Sunday, August 31, 2014

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் 
நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும். 
படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்”.
தோப்புக்கரணத்தின் பயன்கள் 
மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. 
நாடிகள் சுத்தம் பெறுகின்றன. 
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். 
தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
செய்முறை 
முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். 
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு. 
மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு. 
பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். 
இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும். 
இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம். 
இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான். 

மனதை நழுவ விடாதே!

மனதை நழுவ விடாதே!
ஞானி ஒருவரைக் காணவந்த இளைஞன் ஒருவன், சுவாமி! நான் அதிர்ஷ்டமில்லாதவன். எந்த செயலைச் செய்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது! என்றான். அவனை ஒரு பொற்கொல்லரிடம் அழைத்துச் சென்றார் ஞானி. அங்கேயிருந்த தங்கக் கட்டியைக் காட்டி அதை அடிக்காமல், உருக்காமல், நீட்டாமல், நகையாக் செய்து தரும்படி கூறினார். அது எப்படி சுவாமி முடியும்? என்றான் பொற்கொல்லன். உடனே ஞானி, இளைஞனிடம் பார்த்தாயா! ஓர் ஆபரணம் செய்ய வேண்டுமென்றால்கூட, தங்கம் தன்னை உருக்குதல், அடித்தல், நீட்டல் போன்ற சோதனைகளைத் தாண்டித்தான் வரவேண்டியுள்ளபோது, வாழ்க்கையில் வெற்றி என்பது சாதாரண விஷயமா? சோதனைகளின் போது உன் மனதை நழுவ விடாமல் இரும்பு போல் உறுதியாயிரு. பொன் நகையாய் மிளிர்வாய்! என அறிவுறுத்த, உண்மையுணர்ந்தான் இளைஞன்.

Saturday, August 30, 2014

விநாயகரின் திருவிளையாடல்

விநாயகரின் திருவிளையாடல்களில் அநேகம் உண்டு. அவற்றில் சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இருக்கின்றன.
இராவணேஸ்வரன் ஒரு முறை கயிலைக்கு வந்து, சிவ வழிபாடு முடிந்துத் திரும்பிச் செல்லும் வேளையில், சிவலிங்கத்தின் ஜோதி வடிவம் ஒன்றைத் தனக்கு இலங்கையில் வைத்துப் பூஜிக்க வேண்டி இறைவனை வேண்டிப் பெற்றுச் செல்கின்றான். இராவணனிடம் அதைக் கொடுத்துப் பூஜித்து வரும்படி கூறிய ஈசன் அவனிடம், “இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல!” என்று எச்சரித்து அனுப்புகிறார். இராவணனும் அவ்வாறே வழியில் எங்கும் லிங்கத்தை வைக்காமல் வேக வேகமாய் இலங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.
ஆனால் தேவாதி தேவர்களுக்கு அந்த லிங்கம் பாரதத்திலேயே பிரதிஷ்டை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம். இராவணனோ சிறந்த சிவ பக்தன். அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முடியாது. என்ன செய்யலாம்? யோசித்த அமரர் குலத்தவர் விநாயகனைப் பணிய, விநாயகனோ, அவனிடம் இருந்து அறவழியில் மட்டுமே லிங்கத்தைக் கேட்கலாமே அன்றி, பறிக்க முடியாது எனச் சொல்கின்றார்.
பின்னர் ஒரு சிறு பிள்ளை உருவத்தில் இராவணன் செல்லும் வழியில் நின்று கொண்டு அங்கும், இங்குமாய் அலைகின்றார். மாலை ஆயிற்று, மாலைக் கடன்கள் நிறைவேற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது. மேலைக்கடலில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். இராவணன் மாலைக்கடனை எவ்விதம் முடிப்பது எனச் சிந்தித்தான். லிங்கத்தையோ கீழே வைக்க முடியாது. பின்னர் என்ன செய்வது?
யோசனையுடன் பார்த்தவன் கண்களுக்குச் சிறு பிள்ளை ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. உடனேயே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு, “பிள்ளாய்! சற்று நேரம் இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிரு. கீழே வைத்து விடாதே. நான் என் மாலை நேரப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்றி விட்டு வருகின்றேன். அதுவரை உன் கையிலேயே இந்த லிங்கம் இருக்கட்டும்,” என்று சொன்னான்.
“எனக்குக் கை வலித்தால் நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்கவே, அதற்குள்ளாய் நான் வந்து விடுவேன், என்று சொல்லிய இராவணன், மாலைக் கடன்களை நிறைவேற்றக் கடலில் இறங்கி சந்தியாவதனம் போன்ற ஜபங்களை ஆரம்பிக்கின்றான். ஜபங்களில் இராவணன் ஆழ்ந்து போகும் வரை கரையில் நின்ற விநாயகனோ, இராவணன் இனி பாதியில் வர முடியாது என்பது நிச்சயம் ஆனதும், அந்த லிங்கத்தைக் கீழே வைத்து விட்டு, “எனக்குக் கை வலிக்கிறது, நான் போகின்றேன்’ என்று கூவிக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான்.
கோபம் கொண்ட ராவணன், பாதியிலேயே ஓடி வந்து, அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டே வந்து லிங்கத்தை எடுக்கக் கீழே குனிந்தான் ஆஹா, லிங்கம் அப்படியே பிரதிஷ்டை ஆகிவிட்டதே? இது என்ன ஆச்சரியம்? திகைத்தான் இராவணன். சுற்றும், முற்றும் பார்த்தான், விநாயகர் தன் சுய உருவில் காட்சி கொடுத்தார், “இராவணேஸ்வரா, இந்த லிங்கம் இங்கே மேலைக் கடலில், “திருக்கோகர்ணம்”
என்ற பெயரில் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். உனக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. நீ சிவ பூஜையைத் தொடர்ந்து செய்து வா. இது இவ்வாறு இருக்க வேண்டும் என்பது நியமம். ஆகவே கலங்காதே!” எனச் சொல்ல மனம் ஆறுதல் அடைந்த இராவணன், லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டு இலங்கை நோக்கிப் போனான்.
இந்தக் கோயில் கர்நாடகம், கோவா எல்லையில் மேலைக்கடலில் (அரபிக்கடல்) கடலைப் பார்த்தவண்ணமாய் உள்ளது. கோயிலுக்குத் திருக்கோகர்ணம் என்று பெயர்

