Sunday, March 5, 2017

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?


 

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?

 

சைவத்தின் மேல் வேறு சமயம் இல்லை, இதில் எனக்கு உடன்பாடு ஜாஸ்தி. எனவே தற்காலத்தில் சில சுயநலவாதிகளால் பெரிது படுத்தப் பட்ட ப்ரத்யங்கிரா, சரபர், சூலினி, காளி, சண்டி,…இதுபோன்ற உக்ர தெய்வ வழிபாட்டில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை, ஏனெனில் வள்ளுவர் சொன்னது போல கனி இருக்க காயை ஏன் சுவைப்பானேன்?

 

நம்முடைய சிவாலய தெய்வங்களையும், நவக்ரஹ தைவதைகளையும் விட வேறு தெய்வம் தேவையில்லையே? ஆனால் மக்கள் இவைகளை மறந்து, தேவையற்ற வழிபாடுகளை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது? இது எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு பரவலான கேள்வி!

 

மேலோட்டமாக ஒன்றயும், உள்ளார்ந்து ஒன்றயும் உணருகிறேன்.

 

மேலோட்டம்:

 

மேலோட்டமென்றால் வீர சைவர்கள் என்போர் சிவபெருமானின் வழிதோன்றல்கள் அவர்கள் அப்படி பேசுவது இயல்பு, காரணம் அவர்களின் ஆத்மார்த்தமான குரு சாட்சாத் எம்பெருமான், அப்புறம் அவர்கள் எப்படி மற்றவற்றை விரும்புவார்கள். இது பொதுவான விருப்பமாகும்.

 

 

இறைவன் என்பது உருவமற்றது, நாமமற்றது, எங்கெங்கிலும் வியாபித்திருப்பது எதிலும் உள்ளது, எல்லாமானது, நிலையானது என்பார் பெருந்தகையோர்.

 

ஸ்ரீ ஸ்ரீ சிவனாரின் ருத்ர தாண்டவ நிலையில் அவிழ்சடையினின்றும் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ வீரபத்திரர். இவர்தாம் சைவர்களின் மூலக் கடவுளானாவர். இவரை பின்பற்றியே சைவர்கள் வாழவேண்டும். இந்த வீரபத்திரரை வணங்கும் வீரசைவர்கள் புடலங்காய் உண்பது கூடாது. அங்காளம்மனை வணங்கமாட்டார்கள். அந்த அம்மன் இருக்கும் திசைகூட பார்க்கமாட்டார்கள் என்பது போல பல ச்மப்ரதாயங்கள் உண்டென்ற போதும் இன்று இவைகள் புறக்கணிக்க அல்லது மறைக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் தங்களின் குறிப்பில் உள்ள சரபர், பிரத்யங்கரா, சூலினி, சண்டி, காளி போன்ற இறைவனார் திருமேனிகள் உருவகப்படுத்திக் காட்டப்பட்டிருப்பது ஏன்? என பார்ப்போமா?

 

முதலில் யார் இவர்கள்?

 

பிரத்யங்கரா, சூலினி, காளி இவர்கள் மூவரும் ஒரே உருவத்திலிருந்து பிரிந்தவர்கள்தான். எப்படி ?

 

ஸ்ரீ ஸ்ரீ அம்பாளின் நிலைகள் ஐந்தாகும்,

 

1. சுவாமியுடன் அம்பாள்.

 

2. பிரகாரத்தில் துர்கா,

 

3. தனது கோயிலில் சூலினி, காளி, சண்டி

 

4. தனது கோயிலில் பிரத்யங்கரா

 

5. தனது கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

 

இவ்வாறாக அம்பாளே ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிப்பதாக சாக்தம் கூறுவது பொய்யல்லவே !

 

அப்புறம் ஏன் இந்த பேதம் !!!

 

சரி சரபர் யார் ?

 

சாட்சாத் சிவனேயல்லவா !

 

சைவ வைணவ சேர்க்கையை மறைமுகமாக வரவேற்கும் நிலையை காட்டும் உருவம்தானே சரபர்.

 

சரபரின் கைப்பிடியுள் சிக்கிக்கொண்ட ஸ்ரீ நரசிம்ஹரை அணைத்து ஆலிங்கனம் செய்து இரண்டும் ஒன்றே எனும் பொருள் காட்டும் உயர்ந்த நோக்கல்லவா அது! அதனை சைவர்கள் வெறுப்பானேன் ?

 

சைவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்களா என்ன?

 

வேறு மாதிரியாக பார்ப்போம்.

 

நமது குடும்பத்திற்காக ஒரு மருத்துவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். எந்த நோய்க்கும் அவரிடம்தான் போவது நமது குடும்ப வழக்கம். ஆனால் சில தீர்க்க முடியாத நோய்களுக்கு அவரே வேறு மருத்துவருக்கு சிபாரிசு செய்வதில்லையா, கடிதம் தருவதில்லையா? எல்லாவித சங்கடங்களையும், தோஷங்களையும் திருக்கோயிலில் குடிகொண்ட எம்பெருமானாரால் தீர்க்க முடியும் என்றாலும் சில விசேஷமான தீர்வுகளுக்கு சுவாமியின் வேறு சில திருஉருவங்கள் பொறுப்பேற்று தீர்த்து வைக்கின்றன.

 

உதாரணமாக

 

பெரும் பணக்காரர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக சிலரை பணியமர்த்தி உள்ளார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதேனும் ஒன்று என்றால் இந்த பாதுகாவலர்கள் சும்மாயிருக்கமாட்டார்கள் அடிதடி என்று கொலைவரை செய்வார்கள், அவர்களுக்கு உணவு தந்து உடை தந்து அவர்களை தன்னுடனேயே வைத்து அவர்களிடம் தன்னை பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே கோபம் அளவிற்கு அவர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறார் அந்த பணக்காரர்.

