Thursday, March 14, 2013

கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வெறும்தரையில் தான் தூங்கவேண்டுமா?

* கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வெறும்தரையில் தான் தூங்கவேண்டுமா?

பொதுவாக விரதம் இருப்பவர்கள் படுக்கையில் படுக்கக்கூடாது என்பது நியதி. அதற்காக எப்போதும் வெறும் தரையில் உட்காருவதோ, படுப்பதோ கூடாது. பனைஓலைப்பாய், தலைக்குப் பலகை, புதியபோர்வை போன்றவற்றை உபயோகிக்கலாம்.

பணிச்சுமை காரணமாக பெற்றோரை நினைத்து அமாவாசை விரதம் கூட இருக்கமுடியவில்லை. இதனால் என் சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படுமா?

பணிச்சுமை காரணமாக பெற்றோரை நினைத்து அமாவாசை விரதம் கூட இருக்கமுடியவில்லை. இதனால் என் சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படுமா?

"
இயலவில்லை' என்ற வார்த்தையையே தவிருங்கள். அமாவாசை விரதமிருப்பதற்கு ஏன் இயலவில்லை என்று புரியவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும், வெங்காயம், பூண்டு, மாமிசம் இவைகளைத் தவிர்த்து ஏதாவது உணவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம் பெற்றோருக்காக மாதம் ஒரு நாள் சிலவற்றை விட்டுக் கொடுக்கக்கூடாதா? ஒன்றுமே கிடைக்காத நிலையில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது தான் நல்லது.

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மைதானா?

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களுக்கு இயற்கையாகவே சில குணங்கள் இருப்பதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தாங்கள் கூறியது போல ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பது போன்ற சில விஷயங்கள் வழக்கத்தில் இருக்கின்றன. இருப்பினும், ஜாதகத்தில் கிரகபலம் இருந்தாலும், தம்பதியர் மனம் ஒன்றி வாழ்ந்தாலும், தெய்வபக்தி இருந்தாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது என்பது ஆன்றோர் வாக்காகும்.

கோயில்களில் உள்ள சுவாமியின் சக்தியை சில மந்திரவாதிகள் குறைத்து விடுவார்களாமே! உண்மையா?

கோயில்களில் உள்ள சுவாமியின் சக்தியை சில மந்திரவாதிகள் குறைத்து விடுவார்களாமே! உண்மையா?

தெய்வ சக்தியையே குறைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருப்பது உண்மை என்று நம்பியிருந்தால் நம் முன்னோர் ஊர்தோறும் இவ்வளவு கோயில்களைக் கட்டி வைத்திருக்க மாட்டார்கள். நல்ல செயல்கள் செய்யும் மாந்திரீகர்களுக்கு சக்தியை அதிகரிக்கச் செய்யும் இடமாகவும், தீயசெயல்களைச் செய்யும் மாந்திரீகர்களை அடக்கும் இடமாகவும் கோயில்கள் திகழ்கின்றன. எனவே, இதுபோன்ற செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம்.

கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்துவது ஏன்?.


கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்துவது ஏன்?.
கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்தச் சொல்லி எந்த சாஸ்திரத்திலும் கூறவில்லை. இது எப்படி வழக்கில் வந்தது என்றே புரியவில்லை. கிரகண காலத்தில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும். நதி அல்லது குளங்களில் சுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கவேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

நாயன்மார்களில் நந்தனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர், சண்டிகேஸ்வரர், சாக்கியர் போன்ற பல அடியார்கள் கடுமையான முறையில் சிவன் மீது பக்தி செலுத்தியது ஏன்?

* நாயன்மார்களில் நந்தனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர், சண்டிகேஸ்வரர், சாக்கியர் போன்ற பல அடியார்கள் கடுமையான முறையில் சிவன் மீது பக்தி செலுத்தியது ஏன்? இறைவனை அடைய மென்முறை போதாதா?

மேற்கூறிய சிவனடியார்கள் இறைவனை அடையவேண்டும் என்ற குறிக்கோளோடு இப்படிக் கடுமையான வழிகளைக் கையாளவில்லை. இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இருந்தால் நீங்கள் கூறும் மென்முறையே போதுமானது. இந்நிலை ஒரு குறிக்கோளோடு செய்யப்படுவதாகும். ஆனால், மேற்கூறிய அடியவர்கள் இறைவன் வேறு, தான் வேறு என்று எண்ணவில்லை. நந்தனார் சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிப்பதையே பேரின்பமாகக் கருதினார். சிறுத்தொண்டர் அடியவர்களுக்கு உணவு அளிப்பதையும், கண்ணப்பர் இறைவனின் லிங்கத்திருமேனியைப் பாதுகாப்பதிலும், சண்டிகேஸ்வரர் இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்வதிலும் பேரின்பம் கொண்டனர். அதாவது, முக்தியின்பம் பெற்றனர். வேறு எந்த குறிக்கோளும் இல்லாத அவர்களின் அன்றாட வாழ்க்கையே பக்தியாகிவிட்டது. அதற்குச் சோதனைக்காலம் வந்தபோது, கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை.