Tuesday, May 31, 2016

கீதை கூறும் ஆன்மீகம்

கீதை கூறும் ஆன்மீகம்
வேதங்களின் உதாணரமான உபநிடதம், பகவத் கீதை, மகாபாரதம், இராமயாணம்,
முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பகவத்கீதை என்ற புகழ் வாய்ந்த பகுதி மகாபாரத்தில் உள்ளது. குருசேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்-கெளரவ அணிகளுக்கிடையில் போர் மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அர்ச்சுனன் உறவு சார்ந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனம் சோர்ந்து உள்ளான். இந்நிலையில்,சாரதியான கிருஷ்ணன் அவனது மனச்சோர்வுக்கான அடிப்படைகளை அகற்றும் வகையில் அறிவுரை புகட்டுகிறான். தனது உண்மையான தெய்வீகக் கோட்பாட்டை வழங்கி அதன் மூலம் அவனே போர் புரிவதற்கு நெறிப்படுத்துகிறான்.
மகாபாரதம் கதையமைப்பில் கதை என்ற பகுதி தரும் இது.
பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், அவைகள் ஆறு அத்தியாயங்களாய் மூன்று
பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் தத்துவம், இதம், கடமை என விவரித்துள்ளது.
மூன்று காரணங்களால் இதை இணையற்று விளங்குகிறது.
அவை :
“அது உபதேசிக்கப்பட்ட இடம், சந்தர்ப்பம் ”
“அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி ”
” தனி நபரின் முயற்சிக்கு கீதை கொடுக்கும் முக்கியத்துவம் ”
கீதையின் பிறப்பு, இதனை உபதேசிக்க தேர்தெடுத்த இடம் போர்களம் ” போர் செய்ய
மறுக்கும் அருச்சுனனுக்கு இது உபதேசிக்கப்படதுதான். ஆன்மீக விளக்கங்களும், வாதங்களும் நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, செயலுக்கு ஒத்துவராத வெறும் சொற்களே அல்லது வாதங்களோ அல்ல. அவை வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறி முறைகள்.
பகவத் கீதை தர்ம சாஸ்திரமாக மட்டுமே விளங்குகிறது என்ரு பலரும் நினைத்துக்கொண்டு உள்ளனர். இது தவறான கருத்தாகும், எண்ணமாகும். பகவத் கீதை ஆன்மா உயர்வுக்கு காட்டியாக உள்ளது. மனிதன் சகல துக்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிருந்தும் விடுபடும் வழியினை, மார்க்கத்தினை போதிப்பதே, உபதேசிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
” கடவுளை நம்பினோர் கைவிடப்பார் ” இதுவே பக்தி.
அவனை நம்பியோர் செய்யத்தக்கது எதற்கும் துயர்ப்படாமல், பயப்படாமல் இருத்தல்-
எதற்கும் ஐயறவு கொள்ளாதிருத்தல்.
” ஐயமுடையோன் மேன்மையடையான், நம்பியவன் மேன்மையும், மீட்சியும் அடைவான்”
மேன்மையும்-மீட்சியும், மோட்சத்தையும் கூறும் பகவத் கீதை பலர் கொலை நூலாகக்
கருதுவார். துரியோதனையும், அவனைச் சார்ந்தோரையும் கொல்லும்படி அர்ச்சுனனைத் தூண்டுவதற்கு இந்தப் பதினெட்டு அத்தியாயங்களும் கிருஷ்ணனால் கூறப்படுவதால் அத்தகைய கருத்து நிலவுகிறது.
உண்மையில் பகவத் கீதையின் உட்கருத்து ஆன்மாக்களை இறைவனது துணையுடன் காமக் குரோதங்களை நீங்கி ஆன்மீகத்தை அடைய வேண்டும் என்பதே. துரியோதனன் முதலானவர்கள் காமம், குரோதம், சோம்பல், மடமை, அகங்காரம், மறதி, கவலை, துயரம், ஐயம்
போன்ற பாவ சிந்தனை உள்ளவர்கள்.
அர்சுனன் : ஜீவாத்மா [ஆத்மா]
கிருஷ்ணன் : பரமாத்மா.
இதுவே கீதையின் உட்கருத்து. இந்த உட்பொருளை அறியாதவர்கள் கீதையை ஒரு
போதும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோல் , பகவத் கீதை சந்நியாச அல்லது துறவற நூலன்று.
வீடு, மனைவி, மக்கள், சுற்றத்தை துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை, துறவற நெறியில்
செல்லும்படி கீதை கூறவில்லை. அது கடமையை வலியுறுத்துகிறது.
” ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர
செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் ” என்ற கொள்கையை மிக அழுத்தமாக உபதேசிக்கிறது தன்கடமை செய்யாது நிலைகுலைந்து போன அர்ச்சுனனுக்கு அவனது கடமையினை தர்மத்தினை மிகத் தெளிவாக,”அர்ச்சுனா, சத்திரியான நீ உன் கடமையான
போரைச் செய் ” என கிருஷ்ண பரமாத்மா வலியுறுத்துகிறான்.
இது போன்றே நமக்கும் வாழ்க்கைப் போர் உள்ளது. நாம் வாழ்க்கையில் பல தடவைகள்
சோம்பலாலும், கோழைத்தனத்தாலும் கடமைகளிலிருந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
