Saturday, May 30, 2015

விரதத்தின்போது நெல்லிக்காய் எதற்கு?

நமஸ்காரம் சத்குரு, ஏகாதசியன்று நெல்லிக்காய் உண்ணும் வழக்கம் இருக்கிறது. இப்படிச் செய்வது வெறும் ஆரோக்கியத்திற்காகவா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? சத்குரு: உணவுக்கு முன் எலுமிச்சை சாறினை ஏதாவது விருந்தில் பரிமாறினால், உங்கள் பசியை கொல்ல நினைக்கிறார்கள் என்று அர்த்தம். பலர் இதனை அறியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எலுமிச்சை சாறு பசியினை குறைக்கிறது. நாம் 10,000 வருட தொன்மையான கலாச்சாரம் அல்லவா? மக்கள் கொஞ்சம் சாதுர்யமாக நடந்துகொள்ள பார்க்கின்றனர். சாதுர்யமான சமூகங்கள் முதலில் இனிப்பை பரிமாறும். இனிப்பை உண்டவுடன் பாதி வயிறு நிறைந்துவிடும். விரதமிருக்கும்போது, வாயில் ஒரு நெல்லிக்காயினை வைத்து சப்பிக் கொண்டு இருப்பது பசியைத் தணிக்கும். இந்தியாவில் விருந்தினர்களை உபசரிப்பது என்பது ஒரு கடமை. பொருளாதார காரணங்களுக்காகவும், விருந்தினர்களின் உடல்நலத்திற்காகவும் இதுபோன்ற பல பழக்கங்களை வழக்கத்திற்கு கொண்டு வந்தனர். இலவசம் எனும் பட்சத்தில், அதனை அள்ளிக் கொள்ளும் மனநிலையிலேயே இன்று நம் மக்கள் உள்ளனர். இதனாலேயே உணவிலும் இதே மனநிலை நிலவுகிறதோ என்னவோ? விருந்துகளில், மக்கள் அளவுக்கு அதிகமாய் உண்டு தங்கள் உடலையும் கெடுத்துக் கொள்கின்றனர். ஏகாதசி, விரதத்திற்கான ஒரு நாள். விரதமிருக்கும்போது, வாயில் ஒரு நெல்லிக்காயினை வைத்து சப்பிக் கொண்டு இருப்பது பசியைத் தணிக்கும். விரதத்தின்போது வயிற்றிலிருக்கும் ரசாயனங்கள் வேலை செய்யத் துவங்கி, சற்று நேரத்திற்குபின் உக்ரமாய் செயல்படத் துவங்கிவிடும். இந்தச் செயல் அதிகமாகும்போது பித்தநீர் சுரந்து, சிலர் வாந்தியெடுக்கவும் செய்வர். இதுபோன்ற சூழ்நிலையில், உடலில் துவர்ப்பு சுவையுள்ள புளி சேர்த்தால், குமட்டலின் தாக்கம் குறைந்துவிடும். நெல்லிக்காய் இதனைச் சிறப்பாக செய்கிறது, மேலும் பசியையும் தணிக்கிறது. எனவேதான் உடலை சிறப்பாய் புரிந்துகொண்ட நம் கலாச்சாரத்தில் ஏகாதசியன்று நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் வழக்கம் நிலவி வருகிறது. ஒரே ஒரு நெல்லிக்காய், 3, 4 மணி நேரத்திற்கு ஒருவரை பசியறியாமல் இருக்கச் செய்யும். அத்தனை வலிமையாய் அது பித்தநீரை கட்டுப்படுத்துகிறது. பிரசவத்தின்போது ஏற்படும் குமட்டலுக்கும் நெல்லிக்காய் சிறந்தது. அதனாலேயே விரதமிருக்கும்போது நெல்லிக்காய் உண்ணும் பழக்கம் வந்தது.

Read more at : விரதத்தின்போது நெல்லிக்காய் எதற்கு? 

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்குமா?

குறுகிய கண்ணோட்டம் கொண்ட சிலர், அப்பனைப் போலவே வந்து வாய்த்திருக்கிறான் என குழந்தைகளை மட்டம் தட்டுவதைப் பார்க்கிறோம். அப்பாவைப் போலவேதான் மகன் இருப்பான் என்ற நினைப்பு சரியா? இங்கே சத்குரு என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! சத்குரு: வாத்தியார் பிள்ளை மக்கு என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ, அதே போலத்தான் இதுவும். இதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அப்பன் திருடன் என்பதால், அவன் மகனையும் திருடனாக நினைப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. உண்மையில் இந்த வாசகம் தந்தைகளுக்கு ஓர் எச்சரிக்கையாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழ்வது முக்கியம். குடிகாரத் தந்தை தன் மகன் குடிக்கும்போது அவனைத் தட்டிக் கேட்க முடியாது. பொய் சொல்லி வாழ்க்கையை நடத்தும் தகப்பன், மகனை உண்மை சொல்பவனாக வளர்க்க முடியாது. மற்றவரை மதிக்கத் தெரியாத அப்பாவால், மகனிடத்தில் மதிப்பு பெற முடியாது. தந்தையின் அருகாமையில், அவரைப் பார்த்துப் பார்த்து மகன் வளரும் சூழ்நிலைகளில், தந்தையின் குணங்களில் சில, மகனிடத்து ஒட்டிக்கொண்டிட வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழ்வது முக்கியம். வீட்டில் ஒரு குழந்தை உருவாகையில், அதை எப்படி வளர்ப்பது என்று எடுத்துக் கொள்ளும் கவனத்தை விட, நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்ற கவனம் தான் இன்னும் அதிகமாக அவசியம். உங்கள் வளர்ப்பில், உங்களின் குணங்கள் அவனிடம் தொற்றிக் கொள்வதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் கடைபிடிக்கும் நெறிகள், உங்கள் குணம், உங்கள் பழக்கவழக்கங்கள், பண்பாடுதான் உங்கள் வாரிசுகள் மூலமும் தொடரும். நீங்கள் ஒழுக்கமற்றவராக இருந்துகொண்டு, உங்கள் மகனை ஒழுக்கமாயிருக்கச் சொல்லி வற்புறுத்தினால், அது எடுபடாது. அடுத்த தலைமுறைகளை உருவாக்குபவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் அறிவுரை வார்த்தைகளால் மட்டும் குழந்தையைச் செம்மைப்படுத்த முடியாது. நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டினால்தான், அது குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும். இதை உணர்த்தும் விதமாக, தந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மற்றபடி, தந்தைகளை வைத்து பிள்ளைகளைப் பற்றி தீர்ப்பே எழுத நினைப்பது முட்டாள்த்தனம். அபத்தம். ஹிட்லரின் அப்பா இன்னொரு ஹிட்லராக இருக்கவும் இல்லை. புத்தரின் அப்பா ஒரு புத்தராக வாழ்ந்த சரித்திரமும் இல்லை.

: அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்குமா? 

அனுமன் பஞ்சரத்னம்!

ஜகத் குரு ஆதிசங்கரர் அருளியது
அனுமன் பஞ்சரத்னம்!
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
பொருள்: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், வாயு குமாரனுமான ஹனுமனை வணங்குகின்றேன்
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
பொருள்: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
பொருள்: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
பொருள்: சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
பொருள்: வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்வதி
பொருள்: பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள- ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்....

Friday, May 29, 2015

பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன்


மக்களின் ஆன்மீக நலனுக்காக பாம்பு மோதிரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன்
ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கை என்று எதை அறிந்திருக்கிறாரோ அதன் உச்சத்தை அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது.
உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.
மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது.
மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது.
மோதிர விரல் உங்கள் கணினி மௌசைப் போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்.”
பாம்பு மோதிரத்தின் பயன்கள்: ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது. அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது. சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.
யாரெல்லாம் அணியலாம்? இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது.

Thursday, May 28, 2015

மரணம் என்பது மறுசுழற்சியே!

கேள்வி சத்குரு, ஒருவருடைய மரணம் என்னை வருத்தத்தில் ஆழ்த்துகிறது, என் வீட்டு மாடியில் இறந்து கிடக்கும் புறாவோ, தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாயோ என்னை வேதனையில் தள்ளுகிறது. நான் ஏன் இப்படி உணர்கிறேன்? மரணம் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்த முடியுமா? சத்குரு: இறப்புதான் எல்லா பயங்களுக்கும் அடிப்படை. இறப்பு இல்லையென்றால் பயம் என்பது இருக்காது, ஏனென்றால் துண்டு துண்டாக வெட்டினாலும் நீங்கள் இறக்க போவதில்லைதானே. ஆனால் பயம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மரணம் என்பது ஒரு அற்புதமான விஷயம். பல விஷயங்களை அது முடிவுக்கு கொண்டு வருகிறது. தற்போது நீங்கள் இருக்கும் நிலையில் அதை ஒரு கொடுமையான விஷயம் என்று நினைக்கலாம். ஆனால் 1000 வருடங்கள் வாழக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை ஒரு விடுதலையாக நினைப்பீர்கள். நீண்ட காலம் இங்கே இருந்தீர்கள் என்றால் நீங்கள் எப்பொழுது கிளம்புவீர்கள் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே மரணம் என்பது ஒரு பெரிய விடுதலை, என்ன அது அகாலமாக நிகழக் கூடாது, அவ்வளவுதான். உலகில் ஏதோ ஒன்றை உருவாக்கும், ஏதோ ஒன்றில் பங்களிக்கும், ஏதோ ஒன்றை நிகழச் செய்யும் திறனோடு இருக்கும் பொழுது நாம் இறந்து போக விரும்புவதில்லை. சரியான நேரத்தில் இறந்து போக விரும்பினால், யோகப் பயிற்சிகள் செய்தால் உங்கள் மரணம் எப்பொழுது சம்பவிக்க வேண்டும் என்பதை நீங்களே நிர்ணயம் செய்யலாம். இல்லையென்றால், ஒரு புறா இறந்து கிடப்பதை பார்த்தாலும் உங்களின் இறந்து போகும் தன்மை நினைவுக்கு வரும். நேற்று பறந்து கொண்டிருந்த ஒன்று இன்று இல்லை, இறந்து விட்டது. உங்களுக்கும் ஒரு நாள் அதே நிலைதான் என்று கற்பனை செய்வது பயம் தருவதாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் எதை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீர்களோ அவற்றுடனான உங்கள் அடையாளம் அந்த அளவுக்கு ஒரு நிர்பந்தமாக மாறிவிட்டது. நீங்கள் சேகரித்த அடையாளம் என்று நான் சொல்லும் பொழுது, நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த உடல் இந்த பூமியின் ஒரு சிறு துண்டுதான். மண்ணை சேகரித்து நீங்கள் உருவாக்கிய இந்த உடல் மற்றும் அடையாளங்கள் எந்த அளவு வலுவாகி விட்டது என்றால், அதை இழப்பது என்பது இப்போது ஒரு கொடுமையான விஷயமாகத் தெரிகிறது. உதாரணமாக நீங்கள் அதிக உடல் எடையோடு இருந்து, நாங்கள் உங்களை ஒரு 10 கிலோ எடை குறைக்க உதவினால், அதை கொடுமையான விஷயம் என்று நினைத்து அழுது கொண்டிருப்பீர்களா? நிச்சயம் இல்லை. 10 கிலோ குறைந்தால் அது மக்களுக்கு ஒரு பரவசமான விஷயம்தான். இதேபோல் மொத்தம் 50, 60 கிலோவையும் உதறினால் அதில் இழப்பதற்கு என்ன இருக்கிறது? வாழ்க்கையை நீங்கள் அதன் போக்கில் உணர்ந்திருந்தால், உங்கள் சேகரிப்புகளில் நீங்கள் தொலைந்து போகாது இருந்தால், உடலை விடுவது என்பது பெரிய விஷயமாக இருக்காது. இறந்த பறவையின், பூச்சியின், நாயின், மனிதனின் உடல் என்பது மண் மீண்டும் மண்ணுக்கு போவது. இதில் பெரிய நாடகம் ஒன்றும் இல்லை. இது ஒரு இயற்கையான நிகழ்வு. நீங்கள் எடுத்துக் கொண்டதை திருப்பி கொடுத்து மறுசுழற்சிக்கு வழி செய்ய வேண்டும். உங்கள் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் பூமித் தாயை பொறுத்தவரை அது ஒரு மறுசுழற்சிதான். அது உங்களை வெளியே தள்ளி மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. உங்களை பற்றி நீங்கள் பலதும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் வாங்கியதை திருப்பிக் கொடுத்தாக வேண்டும், அது ஒரு நல்ல பழக்கம்தானே. யாரிடம் இருந்தாவது ஏதாவது வாங்கினால், ஒரு காலகட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். என்னை நம்புங்கள், மரணம் என்பது ஒரு நல்ல பழக்கம்தான். கடப்பது தும்பியின் போராட்டம் கண்ணாடிக்குள் புகுந்து வெளி வர… வழி இருக்கிறதென கண்கள் சொன்னாலும் தென்றலும்கூட உட்புக முடியாது. கண்களின் ஏமாற்று வித்தையும் தெளிந்த மனமும் அனைத்தையும் உள்ளே அனுமதிப்பதாய் தெரிகிறது. எதுவும் உள்ளே போவதும் இல்லை வெளியே வருவதும் இல்லை தெளிவை விலக்கி ஏமாற்று வித்தையை ஆழமாக்கி என் படுக்கையில் நான் கண்டேன் இறந்த, வறண்ட தும்பி பூச்சி அன்பும் அருளும், தேவைப்படுகிறது. எத்தனையோ தினம், அதில் இதுவும் ஒன்று என்று அசட்டையாக இருக்கிறீர்களா?
Read more at : மரணம் என்பது மறுசுழற்சியே! 

கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்?

கேள்வி கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்? சத்குரு நீங்கள் வீட்டில் கடவுள் சிலைகள் வைத்திருந்தால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று இந்தக் கலாச்சாரத்தில் மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் கடவுள் படங்கள்தான் வைத்திருப்பார்கள், சிலைகளை வைத்திருக்க மாட்டார்கள். அதுவும் சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடவுள் சிலைகளை மிகச் சிலர்தான் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்கள் அந்த சிலைகள் உயிர்த்தன்மையுடன் இருக்க தினசரி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். கடவுளையே உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் இந்தக் கலாச்சாரத்தில்தான் இருக்கிறது. இந்தக் கலாச்சாரத்தில் 33 கோடிக்கும் மேற்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள். இந்த ஒரு கலாச்சாரம் மட்டுமே கடவுள் அற்ற கலாச்சாரம். 33 கோடி கடவுளர்கள் இருந்தாலும் இது கடவுளற்ற கலாச்சாரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், கடவுள் பற்றிய திட்டவட்டமான ஒரு கருத்து என்பது இங்கு கிடையாது. ஒரே குடும்பத்தில் 5 பேர் 5 விதமான கடவுள்களைக் கும்பிடுவார்கள். ஒருவர் ஆண் கடவுளை வழிபடுவார். ஒருவர் அம்மனை வழிபடுவார். ஒருவர் யானைக் கடவுளை வழிபடுவார். ஒருவர் குரங்குக் கடவுளை வழிபடுவார். உங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கடவுளை இஷ்ட தேவதை என்று உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தைக்கூட நீங்கள் கடவுளாக வழிபட முடியும். இந்த ஒரு கலாச்சாரத்தில் மட்டும்தான் கடவுள் நமது உருவாக்கம் என்று பார்க்கப்படுகிறது. மற்ற கலாச்சாரங்களில் அவர்கள் கடவுளின் உருவாக்கம் என்று பார்க்கிறார்கள். இங்கு நாம்தான் கடவுளை உருவாக்குகிறோம். அதற்கான விரிவான தொழில்நுட்பமே இருக்கிறது. ஒரு கல்லை சில நாட்களில் கடவுளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அப்படி ஓர் உருவத்தை உருவாக்கி சரியான முறையில் பிரதிஷ்டை செய்துவிட்டால், பிறகு அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரித்து வர வேண்டும். இந்த உருவச் சிலைகளுக்கு, நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல விதங்களில் சக்திநிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நம் கலாச்சாரத்தில், கோவில்கள் என்பது வழிபடும் இடமாக இல்லாமல், சக்தி மையமாக, சக்திநிலை பெறுவதற்கு ஏற்றபடிதான் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அதனால்தான் கோவிலுக்குச் சென்றால் சிறிது நேரமாவது கோவிலில் உட்கார்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு சொல்லப்படுகிறது. சக்தியைத் தரும் மையமாகத்தான் நமது கோவில்கள் இருக்கின்றன. இன்றைய உலகில் ஒவ்வோர் உறவிலும், செயலிலும் போராட்டம் நிறைந்திருக்கிறது. எனவே மனதளவில், உணர்ச்சி அளவில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படுகிறது. எனவேதான், காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லும்படி நாம் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம். இப்படி சக்தியை வழங்கும்படியாகவே கடவுள் உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவச் சிலைகளுக்கு சேதம் ஏற்படும்போது, அதிலிருந்து சக்தி விலகத் தொடங்குகிறது. அப்போது அது சுற்றி இருப்பவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம். எனவே, அந்த உருவத்துக்குச் சிறிது சேதம் ஏற்பட்டாலும், சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்றாலும், அதைக் கிணற்றிலோ, ஆற்றிலோ, வேறு யார் கையிலும் கிடைக்காதபடி அப்புறப்படுத்தி விடுகிறோம். ஒரு கருவியை நமக்காக நாமே உருவாக்கினோம். இன்று அது நமக்கு உதவியாக இல்லை, மேலும் கெடுதலும் ஏற்படலாம். எனவேதான் தயங்காமல், மேலும் இன்னொருவர் கைக்குக் கிடைக்காத தூரத்துக்கு அப்புறப்படுத்திவிடுகிறோம்!

Read more at : கடவுளை ஆற்றில் போடலாமா? 

மஹாளய அமாவாசை


தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது. இந்த பூமியில் சுமார் 2 கோடி வருடங்களாக மனிதர்களும், அவனுடைய மூதாதையர்களும் வசித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது மிக நீண்ட காலம். நமக்கு முன் இங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான தலைமுறையினர் நமக்கு ஏதோ ஒன்றை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். நாம் பேசும் மொழி, நாம் உட்காரும் விதம், நம் உடைகள், நம் கட்டிடங்கள் என்று இன்று நமக்குத் தெரிந்த அனைத்துமே நமக்கு முன்பிருந்த தலைமுறையினரிடமிருந்து வந்தவைதான். இந்த பூமியில் மிருகங்கள் மட்டும் வசித்து வந்தபோது, உயிர் வாழ்தல், உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல், பின் இறந்து போதல் என்பது மட்டும்தான் வாழ்க்கையாக இருந்தது. பிறகு உயிர்வாழ மட்டும் தெரிந்த இந்த மிருகம் மெதுவாக பரிணாம வளர்ச்சி பெறத் துவங்கியது. குறுக்குவாக்கில் இருந்து வந்த இது, மெதுவாக எழுந்து நிற்கத் துவங்கியது; மூளை வளரத் தொடங்கியது; இந்த மிருகத்தின் செயல்திறன் திடீரென்று பெருக ஆரம்பித்தது. மனிதனைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், நம்மால் கருவிகளைப் பயன்படுத்த முடியும். கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்ததால், அவற்றை உருவாகும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கினோம். ஒரு நாள் ஒரு மனிதக் குரங்கு தன் கைகளினால் சண்டை போடாமல், மற்றொரு விலங்கின் தொடை எலும்பை எடுத்து சண்டை போட்டது. தன்னுடைய சொந்த உடலைத் தவிர, வேறொன்றை எடுத்து தன் வாழ்க்கைக்குப் பயன்படும் கருவியாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனம் அதற்குத் துவங்கியது. அதுதான் ஒரு வகையில் இந்த பூமியில் மனித உயிரின் தொடக்கமாக அமைந்தது. இன்று நாம் இருக்கும் நிலைக்கு, அவர்கள் நமக்குக் கொடுத்தவைதான் காரணம். இப்போது மனிதர்கள், மிருகங்களை விட இன்னும் நன்றாக இருக்கும் வகையில் தங்களது வாழ்க்கைகளை வடிவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள். உறைவிடங்கள், கட்டிடங்கள், ஆடைகள் வந்துவிட்டன. இந்த பூமியில் மனிதர்களால் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிவிட்டன. நெருப்பை உண்டாக்குவது போன்ற எளிய விஷயங்களிலிருந்து, சக்கரத்தைக் கண்டுபிடித்ததுவரை எண்ணற்ற பல விஷயங்கள், மூதாதையர்கள் கொடுத்த சொத்துக்களாக தலைமுறை, தலைமுறைகளாக கைமாறி வந்திருக்கின்றன. இவையெல்லாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்தான் இன்று நாம் இப்படி இருக்கிறோம். உதாரணத்திற்கு மனிதர்கள் ஆடைகளையே உடுத்தாமல் இருந்து, நீங்கள்தான் சட்டை என்று ஒன்றை உருவாக்கும் முதல் மனிதராக இருந்தால், அது அத்தனை சுலபமானதாக இருக்காது. எப்படி ஒரு சட்டையைத் தைப்பது என்று கண்டுபிடிப்பதற்கே பல வருடங்கள் ஆகிவிடும். இன்று நம்மிடம் இருக்கும் அத்தனை விஷயங்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டோம். ஆனால் நமக்கு முன்பிருந்த தலைமுறையினர் இல்லாமல், முதலில் நம்மால் இங்கே இருந்திருக்கக்கூட முடியாது. இரண்டாவது, அவர்களுடைய பங்களிப்புகள் இல்லாமல், இன்று நம்மிடையே இருக்கும் பொருட்கள் எதுவும் இங்கு இருந்திருக்காது. எனவே அவர்களை சாதாரணமாக நினைக்காமல், அவர்கள் அனைவரின் மீதும் நாம் கொண்டுள்ள நன்றியை வெளிப்படுத்தும் நாள் இன்று. நடைமுறையில் இது ஒருவர் தனது இறந்து போன பெற்றோர்களுக்குச் செய்யும் சடங்காகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது நமக்கு முன்னால் இங்கே வாழ்ந்த அத்தனை மூதாதையருக்கும், அவர்களது அத்தனை தலைமுறையினருக்கும் நம்முடைய நன்றியின் வெளிப்பாடு. இந்த நேரத்தில்தான், இந்திய துணைக்கண்டத்தில், புதிய பயிர்கள் விளைச்சலின் பலனைத் தரத் துவங்கியிருக்கும். நமது மூதாதையர்கள் மேல் கொண்ட மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, நவராத்திரி, விஜயதசமி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு முன்னால், அந்த விளைச்சலை அவர்களுக்குப் பிண்டமாகப் படைத்து அர்ப்பணிக்கிறோம். லிங்கபைரவி கோவிலில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் – 

Read more at : மஹாளய அமாவாசை http://tamilblog.ishafoundation.org/mahalaya-amavasai/

ஏன் காசி?


பல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் “சத்குரு ஏன் காசி யாத்திரை செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை? இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் – எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம். படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்” என்று சொல்லலாம். “காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் “காஸ்மாஸ்” என்றால் ‘ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டது’ என்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும். இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது. டெல்ஃபியில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த சாதனம் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரபஞ்சத்து உண்மையுடன் இணையவும், பிரபஞ்சத்துடன் ஒன்றாக இணைவதால் உண்டாகும் இன்பத்தையும், களிப்பையும், அழகையும் அறிவதற்கும் ஆன சாத்தியம், இந்த மனிதனுக்கு, இங்கே இருக்கிறது. வடிவியல்படி பார்த்தாலும், காசி, அந்த அண்டமும் இந்த பிண்டமும் சந்திப்பதற்கு சரியான அமைப்பில் உள்ளது. இந்த தேசத்தில், இது போன்றே பல சாதனங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு தியானலிங்கம் தியானலிங்கமும் அத்தகைய ஒரு அமைப்புதான். நமக்கு சில தடைகள் இருந்ததால், அண்டத்தின் சிறு பிரதிபலிப்பாக மட்டுமே தியானலிங்கத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. ஒருவர் விருப்பத்துடன் இருந்தால், தியானலிங்கம், எல்லையற்ற சாத்தியங்களை வழங்கத் தயாராய் இருக்கிறது. ஏனென்றால், உச்சபட்ச சாத்தியத்தை வழங்கக்கூடிய அற்புதமான சாதனமாக அது விளங்குகிறது. காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்? சிவன் காசியில் வாழ்ந்தார், என்ற நூறு சதவீத நம்பிக்கையின் அடிப்படையிலேயே, காசியின் புராணக் கதை விரிகிறது. காசி சிவனின் குளிர் வாசஸ்தலம். இமயத்தின் மேல் பகுதியில் அவர் கடுந்துறவியாக வாழ்ந்தார். ஆனால் அவர் ஒரு இளவரசியை மணமுடித்த பின்னர், சற்று சமரசம் செய்து கொள்ள வேண்டி இருந்தது. கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவரான சிவன் சமவெளிக்கு, காசிக்கு, குடிபெயர்வது என்று முடிவு செய்தார். அன்றைய காலகட்டத்தில் காசி பிரம்மிக்கதக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அற்புதமான கதையொன்று உள்ளது. சிவன் சில அரசியல் காரணங்களுக்காக காசியை விட்டு வெளியேறினார். காசி நகரம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றால் அதன் அதிர்வை இழந்துவிடும் என்று கடவுளர் அச்சப்பட்டதால் திவோதாசனை அரசனாக இருக்கும்படி பணித்தனர். ஆனால் திவோதாசனோ, “நான் அரசனாக இருக்க வேண்டுமென்றால், சிவன் காசியை விட்டு வெளியேற வேண்டும். அவர் இங்கு இருந்தால் நான் அரசனாக இருப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை, மக்கள் எந்நேரமும் அவரைச் சுற்றியே கூடிக் கொண்டிருப்பர்,” என்று ஒரு நிபந்தனை விதித்தார். இதனால் பார்வதியுடன் சிவன் மந்தார மலைக்கு சென்றார். ஆனால் அவருக்கு அங்கு தங்க விருப்பமில்லை. காசிக்கே திரும்பி வர விருப்பப்பட்டார். அதனால் முதலில் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் அங்கு சென்றனர், அந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அவர்கள் அவ்விடத்தை விட்டு திரும்பவில்லை. எனவே அவர்களைத் தொடர்ந்து 64 விண்ணுலக பெண்களை சிவன் அனுப்பி வைத்தார். அவர்களிடம், “எப்படியாவது அரசனைக் களங்கப்படுத்தி விடுங்கள். அவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டுபிடிக்க முடிந்தால் பிறகு அவனை அங்கிருந்து வெளியேற்றி விடலாம்,” என்று சொல்லி அனுப்பினார். அவர்களும், அந்த நகரில் உள்ள சமூகத்தை களங்கப்படுத்தும் நோக்கத்துடன், உறுதியாக அங்கு காலூன்றினார்கள். ஆனால் அவ்விடம் அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே, தங்கள் நோக்கத்தை மறந்து அங்கேயே தங்கிவிட்டனர். அதன் பின் சூரிய தேவனை அனுப்பினார் சிவன். அவரும் அவ்விடத்தை மிகவும் விரும்பினார், அதனால் அங்கிருந்து திரும்பிச் செல்லவில்லை. இன்று நாம் காணும் அத்தனை சூரிய கடவுள் கோயில்களும் அவருக்காக உருவாக்கப்பட்டவைதான். சிவன் கட்டளையிட்ட பணியை நிறைவேற்ற முடியவிலலையே என்று சூரிய தேவன் பயந்து, வெட்கப்பட்டுப் போனார். ஆனால் தான் எடுத்துக் கொண்ட உறுதியைவிட அவருக்கு அந்த நகரம் மிகவும் பிடித்து போய்விடவே, தெற்கு நோக்கித் திரும்பி ஒரு பக்கமாக சாய்ந்தபடி, அங்கேயே தங்கிவிட்டார். சூரியனைத் தொடர்ந்து பிரம்மனை அனுப்பினார் சிவன். பிரம்மனுக்கும் அவ்விடம் பிடித்துப் போய்விட்டது, அவரும் திரும்பிச் செல்லவில்லை. இதனால், “நான் இவர்கள் யாரையும் நம்ப முடியாது,” என்று நினைத்த சிவன், தன் நம்பிக்கைக்குரிய இரண்டு கணங்களை அனுப்பி வைத்தார். இருவரும் வந்தனர், சிவனின் மக்களான இவர்களால் அவரை மறக்க இயலவில்லை. ஆனால் அவர்களுக்கும் அவ்விடம் மிகவும் பிடித்திருந்தது. “இதுதான் சிவன் வாழுவதற்கு உகந்த இடம், மந்தார மலை அல்ல,” என்று நினைத்த கணங்கள் அந்நகரத்திற்கு துவார பாலகர்களாயினர். இம்முறை சிவன் மேலும் இருவரை, கணேசருடன் இன்னொருவரை, அனுப்பினார். அவர்கள் இருவரும் அந்நகரத்தைக் கைக்கொண்டனர். சிவன் அங்கு வருவதற்காக அந்நகரத்தைத் தயார்படுத்தி, காவல் காத்த அவர்கள், எப்படியும் சிவன் இங்கு வந்துதான் ஆக வேண்டும், எனவே திரும்பச் செல்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்தனர். பின்னர், திவோதாசனும் முக்திக்காக ஆசையூட்டப்பட்டார். அவர் எந்தவிதமான களங்கத்திற்கும் ஆட்படவில்லை. ஆனால் முக்திக்கு ஆசைப்பட்டு முக்தியடைந்தார். பிறகு சிவனும் திரும்பி வந்தார். இக்கதைகள் எல்லாம் அவர்கள் இவ்விடத்தில் இருக்க எவ்வளவு ஏங்கினார்கள் என்பதனை குறிப்பதற்காக சொல்லப்பட்டவை. இங்குள்ள சுகங்களுக்காக அல்லாமல் இந்நகரம் வழங்கும் சாத்தியத்திற்காக அவர்கள் ஏக்கம் கொண்டனர். இந்நகரம் வெறுமனே வாழும் இடமாக இல்லாமல், ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து செல்ல வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. மிகச் சிறிய இந்த பிண்டம், பரந்த அந்த அண்டத்துடன் தொடர்பில் இருக்க வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. அன்பும் அருளும்,

கண்ணா உன் நீலமயிலிறகின் ரகசியம் என்ன?

கிருஷ்ணன், அவன் நேரான ஆள் அல்ல. சற்றே முரட்டுத்தனம் கொண்டவன். நிற்கும் போது கூட நேராக நில்லாமல் ஒரு காலை மடித்து வைத்தே நின்று காட்சியளிப்பான். எதைச் செய்தாலும் தனக்கென ஒரு தனி பாணி வகுத்துக்கொண்டு அதன்படியே நின்றான். நடந்தான். வாழ்ந்தான். கிருஷ்ணன் காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சியளித்தது மட்டுமல்ல, தனது கிரீடத்தில் மயிலிறகு இன்றியும் ஒரு நாளும் காட்சியளித்ததில்லை. ஏன் அவ்வாறெல்லாம் செய்தான் அவன்? மயில் வர்ணனைக்கு அப்பாற்பட்டதோர் அழகான பறவை. அது தோகை விரித்தாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பாரதத்தில் மயில்கள் அதிகம். விருந்தாவனத்திலும் ஏராளமான மயில்கள் இருந்தன. தோகை அதிகம் கொண்ட ஆண் மயில்கள் ஆண்டு முழுவதும் இறகுகளை உதிர்க்கும். மயிலிறகுகளுக்காக அவற்றைக் கொல்ல வேண்டியதில்லை. தரையிலிருந்தே பொறுக்கிக் கொள்ளலாம். மயிலிறகு எவ்வளவு அழகானதென்பது பார்த்தாலே தெரியும். மயிலின் நிறமென்பது எவராலும் எளிதில் உருவாக்க இயலாத இயற்கையின் உன்னதப் படைப்பு. அழகுக்கு அர்த்தம் அளிக்கும் மயிலிறகு எப்போதுமே போற்றத்தக்க விஷயம். கிருஷ்ணனுக்கோ மயிலிறகுகள் மீது அப்படி ஒரு பித்து. அவன் அலங்காரப் பிரியன். அவனும், பலராமனும் பட்டு வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொள்வார்கள். பலராமன் எப்போதும் கிருஷ்ணனின் உடல் நிறமான நீலவண்ணப்பட்டு வேஷ்டியையே கட்டிக்கொள்வான். கிருஷ்ணனோ பலராமனின் உடல் நிறத்தில் இருக்கும் பட்டுப் பீதாம்பரத்தை அணிந்து கொள்வான். அவனது பீதாம்பரத்தின் மடிப்பு ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும். அவனுக்குத் தலையில் அலங்காரமாகச் சூட்டிக்கொள்வதற்கென ஒரு கிரீடம் வழங்கப்பட்டிருந்தது. அதில் அவன் மயிலிறகுகளைச் செருகிக் கொள்வான். மயிலிறகு இன்றி வெளியே சென்றதே இல்லை. குழந்தைப் பருவத்தில் கூட நேர்த்தியான தோற்றத்துடன் தன்னைக் காட்டிக் கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருந்தான். மனதிலும், செய்யும் செயல்களிலும், அணியும் ஆடைகளிலும் வெளிப்படுத்தும் உணர்வுகளிலும் எப்போதும் உன்னதமானவாகவே இருக்க விரும்பினான். அவன் ஒரு நாளும் சோர்வாகவோ, வாட்டமாகவோ காட்சியளித்து மக்கள் பார்த்ததேயில்லை. சில சமயங்களில் அவனும் வாட்டமாக இருந்தான். ஆனால் அந்தத் தருணங்களில் அவன் மற்றவர் பார்வையில் படுவதைத் தவிர்த்தான். உடலில் ஏற்பட்ட தொய்வு என்றாலும் சரி, மனதில் ஏற்பட்ட வாட்டமாயினும் சரி, உணர்வுகளில் நேர்ந்த சரிவாயினும் சரி, எதையும் வெளிக்காட்டாமல் தன்னை உன்னதமாகவே ஒவ்வொரு பொழுதிலும் வெளிப்படுத்திக் கொண்டான். நீங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே நேசித்தால் உங்களை எப்போதும் உன்னதமாக வெளிப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருப்பீர்கள். ஆனால் மக்களோ நேசமுடன் இருப்பது என்றால் அழுது வடிவது என்று அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்பாக இருக்க வேண்டுமென்றால் ஆனந்தமாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால் அவர்களிடம் உங்களை வசீகரமாகப் பளிச்சென்றுதானே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்.? மக்களால் நீண்ட நேரம் மகிழ்ச்சியைத் தாங்க முடிவதில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். வாழ்க்கையை நேசிக்கிறீர்கள் என்றால், வாழ்க்கையின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால் நீங்கள் எப்போதும் கொண்டாட்டமாகத்தான் இருக்கவேண்டும். நீங்கள் வாட்டமான முகத்துடன் காட்சியளித்தீர்கள் என்றால் வாழ்க்கையின் மீது அக்கறையே இல்லை என்று பொருள். அடுத்த வினாடியே உங்களை மரணம் தழுவப்போகிறது என்ற நிலை ஏற்பட்டால் கூட நீங்கள் ஆனந்தமாக விடை பெறவேண்டும். அதுதான் நேசம். அதைத்தான் கிருஷ்ணன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுத்தினான். காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சி தந்தான். தலைக்கிரீடத்தில் மயிலிறகு சூட்டிக் கொண்டான்.

யார் முகத்தில முழிச்சேனோ?

கேள்வி: “நான் இன்று காலையில் இன்னார் முகத்தில் முதலில் விழித்தேன். அதனால்தான் எதுவும் இன்று சரியாக விளங்கவில்லை” என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போன்ற நம்பிக்கையில் ஏதாவது பொருள் இருக்கிறதா, சத்குரு?” சத்குரு: கிருஷ்ண தேவராயர் ஒருநாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அரண்மனை நந்தவனத்தில் உலாவச் சென்றார். பக்கத்து நாட்டு மன்னன் இவர் மேல் போர் தொடுக்க திட்டம் தீட்டியிருந்தான். எனவே மிகவும் யோசனையுடன் நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பார்த்துவிட்டு யாரோ அவசரமாக ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டதைப் பார்த்தார். இதைக் கவனித்த கிருஷ்ண தேவராயர், “யாரது?” என்று சத்தமாகக் கேட்டார். உடனே மரத்தின் மறைவிலிருந்து அரண்மனை சலவைத் தொழிலாளி தயங்கித் தயங்கி வெளிவந்தார். “ஓ, காலங்காத்தால உன் முகத்தில விழிச்சிட்டனே, இன்னிக்கு எனக்கு என்னாகப் போகுதோ,” என்று உறுமியவாறு அரண்மனைக்கு கலவரமாகத் திரும்பினார். அன்று காலை உணவு சாப்பிட்டவுடன் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அன்று நடந்த முக்கியமான மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவரால் சரியாகப் பங்கு கொள்ளமுடிய வில்லை. அவருடைய கோபம் சலவைத் தொழிலாளி மேல் திரும்பிற்று. இந்த மாதிரி மோசமான முகம் நம் நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று சொல்லி அந்த சலவைத் தொழிலாளிக்கு மரண தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். அந்த சலவைத் தொழிலாளி பதறிப்போய் தெனாலி இராமனிடம் நடந்ததை எல்லாம் கூறினார். ‘இது என்ன முட்டாள்தனம்‘ என்று நினைத்து அரண்மனைக்கு சென்ற தெனாலிராமன் மன்னரைப் பார்த்தவுடனே துணியை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றார். உடனே மன்னர், “என்ன முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு தெனாலிராமனோ, “இல்லை அபசகுனமான முகம் பார்க்க கூடாது என்றுதான் நான் முகத்தை மறைத்து கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னார். “இங்கே எங்கே அபசகுனமான முகம் இருக்கிறது?” என்று கேட்டார் மன்னர். “இல்லை, ஒரு சலவைத் தொழிலாளியைப் பார்த்ததால் உங்களுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. அவருக்கோ உங்கள் முகம் பார்த்ததால் உயிரே போகப்போகிறது. எது பெரிய அபசகுனமான முகம் பாருங்கள். அதனால்தான் நான் முகத்தை மறைத்துக் கொண்டு போகிறேன்,” என்று சொன்னார். நம் வாழ்க்கையில் நம்மால் எவற்றையெல்லாம் நன்றாக நடத்தி கொள்ளத் தெரியவில்லையோ அதற்கு எல்லாமே இன்னொருவர் மேல் பழி போட வேண்டும் என்னும் ஆசை நமக்கு இருக்கிறது. நம் முகம் மிகவும் மங்களமானதாக இருந்தால் காலையில் எழுந்தவுடன் முதன்முதலில் நம் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாமே. இந்த மாதிரி முட்டாள்தனத்தை விட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கின்ற நன்மை, தீமை இரண்டுக்குமே நாம் தான் முழுமையான பொறுப்பு என்பதை பார்த்துக் கொள்ளலாமே. நமக்கு நடந்த தவறுக்கு பிறர்மேலே பழிபோட நினைப்பது மிகவும் மோசமான ஒரு மனநிலை. இந்த மனநிலை தாண்டி வந்தால்தான் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும் முன்னேற்றமாகப் போவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும்.

Read more at :

ஒரு குருவின் கடமை என்ன?

கேள்வி : ஒரு குருவின் கடமை என்ன? சத்குரு: நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு குருவின் நோக்கம் அடிப்படையில் அழிப்பதுதான். உங்களின் இன்றைய நிலையை அழித்தால்தான், இன்னும் பெரிதான ஒன்றை அனுபவிக்க நீங்கள் தயாராவீர்கள். சிறைப்பட்டுக் கிடக்கும் உங்கள் தளைகளை அவர் அறுத்தால்தான், எல்லையற்ற தன்மையை நீங்கள் ருசிக்க முடியும். உங்கள் அகங்காரத்தைத் தொடர்ந்து சிதைத்தால்தான் சில உயரங்களை உங்களால் தொடமுடியும். உங்களை உன்னத அனுபவங்களுக்கு எடுத்துச் செல்ல, இப்படி உங்கள் அடிப்படைகளை அழிக்கும் நண்பரே உங்கள் குரு. கேள்வி: தியானத்தில் நான் எந்த அளவு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறேன் என்பதை எப்படி அளவிடுவது? சத்குரு: அளவு கோல்களைப் பயன்படுத்துவது எதற்காக? ஒப்பிடுவதற்காக. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும்போது தான் அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது. அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, உங்களிடம் தியான நிலை இல்லை என்று தான் அர்த்தம். தியானம் என்ற அம்சம் யாருடனும் போட்டியில் ஈடுபடுவதல்ல. முன்னே போகிறோமா, பின்னால் போகிறோமா என்பதைக் கூட கவனிக்க வேண்டியிருக்காத ஓர் இடத்தை அடைந்து விட்டால், அங்கே இருப்பதே போதுமானது. மற்றபடி, தியானத்தில் இருக்கிறீர்களா, அல்லது தூக்கத்தில் இருக்கிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால், சில விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்த முடியும். உங்கள் நாடித் துடிப்பு, ரத்தக் கொதிப்பு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை அளந்து பார்க்க முடியும். இவை கூட தியானத்தின் பின்விளைவுகள் தான். இந்த விளைவுகளை அளப்பதற்கு விஞ்ஞானம் பயன்படலாமே தவிர, தியானத்தை அளப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

குருவின் நோக்கம் அழிப்பதே! 

கிரஹப்பிரவேசம் எதற்காக?

பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது. இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர். எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர். கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர். அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம். நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும். அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது. எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர். மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர். தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது. அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது. ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது. கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே! ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

Read more at : கிரஹப்பிரவேசம் எதற்காக? 

புதுவீடு… புது பூசணி…


கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு: உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன.   நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது! குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில், பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும், புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது. இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!

Read more at : புதுவீடு… புது பூசணி… 

பணம் வந்தால் துன்பமும் சேர்ந்து வருமா? – சத்குரு


பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது. ஆனால் வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை தேடினோம்? அப்படியிருக்க, நாம் விரும்பியதே நமது துன்பத்திற்கு ஏன் காரணமாக வேண்டும்? ஏதோ ஒன்று நமது கையில் இருக்கும்போது, அதனுடன் சேர்ந்த மற்றொன்றை முழுவதுமாக மறந்து விடுகிறோம். மனிதர்களின் பெரிய பிரச்சினை இது. காலையில் சாப்பிட உட்கார்கிறீர்கள். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது மற்றவற்றை மறந்து விடுகிறீர்கள். ஊறுகாய், ஊறுகாய், ஊறுகாய் மட்டுமே வயிறு நிரம்ப சாப்பிடுகிறீர்கள். மாலையே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை வரை கூட அது காத்திருக்காது. அதே போலத்தான் செல்வமும் செழுமையும். அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வரும்போது மிகவும் அழகாக இருக்கும். உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அடுத்த நாள் வேலை செய்வதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் உட்கார்ந்து விடலாம். இன்று சம்பாதித்தால்தான் நாளை உணவு என்ற நிலையிலிருப்பவர், விரும்பினாலும் அப்படி தியானத்தில் உட்கார முடியாது. எனவே பணம் உங்களுக்கு துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்கு துன்பத்தை வரவழைக்கிறது. ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, மாதா கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்பிவரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? நான் 11 வயதாக இருக்கும்போது இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. அந்த வயதில் நான் ஒரு பெரிய கோவில் வாசலில் நிறைய நேரம் உட்கார்ந்து கொண்டு கோவிலிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா என்று கவனிப்பேன். கோவிலிலிருந்து திரும்பிவரும் போது ஒருவருக்கொருவர் ‘கிசுகிசு’வோடு திரும்பி வருவதைத்தான் அதிகம் கவனித்திருக்கிறேன். கடவுளைப் பற்றி பேசுவதை விட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிக் கிசுகிசுவோடு வெளிவருவதைத்தான் கவனித்தேன். அல்லது அவர்கள் விட்டுச் சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய் விடடால் இந்த உலகத்தையே, ஏன் கடவுளைக் கூட சபிக்க ஆரம்பித்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக் கேடானது, இல்லையா? தெய்வீகத்தை விட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, செழுமையா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் வருகிறது என்பதைப் பாருங்கள். துன்பம் பணத்தால் வரவில்லை. பணம் உங்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக உங்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம் வருகிறது. அதை சட்டைப் பைக்குள் மட்டும் வைத்துச் கொண்டால் அது மிகவும் அற்புதம். பணம் இருக்க வேண்டிய இடம் அதுதான், உங்கள் தலை இல்லை. பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இவ்வுலகில் அற்புதமான பணிகள் பலவற்றை செய்யமுடியும். பணம் உங்களுக்கு துன்பத்தை கொண்டு வருகிறது என்றால் அதை என்னிடம் கொடுத்து விடுங்கள். அதை வைத்து இந்த உலகில் நான் பல விஷயங்கள் செய்ய முடியும்(சிரிக்கிறார்). அது என்னை துன்பத்தில் ஆழ்த்தாது. ஏனெனில் பணம் என் தலைக்குள் இறங்குவதில்லை. நீங்கள் வசதியாக இருப்பதற்கும், மற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் பணம் பயனுள்ளதாக இருக்கிறது. உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்கு பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையை சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் 40 சதவீத மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்திற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியில்தான் அனைத்தும் இருக்கிறது என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்க்கை ஒரு குழப்பமாகி விடுகிறது. இங்கு, இந்தியாவில் வேறு விதமான தவறு நடக்கிறது. சொர்க்கம்தான் எல்லாமே என்று நினைத்து தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால் சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போது தாங்கள் வாழும் உலகை மறந்து விடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே எப்போதும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கொண்டு வர வேண்டும். 

 

கர்ப்ப காலத்தில் தனிமை ஏன்?

நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்களை கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் தனியாக வைத்துப் பராமரித்திருக்கிறார்கள், அது எதனால்? சத்குரு: புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் மண்டையோட்டைக் கவனித்திருக்கிறீர்களா? மண்டையோடு முழுமையாக இருக்காது. உச்சியில் சிறிய பகுதி தோலால்தான் மூடப்பட்டிருக்கும். பிறந்த குழந்தை மிகவும் மென்மையாகக் கையாளப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். அப்பகுதி ‘பிரம்மரந்திரா’ என்று அழைக்கப்படுகிறது. ‘ரந்திரா’ என்றால் சிறிய துளை அல்லது வழி என்று அர்த்தம். பெண்ணின் வயிற்றில் கரு ஒரு பிண்டமாக இருக்கும்போது, இந்த துளை வாயிலாகத்தான் புதிய உயிர் இறங்குகிறது. இந்த உடல் தனக்குத் தகுதியானதுதானா என்று கருவில் புகுந்த உயிரானது கடைசி நிமிடம் வரை தேர்வு செய்யும். அந்த அளவு விழிப்புணர்வு அந்த உயிருக்கு இருக்கிறது. ஒரு வேளை இந்த உடல் தனக்குத் தகுதியானதல்ல என்று அந்த உயிர் உணர்ந்தால், தலை உச்சியில் உள்ள அந்த வாயில் வழியாகவே வெளியேறிவிடும். உடலில் வேறு பல வாயில்கள் இருந்தாலும் அதன் வழியாக வெளியேற அந்த உயிர் விரும்புவதில்லை. எனவேதான், விரும்பாத உயிர் வெளியேறுவதற்கு வசதியாக குழந்தை பிறக்கும்வரை அந்த வாயில் திறந்தே இருக்கிறது. இறந்தே பிறக்கும் பல குழந்தைகளைப் பார்க்கும்போது, மருத்துவர்களுக்கே பல நேரங்களில் விந்தையாக இருக்கும். ஏனெனில், அந்த உடலைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், அந்த உடலில் உயிர் இருக்காது. ஏனெனில், உயிர் கடைசி வரையிலும்கூட தேர்வு செய்துகொண்டே இருக்கும். அந்த உயிருக்கு என்று ஒரு கர்மா இருக்கும், பிண்டத்துக்கு என்று ஒரு கர்மா இருக்கும். 90 சதவீதம் ஏன் அதற்கும் மேலாகக்கூட அந்த உயிரின் தேர்வு சரியாகத்தான் இருக்கும். சரியான பிண்டத்தைத்தான், கருவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கும். ஆனாலும் தவறு நேர்ந்துவிடலாம் என்ற விழிப்புணர்வு அந்த உயிருக்கு எப்போதும் இருக்கும். இந்தக் காரணத்துக்காகத்தான் நம் கலாச்சாரத்தில், கர்ப்பமடைந்த ஒரு பெண்ணைச் சுற்றி பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பிறக்கப்போகும் குழந்தையின் அப்பா, அம்மா ஆகிய இருவரையும்விட, சிறந்த உயிர் அந்தக் கருவுக்கு வந்து தங்க வேண்டும் என விரும்பினார்கள். தாங்கள் எந்தத் தன்மையில் இருக்கிறோமோ, அதையும்விட உயர்ந்த தன்மையில் உள்ள உயிர் அந்தக் கருவைத் தேடி வர வேண்டும் என விரும்பினார்கள். அதனால்தான் அவள் ஒரு குறிப்பிட்ட வசதியான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டாள். சுமுகமான சூழ்நிலை, நல்ல எண்ணங்கள் என்று அவளின் மொத்தத் தன்மையும் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். அவளைச் சுற்றிலும் நறுமணமான சூழ்நிலை, சரியான சப்தங்கள், சரியான உணவு, என மொத்தமும் கண்காணிக்கப்பட்டன. வரக்கூடிய புதிய உயிரை வரவேற்க அவள் முற்றிலும் தகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு, அவளுடைய கணவன்கூட பல காரணங்களுக்காக அவளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கர்ப்ப காலத்திலும் கடைசி வரை ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள், சினிமா, டி.வியில் எல்லாவிதமான காட்சிகளும் பார்க்கிறாள். எல்லாப் பொது இடங்களுக்கும் போகிறாள். கர்ப்பம் அடைந்துள்ள பெண்களுக்கான பழைய பராமரிப்பு முறைகள் தற்போது இல்லை. இன்றைய உலகில் அவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்!

 

காந்தாரியின் கண்களை திறந்த கிருஷ்ணன் ....... !!