 

அந்த அடியாட்களுக்கு குடும்பம் இல்லையா? இருக்கிறது, குழந்தைகள் இருப்பார்கள், தாய் தந்தை இருப்பார்கள், அவர்கள் தனது வீட்டில் சிரிப்பார்கள், குழந்தைகளோடு விளையாடுவார்கள், மனைவியோடு சந்தோஷிப்பார்கள்.

 

ஆனால் அந்த பணக்காரர் அவர்களின் கோபத்தை மட்டுமே தனக்காக பயன்படுத்துவதால் அவர்கள் இங்கே வந்தால் கோபஸ்வரூபமாக (உக்ர ரூபமாக) காட்சி தருகிறார்கள்.

 

இதனைப் போலவே எம்பெருமானின் கோபாக்னியை (வீரபத்திரரின்) மட்டும் பயன்படுத்தும் போது அது ஒரு சில விஷயங்களுக்கு தீர்வாகிறது.

 

சாந்தமாக தீர்க்க முடியாதா என்ற கேள்வி எழும்.

 

காலில் குத்திய முள்ளை எடுக்க இன்னொரு கூர்முனை ஊசிதான் தேவை, அதை விடுத்து கொஞ்சம் பஞ்சை வைத்து கொண்டு முள்ளே வெளியே வா என்றால் முள் வராது.

 

பழமொழி: அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான்.

 

இப்போது புரிந்ததா?  ஏன் உக்ர தெய்வ வழிபாடு என்று. யும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.

மந்திரம்

மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பலவகை
1 மூல மந்திரம், 2. பீச மந்திரம் 3. பஞ்ச மந்திரம்
4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம்
7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம்
10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம் 12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம்
16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம்
19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம்
22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம்,
25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம்,
28.எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம்,
31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம்,
34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம்
37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம்
43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம்,
49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வடசமஸ்கிருத நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது

Saturday, March 4, 2017

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?
திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?
அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி
செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.
நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.
அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்
கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.
ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.
அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.
ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.
அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,
போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான்
சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.
ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "

ப்ருஹ்மயக்ஞம்

ப்ருஹ்மயக்ஞம் செய்வோம்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

இவ்வுல்கில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர், செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.; துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர். தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்.. இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யானம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம். ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய  அற்புதமான விஷயங்கள் :
சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.
சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.
இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..
| ஜடாமுடி |
சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.
| நெற்றிக்கண் |
சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.
| திரிசூலம் |
திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.
| ஆழ்ந்தநிலை |
சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.
| சாம்பல் |
சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.
| நீலகண்டம் |
சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.
| உடுக்கை |
சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.
| கங்கை |
சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.
| கமண்டலம் |
சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.
| நாகம் |
சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

Wednesday, March 1, 2017

சிரிக்கும் புத்தரை இந்த திசையில் வைத்தால் செல்வம் செழிக்கும் தெரியுமா?

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.

கிழக்கு திசை:
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.
பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

ஷெங் சி திசை:
ஃபெங் ஷுய் மரபில், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும். சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும்.
அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.

தென் கிழக்கு திசை:
சிரிக்கும் புத்தரை அறை, கூடம், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.
சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜை:
சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.
கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.

எந்த திசையில் வைக்க கூடாது?
சிரிக்கும் புத்தரின் மீது மதிப்பை வைத்திருக்கும் ஃபெங் ஷுய்யும் புத்த மதமும், அவரை மிக மரியாதையாக கருதுகிறார்கள். சிரிக்கும் புத்தர் என்பவர் வழிபட்டு, மதிப்பளிக்க வேண்டிய சிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நீங்கள் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது. இதனால் இச்சிலை நமக்கு வழங்கும் ஆற்றை திறனை இது குறைக்கும்.

சிரிக்கும் புத்தரின் தோரணை
இச்சிலையின் உயரம் நம் கண்களின் மட்டம் வரையாவது இருக்க வேண்டும். எப்போதுமே ஒரு சிலையை நாம் மேல்நோக்கி பார்ப்பது தான் நாம் அதற்கு அளிக்கும் மரியாதையாகுமே தவிர, கீழ்நோக்கி பார்ப்பது அல்ல. சமயஞ்சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள அனைத்து படங்கள் அல்லது சிலைகளுக்கும் இது பொருந்தும். அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அதற்கு இதுதான் காரணம்

ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.
வாஸ்து சாஸ்திரம் கூறுவதை போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்த தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?
  • நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.
  • வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. என்னெனில் இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
  • நமது வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.
  • நமது வீட்டில் பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும். ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கிறது

Wednesday, February 22, 2017

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை –


மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை

 

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு ....

 

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது , மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

 

 மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

 

அடியார்கள் ,சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார் -கள் என்று புரிய வில்லை ..

 

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

 

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

 

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

 

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது ...

 

கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை ,

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

 

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,

ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி.

 

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

 

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

 

ஆனால் பக்தர்களின் ஆரவாரம் ,கேளிக்கைகள் , சப்தம் கோவிலை பிளக்கிறது -சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது ….

 

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் ,மாற்றுதலும் செய்யவேண்டாம் ...

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?


பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?

 

கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

 

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

 

1.தாலிதாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடுஎதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்திமூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல்கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம்கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம்எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

 

இவை தவிர நகைகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

 

அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

 

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

 

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

 

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

 

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

 

வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

 

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

 

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

 

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

 

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது.

 

இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

 

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

 

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள்; அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள்.

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.