Wednesday, August 27, 2014

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன்.
வட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்!
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்
முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம் 
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்
மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் 
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் 
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்
உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம் 
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!
அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம் 
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்
ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!
நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம் 
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம் 
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்
வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!
மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம் 
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்
காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!
விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

Tuesday, August 26, 2014

சந்திர பகவான் சாபம் பெற்ற கதை :

சந்திர பகவான் சாபம் பெற்ற கதை :
*************************************
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்திஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக அந்த நாளை விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் கணபதியை வணங்கி விட்டு தான் தொடங்குவார்கள்.
அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில் பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு, நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.
அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.
அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
*கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
*இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
*உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
*திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!
*பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.

காதலை நிறைவேற்றிய கணபதி: விநாயகர் தன் தம்பி முருகப்பெருமானின் காதலை நிறைவேற்றி திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமாலின் கண்மலரில் தோன்றிய சுந்தரவல்லி சரவணப் பொய்கையில் நீராடி முருகனையே தன் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்து வந்தாள். நீ வள்ளிமலையில் பிறந்து என்னை வந்து அடைவாய் என்று அருள்புரிந்தார் முருகன். வள்ளிமலையில் பிறந்து வளர்ந்த வள்ளி மீது முருகன் காதல் கொண்டு விளையாடல் புரிந்தார். வேடன், கிழவன் என பல வடிவத்தில் வந்து இறுதியில் தன் அண்ணன் விநாயகரை யானையாக வரும்படி அழைத்தார். விநாயகர் யானையாக வந்தார். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளிநாயகி முருகனைத் தஞ்சம் அடைந்தாள். முருகன் வள்ளியை மணந்து அருள்பாலித்தார். ""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' என்று இந்நிகழ்வினை திருப்புகழில் தெளிவுபடுத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்.
குழந்தைகளின் கல்வி வளர...: குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பு, விநாயகப்பெருமான் முன்னால் நின்று இந்த எளிய ஸ்லோகத்தை சொன்னால் விநாயகர் மிகச்சிறந்த கல்வி நலனைத் தருவார்.
""மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!!''
இதை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடலாம்.
பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.
அவ்வை பாடிய அகவல் : விநாயகருக்குரிய துதிப்பாடல்களில் விநாயகர் அகவல் மிகவும் பிரசித்தமானது. அவ்வையார் பாடிய இந்நூல் எழுந்த வரலாறு சுவையானது. அறிவின் வடிவாக விளங்கிய ஞான மூதாட்டி அவ்வையார். இவர் நாளும் விநாயகரை வழிபாடு செய்யும் இயல்புடையவர். ஒருநாள் சுந்தரர் யானை மீதும், சேரமான்பெருமாள் நாயனார் குதிரை மீது கயிலைக்குச் செல்வதை அறிந்தார். அவர்களுடன் தானும் கயிலை விரைவாகச் செல்ல எண்ணி வேகமாக விநாயகருக்கு பூஜை செய்தார். விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "அமைதியாகப் பூஜை செய்வாயாக; அவர்களுக்கு முன்பாக கயிலைப்பதியை அடையச் செய்கிறேன்' என்று அருள்புரிந்தார். விநாயகரின் அருள்மொழி கேட்ட அவ்வையார் அவர் மீது பாடிய பாடலே விநாயகர் அகவல் என்பதாகும். உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி பரவசத்துடன் நின்ற அவ்வையாரை ஒரு நொடிப் பொழுதினில் தன் துதிக்கையால் கொண்டு சேர்த்தார். நாமும் விநாயகர் அகவல் பாடி ஐங்கரனின் அருள் பெறலாம்.
விநாயகருக்கு படைக்க வேண்டியவை
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.
கரும்பு: இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
திருநீற்று தொட்டி விநாயகர் : மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வீற்றிருக்கும் விபூதி விநாயகரை, திருநீற்றுப்பிள்ளையார் என்று அழைப்பர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருநீற்றின் பெருமையைப் பாடுகிறார். இவ்விநாயகருக்கு என்று அர்ச்சகர்கள் கிடையாது. பொற்றாமரைக்குளத்தில் கை, கால் தூய்மை செய்து, நாமே இவருக்கு நம் கையாலேயே திருநீற்றினை அபிஷேகம் செய்யலாம். தொட்டியில் வீற்றிருக்கும் இவ்விநாயகரின் மீது திருநீற்றினை இட்டு, அவரது பாதம் பணிந்து பூஜிப்பவர்களின் வினைகளைப் போக்கி அருள்கிறார்.
எலியின் மீது யானை: யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய பிராணியின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும் பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிற்றைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்

கலியுகத்தின் இறுதியில்......மகாபாரதம் கூறுவது

மகாபாரதம் கூறுவது
கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.
பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.
சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.
உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.
மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.
சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.
கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.
மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை,
மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.
பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.
ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.
கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.
வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.
செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.
மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.
உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.
எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.
வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.
யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.
மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும்
சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.
சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.
யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.
யுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.
இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம்
மங்களம் ஆரம்பமாகும்.
(மகாபாரதம் – வன பா்வம்)

Monday, August 25, 2014

குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்

ஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்
1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.