காந்தாரியின் கண்களை திறந்த கிருஷ்ணன் ....... !!
தாயே .... நீங்கள் ஒரு பதிவிரதை. கணவன் பார்வையற்றவராக இருந்தும் பெருந்தன்மையோடு அவருடன் இல்லறத்தைச் செம்மையாக நடத்தியவர்கள். அவரால் பார்க்க முடியாததையெல்லாம் உங்களாலும் பார்க்க முடியாமல் போகட்டும் என்று உங்கள் பார்வைக்குத் தடை போட்டவர்கள்.
இமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் உயர்ந்துவிடக்கூடாது என்பதற்காக கண்களைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டவர்கள். ஒரு சரியான தர்ம பத்தினியாக நீங்கள் நடந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். ஆனால்..
ஆனால் என்ன ?? காந்தாரியின் இந்தக் கேள்வி, சுற்றியிருந்தவர்கள் மனங்களிலும் எதிரொலித்தது.
நீங்கள் ஒரு நல்ல தாயாக வாழவில்லையே அம்மா !!
கண்ணா என்ன சொல்கிறாய் நீ .... !
ஆமாம், அம்மா கணவருக்காகக் கண்களைக் கட்டிக் கொண்ட நீங்கள், பிள்ளைகளுக்காகக் கண்களைத் திறந்திருக்கலாம். உங்கள் பார்வை அவர்கள் மேல் படவே இல்லையே அம்மா
அவர்களுடைய நடத்தை உங்களால் கண்காணிக்கப்படவே இல்லையே அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எப்படிப் பழகுகிறார்கள், என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எதையுமே கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே அம்மா
கவனித்திருந்தால் நீங்கள் அவர்களைத் தடுத்திருப்பீர்கள். கண்டித்திருப்பீர்கள். ஏன், அடக்கிக் கூட இருப்பீர்கள். இல்லை. எதுவும் இல்லை. இப்போது தாயன்பு மட்டும்தான் மிச்சமிருக்கிறது
ஆனால் அதில் பங்குகொள்ளப் பிள்ளைகள்தான் இல்லை. ஆரம்பத்தில் ஒரு கண்டிப்பான தாயாகத் தாங்கள் விளங்கியிருந்தீர்களானால், இப்போது இத்தனை பெரிய இழப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்காது அம்மா
அப்படியே சரிந்தாள் காந்தாரி.
கிருஷ்ணனின் குரல் வந்த திக்கில் சாய்ந்து அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டாள்.
உண்மைதான் கண்ணா தவறு என்னுடையதுதான். பிள்ளையைச் சரியாக வழிநடத்தத் தெரியாத ஒரு தாய், அவன்மீது பாசம் வைக்கவும் தகுதியற்றவள்தான்.
என் குற்றத்தை உணர்கிறேன். என்னை மன்னித்துவிடு” என்று கதறினாள் !!

சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்!

ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க… சத்குரு: இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவிதமான அதிர்வு. ஒலிகளும் அவ்வாறே. அவ்வகையில் பார்த்தால் ஒலியும் ஒருவிதமான பொருள் தான், ஆனால் அதன் பிரதிஷ்டை சற்றே வித்தியாசப்படும். உதாரணத்திற்கு நம் நாட்டின் எல்லா திசைகளிலும் பொதுவாக உபயோகப் படுத்தப்படும் மந்திரம் ‘ஷிவ’. இங்கு எல்லோருமே ‘சிவ, சிவ’ என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த மந்திரத்தைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே, அதை உச்சரிக்கும் போது மிக ஆழமான நிலைகளை அடைகிறார்கள். சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள் ஒருசில இடங்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உச்சரிப்பது யாராக இருந்தாலும் சரி, திடீரென அந்த மந்திரம் முற்றிலும் வேறுவிதமான சக்தியை வெளிப்படுத்தும். இதன் மற்றொரு கோணத்தில், ஒருசில இடங்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உச்சரிப்பது யாராக இருந்தாலும் சரி, திடீரென அந்த மந்திரம் முற்றிலும் வேறுவிதமான சக்தியை வெளிப்படுத்தும். இது போல் சில குறிப்பிட்ட ஒலிகள் மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் விதத்தில் நம் கோவில்கள் ஒருகாலத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் குறைந்துபோக, அத்துடன் தொடர்ந்து நடந்தேறிய படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை குலைத்திட, இந்த விஞ்ஞானம் நலிவடைந்தது. இருந்தாலும், இன்றளவிலும் இந்த ஒலி மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. இதற்குக் காரணம் அவ்விடங்கள் இந்த ஒலிக்கு மிக சாதகமான வகையிலே அமைக்கப்பட்டிருப்பதால், அவை இந்த ஒலியை பன்மடங்காக பெருகச் செய்கின்றன. நம் ஈஷா யோக மையம் மேற்கு மலைத்தொடர்ச்சியின் ஓர் முனையிலே அமைந்திருக்கிறது. இங்கு பனிமூட்டம் அதிகமாக இராவிட்டாலும், டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இப்பிரம்மாண்டமான மலைகளினூடே உள்ளே செல்லச்செல்ல மூடுபனி மிக அதிகமாகவே இருக்கும். இதை முதல்முறை நான் அனுபவித்தபோது, நான் அசந்து போய்விட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் மூடுபனி விளக்குகளை போட்டுக்கொண்டு சென்றாலும் கூட எட்டடி, பத்தடிக்கு மேல் ஒன்றும் தெரியாது. இதுபோல் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்த ஒருநாள், இரவு ஒருமணிக்கு நான் மலையின் அடிவாரத்திலே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது, முழு மலையும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மிக விரைவாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொள்ளும் என்பதால், அதை மெதுவாக, கவனமாக ஓட்டிக் கொண்டு, நிலைமை என்னவென்று பார்க்கச் சென்றேன். நான் மலையின் மீது செல்லச்செல்ல, அந்தத் தீயும் விலகிச்சென்று கொண்டே இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், நான் மலை உச்சியை அடைந்துவிட்டேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நின்றிருந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் ஒரு பாட்டிலை எண்ணெய் விளக்காக மாற்றி, வெளிச்சத்திற்காக அதை ஏற்றி வைத்திருந்தார். இந்த தீபத்தின் ஒளிதான் நான் பார்த்த தீயின் உண்மையான முழுமையான வடிவம். ஆம்… பனிமூட்டம், ஆயிரமாயிரம் கண்ணாடிப் பட்டகமாய் அந்த சிறு ஒளியை பெருக்கிப் பிரதிபலிக்க, அந்த முழு மலையுமே தீப்பற்றி எறிவதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் அங்கே உருவாகி இருந்தது. இப்படியும் சாத்தியமோ என்று நான் பிரமித்துப் போனேன். ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கினால், எதை வேண்டுமானாலும் பன்மடங்காகப் பெருக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், பிரதிஷ்டை என்பதும் கூட இது போல் ‘பன்மடங்காகப் பெருக்கும்’ ஒரு தொழில்நுட்பம் தான். அதில் வாழ்வைப் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுகிறோம்… அப்போதேனும் அதை புறக்கணிக்க முடியாமல் நீங்கள் அதைக் கவனிப்பீர்கள் என்று!

Read more at :  

ஒருவர் இறந்தால் துக்கம் அனுஷ்டிக்கணுமா? /


வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய நபர் இறந்துவிட்டால், பலருக்கும் வாழ்க்கையே வெறுமையாகிவிடுவதும், அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்கே பலகாலம் எடுப்பதும் நிதர்சனமான உண்மையே. இதே போல ஒரு நிகழ்வு சத்குருவின் வாழ்வில் நடந்ததையும், அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதையும் நம்முடன் இதில் பகிர்கிறார் சத்குரு… சத்குரு: மரணம் நிகழ்ந்த வீடுகளில் குழந்தைகளைக் கவனித்து இருக்கிறீர்களா? பெரியவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து சோர்ந்து உட்கார்ந்து இருந்தாலும், குழந்தைகள் இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்றுவரை நானும் அப்படித்தான். என் மிகச் சிறிய வயதிலிருந்தே துக்கம் அனுஷ்டிப்பது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததே இல்லை. என் வாழ்க்கைக்குப் பல விதங்களில் பங்களித்த ஒரு நபரை இழக்கும்போது, அவருடன் எனக்கு நேர்ந்த நல்லதை எல்லாம் நினைத்துப் பார்ப்பேன். சொந்தக்காரர்கள் யாராவது இறந்து போனால்கூட, எங்கள் வீட்டில் என்னைத் துக்கம் அனுஷ்டிக்கச் சொல்லிக் கட்டுப்படுத்த முடியாமல்தான் விட்டிருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தில், துக்கம் அனுஷ்டிப்பது என்ற வழக்கமே கிடையாது என்றுதான் சொல்வேன். என் வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருந்த ஓர் உறவு என் இணையாக இருந்த என் மனைவி. அவளின் மரணம் எனக்குப் பேரிழப்புதான். மறுக்கவில்லை. அதற்காகத் துக்கம் என்ற உணர்வை ஏன் கொண்டு வர வேண்டும்? ஒருவேளை என் வாழ்க்கையில் இருந்த ஏதோ ஒரு பற்றாக்குறையை நிரப்புவதற்காக அவளைச் சேர்த்துக் கொண்டு இருந்தேன் என்றால், அவள் இறந்ததும் அந்த இடம் மறுபடி வெற்றிடமாகி இருக்கும். வருத்தம் மேலோங்கி இருக்கும். என் வாழ்க்கை அப்படி நடக்கவில்லை. அவள் வருவதற்கு முன்பும் என் வாழ்க்கையில் ஒரு முழுமை இருந்தது. திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பில் அவளை என் மனைவியாக்கிக் கொள்ளவில்லை. உங்களிடம் எல்லாமே இருக்கலாம். இருந்தாலும் வேறு ஒருவர் உங்கள் வாழ்வில் புதிதாக ஒன்றைச் சேர்க்க முடியும். அதுதான் வாழ்க்கையின் அற்புதம். அப்படித்தானே விஜியும் என் வாழ்க்கையில் ஒரு புதிய கோணத்தைக் கொண்டு வந்தாள். வார்த்தைகளில் சொல்வதற்கு அரிய எத்தனையோ பங்களிப்புகளை அவள் வழங்கிவிட்டுச் சென்றதை எப்படி மறுக்க முடியும்? திடீரென்று எதிர்பாராத தருணத்தில் இந்த உலகைவிட்டு அவள் நீங்கியபோது, அது எனக்குப் பேரிழப்பாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக நான் துக்கப்படவில்லை. மாறாக, 12 வருடங்கள் அவள் காட்டிய அன்பை, பொழிந்த நேரத்தை நினைத்து நிறைவாகத்தான் உணர்ந்தேன். எனக்காகத் தன் வாழ்க்கையை அவள் எந்த விதத்தில் எல்லாம் அர்ப்பணித்தாள் என்பதை எண்ணி நெகிழ்ந்தேன். அவளுடைய இருப்பை எந்த அளவு நிறைவாக உணர்ந்தேனோ, அதே அளவு நிறைவை அவள் இவ்வுலகை நீத்த மேன்மையான விதத்திலும் அனுபவித்தேன். அவள் என் வாழ்வில் சேர்த்த அர்த்தங்களைப் பொக்கிஷங்களாகத்தான் இன்றும் கருதுகிறேன். குருவிடம் சீடன் கேட்டான், “ஆன்மீகத் தேடல் என்பதை அவரவர் தனியே தங்களுக்குள்தான் நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களே, பிறகு எதற்காக நாம் எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும்?” குரு சொன்னார், “தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நிலம் வளமாக இருப்பதற்கும், புயல் வீசும்போது சமாளிப்பதற்கும் தனி மரத்தைவிடக் காடுதான் உகந்தது. ஆனால், ஒரு மரத்தை எது பலம் வாய்ந்ததாக வைத்திருக்கிறது? அதன் சொந்த வேர்கள்தான். அந்த வேர்களைக் கொண்டு இன்னொரு மரம் வளர முடியாது. ஒரே காரணத்துக்காகப் பலர் சேர்ந்திருப்பது ஒரு பலம் என்றாலும், அவரவர் தங்கள் வேர்களைக் கொண்டுதான் வளர முடியும்.” அப்படித்தான் வாழ்வை அணுகுகிறேன். என் குடும்பம் இன்றைக்கு லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு இருக்கிறது. என் வாழ்க்கையில் தரம் மேலும் சிறப்படைய, என்னைச் சுற்றி உள்ள பல லட்சம் பேர் ஏதோ ஒருவிதத்தில் பங்களித்துக் கொண்டு இருக்கிறார்கள். அன்றாடம் ஏதோ ஓர் இழப்பு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. என் வாழ்க்கைக்குப் பல விதங்களில் பங்களித்த ஒரு நபரை இழக்கும்போது, அவருடன் எனக்கு நேர்ந்த நல்லதை எல்லாம் நினைத்துப் பார்ப்பேன். அவர் என் வாழ்வில் சேர்த்த அர்த்தங்களை நினைத்து நெகிழ்வேன். ஆனால் ஒருபோதும் மூலையில் உட்கார்ந்து துக்கப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். ஒரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு விழா. மாலை விருந்துக்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். “இன்று பணியாளர்கள் மனம் திறந்து பேசலாம்” என்று சொன்னார், முதலாளி. “எங்களுக்குக் கொடுக்கப்படும் சீருடை இன்னும் சிறப்பான துணியில் தைக்கப்பட்டு இருக்கலாம்” என்றார் ஒரு பணியாளர். “நிறுவனம் வழங்கும் மதிய உணவு இன்னும் சிறப்பாக இருக்கலாம்” என்றார் அடுத்தவர். ஒவ்வொரு பணியாளரும் நிறுவனத்தில் தங்களுக்கு என்னென்ன குறைகள் என்று பட்டியலிட்டார்கள். இறுதியில், மிக மூத்த பணியாளர் எழுந்தார். அங்கு ஒளிர்ந்து கொண்டு இருந்த வண்ண பல்புகளின் வரிசைகளைக் காட்டினார். “அந்த வரிசையில் ஒரு பல்வு எரியவில்லை. அதுதான் என் வருத்தம்” என்றார். சக பணியாளர்கள் அவரைக் குழப்பத்துடன் பார்த்தனர். வாழ்க்கை என்பது ஒருவிதப் பயணம். ஒவ்வோர் உயிரும் விழிப்பு உணர்வு இன்றியோ, விழிப்பு உணர்வுடனோ அந்தப் பயணத்தில் சில அடிகளைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவுதான். “எரியும் ஆயிரம் பல்புகளைவிட, எரியாத ஒன்றிரண்டு பல்புகள் தரத் தவறிவிட்ட வெளிச்சம் பற்றி மட்டுமே பேசுவது எவ்வளவு அபத்தமாக உங்களுக்குத் தோன்றுகிறது? நமக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் பற்றி பேசாமல், இல்லாத ஒன்றின் குறையைப் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டு இருப்பதும் அப்படித்தான் இருக்கிறது” என்றார் அவர். உண்மைதான். அதேபோல், இல்லாமல் போன ஓர் உயிரை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டு இருந்தால், உங்களைச் சுற்றி இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் பல உயிர்களை நீங்கள் மதிக்கத் தவறியவர் ஆகிறீர்கள். அதற்காக இறந்த நபரை அலட்சியம் செய்யச் சொல்லவில்லை. இறந்தவரின் நினைவுகளை மதிக்கும் விதத்தில் சில விஷயங்களைத் தள்ளி வைப்பதும் தவறு அல்ல. எங்கோ ஜாலியாக சுற்றுலா புறப்படத் திட்டமிட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்துவிடுகிறார். அந்தப் பயணத்தை ரத்து செய்யலாம். அவர் மீது நீங்கள் கொண்ட அன்பு காரணமாக, உங்கள் செயல் வேறுவிதமான மாறலாம். நானாக இருந்தால், வெளியே போகாமல், யாரையும் சந்திக்காமல், அமைதியாகத் தியானம் செய்து கொண்டு உட்கார்ந்திருப்பேன். அது துக்கம் அனுஷ்டிப்பது ஆகாது. வாழ்க்கை என்பது ஒருவிதப் பயணம். ஒவ்வோர் உயிரும் விழிப்பு உணர்வு இன்றியோ, விழிப்பு உணர்வுடனோ அந்தப் பயணத்தில் சில அடிகளைத் தாண்டிச் செல்கிறது. அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கையைக் கொள்கைகள் மீதும், நியதிகளின் மீதும், வழக்கங்கள் மீதும் எழுப்பாதீர்கள். ஒரு கூட்டத்தின் நடுவே நடக்க வேண்டி இருந்தால், எவ்வளவு கவனத்துடன் ஒவ்வொருவரையும் தவிர்த்து நடப்பீர்கள். அதே அதீத கவனத்துடன் முழுமையான விழிப்பு உணர்வுடன், தெளிவான கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை நடத்துங்கள். இருப்பவர்களை மதியுங்கள். இல்லாது போன யாருக்காகவும் உங்கள் வாழ்க்கையைத் துக்கம் அனுஷ்டித்து வீணாக்குவதில் அர்த்தம் இல்லை!

