலைக்காட்சி தொடர்களை கர்ப்பிணிகள் பார்க்கவே கூடாது.

வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

 வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது

* குருவருள் இன்றி திருவருள் இல்லை என்கின்றனரே .... ஏன்?

* குருவருள் இன்றி திருவருள் இல்லை என்கின்றனரே .... ஏன்?
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய் முதல் தெய்வம். "இவர் தான் உன் தந்தை' என்று குழந்தைக்கு உணர்த்துவதால், அவளே முதல் குரு. உழைத்து சம்பாதித்து கல்வியறிவு தந்து ஆளாக்கும் தந்தை இரண்டாவது தெய்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற நிலையில், ஆசிரியர் அடுத்த தெய்வமாகிறார். மாதா, பிதா, குரு ஆகிய மூவர் மூலமே தெய்வத்தை அடைய முடியும். இந்த மூன்று குருக்களின் வழிகாட்டுதல் இருந்தால் தெய்வத்தை அடைய முடியும் என்பதால் இப்படி சொல்கிறோம். 

கஜபூஜை, கோபூஜை நடத்துவதன் நோக்கம் என்ன?

கஜபூஜை, கோபூஜை நடத்துவதன் நோக்கம் என்ன?
ஆண் யானையாக இருந்தால் விநாயகராகவும், பெண் யானையாக இருந்தால் கஜ லட்சுமியாகவும் பூஜிப்பர். சிற்ப சாஸ்திரப்படி, கோவிலில் கோசாலை என்னும் மாட்டுத் தொழுவமும், யானைக் கொட்டகையும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட வேண்டும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கோபூஜை செய்தால் அக்கோவிலுக்கு எல்லா தேவர்களும் வந்து அருள்புரிவதாக ஐதீகம். இந்த பூஜைகளால் பக்தர்களின் விருப்பம் தடையில்லாமல் நிறைவேறும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

பிள்ளையாரை முதல் தெய்வமாக வணங்குவது ஏன்?

 பிள்ளையாரை முதல் தெய்வமாக வணங்குவது ஏன்? 
மற்ற தெய்வங்களுக்கு மந்திர பிரதிஷ்டை தேவைப்படும். ஆனால், சாணம், மஞ்சள், சந்தனம் என எதைப் பிடித்து வைத்தாலும் போதும். அங்கே பிள்ளையார் எழுந்தருளி விடுவார். "பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று இதைச் சொல்வது உண்டு. யானைமுகம் கொண்டவர் என்பதால் குழந்தைகளுக்கு இவரை எளிதில் அறிமுகப்படுத்தி விடலாம். குழந்தைக் கடவுள் என்பதால், இவர் முதற்கடவுள் ஆகி விட்டார்

தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?

தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?
ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பெயருண்டு. அபய முத்திரை என்பது "பயப்படாதே! உடன் உடனிருந்து காப்பாற்றுகிறேன்' என்பதையும், வரதமுத்திரை என்பது, "உன் விருப்பத்தைக் கேள். வரம் தருகிறேன்' என்பதையும் குறிக்கிறது. தட்சிணாமூர்த்தி காட்டும் ஞானமுத்திரை என்பது கட்டை விரலின் அடியில் ஆள்காட்டி விரலை வைத்து, மற்ற மூன்று விரல்களையும் மேல்நோக்கியவாறு இருப்பதாகும். இதில் கட்டை விரல் இறைவன். ஆள்காட்டி விரல் மனிதன். மற்ற மூன்று விரல்களும் உலக வாழ்வின் ஆசாபாசம், இன்பம், துன்பத்தை குறிக்கும். இன்ப துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி மனிதன் கடவுளைச் சரணடைந்தால் பேரின்பம் உண்டாகும் என்பதே இதன் தத்துவம். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கின்றன.

ராமேஸ்வரம் செல்பவர்கள் தேவிபட்டினம் கடலிலும் நீராட வேண்டுமா?

ராமேஸ்வரம் செல்பவர்கள் தேவிபட்டினம் கடலிலும் நீராட வேண்டுமா? 
 

ராமேஸ்வரம் யாத்திரையில் அக்னி தீர்த்தத்திலும், கோவிலிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடுவது முக்கியம். தேவிபட்டினத்தில் நவக்கிரக கற்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு நீராடுவோருக்கு கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். ஆனால், அங்கு நீராட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

* கருப்புக் கயிறு கட்டிக் கொள்வதால் உண்டாகும் நன்மை என்ன?

