Saturday, January 31, 2015

இதில் நீங்கள் எந்த பிரிவு ?

இதில் நீங்கள் எந்த பிரிவு ?
சாலோகம்-ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது
சாமீபம்-ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி புனிதவதியார் போல் வாழும் பேறு
சாரூபம்-ஈசனின் வடிவே தாமுமெய்தி வாழ்வது
சாயுச்சியம்-ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை

ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்

ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்” என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை… பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை. ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது. யாரெல்லாம் இதை அணியலாம்: வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது

/

ருத்ராட்சத்தின் வகைகள் பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும். த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும். ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும். கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது. பதப்படுத்துதல்: புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது!

கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?


கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.
தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி - நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும். ஈசனே வணங்கும் கணபதியை வணங்குவது என்பது ராஜபாட்டையில் நடந்துபோவது போல.
கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான். இதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சிரத்தை என்கிற சக்தி வெண்டும். ஆம், சிரத்தையோடு இருத்தல் என்பதே சக்தியின் குவிப்புதான். எனவே, அதிகூர்மையாக பணிவோடு மாபெரும் சக்தியை வேண்டுகிறோம் என்கிற விநயத்தோடு கூடிய மனப்பாங்கு வேண்டும். ஏதோ சொல்கிறார்கள் நாமும் செய்து வைப்போமே என்கிற அசிரத்தையும் அலட்சியமும் இருப்பின் எதையுமே கிரகிக்க முடியாது. இந்தக் காயமெனும் பாத்திரத்தை காலியாக அகங்காரமில்லாது வைத்துக் கொண்டால் விநாயகன் பீடம் போட்டு உள்ளுக்குள் அமர்வான். பிறகு உங்கள் அகத்தில் அவனொரு ஞான வேள்வி நிகழ்த்துவான்.
மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம... ராம... என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்

மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.
ஆனால் இது முட்டாள்தனம்.
ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட,
எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.
மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்,
உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம் சிறப்பு தெரியுமா

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம் சிறப்பு தெரியுமா
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது ஏன் தெரியுமா?

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது ஏன் தெரியுமா?
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும்.ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..
ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும்.அவை என்னென்ன? சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும்.பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும்.எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும்.சக்கரம், வில்,வாள்,கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம்.சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்?இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்...கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான்.துரியோதனனும் துவாரகைக்குப் போனான்.அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார்.அவர்கள் இருவரும் தனித்தனியாக வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்?தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என்கிறார்.துரியோதனன் பார்க்கிறான்.சரி அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார்.சரி என்று ஒப்புக் கொண்டார்.இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் என்ன கேட்கிறான் தெரியுமா? நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.அதற்கு சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக் கொண்டார்.ஏனென்றால் தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் யஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு.ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியவில்லை.மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான்.போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான்.அதன் பிறகு தான் அவன் யோசித்தான்.ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே!அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்ற பழமொழி உருவாயிற்று.

சுவாமி ஏன் ஒற்றைக்கால் தூக்கி தாண்டவம் புரிகிறார்?

