Wednesday, September 30, 2015

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.
ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?
ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?
அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள்.
எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.
ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.
சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.
ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.
நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது.
ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. சிவாயநம!

சாஸ்திரபடி பெண்கள் வணங்கும் முறை:!!!

சாஸ்திரபடி பெண்கள் வணங்கும் முறை:!!!
*கடவுளையோ அல்லது பெரியவர்களையோ பூமியில் விழுந்து வணங்கவேண்டும் அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும்.
*பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்....
*வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.
*பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.
*பஞ்சாங்க நமஸ்காரத்தை மூன்று,ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வது மிகுந்த நன்மையாகும். இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.

இறைவனை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போம்

சோடசோபசாரம் ( தேவதை) சோடசம்
வட மொழியில் 16 பற்றிப் பார்ப்போம்
==================================
1. தூபம் - அக்னிதேவன்
2. மகா தீபம் - சிவன்
3. நாக தீபம் - சக்தி
4. ரிஷிப தீபம் - தர்ம தேவதை
5. புருஷாமிருக தீபம் - விஷ்ணு
6. பூர்ணகும்பம் - ருத்ரன்
7. 5 தட்டு தீபம் - பஞ்சபிரம்ம தேவதைகள்
8. நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரம்
9. மேருதீபம் - 12 சூரியர்கள் ( 12 ராசிகள்)
10. விபூதி - ஸ்ரீ பரமசிவம்
11. கண்ணாடி - சூரியன்
12. குடை - சந்திரன்
13. சாமரம் - மகாலட்சுமி
14. விசிறி - வாயு
15. ஆலவட்டம் - பிரம்மன்
16. கற்பூரம் - அக்னி
இறைவனை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போம்
==========================================
1. அபிஷேகம் ( நீர், பால், தயிர்,சந்தனம்,தேன்,பன்னீர்,இளநீர்,திரவியபொடி,விபூதி,கரும்புச்சாறு,போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுதல் ஆகும்)
2. அழகு செய்தல் ( பெருமானுக்கு சந்தனத்தால் காப்பு செய்தல்,திருநீறால் காப்பு செய்தல்,அன்னத்தால் காப்பு செய்தல்,ஆடை, ஆபரணங்கள் அனிவித்தல், பிறை,திருநீறு பட்டை அனிவித்தல்,முகம் பாவனை செய்தல், மாலைகள் சாத்துதல் போன்றவைகள் ஆகும்
)
3. அர்ச்சனை ( மலர்களால் அர்ச்சனை செய்தல், விபூதியால் அர்ச்சனை செய்தல், குங்குமத்தால் அர்ச்சனை செய்தல், வேதங்களால் அர்ச்சனை செய்தல்,மந்திரங்களால் அர்ச்சனை செய்தல், திருமுறைகளால் அர்ச்சனை செய்தல், அஷ்டோத்திரம் ( 108) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் சகஸ்ரநாமம் ( 1008) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் போன்றவை ஆகும்)
4. நைவேத்யம் ( பஞ்சாமிர்தம்,சுத்தஅன்னம்,சுண்டல்,பழங்கள்,சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாசிப்பயிறு பாயாசம்,போன்றவை செய்தல் ஆகும்)
5. ஆராதனை ( 16 தீப வகைகளை வைத்து பெருமானுக்கு அர்ச்சித்தல் ஆகும்)
6. திருவிழாக்கள் ( திருவாதிரை, பிரதோசம்,கல்யாண உற்சவம்,ஆருத்ரா தரிசனம்,அமாவாசை,பௌர்ணமி, மகாசிவராத்திரி,மாதசிவராத்திரி, போன்றவைகளை கொண்டாடுதல் ஆகும்)
கோவில் ஆராதனை 5 தொழில்
புரிதலை பற்றிப் பார்ப்போம்