* கருப்புக் கயிறு கட்டிக் கொள்வதால் உண்டாகும் நன்மை என்ன? 
கருப்புக் கயிறு கட்டினால் கண்ணேறு என்னும் திருஷ்டி தோஷம் நீங்கும். இதுவே மந்திரிக்கப்பட்டதாக இருந்தால் தெய்வத்தின் பலமும் உடனிருந்து காப்பாற்றும்

வீட்டில் பூஜையை வசதிப்பட்ட போது செய்யலாமா? அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டுமா?

வீட்டில் பூஜையை வசதிப்பட்ட போது செய்யலாமா? அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டுமா? 
காலை எட்டு மணிக்குள் பூஜை முடிப்பது உத்தமம். இதுவே முதல் தரமானது. ஒன்பது மணிக்குள் முடிப்பது மத்திமம். அதாவது இரண்டாம் நிலை. பத்து மணிக்குள் முடிப்பது அதமம். இது மூன்றாம் நிலை. மாலை நேரத்தில் பூஜை செய்பவர்கள் 6.00-7.30 மணிக்குள் செய்து விடுங்கள். 

* பூஜை சாமான்களை வெள்ளிப்பொருட்களாகப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

* பூஜை சாமான்களை வெள்ளிப்பொருட்களாகப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? 
நமக்கு வளமான வாழ்வு அருளும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதே பூஜையின் நோக்கம். அதனால், எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் பூஜை செய்ய முடியுமோ, அந்த நிலையில் வழிபாட்டை மேற்கொள்கிறோம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது என்ற அடிப்படையில், மண், பாத்திரம், செம்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.

பணியில் உண்டாகும் சிரமம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

பணியில் உண்டாகும் சிரமம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்? 
நாம் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டால் எந்த சிரமமும் குறுக்கிடாது. இதையும் தாண்டி பணிச்சுமை, எதிரி தொல்லை போன்றவை குறுக்கிட்டால் ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் (4.30- 6.00 மணி) துர்க்கை அல்லது பைவரரை வழிபடுங்கள். சிரமம் நீங்கும். 

ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண்டிய வழிபாடு இருந்தால் சொல்லுங்கள்.

ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண்டிய வழிபாடு இருந்தால் சொல்லுங்கள். 
""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' 
என்ற தேவாரப் பாடலை தினமும் படியுங்கள். இறையருளால், ஏழேழு பிறவிக்கும் நல்ல தம்பதிகளாக வாழ்வீர்கள். 

மிகப்பெரிய கிரகம்

வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆங்கிலத்தில் "ஜூபிடர்' எனப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களின் வரிசையில் வியாழன் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் மிகப்பெரிய கிரகமும் இதுவே. பூமியைப் போல 1300 மடங்கு பெரியது என்றால், இதன் அளவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பரப்பளவு கூடுவதால் எடை கூடுவதும் இயற்கையே. ஆம்...இது பூமியை விட 318 மடங்கு எடை கூடுதலானது.
பூமி 231/2 டிகிரி அச்சில் (சாய்ந்த நிலையில்) சூரியனைச் சுற்றுவதால், தட்ப வெப்ப நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், வியாழன் நேரான நிலையில் சூரியனைச் சுற்றுவதால், இங்கு தட்பவெப்பம் மாறாது.
வியாழனில் வெளிச்சம் அதிகம். மொத்த சூரிய ஒளியில் 51 சதவீதத்தை வியாழன் கிரகமே பெறுகிறது. மீதியைத் தான் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரு அதிசயம். சிறிய பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரமே எடுத்துக் கொள்கிறது. ஆனால், பெரிய வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் தான் ஆகும்.
பூமியில் இருந்து வியாழன் 63 லட்சம் கி.மீ., தூரத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பு பட்டை பட்டையாகவும், வாயுக்கள் சேர்ந்து கருமேகம் சூழ்ந்தது போலவும் காட்சி தரும். இதில் ஆக்சிஜன் கிடையாது. ஹைடிரஜன், மெதின், அமோனியா ஆகிய வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பம் எப்போதும் 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். இது ஒளி மிகுந்து இருப்பதால், பொன் போல வான மண்டலத்தில் ஜொலிக்கும். 

கோயிலுக்குச் செல்லும் போது நடை சாத்தியிருந்தால் முன்னால் நின்று வணங்கலாமா

கோயிலுக்குச் செல்லும் போது நடை சாத்தியிருந்தால் முன்னால் நின்று வணங்கலாமா
கூடாது.. நடை திறக்கும் வரை காத்திருந்து வழிபாடு செய்யுங்கள்.

சுவாமி முன் திருமணத்திற்காக பூக்கட்டி பார்ப்பது சரியா?

 சுவாமி முன் திருமணத்திற்காக பூக்கட்டி பார்ப்பது சரியா?
ஜாதகம் இருந்தால் மணப்பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பூக்கட்டி பார்த்து திருமணம் நடத்தலாம்