“அர்ச்சுனா எழுந்திரு ! இந்த மனத்தளர்ச்சியை, இந்த பலவீனத்தை ஒழி,
எழுந்து நின்று போர் செய்…” என்று கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுன்னுக்குக் கூறும்
இவ்வார்த்தை மிகவும் பொருத்தமாக நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கை கடமைகளைச்
செய்துகொண்டு வாழ்வதற்குரியது ; துறப்பதற்குரியது அன்று என்பது இதன் பொருள்.
கீதையில் தனிச்சிறப்புடன் விளக்கும் இன்னொரு கொள்கை ” பற்றின்மை ”
என்பதாகும்.” கடமைக்காகவே செய்யப்படும் கடமையே வினைத் தளையைப் போக்கும் ”
என்பதாகும். எல்லா செயல்களையும் கடவுளுக்கு என்று சமர்ப்பித்துவிட்டு பற்றுதல் இன்றி எவன் தொழில் செய்கிறானோ அவன் பக்கம் நான் இருப்பேன். ஒருவனுக்கு பற்றின்மை ஏற்படும்போது அவனுக்கு ஏனையோரின் பொறாமையும், சஞ்சலமும் கொள்ள வழியில்லை.
தன் செயலுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படவும் மாட்டான்.
“சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனுக்கா தனிமனிதன்
தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்….”
கீதையின் தொனிப்பொருள், சாரம், உட்பொருள் இதுதான். இதன் 18 அத்தியாயங்களில்
அமைந்த 700 சுலோங்கங்களும் இதன் விரியுரைகளே. அப்படி அமைய வேண்டிய மனப்பக்குவம் என்ற வகையில் கீதை , ” பலனில் பற்று வைக்காத செயல் திறன் ” .
இது செயலில் துறவு என்பது பற்றிப் பேசுகிறது.
இவ்வாறான பற்றின்மை செயல் ஊக்கத்தைப் பாதிக்காலாது என்பதைச் சுட்டுவதற்காக கடமை உணர்வு வற்புறுத்தப்படுகிறது. கடமையில் உணர்ச்சிபூர்வமாக
ஈடுபடுவதை ‘ தியானம், பக்தி என்ற அணுகு முறையினை முன் வைக்கிறது,
சுட்டிக்காட்டுகிறது.
” கல்வி கற்றோரிடமும் , சண்டாளாரிடமும் , மிருகத்திடமும் அறிஞர்கள் சமமான
பார்வை உடையோர்…” [5-18] என்று கிருஷ்ணன் கூறுகிறான்.
கண்ணபிரான் மனிதருள் சாதிவேற்றுமை, அறிவுவேற்றுமை , பிரிவு வேற்றுமை
போன்றவைகள் ஏற்படக்கூடாது என்றும், எல்லா உயிர்களூள்ளும் எவ்வித வேற்றுமையும் இல்லை எனக் கூறுகிறார். வேற்றுமை உள்ள இடத்தில் பயமுண்டு, பத்துண்டு, மரணமுண்டு ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புள்ளவர்கள் என்றும் துக்கங்களிலிருந்து விலகமாட்டார்கள். எனவே எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ‘ஆன்ம ‘ ஈடேற்றத்துக்கு உரிய வழியாகும்.
ஆன்ம ஈடேற்றம் அடைய விரும்புவனுக்கு முக்கியமான சாதனம், அவனது சொந்தமனமாகும்.
“… தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன்…”
“… தன்னைத் தானே ஆளாதவன் தனக்கு தானே பகைவன்…”
“… ஒருவன் தனக்குத் தானே நண்பன்; தானே தனக்கு பகைவன்…”
“… உள்ளப் பகையே பகை; புறப்பகை பகையன்று…”
இக்கருத்து மனித வாழ்க்கையில் முக்கியமானது.
எந்த உயிர் பிராணிக்கும் இம்சை, தொல்லை செய்வோர் உண்மையானஅன்புடையர் அல்ல. உண்மையான பக்தராகமாட்டார்; எந்த ஜீவனையும் கண்டு வெறுப்பு அடைபவர்கள்
ஈசனுடைய மெய் அன்பினை பெறமாட்டார்கள். கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது
கொள்கையாகும்.
பிறருக்கு தீங்கு இழைக்கும் பொருட்டு அவரை வெறுத்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் இருப்பவர்கள் இறுதியில் தாமே அழிந்துவிடுவர் என்று கீதையில் கூறப்படும் கருத்து சிந்திக்கத் தக்கது , எண்ணி செயல்படத்தக்கது.
இவ்வாறு சிந்திக்கும் போது கீதை கூறும் வாழ்வியலானது காலம், இடம், சமூகம்,
ஆகிய எல்லைகளைக் கடந்தாகவும் பல நிலைப்பட்ட பிரச்சைனைகளுடன் தொடர்புப்
படுத்தி அமைந்துள்ளதை காணலாம்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கலாச்சாரமுடைய ஒரு காலக் கட்டத்தில் முன் வைக்கப்பட்ட கீதை , வாழ்வியல் நோக்கமானது. காலந்தோறும் பேணப்பட்டு வந்துள்ளமையையும் வெவ்வேறு அடிப்படைகளில் புரிந்து கொள்ளப் பட்டமையையும் வரலாறு உணர்த்தும்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி முதல், வேறு சிலர் பலரும்
கீதையின் நோக்கத்துக்கு ஏற்ப அணுகியுள்ளனர் அதனை வழி காட்டியாகவும் கொண்டு பலரும் சிந்தித்து சிறந்துள்ளனர். பாரதியார் முதல் – கண்ணதாசன் வரை சிந்தித்துள்ளனர்.
நாமும் சிறிது சிந்திப்போம். முடிந்தவரை செயல்பட முயல்வோம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்

ஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்
பகவத் கீதை என்றாலே என் நினைவுக்கு வரும் சித்திரம் ஸ்ரீ கிருஷ்ணர் தேரை செலுத்த, அதில் அர்ஜுனன் பின்னிருந்த படி பயணிக்கும் இந்த சித்திரம் தான்.இந்தச் சித்திரம் மிகுந்த உட்பொருள் உடையதுஇந்த சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் நம்மில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.முதலில் எவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம்.போர்- வாழ்க்கை.போர்க்களம்- இந்த பூவுலகம்.தேர்- நம் உடலை குறிக்கிறது.ஆர்ஜுனர்- ஜீவாத்மாவை, தனி ப்ரஞ்யை, குறிக்கிறார்.குதிரைகள்- மனதை குறிக்கின்றன.ஸ்ரீ கிருஷ்ணர் கையின் கடிவாளம் விதியை குறிக்கிறது.ஸ்ரீ கிருஷ்ணர் கையின் சாட்டை- நம் அறிவை புத்திசாலித்தனத்தை குறிக்கிறது.ஸ்ரீ கிருஷ்ணர்- பரமாத்மா, மனசாட்சி, உள்ளுணர்வு -இவற்றை குறிக்கிறார்.தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- நல்லொழுக்கத்தை குறிக்கிறார்.நாம் வாழும் இந்த பூமி போர்க்களம். நம் வாழ்க்கை போர்.எதிர் அணியில் அணிவகுத்து நிறபவர்கள் நாம் செய்த தீவினைகள். அவை எப்போதும் நமக்கு ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீ வினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன.குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படி நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில் தான் செல்கிறது. உ-ம்: மனம் சாப்பிட வேண்டும் என்றால், உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்கிறோம். அதனால் தேர் நம் உடலை குறிக்கிறது.அர்ஜுனர் தான் ஜீவாத்மா. தனி ப்ரஞ்யை. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனரின் வேலை அம்புகள் எய்வது மட்டும் தான். அதே போல நமது வேலையும் நம் கடமையை செய்வது மட்டும் தான்.மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கக்கூடியது. ஒரே சமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுது உணவிட வேண்டுமோ அப்பொழுது உணவளித்து. எப்பொழுது நீர் கொடுக்க வேண்டுமோ அப்போது நீர் கொடுத்து, அதை உற்சாகப் படுத்த வேண்டும். மனமும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு இவை ஏற்படும். அதனால் அதன் ஆசைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் இந்த குதிரை போல ஆரோக்கியமானதாக இருக்கும்.கடிவாளம் தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்கிறது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில் தான் பயணிக்கும்.கடிவாளத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். இங்கே இது ஒரு விதிவிலக்கு. கடவுள் நம் விதியை இயக்க வேண்டும் என்றால் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.கிருஷ்ணர் கையின் சாட்டை நம் புத்தி. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் செல்லும் போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் செல்லும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைத்து விடும்.கிருஷ்ணர் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா... இவர் உருவம் எடுத்து வந்தால் ஆயிரம் நாமங்கள். உருவமின்றி நமக்குள் இருந்தால் அதற்கும் எத்தனை நாமங்கள். இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்கிறது.ஆஞ்சநேயர்- இவர்கள் கொடியில் ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