===========================
1. திருமுழுக்கு - படைத்தல்
2. படையல் - காத்தல்
3. பலி போடுதல் - அழித்தல்
4. தீபம் - மறைத்தல்
5. வேள்வி - அருளல்
ஆராதனைகளில் பஞ்ஞேந்திரியம்
( தன்மாத்திரைகள்) பற்றிப் பார்ப்போம்
=================================
1. காண்பது - ஜோதி சொரூபம்
2. கேட்டல் - காதால் நாதம், மணி ஓசை, சங்கு ஊதுதல், வேதம் ஓதல், திருமுறை ஓதல்
3. முகர்தல் - நறுமணம் கமழும் தூபம்
4. ஸ்பரிசம் - சாத்திய பூமாலை
5. சுவை - நாவில் சுவைக்க பிரசாதம் வழங்குதல்
திருவிழாவில் 5 தொழில் பற்றிப் பார்ப்போம்
=======================================
1. கொடியேற்றம் - படைத்தல்
2. திருக்கல்யாணம் - காத்தல்
3. சகோபுர தரிசனம் - அழித்தல்
4. ஸம்ஹாரம் - மறைத்தல்
5. தீர்த்தவாரி - அருளல்
கோவில் விழாவில் 5 தொழில் பற்றிப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
1.அங்குரார்ப்பணம்,பேரிமுழக்கல்,கொடியேற்றல்,காப்பணிதல் - சிருஷ்டி செய்தல( உயிர்களை படைத்தல்)
2. வேள்வி, பலி ( உணவளிப்பு ) ,வாகனம் ஏற்றுதல் - திதி ( பலி) காத்தல்
3. கந்தப்பொடி தூவல், தேர்,மஞ்சள் நீராட்டு ( கிருஷ்ணகந்தம்) - சங்காரம் செய்தல் அழித்தல்
4. கருஞ்சாந்தணிவித்து திரையில் மறைத்து உலா வருதல் - மறைப்பு ( திரோதானம்)
5. திருமணம் அனுக்கிரகம் ( அருளல்) தீர்த்தவாரி - ரதாரோகணம் ( அருட்சக்தி )
சண்டிகேசுவரர் 5 பற்றிப் பார்ப்போம்
--------------------------------------------------------
1. சிவன் கோவில் - தீவனிசண்டிகேஸ்வரர்
2. முருகன் கோவில் - சுமித்ர சண்டிகேஸ்வரர்
3. விநாயகர் கோவில் - கும்பசண்டிகேஸ்வரர்
4. சூரியன் கோவில் - தேஜஸ்சண்டிகேஸ்வரர்
5. அம்பாள் கோவில் - யமுனிசண்டிகேஸ்வரி
அபிஷேகம் பற்றிப் பார்ப்போம்
-------------------------------------------------
வேருக்கு நீர் விட்டால் அது விருட்சம் ( மரம் ) முழுவதும் பரவுவது போல் இறைவனுக்கு 1 பொருள் அபிஷேகம் செய்தால் அது உலக உயிர்கள் முழுவதும் பலன் போய் சேர்ந்து நன்மை தரும் அதுபோல நாம் வாங்கி தரும் பழம்,தேங்காய்,அன்னம்,தீர்த்தம்,பால்,தயிர்,தீபம்,பூஷணம்,தூபம்,சாமரம்,மணி,கானம் ( 5 பூத ஆக்கம்) பின் உடம்பை ஓம்புவது போல ஆடை ஆபரணம் சாத்தி அலங்காரம் நல் உணவு நைவேத்யம் ஈசன் பரிசம் ஆகி பிரசாதம் ஆகி நமக்கு கொடுக்கப்படுகிறது ஆகும்
சிவ பூஜை பற்றிப் பார்ப்போம்
----------------------------------------------
1. ஸாங்கம் - ஸ்நானம் ( அபிஷேகம் ) ,பாத்யம்,அர்க்கியம்,ஆசமனியம்,வஸ்திரம்,ஆபரணம்,சந்தனம் சாத்துவது, புஷ்பம் சாத்துவது ஆகும்
2. உபாங்கம் - கற்பூர தீபம், தீபம்,குடை,சாமரம் வீசுதல், வேதகோஷம், வாத்திய கோஷம் ஆகும்
3. பிரத்யங்கம் - நைவேத்யம், தாகம் தீர்க்க சுக்கு கலந்த இளம் சூடான நீர், கற்பூர நீராஞ்சனம் ஆகும்
விளக்கு தத்துவம் பற்றிப் பார்ப்போம்
5 முகம் என்பது - அன்பு,அறிவு,உறுதி,நிதானம்,பொறுமை இந்த ஐந்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்
விளக்கு பாகம்
-------------------------
1. தாமரை போன்ற அடிபாகம் - பிரம்மா,சரஸ்வதி
2. தண்டுபாகம் - திருமால்,லட்சுமி
3. நெய்விழும் குழி பாகம் - உருத்திரன், பார்வதி
4. திரிமுனைகள் - மகேஸ்வரன்
5 விளக்கின் மேல்நுனி - சதாசிவம்
சுடர்
--------
1. நெய் - நாதம்
2. திரு - பிந்து
3. சுடர் - திருமகள்
4. தீப்பிழம்பு - கலைமகள்
5. ஜோதி - ஆதிபராசக்தி
ஆன்மா & இறைவன்
----------------------------------
1. விளக்கு - உடல்
2. நெய் - உணர்வுகள்
3. திரிகள் - ஆன்மா ( உயிர்கள்)
4 சுடர் - ஆன்ம ஒளி
5. விளக்கு ஏற்றும் சுடர் - இறைவன் அருள் ஒளி
ஆகவே நாம் அனுதினமும் திருக்கோவில் சென்று பயன் பெறுவோம்