எப்போது கோயில் மணியை அடிக்கக் கூடாது?

எப்போது கோயில் மணியை அடிக்கக் கூடாது?

கோயிலிலிருந்து வெளியே வரும்போது மணியடிக்கக்கூடாது, கோயிலுக்குப் போன பலனே போய்விடும், இறைவனை வணங்கும்போது மட்டுந்தான் மணி அடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன்.

பூவைப்பற்றி அறிய வேண்டியவை!

பூவைப்பற்றி அறிய வேண்டியவை!
குழந்தைக்கு ஓரு வயதாகும் வரையில் தலையில் பூ வைக்கக்கூடாது, அதே
போல் ஒரு பெண் வைத்துக் கொண்ட பூவை இன்னொரு வைத்துக்கொள்ளக்கூடாது

பல் கூறும் இரகசியம்!

பல் கூறும் இரகசியம்!
ஒருவருக்கு முன்பற்களிடையே இடைவெளி இருந்தால் அவர்கள் நிச்சயமாய்ப் பணக்காரர்கள் ஆவார்கள் குழந்தை பிறக்கும்போது பல்லுடன்
பிறப்பது அவ்வளவு நல்லதல்ல; பரிகாரம் செய்க,

அசுவமேதயாகப் பலனப் பெறக்கூடியவர்கள் யார்?

அசுவமேதயாகப் பலனப் பெறக்கூடியவர்கள் யார்?
கஜபூஜை,கோபூஜை,சுமங்கலிபூஜை,கலசபூஜை செய்பவரும்,படிப்புக்கு உதவி செய்பவரும் ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுபவனும் அநாதைப்பிரேதத்தை எவர் உதவியும் இன்றித் தாமே செலவு செய்து அடக்கம் செய்பவரும், அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்

சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது

முடி உணர்த்தும் முன் சகுனம்!
சாப்பிடும் போது வாயில் முடி அகப்படுவது கவலையை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும், அதற்குப் பரிகாரமாய் ஓரு நெல் சாப்பிட்டுவிட்டால் எந்தக் கவலையும் ஏற்படாது அப்படி ஏற்பட்டாலும் சிக்கல் இராது.

எவ்வாறு சாப்பிடக்கூடாது?

எவ்வாறு சாப்பிடக்கூடாது?
ஈரத்துணியுடனும்,துண்டுடனும் சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும்,சந்திரனின் நிழலிலும்,கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும் நடுநிசியிலும்,பிரதோஷகாலத்திலும்,இருட்டிலும்,திறந்தமாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்! ஆனால்,பௌர்ணமியன்று நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலா

நோய் நொடி இன்றி வாழ!

நோய் நொடி இன்றி வாழ!
குழந்தை பூமியில் ஜனனமானவுடன் நெய்,தேன் ஆகியவற்றில் தங்கத்தைத் தேய்த்து அக்குழந்தையின் நாவில் குலதெய்வத்தின் பெயரை வேண்டிக்கொண்டே மூன்று முறை தடவ வேண்டும்,அதன்பின்பே தொப்பூழ் கொடியை அறுக்கவேண்டும்,இவ்வாறு செய்தால் அக்குழந்தை நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் இருக்கும்,

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்!

வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்!

வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்!
நடந்து செல்லும்பொழுது,பசு,தெய்வசப்பரம்,நெய்க்குடம்,அரசமரம், வில்வமரம்,நெல்லிமரம்,அரசுடன் சேர்ந்த வேம்பு ஆகியவை குறுக்கிட்டால் வலப்பக்கமாய்ச் சுற்றிப் பிரதட்சணமாய்ப் போக வேண்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன சுபத்தடை ஏற்படும்!
நல்ல காரியங்களைப் பற்றி பேசும்போதும்,சுபகாரியத்தை முடிப்பதுபற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கும் போதும் எள் அல்லது எண்ணெயைப் பற்றிப் பேசுதல் கூடாது அதனால் சுபத்தடை ஏற்படும்

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்க

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய
இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது3,நிலையில் அமரக்கூடாது4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது 13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது?

எந்நாளில் முடி வெட்டக்கூடாது?

எந்நாளில் முடி வெட்டக்கூடாது?
சதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,

சாப்பிடக் கூடாத நேரங்கள்!

சாப்பிடக் கூடாத நேரங்கள்!
எக்காளம்,பேரிகை,சங்கு,இயந்திரம்,வண்டி,உரல்,உலக்கை,செக்கு,யானை சண்டை ஆகியவற்றின் சத்தம் கேட்கும்போது சாப்பிட உட்காரலாகாது!மேலும் சாப்பிடும்பொழுது விளக்கு அணைந்துவிட்டால்,சூரியபகவானைத் தியானம் செய்து மீண்டும் விளக்கு ஏற்றிவிட்டுச் சாப்பிட வேண்டும், இருட்டில் அமிர்தமே ஆனாலும் ஒரு பொழுதும் சாப்பிடக்கூடாது, அந்தி, சந்தி வேளைகளிலும்,விளக்கு வைத்தவுடனும் சாப்பிடக்கூடாது,

ஹோமத்தின் முக்கியக் கடமை!