சிவ பூஜையை விட சிறந்தது எது?

சிவ பூஜையை விட சிறந்தது எது?
எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள். பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார். கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.
இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.
திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார். அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார். “நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்றான் நாதன். நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

Monday, May 30, 2016

உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும்

geteilt.
உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.
அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: || 1
பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச || 2
யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம: || 3
ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: || 4
ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 5
அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: || 6
அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || 7
ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 8
ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்|| 9
ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: || 10
அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: || 11
வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12
ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || 13
ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 14
லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15
ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: || 16
உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17
வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18
மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் || 19
மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20
மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21
அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22
குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23
அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24
ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 25
ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: || 26
அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: || 27
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: || 28
ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: || 29
ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30
அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: || 31
பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: || 32
யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்|| 33
இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: || 34
அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35
ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: || 36
அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37
பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38
அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 39
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: || 40
உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: || 41
வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: || 42
ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 43
வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: || 44
ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: || 45
விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: || 46
அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: || 47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்|| 48
ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || 49
ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: || 50
தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: || 51
கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: || 52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53
ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: || 54
ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: || 55
அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்|| 57
மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: || 58
வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 59
பகவாந் பகஹா நந்தி வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: || 60
ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || 61
த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்|| 62
ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: || 63
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: || 64
ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: || 65
ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: || 66
உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: || 67
அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: || 68
காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: || 69
காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: || 70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71
மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || 72
ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: || 73
மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: || 74
ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: || 75
பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: || 76
விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: || 77
ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: || 79
அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: || 80
தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81
சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்|| 82
ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா|| 83
ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84
உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ|| 85
ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி|| 86
குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: || 87
ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: || 88
ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: || 89
அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90
பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: || 91
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: || 92
ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: || 93
விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: || 94
அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: || 95
ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96
அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: || 97
அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: || 98
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 99
அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: || 100
அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | | 101
ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102
ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: || 103
பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: || 104
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச || 105
ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: || 106
ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: || 107
வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| ................108

நீங்கள் உறங்கும் நிலையை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!

நீங்கள் உறங்கும் நிலையை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!

பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம். இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர், கோபக்கார நபரா, அமைதியானவரா என கண்டறிய முடியுமாம். –
நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.




குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.
தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.
நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.
எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.

மகான்களும் ஒருகாலத்தில் மனிதர்களே

மகான்களும் ஒருகாலத்தில் மனிதர்களே !
=====================================
புத்தர் மரத்தடியில்
அமர்ந்திருக்கும்போது அது நிகழ்ந்தது தற்செயலானது. அது போர்வைக்குள் இருக்கும்
போதும் நிகழக்கூடும் என்பது அவருக்குத் தெரியாது. உண்மையில் இதே கேள்வி அவரது
மனைவி அவரைப் பார்த்து கேட்டாள்……..
பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார். தந்தை மிக மிக
கோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். தந்தைக்கு மிகவும்
வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன், தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இவரை
சார்ந்துதான் இருந்தது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்க
விரும்பினார். தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காக
காத்திருந்தார். அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.
இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். கௌதம புத்தர்
கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை,
தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை
காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக்
கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்
போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர்
திரும்ப வராமலும் போகலாம்.
அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று
அவருக்கே தெரியாது. அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும்
ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார். அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகு
சிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடி
செல்கிறார்.
உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறை
முடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள்,
அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள்,
“மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவது ஆபத்தானது. மரணம்
வருவதற்கு முன் இறப்பை கடந்தும் இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.
அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனது
குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் - அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்த
இரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி
இருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக் கேட்பாள்.
தேர் வாசலில் தயாராக இருக்கிறது, எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான்
பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்து
அழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?,
நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன?
என்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார். ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்
ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை
வந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.
பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை,
தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி
வந்ததுதான். அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும்
ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். பின்
திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போல
நிற்கிறான் என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக்
கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான்.
உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல
இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.
“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன்,
நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால்
அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்
என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.
புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.”
என்றார்.
அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.
நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,
அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,
நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை
வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான்
உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.
நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான்
இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி.
நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது……..
இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாக
ஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது.
உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள்
மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகு
புறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்தது என்னவோ அது
இங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.
யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான்.
இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி
வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது
என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல
வேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அது
நிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்ற
இடங்களைப் போன்றதே. ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப்
பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.
நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான்
என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு. நீ
எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?,
என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்
முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?,
நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.
என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான்
உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான் என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாக
துறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள்
ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும்
கடினம்’. என்றது.” என்று கூறினார்.

கருடபுராணம் - சில தகவல்கள் !!!!

கருடபுராணம் - சில தகவல்கள் !!!!
கருடபுராணம் - சில தகவல்கள் !!!!
இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..
சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு
காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின்
பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம்.
இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?
அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானதுதான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும்
புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் முடியாது.
காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான சைக்க
முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம்.
இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக
இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள்.
யார் அந்த முன்று நபர்கள்?
கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.
இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான
கிங்கரர்கள் என்கிறது.
யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.
அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச்செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.
மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த
நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.
உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன
நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.
செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த
இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.
உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.
இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.
காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால்
மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.
செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள்
பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.
தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.
அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்
மீது விழுந்து அழுத்துவார்கள்.
இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல்
வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து
பதைபதைத்து துடிக்குமாம்.
மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக்
குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த
உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.
உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.
காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.
மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக்
கூறுகிறார்கள்.
ஆவிகள் கருப்பு வெள்ளையாகத்தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில்
ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள்
காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.
இதற்கு பல காலமாக ஆவிகளைப்பற்றிய எனது தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பல பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது.
பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது.
மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய்
இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில்
இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது.
முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள்
புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.
சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை என்றே நான் கருதுகிறேன். காரணம் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும்
மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.
முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்
எப்படி வந்தமைகிறது என்பதைக்கருட புராணம் அழகாகக் கூறுகிறது.
இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
நான்காம் நாளில் வயிறும்
ஐந்தாம் நாளில் உந்தியும்
ஆறாம் நாளில் பிருஷ்டமும்
ஏழாம் நாளில் குய்யமும்
எட்டாம் நாளில் தொடைகளும்
ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.
பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் கழ்த்தப்பட்ட
எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.
மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.
கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்
பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.
அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.
அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல்
ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்
செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.
மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்
ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்த
நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.
இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின்
சோதனையும ஆவியைச்சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக்
கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.
இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில
கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.
அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற
பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.
ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற
நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த
ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.
புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில்
பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது
வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.
மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் ணக்குகளைப்பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.
இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான்
அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.
நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.
இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.
நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்
பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சிரார்த மந்திரம்

என் கணவருடன் கயா சிரார்தம் செய்ய சென்றிருந்தேன்.. கீழ் கண்ட மந்திரங்களை
அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார்.
அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...
சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
விஷ்ணு பாதம்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.
''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.
4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''
6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'
7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\
8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \
9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.
.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா
11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'
12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.
13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.
14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.
15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.
16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.
மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ
( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

Sunday, May 29, 2016

பைரவரை வணங்கினால்* *எதிர்ப்பு தவிடுபொடியாகும்

பைரவரை வணங்கினால்*
*எதிர்ப்பு தவிடுபொடியாகும்!*
சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?
துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.
கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். கடவுளை வணங்குகிறோம். இருக்கிற கஷ்டங்களெல்லாம் எங்கோ பறக்கிறது. பதவி, உத்தியோகம், வருமானம் என வாழ்க்கைத் தரம் உயர, அங்கே எதிர்ப்பு, எதிரி என உருவாக, மீண்டும் ஏதோவொரு சிக்கல், ஏதோவொரு பிரச்னை. எப்படியோ வருகிறது துக்கம்.
இந்த எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
இன்று அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமைதான். விடுமுறை நாள்தான். குறிப்பாக, மாலையில் செல்லுங்கள். இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகால வேளை. பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.
உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும்.
ஒற்றுமை மேலோங்கும். இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!

பாம்பு மோதிரம் , அணிந்தால் உண்டாகும் பலன்

பாம்பு மோதிரம் , அணிந்தால் உண்டாகும் பலன்

மக்களின் ஆன்மீக நலனுக்காக பாம்பு மோதிரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன்
ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கை என்று எதை அறிந்திருக்கிறாரோ அதன் உச்சத்தை அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது.
உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.
மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது.
மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது.
மோதிர விரல் உங்கள் கணினி மௌசைப் போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்.”
பாம்பு மோதிரத்தின் பயன்கள்: ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது. அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது. சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.
யாரெல்லாம் அணியலாம்? இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது.

யார் அந்தணர்? (பிராமணர்)