ராமன், கிருஷ்ணன் போன்றோர் ஏன் இன்று அவதரிப்பதில்லை?

ராமன், கிருஷ்ணன் போன்ற பல கடவுள்கள் புராண காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே, இன்றைக்கு ஏன் அப்படி அவதரிப்பது இல்லை? கடவுள்கள் வாழும் அளவுக்குப் பூமி இன்று புனிதமாக இல்லையா? சத்குரு: மகத்தான மனிதர்கள் இன்றைக்கு இல்லை என்று யார் சொன்னது? உலகின் பல புள்ளிகளில் அமைதியாகப் புரட்சி செய்து வருபவர்களைப் பற்றி நீங்கள் அறியவில்லை. அவ்வளவுதான்! உங்களுக்குக் கதைகளைத்தான் ரசிக்கத் தெரியும். பழையதைத்தான் கொண்டாடத் தெரியும். இன்றைக்கு இருப்பதைப் பற்றிக் குறை சொல்லத்தான் தெரியும். ராமன், கிருஷ்ணன் என்று வாழ்ந்து முடித்தவர்களைப் பற்றி சொல்லும்போது, ஒரு வசதி இருக்கிறது. சுவாரஸ்யத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மிகைப்படுத்திச் சொல்லலாம். கிருஷ்ணன் மலையைத் தூக்கினான் என்றால், அதை ஏற்கத் தயார். ராமன்விட்ட அம்பு பூமியைத் துளைத்து மறுபக்கம் வந்தது என்றால், கேட்பதற்குத் தயார். இயேசு சொன்னதும், கடலே பிளந்து வழிவிட்டது என்றால், ரசிப்பதற்குத் தயார். ஏனென்றால், பிரமிப்பதற்கு எதுவும் இல்லை என்றால், அதில் உங்களுக்கு ஆர்வம் வருவதில்லை. உங்களில் ஒருவராக இருப்பவரைக் கடவுளாக ஏற்பதில் உங்களுக்கு திருப்தி வருவதில்லை. பிரபலமான குப்பன் குப்பனுக்குப் பல பெரிய மனிதர்களைத் தெரியும். ஆனால், அதை அவன் மனைவி நம்பத் தயாராக இல்லை. “டெண்டுல்கரைத் தெரியுமா? என்றாள், சவாலாக. குப்பன் அவளை கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்துப் போனான். விளையாடிக் கொண்டு இருந்த டெண்டுல்கர் மட்டையைப் போட்டுவிட்டு ஓடிவந்து, குப்பனைக் கட்டிக் கொண்டார். “குப்பா, எப்படி இருக்கிறாய்?” என்று விசாரித்தார். மனைவி திகைத்துப் போனாள். “இது தற்செயலாக நடந்திருக்க வேண்டும். போகட்டும், உங்களுக்கு அமிதாப்பைத் தெரியுமா?” மும்பைக்கு மனைவியை அழைத்துப் போனான் குப்பன். அமிதாப் வீட்டு வாசலில் அவரைப் பார்க்க எக்கச்சக்கமான கூட்டம். மனைவியை வாசலிலேயே நிறுத்திவிட்டு குப்பன் கூட்டத்தில் வழி பண்ணிக் கொண்டு உள்ளே போனான். சற்று நேரத்தில் பால்கனிக்கு அமிதாப் வந்தார். அவர் தோளில் கைபோட்டபடி குப்பன்! மனைவி மயக்கமானாள். அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி, “என்ன ஆயிற்று?” என்று குப்பன் கேட்டபோது, “அதுவா… பால்கனிக்கு நீங்கள் இருவரும் வந்ததும், என் அருகில் இருந்த ஒருவர், “குப்பனைத் தெரிகிறது. ஆனால், பக்கத்தில் அது யார்? என்று கேட்டார். மயக்கம் போடாமல் என்ன செய்வதாம்!” என்றாள். ஆவென்று வாயைப் பிளந்து கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்வரை, இப்படி யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகைப்படுத்தி சொல்லலாம். யாரை மதிக்கிறோம்? தங்களை ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொள்பவர்களைதான் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். யாரையாவது பார்த்து பிரமித்தால்தான், அவர் மீது உங்களுக்கு மரியாதையே வருகிறது. சாதாரணமாக வாழ்ந்து, சத்தம் இல்லாமல் மாற்றங்களை நிகழ்த்துபவர்களை நீங்கள் மதிப்பதில்லை. ராமன் வந்தபோதும், கிருஷ்ணன் அவதரித்தபோதும், இயேசு வாழ்ந்தபோதும், விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தாம் அவர்களுடைய உண்மையான மதிப்பை அறிந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களை அன்றைக்கு ஏற்கத் தயாராக இல்லை. ராமனைக் காட்டுக்கு விரட்டியடித்தார்கள். கிருஷ்ணனைப் பெற்ற தாயிடமிருந்து பிரித்து வைத்தார்கள். நபிகள் மீது கல்லெறிந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள். அற்புதமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சில