ஹோமத்தின் முக்கியக் கடமை!
ஒரு வீட்டில் ஹோமம் செய்த பின்பு அருகு,பழம்,சந்தனம்,புஷ்பம், ஜலகும்பம்,தயிர்,கன்றுடன் கூடிய பசு,எருது,பொன்,அட்சதை,தேன், கன்னிப்பெண்,சுமங்கலி,மஞ்சள்,ஆகிய மங்களத்திரவியங்களைத் தரிசனம் செய்தபிறகே வெளியில் செல்லவேண்டும்!

குழந்தைக்குத் தரிசனம் செய்விக்கும் நாள்!

குழந்தைக்குத் தரிசனம் செய்விக்கும் நாள்!
குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்,ஒரு நல்லதினத்தில் அக்குழந்தைக்குச் சூரியதரிசனம்,சந்திரதரிசனம்,பசுதரிசனம்,ஆலயதரிசனம்
செய்விக்க வேண்டும்,செவ்வாய்,சனி ஆகியவற்ரைத் தவிர மற்ற கிழமைகளில் பௌர்ணமி வரும் சமயம் இவற்றைச் செய்வது நல்லது

தோஷம் தரும் விஷயங்கள்!

தோஷம் தரும் விஷயங்கள்!
கன்று ஈன்று பத்து நாள் ஆகாத பசுமாட்டின் பால்,தேத்தாகொட்டை, நெய்கசண்டு,கன்று இல்லாத பசுவின் பால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அப்படி உட்கொள்வது தோஷமாகும்

பல் துலக்கும் முறை!

பல் துலக்கும் முறை!
பல் துலக்கியவுடன் பற்குச்சியை அலம்பித் தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும் பல்துலக்குக் குச்சி கிடைக்காத சமயம் வாயைப் பத்துமுறை கொப்புளித்தால்,பல் துலக்கியதற்குச் சமமாகும்,கோவில்,தோட்டில்,யாகம் அல்லது ஹோமம் செய்யுமிடம்,ஜலம் ஆகிய இடங்களில் பல்துலக்கக் கூடாது!

கூடாத சில விஷயங்கள்!

கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது!அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது, முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது,அது மிகப்பெரிய தோஷமாகும்!

நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:

நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்:
1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது. 3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது. 4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது. 5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது 6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது 7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது 8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும். 9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்
துப்பக்கூடாது. 10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. 11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது 12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது 13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. 15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

ஆயுளை வளர்க்கும் ஐந்து!

ஆயுளை வளர்க்கும் ஐந்து!
மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

பெண்கள் கவனத்திற்கு!

பெண்கள் கவனத்திற்கு!
நமது சாஸ்திரம் பெண்களுக்குக் கூறும் சில முக்கியகுறிப்புகள் 1. கணவரோடு மனைவி இருக்கும் போது மல்லிகை, முல்லைப் பூக்களைத் தாம் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்களைச் சூடக்கூடாது. பெண்கள் குளிக்கும் போது முகத்திற்கு அவசியம் மஞ்சள் பூச வேண்டும். 3. ஓவ்வொரு பெண்ணும் அவசியம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாய் கல் வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது விசேஷ சக்தி வாய்ந்ததாகும். 4. ஒவ்வொரு பெண்ணும் காலில் பெருவிரலுக்கு அடுத்தவிரலில் வெள்ளியால் மெட்டி அணிய வேண்டும். 5. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கின் போது தலையில் பூ வைக்கக்கூடாது; சமையல் அறைக்குள் போகக்கூடாது; யாருக்கும் உணவு படைக்கவும் கூடாது. 6, திருமணம் ஆன பெண்கள் இரவு நேரத்தில் கருப்பு, இரத்த சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறம் கொண்ட சேலைகளை உடுத்தக்கூடாது, வெளிறிய வண்ணம் கொண்ட சேலைகளையே உடுத்தவேண்டும். 7. திருமணம் ஆன பெண் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் குளித்துவிட்டுக் கணவன் தூங்கிக்கொண்டுரும் போதே, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு சென்று இதோ பாருங்கள் என்று கூறி எழுப்பித் தன் முகத்தில் விழிக்கும்படி செய்ய வேண்டும்.

காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால்

விசேஷ தரிசனம்!
காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால் அதைவிட்ச் சிறப்பு வேறு எதுவும் இல்லை

இலட்சுமி கடாட்சம்

உப்பு போடுங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் விளக்கேற்றி, உப்புப் பாத்திரத்தை வைத்து அதன் அடியில் பழைய செப்புக்காசு ஓன்றை வைத்து, கடையிலிருந்து உப்பு வாங்கி வந்து அதில் கொட்டி வழிபட்டால் குடும்பத்தில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும், இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும்

வீட்டிற்கு யாகம்!

வீட்டிற்கு யாகம்!
வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் நல்ல நாள் பார்த்துக் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, குபேரன் பூஜை செய்ய வேண்டும்,அப்போதுதான் அந்தக் குடும்பம் விருத்திபெரும்!சிலர் கிரக பிரவேசத்தன்று செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர், கணபதி ஹோமம் மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு ஆகும். மேலே சொன்ன முறையிலே செய்ய வேண்டும். அதுவும், பிரம்ம முகூர்த்தமாகிய காலை 4 மணி முதல் சூரியன் உதயம் ஆவதற்குள் செய்வது சாலச்சிறந்தது ஆகும்!

வீட்டில் நெல்லிக்காய்!

வீட்டில் நெல்லிக்காய்!
ஒவ்வொரு வீட்டிலும் வருஷன் முழுவதும் நெல்லிக்காய் இருப்பது மிகச்சிறப்பாகும். அது ஊறுகாயாகவோ, வற்றலாகவோ இருந்தாலும் சரி, வீட்டில் நெல்லிக்காய் எப்போதும் இருந்தால் இலட்சுமி கடாட்சம் ஆகும்!