Read more at : ஒருவர் இறந்தால் துக்கம் அனுஷ்டிக்கணுமா? /
ஒருவர் தன் நண்பர்களின் திருமணங்களுக்கு செல்வதற்கு பைக்கில் புறப்படும்போதெல்லாம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார். ஒருமுறை அல்ல, மூன்று முறை இப்படி நடந்துவிட்டது அவருக்கு. இதை கெட்ட சகுனம் என்று எடுத்துக்கொள்ளலாமா? இதோ அவரே சத்குருவிடம் இதுபற்றி கேட்டபோது… சத்குரு: “சிகரெட் பாக்கெட்டுகளில் ‘புகைப்பது உடலுக்குத் தீங்கானது’ என்று போட்டுவைப்பதுபோல, ‘நண்பர்கள் திருமணம் ஆபத்தானது’ என்று ஓர் எச்சரிக்கை போர்டு வேண்டுமானால் எழுதி உங்கள் வாகனத்தில் மாட்டிக்கொள்ளுங்கள். நண்பர்கள் திருமணமே ஆபத்து என்றால், உங்கள் திருமணம்..? நினைத்தாலே பதறுகிறது இல்லையா? 12 ராசிகள் எப்படி அமைகிறதோ, அந்தந்த நேரத்தில் அவற்றின் முடிவுகளின்படி என்னென்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் அப்படியே நடக்கும் என்றால், மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியே நமக்கு இல்லை என்று அர்த்தம். நீங்கள் படித்தவர்தானே? வயதளவில், பைக் லைசென்ஸ் வைத்திருக்கும் அளவு வளர்ந்தவர்தானே? அப்புறம் எப்படி இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் முளைத்தது? 18ஆம் நூற்றாண்டில், பிரான்ஸில் வாழ்ந்த ஃபான்ட்டனல் (Fontenelle) நவீன சிந்தனாவாதி. ஒருசமயம் அவர் அணைக்காத தீக்குச்சியைத் தவறுதலாகப் படுக்கையில் போட்டுவிட, மெத்தையில் ஆரம்பித்த நெருப்புப் பரவி, அந்த அறையே தீக்கிரையானது. அவருடைய மருமகன் கோபமாகி, நெருப்பை எப்படிக் கையாள வேண்டும் என்று அவரிடம் அறிவுரைக்குமேல் அறிவுரையாகக் கொடுத்துக்கொண்டே போனான். ஃபான்ட்டனல் அவனைக் கையமர்த்திச் சொன்னார்… அடுத்தமுறை வீட்டைக் கொளுத்தும்போது, இதைக் கவனத்தில் கொள்கிறேன். இப்படி அல்லவா இருக்கிறது நீங்கள் தீர்வு கேட்பது, இந்தியாவின் எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும், வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அதற்கேற்ற வேகத்தில் சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. சென்னையில் உள்ள போக்குவரத்தில் யார் எந்தப்பக்கம் திரும்பப் போகிறார்கள், வேறு யார் எப்படிக் குறுக்கிடுவார்கள் என்பதே புரிவது இல்லை. இதில் பத்திரமாக வீடு வந்து சேர்வதே அரிதாக இருக்கிறது. நம் வாகனத்தில் எந்த மோதலும் இல்லாமல், எந்தக் கீறலும் இல்லாமல், பயணம் செய்து மீள்வதே ஓர் அதிசயமிக்க தற்செயலாகத் தெரிகிறது. நண்பர் திருமணம் என்றில்லை, நார்த்தங்காய் வாங்கப் போனால்கூட சாலை விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக, ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விடமுடியும்? மொத்தப் போக்குவரத்தையே சரிசெய்வதுதான் தீர்வு. ஆனால், அது உங்கள் கையில் மட்டும் இல்லை. அதனால், உங்கள் பங்குக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. நகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். முதலில் வாகனத்தைச் சாலையில் செலுத்தும்முன், அதைத் திறமையாகக் கையாள்கிறீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள். நீங்கள் பைக் ஓட்டும்போது, வேறு எதிலும் சிந்தனை போகாமல், செல்போனில் பேசிக்கொண்டு போகாமல், போக்குவரத்தில் முழுக்கவனம் வைத்து ஓட்டிப்பாருங்கள். முழுக் கவனத்தோடு வாகனத்தைச் செலுத்தினால், விபத்து ஏன் நேரப்போகிறது? உடலும் மனமும் சேர்ந்து இயங்கும்போது திறன் கூடுகிறது. உங்களுடைய உள்ளார்ந்த சக்தியையும் இவற்றுடன் இணைத்துப் பலப்படுத்தினால், உங்கள் புத்திசாலித்தனம் வேறுவிதப் பரிமாணத்திற்குப் போகும். விபத்துக்கள் மிகக் குறையும். சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த காருடன் அவருடைய கார் மிக மோசமாக மோதியது. இரண்டு கார்களும் கவிழ்ந்தன. சங்கரன்பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார். மோதிய காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து வந்தாள். அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன்பிள்ளை நினைத்திருக்க, அவள் புன்னகைத்தாள். ‘நாம் சந்தித்து இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்த விபத்து இது. இல்லை என்றால், கார்கள் தகரமாக நசுங்கிய பின்னும் நாம் இருவர் மட்டும் அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம்?’ என்றாள். அவளுடைய அழகு சங்கரன் பிள்ளையை அசத்தியது. ‘உண்மைதான்’ என்று இளித்தார். ‘இதைப்போன்ற சந்திப்புகளைக் கொண்டாடுவதற்காகவே இதை என் பையில் வைத்திருப்பேன்’ என்று அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள். திறந்தாள், சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள். ‘உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை எனக்குத் தாருங்கள்’ என்றாள். சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை. பாதி பாட்டிலுக்குமேல் காலிசெய்துவிட்டு, அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல் செய்தாள். ‘யாருக்கு போன்?’ என்றார் சங்கரன்பிள்ளை ‘போலீஸூக்கு’ ‘எதற்கு?’ ‘குடித்துவிட்டு வந்து என் கார்மீது மோதிய உங்களை விசாரிப்பதற்கு’ என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின்பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள். விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சந்திக்கத் தெரிந்த அந்தப் பெண் எங்கே? விபத்துக்கு சகுனத்தை அதன் போக்குக்குத் தற்செயலாக நடக்காமல், உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், நீங்கள் உங்களுடைய மனம், உடல், உள்சக்தி இவற்றை உங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரவேண்டும். இதைத்தான் ஆன்மீகம் என்பேன். 12 ராசிகள் எப்படி அமைகிறதோ, அந்தந்த நேரத்தில் அவற்றின் முடிவுகளின்படி என்னென்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் அப்படியே நடக்கும் என்றால், மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியே நமக்கு இல்லை என்று அர்த்தம். எங்கோ இருக்கும் கிரகங்களின் அசைவுகளாலோ, வெளியில் உள்ள சூழ்நிலையினாலோ, நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படக் கூடாது. அதற்காகத்தான் யோகாவில் பலவிதமான பயிற்சிகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்தில் 12 நிலைகள் இருக்கின்றன. 12 ராசிகளின் கட்டுப்பாட்டில் இருந்து நம்மை விடுவிக்கும் பயிற்சி இது. கிரகங்கள் உயிரற்றவை. நம் உயிருக்கு அடிப்படையான படைத்தலின் மூலமே நமக்குள் இருக்கையில், நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியை உயிரற்றப் பொருட்களுக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்? நாம் நிர்ணயிக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைப்பதற்கான அடிப்படையை உருவாக்குவதுதான் ஆன்மீகத்தின் முக்கிய நோக்கம். வாழ்க்கையை நடத்துவதில் மட்டுமல்ல, என் பிறப்பு, என் இறப்பு எல்லாவற்றையும் என் கையில் எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்ற உறுதி உங்களுக்கு வந்துவிட்டால், அதற்கான கருவி யோகாவில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தினீர்களானால், எத்தனை நண்பர்களின் திருமணங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் விபத்து இல்லாமல் போய்வர முடியும்”.

Read more at : உண்மையில் இருக்கிறதா கெட்ட சகுனம்? 

பிச்சை எடுப்பதை ஆதரிக்கலாமா?