ஆயிரம் வருடங்கள் அல்லவா ஆகிவிட்டன! ஒருவருடைய உண்மையான உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள நமக்குச் சில நூறு வருடங்களாவது தேவைப்படுகிறது. வெகு கேவலமான நிலை அல்லவா? உங்களுக்குக் கதைகளைத்தான் ரசிக்கத் தெரியும். பழையதைத்தான் கொண்டாடத் தெரியும். இன்றைக்கு இருப்பதைப் பற்றிக் குறை சொல்லத்தான் தெரியும். ‘உன் அணியைச் சேர்ந்தவன் மலையைத் தூக்கினானா… ஆனால், என் அணியைச் சேர்ந்தவன் கடலைப் பிளந்தான்’ என்று போட்டியிட்டுப் பெருமை பீற்றிக் கொள்வதில், கடவுளைவிட தன் அணியை முதன்மைப்படுத்திக் கொள்ளும் அவசரம்தானே தெரிகிறது? கடவுளைப் புரிந்து கொண்டு யாராவது அப்படி வாழ முயற்சி செய்கிறார்களா? இல்லையே! கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு சண்டை போடுவதன் மூலம்தான் கடவுளின் மதிப்பை நிலைநாட்ட முடியும் என்றல்லவா தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதற்காகத்தான் பக்குவமான புத்திசாலித்தனமும், ஆழமான விழிப்பு உணர்வும் தேவைப்படுகிறது. உடன் இருப்பவர்களின் உண்மையான மதிப்பைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லாமல், அவர்கள் சரித்திரமானதும் போற்றிக் கொண்டாடத் தெரியும் என்றால், இன்றைக்கு உலகில் நடமாடும் மகத்தான சிலரை அடையாளம் கண்டு கொள்ளாமல் தவறவிட்டு விடுவீர்கள்.

 ராமன், கிருஷ்ணன் போன்றோர் ஏன் இன்று அவதரிப்பதில்லை? 

மஹாளய பக்ஷத்தின் சிறப்பு

மஹாளய பக்ஷத்தின் சிறப்பு
உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடையவும் மிண்டும் பிறப்பெடுத்தோ அல்லது ஆவியாகவோ அலையாமல் தெய்வத்தை அடைய வேண்டி தர்ப்பண வழிபாடுகளை, மஹாளய பக்ஷ சிரார்த்தங்கள் போன்றவற்றை செய்ய வேண்டிய முக்கியமான நாட்கள் மஹாளய பக்ஷ நாட்கள் ஆகும்.
ஒரு வருடத்தில் நாம் ஆற்ற வேண்டிய பித்ரு பூஜைகளை முறையாக செய்ய இயலவில்லை எனில் நாம் படும் மனவருத்தம் கணக்கற்றது. அப்படிபட்ட ஒரு நிலைமை ஏற்பட்டு கர்ம காரியங்களை முறையாக செய்ய இயலாமல் போனால் இந்த 16 நாட்களில் நாம் செய்யும் தினசரி தர்ப்பணம், தீர்த்த நீராடல்,படையல்,அன்னதானம் போன்றவற்றை செய்து பித்ருக்களின் ஆசியை நாம் பெறமுடியும்.
எவ்வித துன்பமும் இல்லாத வாழ்வு அமையவும், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களும் மஹாளய பக்ஷ தர்ப்பண பூஜைகளை கட்டயமாக மேற்கொள்ள வேண்டும். மஹாளய பக்ஷ திதிகளுக்கு உரித்தான பலாபலன்கள் மகத்தானவை.
இந்த மஹாளய பக்ஷ திதிகள் பாத்ரபத மாதத்தின் பௌர்ணமி ( பாத்ரபத மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஆவணியில் சில நாட்களும் புரட்சி யில் சில நாட்களும் ) தினத்தில் துவங்கி தொடர்ந்து வரும் அமாவாசை வரையுள்ள காலமாகும்.
ஒருவர் தம் முன்னோர்களுக்கு வருடத்தில் 96 முறை பித்ரு பூஜைகளையும் தர்ப்பண காரியங்களையும் செய்ய வேண்டும். இதில் இந்த மஹாளய பக்ஷ நாட்கள் மிக முக்கியமான நாட்களாகும்.
மஹாளய பக்ஷத்தில் நாம் கொடுக்கும் திலதீர்த்தம் ( எள் தீர்த்தம்) நம் முன்னோர்கள் மட்டுமல்லாமல் பித்ரு லோகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களுக்கும் ( மனிதன் அல்லாது மற்ற ஜீவராசிகளின் பித்ருக்களுக்கும்) உணவாக அமைகிறது. ஆகவே மிகுந்த பயனை ஏற்படுத்தக் கூடியது. ஒருவரின் வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் மகிழ்ச்சி ஆனந்தம் இல்லை என்றால் அவரின் முன்னோர்கள் திருப்திப்படவில்லை என்று அர்த்தம். ஆகவே முன்னோர் கடனை ஆற்றுவதே நம் முதற்கடன். இந்த மஹாளய பக்ஷ நாட்கள் அனைத்திலும் வழிபட வாய்ப்பு இல்லை எஎன்றாலும் மஹாளய அமாவாசை கலத்தில் மட்டுமாவது முன்னோர்களை வழிபட்டு பயன் பெறுவோம்

நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.
இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.
""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.
அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!
தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.
""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.
""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.
பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.
குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.
""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.
பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.
நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.
நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது

யோனிப்பொருத்தம்

யோனிப்பொருத்தம்
----------------------------------
யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள். தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:
1.தாவர உண்ணிகள்
2.ஊண் உண்ணிகள்
3. அனைத்துண்ணிகள்.
தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:
1. கொம்புள்ளவை
2. கொம்பில்லாதவை
ஆடு, எருது,பசு,எருமை,மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.
குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.
நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.
எலியும் குரங்கும் அனைத்துண்ணிகளாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.
எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.
நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.
மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷ்களின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.
மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.
பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.
ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.
வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும்.இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.
குதிரை X எருமை
குதிரை X பசு
யான X சிகம்
ஆடு X குரங்கு
பாம்பு Xகீரி
பூனை X நாய்
பசு X புலி
எருமை X புலி
மான் X புலி
எலி X பூனை
எலி Xபாம்பு
மான் X நாய்

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும் நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.
.பிதுர் தோஷம் தன்னையும் தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும் குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள் தேவையற்ற வம்புகள் கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில்தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான்மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச்சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டைபால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
மஹாளய தர்ப்பணம்:- 28.09.2015 முதல் 12.10.2015 மஹாளய அமாவாஸ்யை முடிய..தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் .இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.
பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்:-பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும்அழைக்கப்படுவர்.மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.நம்முடைய இந்த உடல் உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல் உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும்.அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்.இதுவே பிதுர்கடன் எனப்படும்.இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும்.இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.
ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம்.பயம் கொள்ள தேவையில்லை.நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும்.இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.
எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர்.அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர்.அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு வேலை திருமணம் மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை.எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான்.எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும்.இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும்.அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

இந்து மதம் பற்றி யாராவதுகேட்டால் மற்றும் தெரியாதவர்களுக்கு நமது இந்து மதத்தின் பெருமையை உணர்த்துங்கள்.

1,ஹிந்துத்துவம்என்பது என்ன?பதில் : “யாரும் ஊரே யாவரும்கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக்கொடுத்தது” என்று சொன்னால்அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்குஎதிரானது. மனிதநேயத்தின்இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.
2,ஹிந்து மதம் எப்போதுதோன்றியது?‪#‎பதில்‬: எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.
3,ஹிந்து மதத்தில் ஏன் இத்தனைதெய்வங்கள் இருக்கின்றன?ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?#பதில் : ஒரே தெய்வம் என்று ஏன்இருக்கவேண்டும்?எல்லையில்லாஇறையை நமது புரிதலுக்கேற்பபுரிந்து கொள்கிறோம். அந்தபுரிதல் ஆளுக்காள் மாறுபடும்அல்லவா? எல்லா பாதைகளும்நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையேவணங்குகிறோம் என்பதே நமதுஹிந்துநெறியின் அடிப்படைக்கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும்கொண்டிருக்கும் அற்புதமானசமுதாயமாகவும் வைத்திருக்கிறது.எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையேபரவுகிறதோ, உடனடியாக அந்தமக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி,மற்றவர்களைஅழிக்கதுவங்கிவிடுவதை நாம்சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.4,சிறுதெய்வ வழிபாடு என்பதைஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?#பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின்பிரிக்கவியலா அங்கம்.
5,புராணங்கள் உண்மையாபொய்யா?#பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும். கலந்திருக்க வாய்ப்புண்டு.புராணம் என்றாலே சரித்திரம்என்றுதான் அர்த்தம்.
6,புண்ணியம் – பாவம் என்பது என்ன?#பதில் : நல்லது செய்தால்புண்ணியம். கெட்டது செய்தால்பாவம்.மகாபாரதம் கூறுகிறது –श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வாசைவாவதார்யதாம் |ப்ரோபகார: புண்யாய, பாபாயபரபீடனம் ||“தர்மத்தின் சாரம் முழுவதையும்கூறுகிறேன், கேள், கேட்டுஅதன்படி நட. பிறருக்கு நன்மைசெய்தல் புண்ணியம். பிறருக்குதீமை செய்தல் பாவம்”
7,தர்மம் என்பது எது?#பதில் : இயல்பாக இருப்பது தர்மம்.இயல்பை மாற்றி ஆசையின்,கோபத்தின், மனமாச்சர்யங்களின்உந்துதலால் செய்பவை எல்லாமேஅதர்மமாகும்.
8,ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?#பதில் : நல்லது , கெட்டது குறித்தmyopic பார்வையே இது குறித்தகேள்வியை எழுப்புகிறது.நாமெல்லாம் ஒரு பெரும்பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன.இந்த சுழற்சியில் கெட்டதுசெய்துவிட்டு தப்புபவர்கள் நரகநிலையிலோ அல்லது அடுத்தபிறவியொலோ தமது தீயசெயல்களுக்கான பலன்களைஅனுபவிக்கின்றார்கள்.9,சோதிடம் உண்மையா?#பதில் : உண்மைதான் என்றுஅனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள்.உண்மையில்லை என்றும் சிலர்சொல்கிறார்கள். இது அவரவர்அனுபவம் சார்ந்தது.
10,“சாமி” வந்து விட்டது என்றுஆவேசம் வந்து ஆடுபவர்களைநம்பலாமா?#பதில் : அது ஆவேசம் வந்து சாமிஎன்ன சொல்கிறது என்பதைப்பொறுத்து இருக்கிறது.11,தீமிதித்தல்,அலகு குத்தி காவடிஎடுத்தல் போன்றவை தேவைதானா?#பதில் : மற்றவர்களை தீயில்தள்ளாதவரை, மற்றவர்களைகுத்தாதவரை – நம்மை வருத்திஇறைவனை அடைய முயற்சிக்கும்முயற்சிகளில் என்ன தவறுஇருக்கிறது...
12,ஹிந்து என்றால் உண்மையில்என்ன அர்த்தம்?#பதில் : இயல்பானவர்கள் என்று அர்த்தம