ஆடிய பாதம்
சுவாமி ஏன் ஒற்றைக்கால் தூக்கி தாண்டவம் புரிகிறார்?
ஆதியில் இந்த பூமியைப் படைத்த இறைவன் அதை இயக்கச் செய்கிறார்..அந்த இயக்கத்திலிருந்து பிறக்கப்பட்டதே பருவங்கள் காலங்கள் உயிரினங்கள்...!
பிறக்கப்பட்ட உயிரினங்கள் ஆதியில் பூமியைப் பார்த்து மலைக்கத் தொடங்கியது..வியக்கத் தொடங்கியது..!கண்ணில் பட்டதையெல்லாம் பார்த்து இந்த மலை இவ்வளவு உறுதியாக உள்ளதே இதுதான் இறைவனோ?இந்த கடல்? வெப்பம் ?என மலைக்க மலைக்க மாயா சக்திகளின் பிடிகளில் மாட்டி சிக்கித் தவிக்க ஆரம்பித்தது...!அப்போது இறைவன் இவர்கள் இப்படி சிக்கித் தவிக்கிறார்களே என எண்ணி அதை போக்கும் பொருட்டு இந்த உலகம் எப்படி இயங்குகிறது..என்பதை ஆடிக்காட்டி அப்படியே உறைந்த திருமேனி தில்லை கூத்தப்பெருமான் திருமேனி ..நாம் என்னதான் ஒரு இடத்தில் நிலையாக நின்றாலும் நிற்பதைப்போல் தோன்றினாலும்...ஒருகோணத்தில் பூமி சுத்துகிறபோது நாமும் சுற்றிக்கொண்டு அசைந்த வண்ணமே இருப்பதுதான் நிதர்சனமான உண்மை..இயக்கத்தில்தான் இறைவன் வெளிப்படுகிறார்.. நாம் அறிந்தாலும் அறியாமல் இருந்தாலும் உணர்ந்தாலும் உணராமல் இருந்தாலும் இறைவன் நீக்கமற நிறைந்து ஒவ்வொன்றையும் அணுஅணுவாக இயக்கிக் கொண்டேயிருக்கிறார்..!
இந்த இயற்கை மட்டும் இறைவன் கிடையது ..இந்த இயற்கையை இயக்குபவன் இறைவன்..
நாம் நமது புலன்களைக் கொண்டு அசைவுகளை மேற்க்கொண்டு வாழ்கிறோம்..உட்புறம் உங்கள் உறுப்புகளை நீங்களா சுயமாக இயக்குகிறீர்கள்?எவ்வாறு சுயமாக இயங்குகிறது?இதயம் நுறையீரல் மூளை என எத்தனை உறுப்புகள் நமது கட்டுபாடில்லாமல் நமக்காக இயங்குகிறது?அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் யார்?அவர்தான் எல்லாம் வல்ல சிவபெருமான்...
எந்த ஒருபிறப்பும் இறைவன் கிடையாது..பிறப்பை தன் படைப்புகளாய் இயக்குபவன் இறைவன்...
அதை ஆடிக்காட்டி அப்படியே உறைந்ததே தில்லை கூத்தப்பெருமான் திருமேனி..
அவர்திருவடியை திருப்பாதத்தில் தொடங்கி அதிலிருந்து தொடர்ந்து திருமேனியை பார்க்கும் போது அந்த திருமேனி நம்முள் உணர்வாகப் பதியும் ..
இங்கு புறத்தின் மூலம் அவரைப்பார்த்தாலும் திருமேனித்தீண்டினாலும் அது உணரும் இடம் புறத்திலோ? புலன்களிலோ? அல்ல ..
நம் கட்டுப்பாடின்றி நமக்காக இயங்கும் நம் நெஞ்சத்தில் தான் இறைவன் உணரப்படுகிறார்...
கங்கையில் தரிசித்தாலும் குமரியில் தரிசித்தாலும் உணருமிடம் நம் உள்மே..
இங்கு நாமாக எதையும் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்போது நம்மைவிட இன்னொருவன் சிறப்பாக செய்கிறான் என்ற பொறாமை அச்சம் போன்ற மாயை உணர்வுகள் பற்றிக்கொண்டு துன்பத்திற்கு காரணமாக அமைகின்றன..!
இறைவன் நம் உள்ளேதான் இயக்கமாக ஆடிக்கொண்டிருகார் என்னுடைய ஒவ்வொறு அசைவும் அவரின் இயக்கமே என உணரும்போது ஒருபோதும் குற்ற உணர்ச்சிகள் தோன்றாது..
மற்றவரை பார்த்து நம்மைப்போல்தான் அவரையும் ஆட்டிவைக்கிறார் என்ற பொதுஉணர்வுத்தோன்றி நேசம் பிறக்கும் ..
ஆகையால் விருப்பம் துன்பம் காமம் கோபம் பொறாமை என எது தோன்றினாலும் அதை விலக்க கூடாது ஒதுக்க கூடாது ..
இதைத்தந்தவர் இறைவன் அவர்நீதியில் பிழையே இருக்காது என்பதில் தெளிவு பெற்று அதை அனுபவித்தால் அவன் மாய மலங்களை அவர்த்துணையுடன் அவனே அறுப்பான் ...!இதுதான் நாம் எப்படி வாழ வேண்டுமென ஆடிக்காட்டிய தில்லை கூத்தப்பெருமான் திருநடனம்...
சித்தமலம் அறுத்து சிவமாக்கி எமை ஆண்ட சிவமே உம்மைப் போற்றி வணங்குகிறேன்...!

Friday, January 30, 2015

விரதம் அன்று அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும்.


விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும்.
விரதம் மேற்கொள்ளும் போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.
பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது.
அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.
மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.
விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.
அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும்.
அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு செய்வதன் மூலம் எளிதில் இறைவனின் அருளை எளிதில் பெறலாம்

இந்துமத விளக்கம்

இந்துமத விளக்கம் - சுருக்க உரை
_________________________________
இந்துக்களுக்கே இந்து மதத்தைப் பற்றி விளக்கி உரைக்க வேண்டிய அவசர அவசிய சூழ்நிலைகளும் தேவைகளும் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால், தாய்ப்பசு கூடத் தனது கன்றினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இயற்கையான உய்த்துணர்வு இருக்கும் போது; இந்துக்கள் மட்டும் தங்களின் மூலவர்களாக, காவலர்களாக, அருளுலக வாரிசுகளாக, வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் தமிழர்களை, தமிழ்மொழியை, தமிழ்நாட்டை உய்த்துணர முடியாமல் போனது ஏன்? எவ்வாறு? எதனால்?
இம்மண்ணுலகில் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து மண்ணின் ஈசர்களான [ஈசர் = தலைவர்] மணீசர்களைப் பண்பாட்டுக்குரிய மனதைப் பெற்ற 'மனிதர்களாக' மாற்றியதுதான் இந்துமதம். இந்துமதம் பதினெண் சித்தர்களால்; தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் இன்றைக்கு 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் 'இளமுறியாக் கண்டம்' [இளமை மாறாமல் = The Immatured Soil] என்ற பெருநிலைப் பரப்பில் படைக்கப் பட்டது.
தனி மனிதர், குடும்பம், சமூகம், அரசு என்ற நான்கு வகை நிலைகளுக்கும் தேவையான கருத்துக்களை 'வாக்கு', 'வாக்கியம்', 'வாசகம்' என்ற மூன்று வகைகளாக 'இயல்', 'இசை', 'நாடகம்' என்று முத்தமிழில் வழங்கியவர்களே பதினெண் சித்தர்கள்.
இந்து மதத்தைக் 'கருக்கள்', 'குருக்கள்', 'தருக்கள்', 'திருக்கள்' என்ற நான்கு வகை நிலையினரே நாற்சுவர்க் கோட்டையாகக் காத்திடும் மரபு .தோற்றுவிக்கப் பட்டது. இவர்கள், 'நான்மறைகள்', 'நான்முறைகள்', 'நானெறிகள்', 'நான்வேதங்கள்' என்ற நான்கு பிரிவு கொண்ட நான்கு செயல்நிலைகளை வடிவமைப்புச் செய்தார்கள். இவற்றின் உயிர் நிலையாக 1. நேமம், 2. நியமம், 3. நிடதம், 4. நிட்டை என்ற நான்கும்; 1. சுருதி, 2. ஆரணம், 3. ஆகமம், 4. மீமாம்சை என்ற நான்கும் படைக்கப் பட்டன. இவை துணை, இணை [நேமம், துணை நேமம், இணை நேமம்] என்ற இரு பிரிவுகளோடு ஒவ்வொன்றும் மூன்று வகையான அமைப்பைப் பெற்றன.
மனிதர்கள், மதத்தைச் செயலாக்கிடப் 1. பூசை [பூ+ செய்] 2. தவம், 3.வேள்வி, 4. சித்தம் என்ற நான்கு பெரும் பிரிவுகளாக்கினர். இதன்படி, குருவழியாகப் 1.பயிற்சி, 2. முயற்சி, 3. தேர்ச்சி, 4. முதிர்ச்சி என்ற நான்கு நிலைகளைக் கடக்கும் பாடத்திட்டம் வகுக்கப் பட்டது. அதில் கல்வி கற்றவர்கள் 1. பத்தி, 2. சத்தி, 3. சித்தி, 4. முத்தி என்ற நான்கு வாழ்வியல் நிலைகளைப் பெறும் உறுதியும் வாய்ப்பும் வசதியும் உருவாக்கப் பட்டன.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் இந்து மதத்தைச் செயலாக்கிட; 1. 48 வகைச் சித்தர்கள் 2. 48 வகைக் கருப்புகள், 3. 48 வகை வழிபடு நிலையினர்கள், 4. 48 வகைக் கருவறை மூலவர்கள், 5. 48 வகை அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், 6. 48 வகை மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள், 7. 48 வகைப் பதினெண்சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள், 8. 13 வகைக் கருவழி ஆச்சாரியார்கள், 9. 13 வகைக் குருவழி ஆச்சாரியார்கள் என்று ஒன்பது வகை அருளுலக ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள்.
இந்து மதத்தில் உயிரோட்டமாக எண்வகை ஆச்சாரியார்கள் 1. ஈசுவராச் சாரியார், 2. ஆதி ஈசுவராச்சாரியார், 3. சிவாச்சாரியார், 4. ஆதி சிவாச்சாரியார், 5. பரமாச்சாரியார், 6. ஆதி பரமாச்சாரியார், 7. சங்கராச்சாரியார், 8. ஆதிசங்கராச் சாரியார் உருவாக்கப் பட்டு உள்ளனர்.
இவர்களெல்லாம் செயல்பட முத்தீ ஒம்பல் என்று 1. கந்தழி நிலை, 2. வள்ளி நிலை, 3. கொடி நிலை என்று மூன்று வகை வழிபாடும்; ஐந்தீ வேட்டல் என்று 1. ஓமம், 2. ஓகம், 3. யாகம், 4. யக்ஞம், 5. வேள்வி என்று ஐந்து வகை வழிபாடும் படைக்கப் பட்டன.
கருவூறாரின் பரம்பரையினரின் அருளுலகப் படைப்பாற்றலுக் குரியவையாக இரவில் மட்டும் கூறப்படும் 1.தந்திரம், 2.தந்திறம், 3.தந்தரம், 4. தாந்தரம், 5. தாந்தரீகம் என்பனவும்; காகபுசுண்டரின் பரம்பரையினரின் அருளுலகக் காப்பாற்றலுக்கு [போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்தல்] உரிய பகலில் மட்டும் கூறக்கூடிய 1.மந்திரம், 2.மந்திறம், 3. மந்தரம், 4. மாந்தரம், 5. மாந்தரீகம் என்பனவும்; இருகாலத்தும் கூறக் கூடிய 1.எந்திரம், 2.எந்திறம், 3.எந்தரம், 4.ஏந்தரம், 5.ஏந்தரீகம் என்பனவும்; இந்து மதத்தில் படைக்கப் பட்டு 'இந்துமதம் ஓர் அண்ட பேரண்டமாளும் மதம்' என்ற நிலையைப் பெற்றுள்ளது.
மாறாத இளமையும் குன்றாத சுவையும், அமுதப் பண்புமுடைய உயர் தனிச் செம்மொழியான தமிழ் மொழியே இந்த அண்டபேரண்டமாளும் இந்துமதத்தின் ஆட்சி மொழி; அருள்மொழி; கடவுள்மொழி; தெய்வமொழி; தேவமொழி யாகும்.
பதினெண்சித்தர்கள், 1.ஒன்பது கடவுட் கலைகள், 2. ஒன்பது தெய்வீகக் கலைகள், 3. ஒன்பது பேய்க் கலைகள், 4.ஒன்பது நோய்க் கலைகள், 5.ஒன்பது தேய் கலைகள், 6.நாற்பத்தெட்டு அருட் கலைகள், 7.அறுபத்து நான்கு ஆய கலைகள்.... என்று இந்து மதத்துக்காகப் பலவகைக் கலைகளைப் படைத்துள்ளார்கள்.
இவர்கள், அருளின் வெளிப்பாடுகளாக 1.அத்திறங்கள், 2.சாத்திறங்கள், 3.சூத்திறங்கள், 4.தோத்திறங்கள், 5.நேத்திறங்கள்... என்று இந்துமதத்துக்காகப் பலவகை அறிவியல்களைப் [Sciences] படைத்துள்ளார்கள்.
இவர்கள் எண்ணற்று உருவாக்கியுள்ள இந்துமதச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகள் 1.குருபாணி, 2.குருமார் ஒழுக்கம், 3.பூசாவிதி, 4.கருவறைப்படி, 5.பலிநூல், 6.மடநூல், 7. அடுக்களைச் சாத்திறம், 8. படையல்நூல், 9.கனாநூல், 10. மணநூல் 11.மோகநூல், 12.தாக நூல், 13.வேகநூல், 14.போக நூல்... என்று பல உள்ளன.
இப்படிப் பதினெண் சித்தர்கள் கணக்கற்ற கோடி ஆண்டுகளாக அண்ட பேரண்ட முழுதும் பரவியுள்ள இந்துமதத்தை மிகமிகத் தெளிவாக வரையறுத்து ஏட்டுலகச் செய்தியாகவும், [Theoretical Information], நாட்டுலக நடைமுறை அநுபவ அறிவாகவும் [Practical Knowledge] தூய வாய்மை மிகு அமுதப் பைந்தமிழில் வழங்கி யுள்ளார்கள்.
இப்பேருண்மைகளை உணர முடியாத குருடர்களும், உணர மறுக்கும் திருடர்களும் அன்னியர்களிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு தமிழுக்கும்; தமிழாக உள்ள இந்து மதத்துக்கும் துணிந்து துரோகிகளாக, விரோதிகளாகச் செயல்படுகிறார்கள். இவர்களை விடப் போலிகளும் நாத்திகர்களும் நல்லவர்களே; எனவே, இந்துமத மூலவர்களாகவும் காவலர்களாகவும் உள்ள தமிழர்கள் பொறுப்போடும் பொறுமையோடும் சிந்தித்துத் தங்களை இந்துக்கள் என்று உணர்ந்தும் உணர்த்தியும் உரையாற்றியும் செயல்படல் வேண்டும்.
தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழின ஒற்றுமை, தமிழின உரிமை, தமிழினப்பெருமை, தமிழர் தன்மானம், தமிழின மானம்.... முதலிய அனைத்தும் தமிழ்ப் பாரம்பரியத்தையே வளர்க்கும், விளைவிக்கும் இந்துமதத்தில்தான் உள்ளன என்ற பேருண்மையில்தான் அனைத்து விடிவுமுள்ளன.
ஒவ்வொரு தமிழனும் மதம், அரசியல்கட்சி, பதவிவெறி, பணவெறி, புகழ் வெறி முதலிய அனைத்தையும் கடந்து தன்னைத் தமிழினத்தான் என்று மட்டும் உணர்ந்து ஒன்று திரண்டு ஒற்றுமைப் பட்டால்தான் வருங்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கும். இந்த ஒற்றுமையை உருவாக்கும் அறிவியல் நிலையும் ஆற்றல் நிலையும் ஆர்வ நிலையும் தமிழ்மொழியில் உள்ள இந்துமதத்துக்குத்தான் உண்டு! உண்

Thursday, January 29, 2015

பாதம் படக்கூடாதவை.


பாதம் படக்கூடாதவை.
மயான கரி,
அக்கினி,
அடுப்பு,
வீபூதி,
சான்றோர் மீது,
பசுவின் மீது,
இரத்தம்,
முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது

அரக்கி பெற்ற ஞானம்

அரக்கி பெற்ற ஞானம்
வேதாந்தத்தின் மிக உயர்ந்த, மிகப் பழமையான படைப்பு வசிஷ்ட மகா ராமாயணம் அல்லது யோக வாசிஷ்டம் என்ற சமஸ்கிருத நூல். வசிஷ்ட மாமுனிவர் தமது சீடனான ஸ்ரீராமனுக்குப் போதித்த அழகிய கதைகள் நிறைந்த, வேதாந்தத் தத்துவங்கள் அடங்கிய இலக்கியம் இது. வால்மீகியின் நடையிலேயே இது அமைந்துள்ளது. இரு நிலையற்ற, ஒன்றேயான, சச்சிதானந்தமாகிய பரப்பிரம்மனை அடையும் பல்வேறு வழிகளை - ஆறு பிரிவுகளாக (பிரகரணங்களாக) இது விவரிக்கிறது. அவை: 1. வைராக்கிய வழி (பற்றற்ற நிலை), 2. முமுக்ஷúத்வம் (விடுதலைக்கு ஏங்குதல்), 3. உற்பத்தி (தோற்றம்), 4. ஸ்திதி (இருப்பு), 5. உபசாந்தி (பிரளய கால அழிவு), 6. நிர்வாணம் (விடுதலை). வசிஷ்டர், ஸ்ரீராமனுக்கு மேற்கண்ட தத்துவங்களைக் கதை வடிவில் கூறுகிறார். அவற்றுள் உற்பத்தி என்னும் பிரிவின் கீழ் கர்க்கடி என்ற அரக்கியின் கதை மூலமாக, பிரம்மம், பிரபஞ்சம், மனம், சங்கல்ப -விகல்பங்களால் உருவாகும் தோற்ற மயக்கங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார்.
இமயமலையின் வட பகுதியில் கர்க்கடி (நண்டு வடிவினள்) என்ற ஓர் அரக்கி வாழ்ந்து வந்தாள். நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களையும் பிடித்துத் தின்றாலும் அவளது பசி அடங்காது. தீராப்பசி மிக்க இந்த அரக்கி ஒருமுறை இமயமலையில் சூரிய பகவானை நோக்கியவாறே ஒற்றைக் காலில் நின்றவாறு ஆயிரமாண்டு காலம் கடுந்தவத்தில் ஆழ்ந்தாள். சுடும் வெயிலையும் கடுங்குளிரையும் தாங்கி நின்றாள். இறுதியில் பிரம்மா அவள் முன் தோன்றி, அவளது தவத்தை மெச்சி, என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். தீராத பசியுடைய கர்க்கடி, நான் ஓர் ஊசி வடிவிலான உயிரினமாக மாறி விலங்குகள் மற்றும் மனிதர்களுள் புகுந்து, ரத்தம் குடிக்கும் ஜீவசூசிகா வாக மாற வேண்டும் என்று கேட்டாள். பிரம்மாவும் அவ்வாறே அவள் இனி ஊசி வடிவினளாகி, விசுசிகா என்று அழைக்கப்படுவாள் என அருளிச் சென்றார். விசுசிகா பிறரது உடலில் புகுந்து ரத்தத்தை ஊறிஞ்சி மகிழ்ந்தாள். போகப் போக இத்தகைய வாழ்வில் வெறுப்புற்றுத் தன் கொடூரச் செயலை நினைத்து வருந்தினாள். ஆகவே மீண்டும் இமயமலையில் ஆயிரமாண்டுகள் தவம் இருந்தாள். அதனால் அவளது பாவங்கள் அகன்றன. விருப்பு வெறுப்புகளைக் கடந்தாள். ஞானம் பெற்றாள்.
இம்முறை வந்த பிரம்மா அவளிடம், கர்க்கடீ ! நீ ஜீவன் முக்தி அடைந்தாய். எனினும் மீண்டும் உன் பழைய அரக்க உருவிலேயே தொடர்ந்து இருந்து வா! அறியாமையில் உழலும் மக்களுக்கு ஞானத்தை வழங்கு! அதைப் பெறாதவர்களையும், கொடியவர்களையும் பிடித்துத் தின்று வா! என்று கூறி மறைந்தார். கர்க்கடி மீண்டும் நிர்விகல்ப சமாதியில் நெடுங்காலம் ஆழ்ந்தாள். கண் விழித்தபோது பசித்தது. அப்போது அவள் எதிரே ராஜா விக்கிரமனும் அவனது மந்திரியும் வருவதைப் பார்த்து, அவர்கள் ஞானிகளா என்று அறிய விரும்பினாள். ஆத்மஞானம் அற்றவர்களானால் அவர்களை உண்ணலாம் என எண்ணி உரையாடினாள். பிறகு, அரசரே! அமைச்சரே! நான் கேட்கும் இந்தத் தத்துவக் கேள்விகளுக்குச் சரியான விடை தர வேண்டும். இல்லாவிட்டால் உங்களை விழுங்கிவிடுவேன் என்றாள். சரி, கேள்விகளைக் கேள் என்றான் அரசன் மகிழ்ச்சியாக.
அரக்கியின் கேள்விகள் இவை:
1. கடலில் தோன்றும் நீர்க்குமிழிகளைப் போன்ற கணக்கற்ற உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமான அந்த அணு எது?
2. பரந்த ஆகாயமாக இருப்பது. ஆனால் இல்லாதது எது?
3. எல்லையில்லாமல் பரந்தது என்றாலும் எல்லைகளுக்கு உட்பட்டது. அது எது?
4. எப்போதும் நகர்ந்து கொண்டிருப்பது. எனினும் நகராமல் அசைவற்றிருப்பது எது?
5. எப்போதும் இருப்பது. எனினும் இல்லாதது. அது எது?
6. அறிவாக (உணர்வாக, புத்தியாக) வடிவெடுத்திருப்பது. எனினும் பாறை போல் புலனறிவற்றது. அது எது?
7. ஆகாயத்தில் சித்திரங்களைத் தோற்றுவிப்பது எது?
8. மரம் விதையில் மறைந்திருப்பது போல் பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கியுள்ளது எது?
9. அவை யாவும் (பல்வேறு உலகங்கள்) கடலில் நுரைகள் தோன்றுவதுபோல் எதிலிருந்து தோன்றும்?
10. பல்வேறு உலகங்கள் யாவும் முடிவில் எங்கே ஒடுங்குகின்றன?
இந்தக் கேள்விகளுக்கு மந்திரியே முதலில் விடையளித்தார்.
கரியபெண்ணே! இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான். எனினும் ஒவ்வொன்றாகக் கூறுகிறேன்:
1. அது இரட்டைத் தன்மையற்ற ஒன்றேயான பரப்பிரம்மம். அதை மனதாலோ, ஐம்புலன்களாலோ அடைய முடியாது. அது ஆகாயத்தை விட நுண்ணியது; அணுக்களின் அணு. தூய உணர்வறிவு.
2. பிரம்மம் எங்கும் நிறை நுண்பொருள். எதனாலும் தாங்கப்படாதது. உள்ளும் புறமுமற்றது. அந்த ஆகாயமே பிரம்மம்தான். எனினும் ஆகாயம் உணர்வற்றது. மாயையால் உருவாக்கப்பட்டது. ஆனால் பிரம்மம் உணர்வுமயமானது.
3. பிரம்மம் எங்கும் பரந்திருப்பதால், இதுதான் என்று சுட்டிக்காட்டும் உறைவிடம் இல்லாதது. எனினும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதால் உறைவிடம் உள்ளது.
4. அது அசையாத அசலம் (மலை), பரிபூரணம். எனினும் அசையும் பொருள்களில் எல்லாம் உள் நின்று அசைவது. எனவே அது அசையும் பொருள்.
5. அது என்றும் இருப்பது, அது மட்டுமே உள்ளது. எனவே அது உள்ளது. எனினும் கண்களால் கண்டு, அது இதுதான் என்று சுட்டிக்காட்ட முடியாமல் அருவமாய் உள்ளதால் அது இல்லாதது.
6. அது பேருணர்வுப் பரம்பொருள். அறிவாய்ச் சுடர்வது. சுயமாய் ஒளிர்வது. எனினும் கல்லாய், மண்ணாய், மரமாய் பல்வேறு தோற்றங்கள் தரும் அது ஒரு ஜடப்பொருளும்கூட.
7. நுண்மையான, சுயமாய் இயங்கும் சிதாகாசத்தில் பல்வேறு உலகங்களைப் (சித்திரங்களை) படைத்துக்கொண்டே போவது அந்தப் பரம்பொருள்தான்.
8,9,10. பல்வேறு உலகங்களும் பிரம்மத்திடமிருந்தே தோன்றுகின்றன. பிரம்மத்திலேயே நிலைக்கின்றன. இறுதியில், கடலில் தோன்றும் நீர்க்குமிழிகள் போல அவை பிரம்மத்திலேயே கரைகின்றன. அவை பிரம்மமேயன்றி வேறில்லை. அவை எல்லாம் பிரம்மத்தின் பல்வேறு தோற்றங்கள்.
மந்திரியின் சரியான பதிலைக் கேட்டதும் கர்க்கடி மிகவும் மகிழ்ந்தாள். பின் அரசனைப் பார்த்து, அவனது பதில் என்னவென்று கேட்டாள். அரசன் சொன்னான்.
உண்மையில், பிரம்மம் மட்டுமே உள்ளது. வேறுபாடாய்த் தோன்றும் இப்பிரபஞ்சம் உண்மையில் இல்லாதது. பிரளய காலத்தில் பிரபஞ்சமே அழிந்து ஒடுங்கும்போதும், அதன் பின்னரும் பிரம்மம் இருக்கும். மனதின் சங்கல்ப, விகல்பங்களை அறவே அகற்றிய பின்தான், தூய மனதால் பிரம்மத்தை அடைய முடியும். இதையே அபரோக்ஷ பிரம்மஞானம் என்கிறோம். இருவரின் பதிலாலும் திருப்தியுற்ற கர்க்கடி அவர்களை வாழ்த்தினாள். அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி இனி உயிர்க்கொலை புரிவதில்லை என்று வாக்களித்தாள். ஜீவன்முக்தியடைந்த அவள், விதேக முக்தியடைவதற்காக இமயமலை சென்று மீண்டும் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தாள்.

கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை


கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை
வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:-
வீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.
இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.
இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை பஸ்மம் செய்கிறது. வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் வாசல் படிகளில் திருஷ்டி பரிகார பொருள்களான எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய், உத்திரங்கு, படிகார கல், கரித்துண்டுகள் இவற்றை முறையே ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும். இது மிக சிறந்த திருஷ்டி தடுப்பாக செயல்படு

பிரம்மஹத்தி தோஷம்


பிரம்மஹத்தி தோஷம்
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? இதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.
ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.
இதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர்
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.
பரிகாரம்-1
திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப் புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து, முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பதுதான் பிரம்மஹத்தி.
பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல், மகாலிங்க சுவாமி சன்னதி சென்று நெய் தீபம் ஏற்றி, குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும்.
மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது. காற்று, உப்பு, நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் நீங்கும்.
பரிகாரம்-2
நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்
.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.
மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
பரிகாரம்-3
தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
.........................................................................................
குரு பிரம்ம ரிஷி ஜோதிட நிலையம்
‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம்
வர்த்தனி குல சம்பிரதாம்
பதவீ பூர்வ புண்ணியானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’

அரோகரா’ என்றால் என்ன?

‘அரோகரா’ என்றால் என்ன?
‘அரோஹரா‘ அல்லது ‘அரோகரா‘ என்பது ‘அர ஹரோ ஹரா‘
என்ற சொற்களின் சுருக்கம். இதற்கான பொருள்,
‘இறைவனே, துன்பங்களை நீக்கி
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக‘
… என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச்
சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை
பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு
வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ‘ என்று களைப்பைக்
குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த
திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ‘அர ஹரோ
ஹரா‘என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ
ஹரா‘ என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள்
இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள்
(முருகனடியார்கள்),
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘
… என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு
இணைந்துவிட்டன! பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா‘ என்றுச் சொல்வது,
‘வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்
வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி,
நற்கதியை அருள்வாயாக’
… என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக்
கொண்டவர்கள் இனி,
‘வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா‘
… என்று உற்சாகமாகச் சொல்வோமே!


 படித்ததில் பிடித்தது (கௌமாரம் இணைய ஆசிரியர்கள்)

Wednesday, January 28, 2015

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க


இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க

இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறைசொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.

கோயிலுக்குப் போவது ஆரோக்யம்

கோயிலுக்குப் போவது ஆரோக்யம்
-----------------------------------------------------
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.
ஆனால் இது முட்டாள்தனம்.
ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட,
எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.
மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்,
உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்

பசுவிற்கு அகத்திக்கீரை,கொடுத்தால் என்ன சிறப்பு

பசுவிற்கு அகத்திக்கீரை,கொடுத்தால் என்ன சிறப்பு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெள்ளி கிழமை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம்.
இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
"ஸர்வ காம துகே தேவி
ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி
பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே!''
""எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லி பசுவை வழிபட்டால்,
முன்னோர் சாபம்,
குடும்ப சாபம் தீரும்.
பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும்.
குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

ஆலயமும் அர்ச்சகர்களும்...

ஆலயமும் அர்ச்சகர்களும்...
ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.
இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.
மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும், ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.
ஆலய வழிபட்டின் நோக்கம்.
सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.
சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..
பொருள்.
{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.
அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?
சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.
“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.
परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:
பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.
எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"
अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.
அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.
இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.
மற்றொரு வாக்யம்
“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”
अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.
மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.
आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.
ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.
“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”
गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.
அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.
“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.
இதையே பாரதியும் சொன்னான்
“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்


பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை 'சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை 'பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்

Tuesday, January 27, 2015

வாரியார் சொன்ன கற்பூர கதை

வாரியார் சொன்ன கற்பூர கதை
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
நன்றி: சக்தி விகடன்

கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ?


கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ?
இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்த வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.
இக்கலியுகத்தில் பிறவி எடுத்த நாம், பிறவிப்பயன் அடைய வேண்டும் என்று நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள் இவர்களைக்கொண்டு பூஜைகள், விரதங்கள், யாகங்கள், தான தர்மங்கள் ஆகியன செய்து மனிதன் தெய்வத்தன்மை அடைந்து வாழ்வாங்கு வாழ வழி வகுத்துள்ளார்கள்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஆலயம் கட்டுதல், ஆலயத் திருப்பணி செய்தல் என்பதாகும். இவை ஆபர்தம், அனாவர்தம், புனராவர்தனம், சுந்தரிதம் என நான்காக பிரிக்கப்படும்.
வேத, ஆகம, சிற்ப,சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு ஆலயம் கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வ உருவங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.
ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் மந்திர வடிவமாக இருந்து ஆன்மாக்களுடைய கர்மாக்களையும், மாயைகளையும் போக்கி அருள் பாலிக்கின்றனர்.
மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களில் சிறந்த மந்திரமாக கருதப்படும் காயத்ரீ மந்திரத்தின் சக்தி, ஒலிக்கப்படும் இடத்திலிருந்து ஆயிரம் மீட்டர் தொலைவு வரை வியாபித்திருக்குமாம். பெரிய மகான் ஆக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவர்.
கல்லினால் வடிவமைத்த தெய்வ திருவுருவங்களை தானியவாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு (48) நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.
கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்க்களுள் ஒன்று தான் கும்பாபிஷேகம். இதற்காக வேதத்தில் சிறந்தவர்களும், சிவா பூஜையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களும் தேவையான யாக குண்டங்களை அமைப்பார்கள்.
இனிய மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து அதில் தோன்றும் ஜோதியை கும்பத்தில் சேர்ப்பார்கள்.
தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட காச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.
சைவர்கள் மகா கும்பாபிஷேகம் என்றும் வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவர்.
ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ உருவங்களில் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிச்கேகதன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் இறைவன் திருவருள் நிரம்ப துணை செய்யும்.
பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், கோயிலுக்குள் நாம் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தி நம் உடலில் ஊடுருவிச்செல்வதை பலர் உணர்ந்திருக்கலாம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் உடலால், மனத்தால், பொருளால் உதவி செய்வது, கும்பாபிஷேகம் காண்பது, அதில் பங்கு கொள்வது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்பவர்கள், வாழ்நாளில் சகல விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பொருளாதார முன்னேற்றத்துடன், குடும்ப ஒற்றுமையுடன், மன மகிழ்ச்சியுடன், இறைவன் திருவருள் கூடி வர வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, அனைத்து ஆலய கும்பாபிஷேகத்திலும் முடிந்த வரை பங்கு பெறுவோம், பயன் பெறுவோம், நலன் பெறுவோம்.

Monday, January 26, 2015

சில சமூகங்களில் ஆண்களுக்கு சிறு வயதில் பூணூல் அணிவிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. இது எதற்காக?

சில சமூகங்களில் ஆண்களுக்கு சிறு வயதில் பூணூல் அணிவிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. இது எதற்காக? ஏன் சிறு வயதிலேயே இது செய்யப்படுகிறது? சத்குரு: இந்தக் கலாச்சாரத்தில், பொதுவாக சிறுவர்கள் 11 அல்லது 12 வயது அடைந்தபிறகு, அவர்களுக்கு உபநயனம் என்று சொல்லப்படுகிற பிரம்ம பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போதும் கூட சில சமூகங்களில் இது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேத காலங்களில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருபாலருக்குமே இது செய்யப்பட்டது. ஆனால் மெதுவாக, இதிலிருந்து சிறுமிகள் விலக்கப்பட்டனர். நான்தான் பிரம்மன் என்பதை இரகசிய மந்திரத்தின் துணையுடன் உணரச் செய்வதே பிரம்மப் பிரதிஷ்டை. ஒரு சிறுவன், 11 அல்லது 12 வயது அடைந்தவுடன், தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படுகிறது. உண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்தப் புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அத்தகைய வாய்ப்பு இப்போது இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், இப்போது மந்திரம் வழங்குபவருக்கும் அந்த மந்திரத்தைப் பற்றித் தெரியவில்லை. இந்த செயல்முறையைப் பெறும் குழந்தைக்கும் நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது வெறும் சடங்காக, உடலைச் சுற்றி ஒரு நூலை மட்டும் அணிவிப்பதுடன் முடிந்து விடுகிறது. இந்தக் குறிப்பிட்ட வயதில் எதனால் இந்த முறை கடைபிடிக்கப்பட வேண்டும்? 13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள துவங்குகிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது. அதனால் அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்திற்குள் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு செயல் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய செயல்களின் தன்மை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும்போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம். நீங்கள் ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொண்டுவிட்டால் பிறகு உங்கள் பால் அடையாளங்களை மறக்கடிக்க பல செயல்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படியும் அந்த உணர்வு உங்களுக்கு திரும்பத் திரும்ப வருகிறது. எனவே, தன்னை உணர்வதற்கான பரிமாணத்தில், 11, 12 வயதிலேயே ஈடுபடுத்தப்படும்போது, மிகவும் குறைந்த எதிர்ப்புணர்வுடன் சுலபமாக அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நடத்திச் செல்ல முடியும், ஆனால் இப்போது அந்தச் செயல்முறை உயிருடன் இல்லை. வெறும் சடங்காக மாறிவிட்டது.