நம் நாட்டில் ரயில் நிலையம், சாலையோர நடைமேடை, போக்குவரத்து சிக்னல்கள் முதல் கோயில்வாசல் வரை பிச்சைக்காரர்களின் அணிவகுப்பை பார்க்க முடிகிறது. ஏதும் செய்ய இயலாத நிலையில் சிலர், ஆரோக்கிய உடலுடன் சிலர் என கை நீட்டி கேட்டபடியே இருக்கின்றனர். இவர்களுக்கு பிச்சை போடாமல் சென்றால் குற்ற உணர்ச்சி நம்மைக் குத்தாதா? வாருங்கள் சத்குருவிடம் கேட்போம்! சத்குரு: “இங்கிலாந்து மாதா கோயிலைவிட்டு சாட்டிலான் என்ற ராணுவத் தளபதி வெளியே வந்தார். வாசலில் தளர்ந்துபோன வயோதிகர் ஒருவர், பிச்சை எடுக்கக் கை நீட்டினார். பிரார்த்தனைகளைச் செலுத்திவிட்டு வந்த மனநிலையில் இருந்த தளபதி, தன் அங்கிப் பையில் கைவிட்டு, கிடைத்ததை எடுத்து அவர் தொப்பியில் போட்டுவிட்டு, தன் குதிரைமீது ஏறப்போனார். பிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்? பிச்சை எடுத்த வயோதிகர் அவரைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தார். ‘ஐயா, நீங்கள் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். தவறுதலாக மிக அதிகமான பொற்காசுகளைப் போட்டுவிட்டீர்களே?’ என்று கை நிறைய பொற்காசுகளை எடுத்துக் காட்டினார். ‘ஆம்… கவனமின்றி இவ்வளவு பெரிய தொகையைப் பிச்சையிட்டுவிட்டேன். ஆனால் உங்கள் நாணயத்திற்காக, இப்போது முழுக் கவனத்துடன் இதை வழங்குகிறேன்’ என்று மேலும் சில பொற்காசுகளை எடுத்து அந்த வயோதிகரின் தொப்பியில் போட்டார் சாட்டிலான். பிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்? இங்கே பிச்சை எடுப்பது ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண் தனியாக வந்து கை நீட்டினால், நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடும். ஆனால் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து கேட்கும்போது, உங்கள் மனம் பதறுகிறது. இதற்காகவே வசதி இல்லாதபோதும், குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சிலசமயம் பிச்சை எடுப்பதற்காக எங்கே இருந்தாவது ஒரு குழந்தையைத் திருடி எடுத்துவரக்கூட அவர்கள் தயங்குவது இல்லை. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையைப் பார்த்தால், நீங்கள் பிச்சை கொடுக்கமாட்டீர்கள் என்று குழந்தையின் கையை காலை உடைத்துவிடும் கொடூரமானவர்களும் இருக்கிறார்கள். கண் இருக்கும் குழந்தையின் கண்ணை எடுக்கும் அவலம்கூட இந்த சமூகத்தின் திரைமறைவில் நடக்கிறது. நீங்கள் கருணை உள்ளவராக இருப்பது நல்லது. ஆனால், எந்தச் சூழ்நிலையில், யாரிடம் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேதம் பார்த்துத்தான் ஆகவேண்டும். உங்கள் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற இரக்கமற்றவர்களிடம் கருணை காட்டினால், ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். நாளிதழில் படித்திருப்பீர்கள்; கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். தங்கள் சிறு குழந்தையைப் பகலில் பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணியை நியமித்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில், ஏதோ காரணமாக வழக்கத்தைவிடச் சில மணி நேரங்கள் முன்பாக வீடு திரும்பினார் அந்தக் குடும்பத் தலைவி. குழந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண்மணி ஜாலியாக தொலைக்காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தாள். குழந்தையைக் காணவில்லல. பதறிப்போன தாய், அந்தப் பெண்ணை மிரட்டி விசாரித்தாள். வார நாட்களில், இவர்களுடைய குழந்தையைப் பகல் நேரத்தில் ஒரு பிச்சைக்காரிக்கு வாடகைக்கு விடுவதும், பெற்றவர்கள் திரும்பி வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகக் குழந்தையைத் திரும்பப் பெற்றுச் சுத்தம் செய்து வைத்துவிடுவதையும் அறிந்து அந்தத் தாய் துடிதுடித்துப் போனாள். மிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம். மிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம். கண்ணை இழந்தவர்களுக்குப் பார்வையைக் கொண்டுவர முடியுமா என்று இந்தப் பூமியில் எவ்வளவோ முயற்சிகள் நடக்கின்றன. கையையும் காலையும் இழந்தவர்களுக்குச் செயற்கை உறுப்புகளைப் பொருத்துவதற்கு மருத்துவத்தில் எத்தனையோ பிரயத்தனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையின் கையைக் காலை உடைப்பதும், கண்ணைச் செயலற்றதாக்கி பிச்சை எடுப்பதையும் ஒரு தொழிலாக நடத்தி வருபவர்கள் காலூன்ற நாம் இடம் கொடுக்கலாமா? மேக்சிமிலியன் என்ற சக்ரவர்த்தி நகர்வலம் போனார். தெருவோரம் நின்றிருந்த பிச்சைக்காரன்மீது இரக்கம்கொண்டு, சில்லறைக் காசுகளை அவனுடைய பாத்திரத்தில் போட்டார். பிச்சைக்காரன் முகத்தில் அதிருப்தி நிலவியது. ‘அரசே, நாம் எல்லோரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்பதை மறக்காதீர்கள். உங்கள் சகோதரனுக்கு இன்னும் தாராளமாக நீங்கள் வழங்கலாம்’. சக்ரவர்த்தி சிரித்தார். ‘உன் மற்ற சகோதரர்கள் ஒவ்வொருவரும் நான் வழங்கிய அதே அளவு உனக்கு வழங்கினால், நீ என்னைவிட மாபெரும் செல்வந்தனாகிவிடுவாய்… கவலைப்படாமல் போய் வா!’ என்றார். ஒரு நாட்டின் சக்ரவர்த்தியே பிச்சை இடுகையில் கவனமாகத்தான் இருந்தார். உங்களுக்கு எதற்குக் குற்ற உணர்வு? உங்கள் கருணையைக்காட்ட வேறுஇடமே இல்லையா என்ன? உங்களுக்கு நிறைய வசதியும் நேரமும் இருந்தால், இப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். இயலாதா? வேறு ஒரு வழியும் இருக்கிறது. இன்னும் நம் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் போதியளவில் நிறைவேற்றவில்லை. நாடெங்கும் சில தனியார் நிறுவனங்களும், பொதுத்தொண்டு நிறுவனங்களும் பொறுப்பேற்று ஓரளவு நடத்திக்கொண்டு வருகின்றன. பிச்சை எடுக்கவேண்டிய நிலையில், வறுமையில் வாடும் பலரைப் பராமரிக்கும் இதுபோன்ற பலவிதமான இல்லங்கள் இருக்கின்றன. சிக்னலில் போடும் சில்லறைகளை நோட்டுக்களாக மாற்றி, அவர்களுக்கு அனுப்பலாம். அதிலும் கவனம், உங்கள் கருணை நியாயமானவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறதா? அவர்களுடைய நன்மைக்குத்தான் பயன்படுகிறதா என்பதைப் பகுத்தறிவது உங்கள் பொறுப்பாகிறது. போக்குவரத்தை இடையூறு இல்லாமல் வைத்துக்கொள்ள போலீஸ்காரர் அவருடைய கடமையைச் செய்கிறார். பொறுப்பான குடிமகனாக உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். மகத்தான கலாச்சாரம் எங்களுடையது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் குழந்தைகளை ஊனம் செய்யும் கேவலமான நடவடிக்கைகளைக் கவனிக்காமல் இருக்கிறோம். நம் கண் எதிரே இந்த அக்கிரமங்கள் நடக்கும்போது, தடுத்து நிறுத்த உடனடியாக நாம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால், நாம் மனிதர்களே அல்ல. குழந்தை என்பது யாரையோ சார்ந்திருக்கும் ஓர் உயிர். அப்பேர்ப்பட்ட உயிரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது. பிச்சை எடுக்கவோ, வேலைக்கு அனுப்பிச் சம்பாதிக்கவோ, ஒரு குழந்தையை மூலதனமாகப் பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் குழந்தைகள் பயன்படுத்தப்படுவது மாபெரும் குற்றம். இதைவிட மாபெரும் கொடுமை, அறியாப் பருவத்துப் பெண் குழந்தைகள் மோசமான தொழிலில் ஈடுபடுத்தப்படுவது. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பூமி ஏற்கெனவே பொங்கி வழியும் ஐனத்தொகையால் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறது. வருமானம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முன், அதைப் பராமரித்து வளர்க்க முடியுமா என்று பெற்றோர் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். அதுதான் முதல் கடமை”. 

Read more at :

தோல்வி அச்சம் – மீள்வது எப்படி?