Saturday, September 26, 2015

எண்ணெய்க் குளியல் !

எண்ணெய்க் குளியல் !

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

இரைப்பு,இளைப்பு நோய்கள்,மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும்.
தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும்.
தலைவலி ,பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,நல்ல குரல் வளம் உண்டாகும்.சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:

நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.எண்ணெய்தேய்க்கும்பொழுது,எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும்,ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும்,பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு,பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும்,கண்களில் விடுவதினால் காதின் நோய்களும்,உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும்,தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அதிகாலையிலேயே(6.30 மணிக்குள்)குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது,ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,பெண்கள்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:

பகலில் தூங்கக் கூடாது.
அதிக வெயிலில் அலையக்கூடாது.குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது
உடலுறவு கொள்ளக் கூடாது
நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது

ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்?

ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் சத்குரு அவர்கள், யோகிகள் விழிப்புணர்வுடன் மரணத்தை நிர்ணயிக்கும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாக விளக்குகிறார். சத்குரு: யோகிகளை எப்போதுமே புதைப்பதில்லை. சில சமயம் அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களிடம் புதைக்கும்படி சொல்வார்கள், ஆனால் சில வேளைகளில் புதைப்பதா எரிப்பதா என்ற வாய்ப்புகளை திறந்துவைத்திருப்பார்கள், அப்போது அவர்கள் எரிக்கப்படுவார்கள். பொதுவான வழக்கம் ஒன்று என்னவென்றால்,ஒரு யோகி தன்னைச்சுற்றி போதுமான அளவு விறகை அடுக்கிவைத்துவிட்டு, விறகிற்குத் தீ மூட்டிவிட்டு அதன்மேல் தியானத்தில் அமர்ந்துகொண்டே எரிந்துவிடுவார். அவர் தன் உடலிற்கும் தனக்கும் இடையில் இடைவெளி உருவாக்கியிருப்பவராக இருப்பார். முழு விழிப்புணர்வுடன் தன் பூத உடலை அவர் அழிக்கிறார். தீயில் எரிந்துகொண்டிருக்கும்போது கதறி ஓடாமல் இருப்பதென்றால், அதற்குமேல் நீங்கள் விழிப்புணர்வாக இருக்கமுடியாது. இது ஒரு பொதுவான வழக்கம், அதனால்தான் யோகிகள் எரியூட்டப்படுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவதில்லை. இதை அவர்களாகவே முழுவதும் தனிமையில் செய்துகொண்டார்கள் – தங்களுக்குத் தாங்களே எரியூட்டிக்கொண்டார்கள். ஆனால் உங்களை நீங்களே புதைத்துக்கொள்ள முடியாது. குழியை வேண்டுமானால் நீங்கள் வெட்டிக்கொள்ளலாம், ஆனால் கொஞ்சம் உதவி தேவை. அதனால் யாரோ ஒருவரிடம் புதைக்கச்சொல்லி குறிப்புகள் கொடுத்தார்கள். தீயில் எரிந்துகொண்டிருக்கும்போது கதறி ஓடாமல் இருப்பதென்றால், அதற்குமேல் நீங்கள் விழிப்புணர்வாக இருக்கமுடியாது. சிலசமயம் யோகிகள் தங்கள் உடலை விடும்போது, அவர்கள் நடந்துநீருக்குள் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு யோகிக்கு, போதிய விழிப்புணர்வு இருக்கலாம், ஆனால் உடலின் செயல்பாட்டை நிறுத்துவதற்கு உடலமைப்பின்மீது தேவையான ஆளுமை இல்லாமலிருக்கும். அவருக்கு உடலமைப்பை நிறுத்த சற்று உதவி தேவை, அதனால் உடலுக்குள் நுழையும் நீரின் உதவியை எடுத்துக்கொண்டு அவர் ஜலசமாதி அடைகிறார்.அவர் அசைவில்லாமல் இருந்து உடலைவிடுவார். சில யோகிகள் போக முடிவுசெய்து மிருகங்களுக்கு உணவாகிவிடுவர். பிற உயிரினங்கள் அவரை சாப்பிட ஏதுவாக அவர்கள் காட்டுக்குச் சென்று உடலை விடுவர். இது மிகவும் அரிது, இப்படிச் செய்பவர் பெரும்பாலும் நன்னோக்கம் கொண்ட ஒரு யோகியாக இருப்பார், ஞானமடைந்தவராக இருக்கமாட்டார். அவர் கருணை கொண்டவராக இருக்கிறார், அவர் இன்னும் கரைந்து போகவில்லை. கருணை என்பது தீவிரமான ஆர்வம் கரைந்துபோயிருக்கும் நிலை, ஆனால் அதுவும் ஒரு நிலையிலான ஆர்வம்தான். உங்கள் இருப்பின் இயல்பே ஒருவிதமான விழிப்புணர்வு நிலையாக மாறிவிட்டால், திடீரென யாரோ ஒருவர் உள்ளே நடந்துவந்து துப்பாக்கியால் உங்கள் தலையில் சுட்டால், அப்போதும் நீங்கள் விழிப்புணர்வாகவே போகமுடியும். இதை யாரும் உங்களுக்கு மறுக்கமுடியாது. அதனால் அவர்கள் தண்ணீருக்குள் சென்றார்களா, நெருப்புக்குள் சென்றார்களா, புதைக்கப்பட்டார்களா, அல்லது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டார்களா என்பது ஒப்பனையளவில் மட்டுமேஉள்ள வித்தியாசம். வாழும்போது, அணிந்துகொள்ள விதவிதமான உடைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது போல, இறக்கும் தருணத்திலும் தண்ணீர், காற்று, பூமி, நெருப்பு என்று விரும்பும் உடையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலான யோகிகள் 27லிருந்து 35 வயதுக்குள் தங்கள் உடலை விடுவார்கள். 42 என்பது இன்னொரு வயதுவரம்பு. பொதுவாக அவர்கள் அந்த காலகட்டத்தில் சென்றுவிடுவதற்குக் காரணம், அப்போது எல்லாம் செய்தாகிவிட்ட நிலையில் இருப்பார்கள், அதனால் விழித்தெழுவார்கள். அவர்கள் இறந்துவிட்டதாக மக்கள் நினைப்பார்கள், ஆனால் இன்னொரு விதமான உண்மைநிலைக்கு அவர்கள் விழிப்பார்கள். தங்களது கனவிலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள். நீங்கள் ஏதோ கனவு கண்டுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலையில் அலாரம் அடித்தால் கனவிலிருந்து விழித்துவிடுவீர்கள். அதேபோல், உடல் மற்றும் மனதின் கலவையாக இருக்கும் வேறுவிதமான கனவு ஒன்றை நீங்கள் இப்போது கண்டுகொண்டு இருக்கிறீர்கள், ஒருநாள் அந்தக் கனவிலிருந்து விழித்தெழுவீர்கள், அவ்வளவுதான். தன் கனவின்மீது பற்றுதல் இருக்கும் ஒருவரை, அவர் கனவு கண்டுகொண்டு இருக்கும்போது எழுப்பினால் அவர் அழுவார். கனவு கலைந்ததால் அழும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அற்புதமான கனவு கண்டுகொண்டு இருக்கும்போது, அது கலைந்துவிட்டால், அதை மீண்டும் தொடர முடியவில்லையே என்று குழந்தைகள் எழுந்தபின் அழுகிறார்கள். இதற்கும், சாவை நெருங்கும்போது நீங்கள் அழுவதற்கும் இடையே எந்த வித்தியாசமுமில்லை. இப்போது உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் கண்டுகொண்டு இருக்கும் கனவிலிருந்து விழித்துக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள். இறப்பு என்பது அப்படி ஓர் விழித்தெழலாகும். அப்படியானால் எல்லோரையும் நாம் எழுப்பிவிடலாமா? இல்லை, அவர்கள் மீண்டும் உறங்கிவிடுவார்கள், எழுப்பி பிரயோஜனமில்லாமல் போய்விடும். அவர்கள் மறுபடியும் தூங்கமுடியாதபடி அவர்களை எழுப்பவேண்டும், அப்போது எழுப்புவதில் அர்த்தமிருக்கும். எனவே இந்த யோகிகள் தங்களது படுக்கை விரிப்புகளை விட்டுவிட்டுச் சென்றார்கள். அப்போது காலியான படுக்கையைப் பார்த்துவிட்டு அவர் போய்விட்டதாக நீங்கள் நினைத்துவிட்டீர்கள். அப்படியில்லை, அவர் விழிப்புணர்வுடன் தன் உடலை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் – முற்றிலும் மாறுபட்ட உண்மைநிலைக்கு அவர் விழித்தெழுந்துள்ளார்.

Read more at : ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்? 

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?
வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன்படுத்துகிறோம். சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவபூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம். விஷ்ணு கோயில்களில் பூஜை மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.

எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் கிட்டும்?

எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் கிட்டும்?
ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்

Thursday, September 24, 2015

தர்ப்பைப் புல்

தர்ப்பைப் புல்
தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்ம் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் செய்கிறார்கள். அவை பல நாள் ஒலியுடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரஹணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தொற்று நோய்கள் இதன் காற்று படும் இடங்களில் இருக்காது.