வெந்நீர்க்குளியல் கூடாது!

வெந்நீர்க்குளியல் கூடாது!
அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, பொங்கல், பிறப்பு இறப்புகளால் ஏற்படும் தீட்டுக் காலங்கள் ஆகியவற்றின் போது வெந்நீரில் குளிக்கக்கூடாது.

சாஸ்திரம் கூறும் இரகசியங்கள்!

சாஸ்திரம் கூறும் இரகசியங்கள்!
ஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்
1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.

வெள்ளிக்கிழமையின் இரகசியங்கள்!

வெள்ளிக்கிழமையின் இரகசியங்கள்!
வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அது நல்ல அதிர்ஷ்ட்த்தைக் கொடுக்கும்,வெள்ளிக்கிழமை அரிசி வாங்குவதும் நல்லது
வெள்ளிக்கிழமைச் சமையலில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் அது மிகவும் அதிர்ஷ்டம் ஆகும்,நெல்லிக்காயைப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உண்ணக்கூடாது; வெள்ளிக்கிழமைகளில் அரிசி புடைக்கக்கூடாது,அரிசியை வறுக்கக்கூடாது.

சனி நீராடுவதின் இரகசியம்!

சனி நீராடுவதின் இரகசியம்!
சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தால், சனிக்கிரகத்திற்கும் நமக்கும் உள்ள நீண்ட தொடர்பு சில மணி நேரம் நல்லெண்ணெய் உடலில் இருக்கும் வரையில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாகச் சனிகிரகத்திலிருந்து வெளிப்படுகின்ற"மாரீஷ்" என்னும் விஷத்தன்மை வாய்ந்த ஒளிக்கதிர் நமது உடலைத் தொடர்ந்து பாதிக்காமல், இடையில் சிலகாலம் இடைவெளியை ஏற்படுத்துகிறது, இம்மாதிரி உண்டாகும் இடைவெளியினால் மனித உடலுக்குச் சனியினால் உண்டாகக்கூடிய இயக்கம் சமன்படுத்தப்படுகிறது, அதனால் சனிக்குச் சாந்தி ஏற்படுகிறது! இது விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு சனீஸ்வர சாந்தியாகும்

விஷ்ணு அவதாரமும் நவக்கிரகங்களும்!

விஷ்ணு அவதாரமும் நவக்கிரகங்களும்!

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சமாய் விளங்குகிறது.
1. கேது-மத்ஸ்யம் 2. சனீஸ்வரர்-கூர்மம் 3. இராகு-வராகம் 4. செவ்வாய்-நரசிம்மர் 5. குரு-வாமணர் 6. சுக்கிரன்-பரசுராமர் 7. சூரியன்-இராமர் 8. குளிகன்-பலராமர் 9. சந்திரன்-கிருஷ்ணர் 10. கல்கி-புதன்

விருந்துக்கு ஏற்ற நாள்!

விருந்துக்கு ஏற்ற நாள்!

முதலில் மாமனார் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும்,அவர்கள் நம் வீட்டில் சாப்பிடுவதாய் இருந்தாலும் அதற்கு ஏற்ற நாள்கள் வளர்பிறையில் திங்கள்,புதன்,வெள்ளி,சனி ஆகிய நாள்களே ஆகும் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு,ஆகிய நாள்களில் எக்காரணத்தைக் கொண்டும் விருந்து உண்ணக்கூடாது,மேலும்,தேய்பிறையில் எந்த நாளிலும் முதலில் சாப்பிடக்கூடாது,இதே விதிமுறையைத் தான் நாம் அளிக்கும் விருந்திலும் கடைப்பிடிக்க வேண்டும்!

தலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):

தலைமுடி, நகம், முகம் மழித்தல் (ஷேவிங் ஆகியவற்றைச் செய்யக்கூடாத தினங்கள்):
ஒருவர் தலைமுடி வெட்டக் கூடாத மாதங்கள் மாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் ஆகும். கிழமைகள் செவ்வாய், வெள்ளி ஆகும்; நட்சத்திரங்கள் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் அவரவர் இராசிக்கான சூன்யதிதிகள். ஆனால்,இறைவனுக்குக் காணிக்கை, பிரார்த்தனை செலுத்த எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை

தீர்த்தங்கள் :

தீர்த்தங்கள் :

1, பிரம்ம தீர்த்தம் 2, சூல தீர்த்தம் 3, ஆனந்த தீர்த்தம் 4, காளி தீர்த்தம் 5. வைணவ தீர்த்தம் 6, இராகு தீர்த்தம் 7. ஆழி தீர்த்தம் 8, சங்க தீர்த்தம் 9. சுக்கிர தீர்த்தம் 10. பராசர தீர்த்தம்11. அகத்திய தீர்த்தம் 12. கௌதமதீர்த்தம் 13. (அக்னி) வண்ண தீர்த்தம் 14. குமார தீர்த்தம் 15. சூரிய தீர்த்தம் 16. சந்திர தீர்த்தம் 17. சேது தீர்த்தம் 18. அகண்ட தீர்த்தம் 19. பதினெண்புராண தீர்த்தம் 20. புறவ நதி தீர்த்தம் 21. கழுமலநதி தீர்த்தம் 22. விநாயகநதி தீர்த்தம்

காசிக்கு நிகரான தலங்கள்

காசிக்கு நிகரான தலங்கள்
1,திருவெண்காடு
2,திருமயிலாடுதுறை
3,திருவையாறு
4,திருவிடைமருதூர்
5,திருவாஞ்சியம்

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

1,உத்தராயண-தக்ஷிணாயன புண்ய காலங்களிலோ
2,துலா விஷு முதலிய காலங்களிலோ
3,செவ்வாய்க் கிழம 4,தேய்பிறையிலோ
-----------------------------------------------------------
(-எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல்_)
பானுவாரம் சிஸ்ரவாரம் முடிய எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தலுக்கான பலன்கள்
1)
ஞாயிற்றுக் கிழமை எண்ணைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் இதயத்தில் எரிச்சலை உண்டு பண்ணும்.
2)
திங்கட்கிழமை எண்ணை ஸ்நானம் தோலின் பொலிவையும்,சிகப்பு நிறத்தையும்
அளிக்கும்.
3)
செவ்வாய் கிழமை எண்ணை ஸ்நானம் அகால மரணத்தைத்தரும்
4)
புதன் கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் பொருள் விருத்தியைத் தரும்
5)
வியாழக்கிழமை எண்ணை ஸ்நானம் ஏழ்மையையும்,பணக் குறைவையும் அளிக்கும்.
6)
வெள்ளிக்கிழமை எண்ணை ஸ்நானம் பல விதங்களில் ஆபத்து விளைவிக்கும்
7) சனிக்கிழமை எண்ணை ஸ்நானம் ஆயுள் விருத்தியையும் மனச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.
(<எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள்>)
க) த்விதியை,திரிதியை,பஞ்சமி,சபதமி,தசமி,த்ரையோதசி ஆகிய தினங்கள் பலத்தையும்,பொருளையும் நீண்ட ஆயுளையும்,புத்திரர்களையும் அளிக்கும்
௨) தசமி திதியில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல் நலம்
௩) தசமி திதிகளில் எண்ணெய் தேய்க்காமல் ஸ்நானம் செய்தால் அது ஆயுள்
புத்திர்க்கூர்மை,புகழ் இவற்றைக் குறைக்கும்
( -தவிர்க்க வேண்டிய திதிகள்_)
பிரதமை, சதுர்த்தி, சஷ்டி,நவமி,சதுர்த்தசி,அமாவசை ஆகியவை வாழ்க்கையில் உள்ள சுகபோகங்களையும் புத்திசாலித்தனத்தையும்,சரீர பலத்தையும்,புகழையும்
குறைக்கும்,ஆகவே அவற்றைத் தவிர்த்தல் நலம்
குறிப்பு:} மேற்கூறிய தினங்கள் எண்ணெய் ஸ்நானம் செய்ய அவசியம் ஏற்பட்டால் கெட்ட பலனைக் குறைக்கு எண்ணெயுடன் நெய்யைச் சேர்த்துக் கலந்து குளித்தால் நல்லது 

ஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர்

ஒர் கற்உருவச் சிலைக்கு மூன்றுவித சக்திகளை செலுத்தி பிரதிஷ்டை செய்கின்றனர்  "பிராணசக்தி"
 
1,ஒளஷதம்      -புல் பூண்டு செடிகளின் சக்தி
2,பாசுகம்                -ஜீவப்ராணிகளின் சக்தி
3,லெளகிகம்             -உலோக சக்தி

நமஸ்காரம் செய்யும் இடம்

நமஸ்காரம் செய்யும் இடம்
கோவிலில் த்வஜஸ்தம்பம் இருந்தால் அதன் அருகே மட்டும் தான் நமஸ்கரிக்க வேண்டும், இல்லையெனில் கோயில் நுழைவாயில் அருகே
நமஸ்காரம் செய்யலாம் ஒவ்வொரு சுவாமிக்காகவும்    ஆங்காங்கே நமஸ்கரிக்கக் கூடாது தெற்கு நோக்கியும் நமஸ்கரிக்கக் கூடாது கோவிலில் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத பல தேவர்கள், தேவதைகள்
சுற்றி உள்ளனர்,எனவே நுழைவாயிலின் அருகே தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்

ஜீவனும் தீபமும்

ஜீவனும் தீபமும்
இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது அப்படியிருந்தால்
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது.
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது

ஏழு உலகத்தின் இரகசியம்

ஏழு உலகத்தின் இரகசியம்
நமது சாஸ்திரம் ஏழுவகைகள் உலகத்தைப் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது
அந்து உலகத்தில் வாழ்பவர்கள் யார் தெரியுமா? 1,பூலோகத்தில் மனிதரும்
வாழ்கின்றன,விலங்குகளும் 2,புவர்லோகத்தில் வாயு தேவர்களும் 3,சுவர்லோகத்தில்,தேவர்களும்,இந்திரனும் 4, மார்க்கண்டேயர் முனிவர்கள்
மகலோகத்தில் 5, சுர்கலோகத்தில் இந்திராதி தேவகள் 6,சனகர் முதலிய மகான்களும் தவலோகத்தில் 7, பிரமதேவர்களும் சத்தியலோகத்தில் பலர் வாழ்கின்றார்கள்