யார் அந்தணர்? (பிராமணர்) படித்ததை பகிர்கிறேன்
****************************************************************************
தவறு இருந்தால் மன்னிக்கவும். சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லி கொடுக்கவும் தெரிந்துகொள்கிறேன்.
”அறம்புரி அருமறை நவின்ற நாவின்திறம்புரி கொள்கை அந்தணர்”-ஐங்குறுநூறு
மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இப்பாடலின் பொருள்: “அறத்தைப் (தர்மத்தை) போற்றும் நான்மறை வேதங்களின்படி நடந்து பிறருக்கு நன்மைகள் செய்பவரே அந்தணர்.”
இதேபோல திருக்குறளிலும்,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”.
-திருக்குறள் 30
பொருள்: எல்லா உயிர்களையும் சமம் என்பதை உணர்ந்து எல்லாவுயிர்களிடமும் கலங்கமற்ற கருணையைக் காட்டும் தர்மநெறி உடையவரே அந்தணர் ஆவார்.
|| ஆறு தொழில்களை உடையவர் ||
****************************************************
”அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டு உளோர்”
–திருமந்திரம்
“அறுதொழிலோர்” –திருக்குறள் 560
அந்தணர்கள் அறுதொழிலோர் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தணர்களுக்கு ஆறு தொழில்கள் உள்ளன. அவை:
1) வேதங்களைக் கற்றல்,
2) வேதங்களை மற்றவர்களுக்குக் கற்று தருதல்,
3) முறையான வழிபாட்டில் ஈடுபடுதல்,
4) மற்றவர்களுக்கு முறையான வழிபாட்டு முறையைக் கற்றுத் தருதல்,
5) தர்மநெறியில் நடத்தல்,
6) மற்றவர்களுக்குத் தர்மநெறியைப் புகட்டுதல்.
|| அறவோரே அந்தணர் ||
**************************************
ஒரு பிராமணன் பிறப்பிக்கப்படுவதில்லை, அவன் பயில்விக்கப்படுகிறான். ஒரு மருத்துவ தந்தைக்குப் பிறந்தவன் மருத்துவனாகி விட இயலாது. அவனின் தந்தையிடம் இருந்து முறையான பயிற்சி பெற்றால் அவன் மருத்துவன் ஆகலாம். அதேபோல தான் அந்தணருக்குப் பிறந்தவன் பயிற்சியில்லாமல் அந்தணர் ஆகிவிட இயலாது. ஒரு பிராமணன் முறையான வழிகாட்டலினால் மட்டுமே உருவாக்கப்படுகின்றான். அப்படி உருவாகியவர்களே வால்மீகியும் வியாசரும். ஒருவன் முறையான ஒழுக்கங்களையும் நெறிகளையும் கடைப்பிடித்து சரியான ஆன்மிகப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டால் அவன் பிராமண நிலையை அடையலாம்.
ஒருவனின் செயல்களும் குணங்களும் தான் அவனின் தரத்தை பகுத்துக் காட்டுகின்றன. அதேபோல் பிராமண நிலையை அடைய கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகளை பகவத் கீதை 18:42-இல் நாம் காணலாம். பெரும்பாலும் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி தான் பிராமணர் என்று நாம் கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. பூசாரி (பூஜை செய்யும் ஆசாரியர்) என்பவர் கோவில்களில் தெய்வங்களுக்கு பூஜை மேற்கொள்ளும் ஒழுக்கநெறியுள்ள ஒருவர்.
ஆனால் பிராமணர் என்பது பரம்பொருளான இறைவனை உணர்ந்த ஒருவர். அவ்வாறு இறைவனை உணர்ந்த அரும்பெரும் ரிஷிகளே வேதங்களை நமக்கு அருளினர். அதேபோல எந்தவகையான மனிதராக இருந்தாலும் முறையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் அவரும் பிராமண நிலையை அடையலாம். பிராமண நிலை என்பது எல்லோரை விடவும் பெரிய பதவி என்று பொருள்படாது. உலக மக்களுக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் புகட்ட தகுதியுடையவனாக்கும்.
|| ரிக்வேதம் ||
*******************
ரிக்வேதத்தின் புருஷ சூக்தம் அண்ட சராசரத்தின் இயல்பை நுணுக்கமான முறையில் ’உருவக அணி’யில் விவரிக்கின்றது. புருஷ சூக்தத்தில், “புருஷர்களின் வாயாக இருப்பது யார்?” என்று கேட்கப்படுகின்றது. புருஷர்கள் என்றால் மனிதர்கள் எனப் பொருள்படும். மனிதர்களின் வாயாக இருந்து அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் புகட்டுபவர்கள் அந்தணர்கள் என்று அடுத்த வரியில் சொல்லப்படுகின்றது.
வாய் என்பது அறிவைப் புகட்டும் கருவியாக சித்தரிக்கப்படுகின்றது. ஒரு மனித சமுதாயத்திற்கு நல்லறிவும் நல்லொழுக்கமும் இல்லாவிட்டால் அந்த சமுதாயத்தின் நிலை திசைமாறி போய்விடும். எனவே ஒவ்வொரு சமுதாயத்திலும் நல்லவறைப் புகட்டும் சான்றோர்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.
|| உண்மையை அறிவோம் ||
*****************************************
சில பேருக்கு இதை அந்த இறைவனே வந்து சொன்னாலும் புரியாது. உலக மாயைகளில் ஒன்றான ’பிடிவாதத்தினால்’ உண்மைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ‘அசதோ மா சத் கமய’ எனும் மந்திரம் ‘உண்மையில்லாதவற்றிலிருந்து எம்மை நீக்கி உண்மையானவற்றிற்கு வழிகாட்டுவாயாக’ என்று இறைவனிடம் பிரார்த்தணை செய்துகொள்ளும் மந்திரமாகும். நம்முடைய பிறவியின் நோக்கமே எது உண்மையோ அதை அறிவதற்கு தான்.
பொய் கௌரவத்தினாலும் விடாபிடியான பிடிவாதத்தினாலும் உண்மையில்லாதவற்றை நம்பிக் கொண்டு நம்மை நாமே அறியாமை எனும் சிறையில் அடைத்து தண்டித்துக் கொள்ளக் கூடாது. உண்மை என்று அறிந்தவுடன் அதை ஏற்றுக் கொள்ள நிறைவான பக்குவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். இறைவனின் அளவற்ற திருவருளைப் பெற நல்லொரு வழி இதுவே ஆகும்.

Saturday, May 28, 2016

கற்களின் தரம் அறிவது எப்படி??

கற்களின் தரம் அறிவது எப்படி???
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

உணவே மருந்து - எப்போது?