Wednesday, September 23, 2015

வடமொழியும் தென்தமிழும்

வடமொழியும் தென்தமிழும்
வளர்ந்து வரும் விஞ்ஞான துறைகளுள் ஒன்று மொழியியற்துறை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இத்துறை புதுப்புதுக்கண்டுபிடிப்புக்களை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புக்களில் ஒன்று சமஸ்கிருத மொழியின் அதிசயம் கடவுளரின் மொழி என்றும் தேவநாகரி என்றும் அழைக்கப்படும். சமஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி என்று பொருள்படும்.
ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவ வலிமையாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலை பயன்படுத்த சமஸ்கிருதமே சிறந்த மொழி என்று கண்டறிந்தனர். உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். இம் மொழியானது எளிமையானது தூய்மையானது இறைவனின் படைப்பின் மகிமையையும் உணர்த்துவது.
இந்தியாவுக்கு வருகை தந்த அல்பெரூனி சமஸ்கிருதத்திலுள்ள புராணங்களை கண்டு வியந்து “அதில் எல்லாம் இருக்கிறது” என அதிசயத்துக் கூறினார். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்ட அவர் தன்னால் மத்ஸ்ய ஆதித்ய வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க முடிந்தது என ஆதங்கப்பட்டுள்ளார்.
18 புராணங்களில் உள்ள 370548(சுமார்) ஸ்லோகங்களுடன் தேவிபாகவதத்தில் உள்ள 18000(சுமார்) ஸ்லோகங்களையும் மகாபாரதத்தில் உள்ள 100000(சுமார்) ஸ்லோகங்களையும் வான்மீகி இராமாயணத்திலுள்ள 24000(சுமார்) ஸ்லோகங்களையும் சேர்த்தால் 512548(சுமார்) ஸ்லோகங்கள் கிடைக்கின்றன. நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு சில பதிப்புக்களை வைத்து இந்த கணக்கீடு உள்ளது. சுமார் ஜந்து இலட்சம் (500000) ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து அறிவையும் இவ்வுலக வாழ்நெறிகளையும் மோட்ச வாழ்நெறிகளையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இவற்றில் இல்லாதது வேறு எங்கும் இருக்க போவதில்லை.
நாஸா ஆய்வு மையம் தன் பயன்பாட்டிற்காக எல்லா மொழிகளையும் ஆராய்ந்த போது பூமியிலுள்ள தெளிவான மொழி சமஸ்கிருதமே என்று கூறுகிறது. நாஸாவைச் சேர்ந்த ரிக்ப்;ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் சமஸ்கிருத மொழியின் பெருமைகளை தெளிவாக கூறியுள்ளார். சமீபத்தில் கணினிப் பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சமஸ்கிருதமே என்று அறிவித்துள்ளார்கள். 1984ம் ஆண்டு ஆர்டிபிஸியல் இன்டெலிஜென்ற் யு1 என்ற பத்திரிகை இயந்திர மொழிபெயர்ப்பிற்கு சமஸ்கிருதம் சிறந்த மொழி என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டுமானால் முதலில் ஜப்பானிய மொழியை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்க வேண்டும். பின் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு சமஸ்கிருத மொழியின் அமைப்பே காரணமாகும்.
அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் காயத்ரி மந்திரத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது வினாடிக்கு இரண்டு இலட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இவ் மந்திரம் அபூர்வமானது. காயத்ரி மந்திரமானது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துகிறது.
சுவிற்ஸ்லார்ந்தைச் சேர்ந்த டாக்டர்.கான்ஸ் ஜென்னி என்பவர் ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics : The study of wave phenomena என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவர் தனது ஆராய்ச்சியின் போது சமஸ்கிருத உயிரெழுத்துக்களை உச்சரித்த பொழுது தகட்டின் மீதுள்ள மணல் அந்த எழுத்து வடிவத்தை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார். மேலும் தலையாய மந்திரமான ஓம் என்பதை உச்சரித்த போது ஓ என்ற எழுத்தை உச்சரித்தவுடன் ஒரு வட்டம் தோன்றியது. ம் என்று உச்சரிக்கும் போது ஒரு சிக்கலான உருவம் தோன்றியது. இதைக் கண்டு பிரமித்துப் போனார். வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. ஆலயங்களில் பிரதிஸ்டை செய்யும் யந்திரத்திற்கு ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது. அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே இன்றும் ஆலயங்களில் யந்திரங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்படுகிறது.
இவ்வாறு இன்னோரன்ன சிறப்புக்களையுடைய சமஸ்கிருத மொழியை பல சமயம் அறியாக்கூத்தாடிகள் தான் சமஸ்கிருதம் இறந்தமொழி பயனற்ற மொழி என்று கூச்சலிட்டு வருகின்றனர் எமது இரண்டு கண்களில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற பேச்சுக்கு இடமில்லை அது போலவே சமஸ்கிருதமும் தமிழும் சைவர்களின் இரு கண்கள் போன்றன. இறைவனால் அருளப்பட்ட வேதம்,சிவாகமங்கள் வடமொழியில் உள்ளன. அருளாளர்கள் அருளிய பன்னிருதிருமுறைகள்,பதின்நான்கு சாஸ்திரங்கள் தமிழில் உள்ளன.
“ஆரியமும் செந்தமிழும்……” (திருவள்ளுவமாலை) “இருமொழிக்கு கண்ணுதலார் …….” (காஞ்சிபுராணம்) பாடல்களின் மூலம் இவ்விரு மொழிகளுமே சீரிய மொழி என்பது தெளிவாகிறது. இவ்விரண்டில் எது உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேச்சுக்கு இடமில்லை. வடமொழியை திருமுறைகள் போற்றுகின்றன. பன்னிரு திருமுறையில் பல எண்ணிலடங்கா வடமொழிச் சொற்கள் உள்ளன. மேலும் வடமொழி என்ற மொழியின் பெயராலேயே போற்றப்பட்டுள்ளது. வடமொழி தமிழ்மொழி தவிர வேறெந்;த மொழியும் திருமுறையில் குறிப்பிடப்படவில்லை. திருநெறிய தமிழ் திருமுறைகளால் போற்றப்பட்டுள்ள உயர்ந்த செம்மொழிகள் இவ்விருமொழிகளாகும்.
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்……. ” என்று சுந்தரர் பெருமான் அருளுவார். நாள்தோறும் இனிமையான இசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தப் பெருமானே வடமொழி தமிழ்மொழி இரண்டையும் ஒருங்கே போற்றியிருத்தலே இவ்விரு மொழிகளுக்குமிடையிலான தொடர்பினை நன்கு தெளிவுபடுத்துகிறது.
சைவசமயத்தில் நம்பிக்கையற்ற கடவுள் மறுப்பு கொள்கையுடைய மற்றும் வேற நோக்கங்களையுடையவர்கள் தான் வடமொழியை இறந்த மொழி பயனற்ற மொழி என்று பழிக்கிறார்கள். திருநெறிய தமிழாகிய திருமுறைகளால் போற்றுபவர்களே வடமொழியை இவ்வாறு கூறுவது மிகவும் கொடுமையானது. இது கலியின் கொடுமை என்று தான் கூற வேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
“வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் …….” என்பது அப்பர் தேவாரம். வடமொழி தமிழ்மொழி என்ற இரண்டில் எதை நிந்தித்தாலும் அது நம் ஈசனையே நிந்தித்ததற்கு சமனாகும். சமயகுரவர்களை நம் தலைவர்களாகக் கொண்டு அவர்கள் தம் வாக்கினுக்கு கட்டுப்பட்டு சைவப்பணியாற்றும் உண்மைச்சைவர்கள் அதுபோல நிந்திக்கமாட்டார்கள் ஆகவே இருமொழிகளையும் போற்றி பேணுவோமாக.
நன்றி