தேங்காய் சகுணம்


{தேங்காய் சகுணம்} பொதுவாக சாதாரணமாகவே பூஜைக்கு தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இருபுறமும் பிசிர்கள் இல்லாமல் சம்மாக உடைந்தால் சுப சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது எந்த ஒருகாரியம் செய்யத் துவங்குமுன் குளித்து சுத்தமாக தேவதை முன்பாக ஒரு தேங்காயை உடைத்தால் அந்த தேங்காய் சரிசம்மாக பிசிறில்லாமல் உடைந்தால் அந்த காரியம் விக்கினம் இல்லாமல் நடக்கும் அன்ற தேங்காய் உடைக்கும்போது இரண்டுபக்கமும் சரிசமமாக உடைந்தால் காரிய வெற்றியாகும் சுப சகுனமாகும்,கண் உள்ள பக்கம் பெரியதாக உடைந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் கண் உள்ளபகுதி சிறியதாக உடைந்தால் காரியத்தில் விக்கினங்கள் ஏற்படும் நீளவாக்கில் உடைந்தால் ஆகாது துயரம் துன்பம் கெடுதல் ஏற்படும் (3)சில்லாக உடைந்தால் பகையாகும் 4-சில்லாக உடைந்தால் குடும்பத்தலைவர்க்கு ஆகாது 5-சில்லாக உடைந்தால் சண்டை கலகம் வரும் பல சில்லுகளாக உடைந்தால் துன்பங்கள் ஏற்படும் விடைலை தேங்காய் உடைக்கும் போது மட்டும் அதிக சில்லுகளாக உடைவது நல்லது சில்லுகள் தெறிப்பது போல் துனபங்களும் தெறித்து சிதறி நன்மையை ஏற்படுத்தும் எனவே சூரைத் தேங்காய் உடைப்பதும் சாம்பல் பூசனி உடைப்பதும் பல சில்லுகளாவது தான் நல்லது தேங்காய் உடையாமல் ஓடு கழன்று வந்தால் ஆகாது கவலையும் பழியும் வந்து சேரும் மூடிபாகம் இரண்டாக உடைந்தால் சேதம் ஏற்படும் குடும்பம் பிரியும் கையிலிருந்து நழவிச் சென்றால் நோயால் துன்பம் உண்டாகும் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் துன்பமும் அவமானமும் பழியும் பிரிவினையும் ஏற்படும் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவணம் தேவை சகுனம் உள்ளது

மலர்களின் குண நலன்கள்

மலர்களின் குண நலன்கள்
{சுர்கலோக குருவருள் பெற்ற பூக்களின் நன்மைகள்} 1-ரோஜா :இதன் இதயத்திற்கு நறுமணம் பலத்தைக் கொடுக்கும், நெஞ்சு சளியை எதிர்க்கும்2- மல்லிகை :இஅதன் கண்பார்வையைக்கூர்மையாக்கும் நறுமணம்,இதனைப் பயன்படுத்துவதால் நல்ல முறையில் கண்களின் பார்வை செயலபடும்3- ஜாதிமலர் :இதன் பயன் கண் வியாதியைத் தடுக்கும் சிகப்பு கண்களில் படர்ந்தால் கூட பயன்படுத்திக் ஜாதிமலரைப் குணம் அடையலாம்4- செவ்வந்தி மலர் : கூந்தலை இம்மலர் வளரச் செய்யும்,குளிர்ச்சியைத் கண்களுக்கு தரும், ஆனால் செவ்வந்திப்பூவை பிய்த்து உபயோகிக்கக் கூடாது 5-மகிழம் பூ :தலைவலி, சிரோவாதம், குணம், இம்மலரின் கண்நோய் போன்றவற்றை அகற்றும், இதயத்தில் நன்மை பயக்கும்,தலையில் நீர் கொண்டிருந்தால் அகற்றும் அதை 6-செம்பங்கிப் பூ:கஷ்டம் சிறிது கிடைப்பது இம்மலர்,நம் உடம்பில் உள்ள தோஷத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு, வாயுவினால் குறைக்கும் ஏற்படும் வலியைக்குறைக்கும் 7-தாழம் பூ:பலம்தரும் இதயத்திற்குப்:வாத நோய் அகலும்.வயிற்று குறைக்கும் வலியையும் 8-அரளிப் பூ: தலையில் உள்ள நீரை அகற்றும் தலை அரிப்பு போன்றவைகளுக்கும் அகலும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".

வாய்மை
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".
1.ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார்.2.அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது.3.சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான்.4.ஓடி வந்த மனிதன்,ஐயா,"இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா" என்று கேட்டான்.5.எப்போதும் உண்மையே பேசும் குரு, மாடு இந்த வழியே சென்றது என்பதைச் சுட்டிக் காட்டினார்.6.மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான்.7.தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும் அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான். காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன்.8.வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்குமுன் கசாப்புக்கடைக்காரன் தப்பிச் சென்ற, தன்னை அவனிடமெ காட்டிக் கொடுத்த சன்யாசியை சபித்தது.9.பல வருடங்கள் சென்று சன்யாசி மரணமடைந்தான். ஊர் மக்கள் உண்மையே பேசியவர் இவர். இவர் ஆத்மா சொர்க்கத்தில் வாழும் என்று புகழ்ந்தனர்.10.ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யமதூதுவர்கள்,இது சன்யாசிக்குக் கூடமிகவும் அதிர்ச்சியாக இருந்தது.11.யமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி நான் என்ன பாபம் செய்தேன்? என்றார்.12.நீர் ஒரு பொய் சொன்னீர். அதனால் பாபம் செய்து இங்கு வந்துள்ளீர். ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர் என்றான் எம தர்மன்.13.நான் பார்த்த உண்மையைத்தானே சொன்னேன். அது எப்படி பொய்யாகும் என்று வாதிட்டார் சன்யாசி.14.பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும் என்றான் யமதர்மன்.15.நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத ஜந்து ஒன்று கொடுரமாக மரணமடைந்தது. அதன் சாபம் உம்மைப் பீடித்தது.16.மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? எதற்காக மாட்டை விரட்டுகிறாய் என்று கேட்டிருந்தால் அது விவேகம். அதைத் தெரிந்து கொண்டு மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை என்றான் யமதர்மன்.