உணவே மருந்து - எப்போது?
நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.
அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?
சாப்பிடும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.
எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.
இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.
நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒருபோதும் உணவை வீணாக்காதீர்கள்.

திவசம் ஏன் செய்கிறோம்

கேள்வி..
யாத்ரீகனிடம் அன்பர் ஒருவர்
கேட்ட கேள்வி..
....
Hello. Mr.யாத்ரீகன் எனக்கு விளக்கம் தருவீர்களா மாட்டீர்களா. என் முந்தைய கேள்வி ஒருவர் இறந்ததும் காரியம்., 30வது நாள், திவசம் ஏன் செய்கிறோம். தத்துவம் தாத்பரியம் என்ன பதில் கண்டிப்பாக வேண்டும் டும்டும்
....
பதில்..
...
மனிதன்
செய்த பாவத்தை
கணக்கு எடுக்க
முப்பது நாள் தேவைப்படுகிறது
...
அவ்வளவு பாவங்கள்
மனித பிறவியில்
..
பிராணிகளுக்கு
பறவை பட்சிக்கு
திதியோ
திவசமோ தேவை இல்லை
அவை
வந்த வேலை விட்டு
தேவை இல்லாததை
செய்வது இல்லை
...
திதி
என்பது என்ன
..
அவர்களுக்கு பிடித்ததை
அவர்களுக்கு படைப்பது
அதாவது
ஆவிக்கு விருந்து
...
ஒரு உயிர்
உடல் துறந்தவுடன்
அதன்
எண்ண அலைகள்
விருப்ப அலைகள்
நீங்காத கவலைகள்
விலகாத பாசங்கள்
அந்த உடலை
மறக்க முடியாமல்
தவிக்கும் தவிப்பு
இதிலிருந்து
அந்த உயிர் விடுபட
இதற்கு
முப்பது நாள் ...
...
உடல் துறந்த
அந்த
உயிருக்கு
பிரம்மம் நடத்தும் பாடம்
அந்த முப்பது நாள்
...
யாருக்காக
அதர்மம் செய்து
நீ பாவி ஆகி
பொருள் சேர்த்தாயோ
அவர்கள்
மூன்றாம் நாளே
எண்ணெயில் மூழ்கி
பலவகை உணவோடு
உண்ணுவதை பார்க்க வைத்து
எப்படி
உனை மறந்து
உண்டு
தூங்கி
வேற வேலை செய்ய
கிளம்புவதை பாக்க வைத்து
...
பாவம் செய்து
சம்பாதித்து வைத்த
சொத்தை பிரிக்க
அடித்து கொள்ளும்
உறவுகளை பாக்க
...
இறந்தவனை
எத்தனை பேர் திட்டுகிறார்கள்
என்பதை பாக்க
வருந்துவது யார் என அறிய
...
இதற்கு எல்லாம்
முப்பது நாள் வேண்டாமா ??
...
ஆயிரம் ஆண்டு
வாழ்ப்போவது போல
அரண்மனை கட்டி
அதன்
உள் கூட
இறந்த கூடை எடுத்து செல்லாமல்
வெளியை வைத்து
எரிந்து
பிடி சாம்பல் ஆன
அவன்
உடலை
கண்டு
வாழ்ந்த வாழ்க்கை
எவ்வளவு தவறு
என
அந்த உயிர் பார்க்க
அந்த
முப்பது நாள்
...
இறுதியாக
முப்பதாவது நாள்
ஒரு
மகா விருந்துடன்
திதி என்ற பெயரில்
சாந்தி ஆகி போ
என
வழி
அனுப்பி வைக்கிறர்..
....
இன்னும் எவ்வளவோ
எழுதலாம்
....
படிக்கத்தான்
சிரமம்
....
இன்றைய
வேக உலகத்தில
தற்சமயம்
மூன்று நாள் கூட
அந்த
உயிருக்கு
கிடைப்பதில்லை
...
மூன்றாவது நாளே
அனைத்தும் முடித்து
வேலைக்கு
லேட் ஆகி விட்டது
என்று
பரபரப்பாக ஓடுகிறார்கள்..
...
இருவருமே பாவமே

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகம்…

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகம்…
1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும்
.
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள்

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள் ..
நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது (இதை பற்றி ஒரு பதிவை பதித்தேன் )
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்