சத்குரு, ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த செயல் தோல்வியில் முடிந்து விடுமோ என்று பயப்படுகிறேன். எனவே உருப்படியாக எதையும் செய்யாமல் இருக்கிறேன். இதிலிருந்து மீள்வது எப்படி? சத்குரு: வெற்றியும் தோல்வியும் நன்மைக்கே… யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையே தன் லட்சியமாக கொண்டவருக்குத்தான் வெற்றியும், தோல்வியும். இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்ப்பவர், வெற்றி கிடைத்தால், அதை தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார். தோல்வி கிடைத்தால் அதையும் தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார். பொருளாதாரம் நல்லநிலையில் இருந்தபோது, முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். பொருளாதாரம் நல்லநிலையில் இருந்தபோது, முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். இடையே பொருளாதாரம் சிறிது வீழ்ச்சி கண்டபோது தொழிலில் நிலைத்திருக்கவும் வெற்றி பெறவும் புதிய திறமை தேவைப்பட்டது. மக்கள் தோல்வி குறித்து பயப்படுவதாக கூறுகிறார்கள். தோல்வி என்பதே துயரம்தான். அதில் பயம் என்ற மசாலாவை வேறு ஏன் தடவுகிறீர்கள்? வெற்றி என்பது எல்லோருடைய விருப்பம்தான். ஆனால் வெறும் விருப்பத்தினால் மட்டும் வெற்றி வருவதில்லை. திறமை இருந்தால்தான் வெற்றி. எந்த சூழ்நிலையும் அழகானதுதான்… நீங்கள் சொல்லலாம். “என் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் என் பணித்திறனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அசந்து போயிருப்பீர்கள்..!” உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய சூழலை சமாளிக்கவும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது, இல்லையா? பொருளாதாரம் சிறப்பாக இருந்தபோது பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அப்போதே பணம் குறித்த வேட்கையை நீங்கள் குறைத்திருக்கலாம். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவரவு குறைந்துவிட்டது. அதனால் என்ன? நிறைய பணம் கையில் இருந்தபோது வாழ்க்கையில் எதற்கும் நேரம் இல்லாமல் இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்போதாவது தியானம் செய்ய முடிகிறதே என்று பாருங்கள். எனவே வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. உயர்ந்த நிலையை அடைவதற்கு அது ஒரு படிநிலை என்று பார்த்தால் எந்த சூழ்நிலையும் மிகவும் அழகானதுதான். மிகவும் பயன் தருவதுதான். முன்பெல்லாம் ஒவ்வொரு வேளைக்கும் விருந்து போல் உணவு… இப்போதோ ஏதோ சுமார்தான். ஆனால் நீங்கள் விரும்பினால் இதையும் கூட மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். நிறைய பேர் இது போல் எளிய உணவை முழு விருப்பத்துடன் தேர்வு செய்கிறார்கள். கையில் அதிக பணம் இல்லாவிட்டால் என்ன? சிறிய கார், சிறிய வீடு, எளிமையான உணவு என்று வாழ முடியும். கார் இல்லாவிட்டால் நடந்து போகலாமே! கோவையில் 100 வயது கடந்த ஒருவரை 100-வது பிறந்த நாளில் பேட்டி எடுத்தார்கள். அவர் இப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு, “உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு walking தான் காரணம், நான் ஒரு walk-king” என்று பதிலளித்தார். விவசாயி கேட்ட வரம் ஒரு விவசாயி இருந்தார். இயற்கை சக்திகள் தன் பயிரை ஆள்வதை குறித்து துயரம் கொண்டார். எனவே ஒருநாள் அவர் சிவனை அழைத்து, “இயற்கை சீற்றங்களால் எனக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. இந்த விவசாயியின் துயரம் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு விவசாயி அல்ல. ஒரு வேடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போது மழை பெய்ய வேண்டும். எப்போது சூரியன் வர வேண்டும் என்று எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். வேடனும், பித்தனுமான உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவது கஷ்டம்தான். எனவே இயற்கை சக்திகளை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். சிவனும் நல்ல மனநிலையில் இருந்ததால் அந்த வரத்தை கொடுத்துவிட்டார். தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. வெற்றி என்பதும் கூட கிடையாது. அதுவும் கூட உங்கள் முட்டாள்தனமான எண்ணம்தான். விவசாயி நன்றாக திட்டமிட்டார். சோளம் விதைத்தார். “மழை!” என்றார். மழை பெய்தது. ஆறு அங்குலம் நிலம் நனைந்தவுடன், “மழை நிற்கட்டும்” என்றார். மழை நின்றது. நிலத்தை உழுதார். விதை விதைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மழை என்றார். பெய்தது. “இன்று நான் வயலில் வேலை செய்ய வேண்டும். என்ன வெயில்…! வெயில் வேண்டாம். மேக மூட்டம் வேண்டும்” என்றார். அப்படியே ஆனது. மிகவும் மகிழ்ச்சியானார். பசேலென பயிரும் வளர்ந்து வந்தது. இயற்கை எப்போதுமே விவசாயியின் கையில் இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டார். அறுவடைக்கான நேரம் வந்துவிட்டதா என்று பார்த்தபோது, ஒரு பறவையைக் கூட காணவில்லை. அதையும் கட்டளை போட்டு விட்டாரே, பறவைகளே வரக்கூடாது என்று… அருகில் சென்று பெரிய பெரிய சோளக்கருதுகளை தொட்டுப் பார்த்தார். மெதுவாக அதை திறந்து பார்த்தார். ஒரு மணி சோளம் கூட இல்லை. “என்ன நேர்ந்தது? வெயில், மழை எல்லாம் நான் சரியாகத்தானே நிர்வகித்தேன். சிவனிடமே கேட்போம்” என்று சிவனிடம் சென்று, “எல்லாம் சரியாக இருந்தும், ஒரு சோளம் கூட விளையவில்லை. நீங்கள்தான் கெடுத்தீர்களா?” என்று கேட்டார். “நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீயே எல்லாவற்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டாய். எனவே நான் சிறிதும் தலையிட விரும்பவில்லை. மழை, வெயில் எல்லாம் சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால் காற்றை முழுவதுமாக நிறுத்திவிட்டாய். நான் நிர்வாகம் செய்தபோது அதிக வலுவான காற்றை அனுப்புவேன். பயிர்கள் வீழ்ந்துவிடும் போல் நிலை ஏற்படும். அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேர்களை ஆழமாக நிலத்தில் செலுத்திக் கொள்ளும். வேர் உள்செல்வதால் பயிர் நன்றாக விளைந்து சோளமும் வரும். ஆனால், இப்போது சோளக்கருது மட்டும் உள்ளது. சோளம் எதுவும் இல்லை” என்றார். எனவே, உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் ஏற்படலாம். அவற்றை பயன்படுத்தி நீங்கள் வலிமையடையலாம். அல்லது உட்கார்ந்து அழலாம். இந்த இரண்டு வாய்ப்புகள் தாம் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வாழ்க்கையில் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம். உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. உண்மையில் வெற்றி என்பதும் கூட உங்களின் முட்டாள்தனமான எண்ணம்தான். வெற்றி – தோல்வி என்னும் கருத்துக்கள் எது வெற்றி, எது தோல்வி என்பது உங்கள் கருத்து மட்டுமே. உலகையும், சூழ்நிலைகளையும் மாற்றுவதைக் காட்டிலும் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? அப்படி மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நடக்கும் எல்லாமே நன்மைதான். ஒரு பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் கொடுத்தால் ஹோட்டலுக்கு சென்று மசால் தோசை சாப்பிடுவது வெற்றியின் உச்சம் போன்றது அல்லவா? ஆனால் அதுவா வெற்றியின் உச்சம்? சொல்லுங்கள்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி விட்டீர்கள். எனவே முதலில் வெற்றி தோல்வி குறித்து மற்றவர்களின் எண்ணத்திற்கு அடிமையாவதை நிறுத்துங்கள். வெற்றி தோல்வி மட்டும் அல்ல. நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும் எங்கோ வெளியிலிருந்து தான் எடுத்துக் கொண்டீர்கள். அவை இப்போது உங்களுக்குள்ளிருந்து உங்களையே ஆட்டிப் படைக்கின்றன. உங்கள் முதல் வெற்றி எது தெரியுமா? நீங்கள் யாருடைய கருத்துக்கும் அடிமை இல்லை என்பதுதான்! வாழ்வில் என்ன சூழ்நிலை வேண்டுமானால் வரட்டும். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால், அதுவே ஒரு வெற்றிதான். நான் சொல்வது சரிதானே? உங்களுக்கு வாழ்க்கை குறித்து எதுவும் தெரியவில்லை. உயிர் பற்றி எதுவும் புரியவில்லை. எனவே, தான் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அழுது கொண்டு இருக்கிறீர்கள். நிறைய பணம் இழந்து விட்டேன் என்று உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறீர்கள். பணம், வசதி போன்றவை எல்லாம் சமூக விஷயங்கள். குடும்பம், சமூகம் போன்றவை எல்லாம் உங்கள் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை. உங்கள் உயிரை எடுப்பதற்காக அல்ல. அவை எல்லாம் நீங்கள் உருவாக்கியவை. நீங்கள் உருவாக்கியவற்றை உங்களை விட மிகவும் முக்கியம்போல் ஆக்கிவிட்டீர்கள். படைத்தவனின் அற்புதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று. ஆனால் உங்களுக்குள் உள்ள அற்புதத்தை பார்க்காமல் சிறிய விஷயங்களுக்கும் துன்பப்படுகிறீர்கள். காரணம் உங்கள் அறியாமையே. எனவே தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. வெற்றி என்பதும் கூட கிடையாது. அதுவும் கூட உங்கள் முட்டாள்தனமான எண்ணம்தான். சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி உங்கள் எண்ண ஓட்டமும் இப்படி ஆகிவிட்டது. எனவே வெற்றி என்று நினைத்து ஒன்றை பெரிதாக கொண்டாடுவதும் தோல்வி என்று நினைத்து உட்கார்ந்து கண்ணீர் வடிப்பதும் தேவையற்றது.

Read more at : தோல்வி அச்சம் – மீள்வது எப்படி? 

மனசாட்சி என்றால் என்ன?

மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சி சொல்வதுபடிதான் நாம் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டுமா? சத்குரு: எல்லாம் பிரமாதமாக இருக்கிறது, ஆனால் ஏதோ ஒன்று மட்டும் உறுத்தலாக இருக்கிறது என்றால், அதைத்தான் மனசாட்சி என்கிறோம். குற்ற உணர்வு, சரி – தவறு இவையெல்லாம் சமூகம் சார்ந்த கருத்துக்கள்தான். இவை, சமூகநெறிகள் மூலம் உங்களுள் செலுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கநெறிகள் என்பவை சமூகத்தை சார்ந்ததாகவும், இனதிற்கு இனம் வித்தியாசமாகவும் இருக்கின்றன. வெவ்வேறு காலங்களில், பூமியில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறான ஒழுக்கநெறிகள் இருந்தன. உங்கள் பாட்டி முற்றிலும் முறையற்றது என நினைத்ததை இன்று நீங்கள் வெட்கமில்லாமல் செய்கிறீர்கள். ஆதலால், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுக்கநெறி என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. அதற்கு உண்மையுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஆனால், மனிதநேயத்திற்கு உண்மையுடன் தொடர்புண்டு. காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுக்கநெறி என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. உங்களுக்குள் ஒவ்வொரு நொடியும், மனிதநேயம் உயிர்ப்புடன் இருந்தால், யாரோ ஒருவர், “இப்படி நடந்துகொள்ளுங்கள், அப்படி நடந்துகொள்ளுங்கள்” என்று உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. மக்கள் மனிதநேயத்துடன் இல்லாத காரணத்தினால்தான், சமுதாயம் ஒழுக்கநெறிகள் மூலம், இதை சரிசெய்ய முயற்சித்துள்ளது. ஒவ்வொருவரும், அவரவருக்கு வேண்டிய ஒழுக்கநெறியைப் பெற்றாலும், நம்மால், இந்த உலகை இன்னமும் சரிசெய்ய இயலவில்லை. போதனையால், உங்களை சுற்றி உள்ள மனிதர்களிடம் நீங்கள் நடிக்கக் கற்றுகொண்டதுதான் மிச்சம். உங்களுக்குள் அனைத்து முட்டாள்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உங்களுடைய மனிதநேயம் முழுமையாக மலர்ந்திருந்தால், உங்களுக்கு ஒழுக்கநெறிகள் தேவையில்லை. உங்கள் தற்போதைய நிலையே நன்றாகத்தான் இருக்கும். விழிப்புணர்வும் மனசாட்சியும் ஒழுக்கநெறிகளால் மனசாட்சி வளருமே தவிர விழிப்புணர்வு வளராது. உங்களுடைய மனிதநேயம் முழுநேரமும் முழுமையாக மலர்ந்திருந்தால், உங்களுக்கு ஒழுக்கநெறி தேவையிருக்காது. மனிதத்தன்மையின் போலித்தனமே ஒழுக்கநெறிகள். சமூகத்தில், ஒரு சில விஷயங்களை ஒழுக்கநெறிகளால், சரிசெய்ய முடிந்தாலும், மனிதரின் உள்நிலையில் அது பேரழிவை ஏற்படுத்தும். ஆனால் மனிதநேயத்தினால், கட்டுப்பாடு இல்லாமல், தளர்வான வழியில், சமுதாயத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த முடியும். அது மனிதனை இனிமையாக ஆக்கும். அதுதான் முக்கியமானது. மனிதநேயம் மலர்ந்து, வழிந்தோடினால், அடுத்த நிலையாக தெய்வீகமாவது இயல்பாக கைகூடும். உங்களுக்குள் மனிதநேயத்தை வழிந்தோட அனுமதித்தால்தான் தெய்வீகம் உங்களுள் மலரும். செழுமையான மனிதநேயம் இல்லாவிட்டால், நீங்கள் என்ன செய்தாலும் சரி, உங்களுள் தெய்வீகம் நிகழாது. “இதை தான் நீங்கள் செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது” என்ற போதனைகள் எந்த கல்லிலும் செதுக்கப்படவில்லை. போதனையால், தெய்வீகம் நடக்காது. அவமானம், பயம், குற்ற உணர்வுதான் மிஞ்சும். ஏனென்றால், வகுக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை முழுமையாக நிறைவேற்றியவர் யாரும் இல்லை. உலகில் உள்ள முக்கிய மதங்கள் கூறும் பாவச் செயல்கள் எதெல்லாம் என்று பட்டியல் போட்டால், கடைசியில், நீங்கள் உயிருடன் இருப்பதே பாவம் என்றுதான் முடிவுக்கு வரவேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் பாவம்தான். நீங்கள் பிறந்ததே குற்றம். வாழ்க்கை செயல்முறையே பாவம் என்று ஆகிவிடுவதால், நீங்கள் எப்போதும், கலக்கத்துடனும், குற்றஉணர்வுடனும் இருக்கிறீர்கள். பாரத கலாச்சாரத்தில், நெறிமுறைகள் இல்லை. “இதை தான் நீங்கள் செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது” என்ற போதனைகள் எந்த கல்லிலும் செதுக்கப்படவில்லை. நாம் ஒருபோதும் போதனையை சார்ந்து இருந்ததில்லை. ஏனெனில், மனிதநேயத்தை ஒரு பெரிய அளவில் தூண்டக்கூடிய சக்திவாய்ந்த மனிதர்களை நாம் உருவாக்கினோம். எனவே, ஒவ்வொரு தலைமுறையிலும் நீதிபோதனை மற்றும், ஒழுக்க விதிகளின் தேவை இல்லாமல் போயிற்று. மனிதநேயத்தின் மூன்று உயிர்நாடிகள்: மனிதத் தன்மையைத் தூண்டுவதற்கு மூன்று அடிப்படைக் கூறுகளை உருவாக்கினோம். முதலில், படைப்பின் மீது பேரார்வம். இந்த கலாச்சாரத்தில், பல்வேறு லட்சக்கணக்கான வழிகளில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம், ஒரு நகரம் அல்லது பெருநகரை உருவாக்க வேண்டியபோது, முதலில் ஒரு பிரம்மாண்டமான கோயிலைத்தான் கட்டினோம். இந்தக் கோயிலை கட்டிய மக்கள் குடிசையில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் கட்டிய கோயில் பிரம்மாண்டமாக இருந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் இதை நீங்கள் பார்க்க முடியும். அடுத்த இரண்டு அடிப்படைகளாக உங்களைச் சுற்றியுள்ள அனைத்து உயிர் மீதும் பரிவு, தனக்கு அதிக முக்கியத்துவம் தராத தன்மை. இம்மூன்றயும் நிலை நிறுத்தினால், மனிதநேயம் எப்போதும் உயிர்ப்போடு இருக்கும். இல்லையென்றால், நீங்கள் நிபந்தனைகளுக்குட்பட்ட போலியான மனிதராக நடிக்க வேண்டிவரும். இதனால் மனசாட்சி உருவாகும். 

Read more at : மனசாட்சி என்றால் என்ன? http://tamilblog.ishafoundation.org/manasatchi-endral-enna/