எந்த உணவை உண்ணக்கூடாது?

எந்த உணவை உண்ணக்கூடாது?
"கர்ப்பச் சிதைவு செய்யவனால் பார்க்கப்பட்டது, மாதவிலக்கில் இருக்கும் பெண்ணால் தொடப்பட்டது, பறவையால் சாப்பிடப்பட்டது, நாயினால் தொடப்பட்டது - இந்த உணவை, உண்ணக்கூடாது."

பகீரதப்பிரயத்தனம்

பகீரதப்பிரயத்தனம் சாதிக்கமுடியாத ஒன்றைச் சாதிக்கும்போது அதை "பெரிய பகீரதப் பிரயத்தனம்" என்று சுட்டுகிறோம். இதன் பின்னணியாவது: பகூரதன் அயோத்தி அதிபதி (மன்னன்) தம் முன்னோர்களான சகரபுத்திரர்களை உய்தி பெற்ச்செய்யாஅகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார் கங்கையை பூமிக்குக் கொண்டு வர, இவருக்கு முன்பு, அம்சுமான், திலீபன் என்ற அயோத்தி மன்னர்களும், முயற்சி செய்து தோற்றனர். பகீரதன் மிகக்கடுமையாக முயற்சித்து, பிரம் மனைத் துதித்து பதினாயிரம் ஆண்டுகளும், சிவபெருமானைத் துதித்து ஜயாயிரம் ஆண்டுகளும், மீண்டூம் சிவனைத் துதித்து இரண்டரை ஆயிரம் ஆண்டுகளும், கங்கையைத் துதித்து இரண்டரை ஆயிரம் வருடங்களும் ஆக முப்பதாயிரம் வருடங்கள் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரச்செய்தார். இதனால் மிக்கமுயற்சியுடன் ஒரு காரியத்தை ந்றைவேற்றினால். அதை"பகீரதப் பிரயத்தனம்" என்று குறிப்பிடும் வழக்குத் தோன்றியது.

திருநீறு பூசுவது ஏன்?

திருநீறு பூசுவது ஏன்?
சைவர்கள் திருநீற்றினை இட்டுக்கொள்கிறார்கள் திருநீறு என்பது சாம்பல்தான். காணும் இந்த உலகமும், எல்லாப் பொருள்களும், நாமும் கடைசியில் அழிந்துசாம்பல் ஆபோம் என்பதைக் குறிப்பதே திருநீற்றின் கருத்தாகும் இந்ய நிலையாமை உண்மையை உணர்த்தவே சைவர்கள் திருநீறு அணிந்துகொள்கிறார்கள். நாம் அழிந்து ஒருநாள் சாம்பலாவோம் என்னும் நிலையாமை உண்மையை நாம் உணர்ந்தால் தான் "நான்""எனது" என்னும் ஆணவத்தால் வரும் சண்டைச் சச்சரவுகள் அகலும் இல்லாமற் போய்விடும். எனவே, தீவினைகளைச் செய்ய அஞ்சி நல்வினைகளை செய்ய முற்படுவோம்! 

அமைதி பெருவது எப்படி

அமைதி பெருவது எப்படி
1.மூட்டைப் பூட்சியைப்போல் பிறரை இ ம்சித்து வாழாதே.2.எலியைப்போல் திருடி வயிற்றை வளர்க்காதே.3.செல்லைப்போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழாதே.4.தேனீயைப் போலவும், எறும்பைப்போலவும் உழைத்து உண். அது உணக்கு அமைதியையும், அன்பையும் தரும்.

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே.
ஒரு விநாடி சினம், ம்றுவிநாடி மகிழ்ச்சி, இப்படி விநாடிக்கு விநாடி மாறுபடுகின்றவனுடைய நட்புக் கூடாது. உறுதுயான உள்ளம் இல்லாதவனுடையநட்பும். அவனால் கிடைக்கும் நன்மையு பயங்கரமானது.பயன் கருதிப் பழகுகின்றவனுடைய நட்பும் கூடாது.சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம் உன்னிடம் என்ன இருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்ப்பார்கள் நன்றி பெற்றவன் கையீரம் உலர்வதற்குமுன் செய்த நன்றியை மறந்து விடுவான்.உதவாத தவிடு, வைக்கோல், போட்டு, இவைகளை உன்பால் பெற்ற பசு அமுதமான பாலைத் தருகின்றது. பாலையே உன்பால் பெற்ற பாம்பு நஞ்சைத் தருகின்றது

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம்
         
मध्ये  -  நடுவில்
पीतगवां -  பஞ்சவர்ண பசுவினுடைய
क्षीरं -  பாலையும்
पूर्वे - கிழக்கில்
सितगवां - வெள்ளை பசுவினுடைய
दधि  -  தயிரையும்
दक्षिणे तु - தெற்கில்
विशेषत: - சிறப்பாக
कपिलागो:  - கபிலவர்ண பசுவினுடைய
घृतं -  நெய்யையும்
उत्तरे  -  வடக்கில்
कृष्णगो:  -   கருப்பு பசுவினுடைய
मूत्रं  -  கோஜலத்தையும்
प्रतीच्यां  -  மேற்குத்திக்கில்
रत्कगो:   - சிகப்பு பசுவினுடைய
शकृतू - சாணத்தையும்
ऎशान्यां - ஈசானதிக்கில்
दर्भतीर्थच्ञ -  குசதீர்த்தத்தையும்
क्रमातू - வரிசையாக
स्थाप्य  - வைத்து
संपूजयेतू  - பூஜிக்க வேண்டும் என்று
प्रोत्कमू - சொல்லப்பட்டுள்ளது.