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள்.சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் 
ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல,
ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி
ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில்
அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்
செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு
வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது
வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால்
மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது " என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு
உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
 சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகளின் சிறப்பு, தத்துவம் & படிகளில் உள்ள தெய்வங்கள் <<
முதல்படி: விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல்படி.
இண்டாம்படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
மூன்றாம்படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.
ஐந்தாம்படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம்படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம்படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.
எட்டாம்படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம்படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.
பத்தாம்படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.
பதினொன்றாம்படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம்படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.
பதின்மூன்றாம்படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.
பதினான்காம்படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம்.தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
பதினெட்டு படி தத்துவம்......
பதினெட்டு என்பது வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் - ராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள், தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் என்று பதினெட்டு என்ற எண்ணுக்குப் பெருமை உண்டு.
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர்மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியில் இருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ்சொற்கள் பேசக் கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்.........
ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு. 1. விநாயகர், 2. சிவன், 3. பார்வதி, 4. முருகன், 5. பிரம்மா, 6. விஷ்ணு, 7. ரங்கநாதர், 8. காளி, 9. எமன், 10.சூரியன், 11. சந்திரன், 12. செவ்வாய், 13. புதன், 14. குரு (வியாழன்), 15. சுக்கிரன், 16. சனி, 17. ராகு, 18. கேது.

சாபங்கள் பல வகைப்படும்

சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.

வாஸ்து குறைகள் விரைவில் தீர

வாஸ்து குறைகள் விரைவில் தீர, எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த பகுதியின் விருட்சத்தை கோயிலிலோ, பொது இடங்களிலோ நட்டு வைத்து பராமரிக்க வாஸ்து குறை தீர விரைவில் வழி பிறக்கும்.
1. ஈசான்யம் - மல்லி, முல்லை, திருநீற்று பச்சை, வெண் தாமரை.
2. கிழக்கு - செம்பருத்தி, வாழை, சூரியகாந்தி, சந்தானம், பலா.
3. அக்னி - ஆத்தி, பலா, சந்தானம், வஞ்சி.
4. தெற்கு - வில்வம், மாமரம், தென்னை, கருங்காலி.
5. தென்மேற்கு - புளி, மருதம், கடம்ப மரம், சிறியாநங்கை, தேக்கு.
6. மேற்கு - வன்னி, மகிழம்.
7. வடமேற்கு - நாவல், புங்கை, வேம்பு.
8. வடக்கு - துளசி, நாயுருவி.

Tuesday, September 22, 2015

உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!--சித்த மருத்துவம்

உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!--சித்த மருத்துவம்
உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...
தேன்....
தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-
1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )
இனிப்பை வைத்து வைத்யும் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .
தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....
அகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...

நாம் உண்ணும் உணவை பொருத்தே நமது குணம் இருக்கும்

நாம் உண்ணும் உணவை பொருத்தே நமது குணம் இருக்கும். காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் அதிகம் இருக்கும். காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் உடல் நலம் பெறும். விலங்கு வகைகளை சாப்பிட்டால் விலங்கின் குணம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏன் சாப்பிடும் பதார்த்தங்களை சமைப்பவரின் குணம், பரிமாறுபவர்களின் குணங்களும் கூட சாப்பிடுபவர்களுக்கு வரும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.
சைவமோ, அசைவமோ எது யாருக்கு பிடிக்கிறதோ அதை சாப்பிடும் உரிமை அவரவருக்கு உண்டு.
ஒருவரின் உணவுபழக்கத்தை பற்றிய விமர்சன பேச்சு நாகரிகமற்றது என்றாலும் நல்லதை சொல்லும் தார்மீக உரிமையில் சொல்கிறேன். மனிதன் ஒரு தாவர விலங்கு. மனித உடலின் அமைப்பு சைவ உணவுகளை உண்ணும்படியாகத்தான் உடலின் அமைப்பு இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருகிறது. சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாக கூடியவை.
அசைவ உணவுகள் அவ்வளவு எளிதில் ஜீரணமாகதவை. நமது உடலில் ஜீரண சக்தி அதிகமாக அதிகமாக உடல் உபாதைகள் இருக்காது. ஜீரண சக்தி குறைந்தால் உடல் உபாதைகள் ஏற்படும் இதுதான் அடிப்படை உண்மை.
எனவே நமது உடலுக்கு எது நல்லதோ அதை உண்பதே சிறப்பு..
மேலும் மனம் ஒருமைப்படுத்தவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் சைவ உணவே மிகச்சிறந்ததாகும்.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்:

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்:
உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!மூதாதையர்களையும் மூத்தவர்களையும்மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில்தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான்மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச்சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டைபால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

Monday, September 21, 2015

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:..

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:...............
வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:............... பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.
தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடைïறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.
வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.
கோபூஜை:........... பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது. பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்-மனைவி மாலை அணிந்து அமர்க.
முதலில் விநாயகர் பூஜை:-.............. வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்- விநாயகரை வணங்கிய உடன் விச்சின்ன அக்னி சந்தானம்-என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.
கலச பூஜை:-............ மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.
யாக வழிபாடு:- ..........இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.
ஓம் கம் கணபதியே நம.
சுவாகா ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.
என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால்
ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா
- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம். லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,
ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.
சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.
பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு. என்று கூறி தெளிக்க வேண்டும்.
பால் காய்ச்சுதல்:-............ ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
கலசதாரை வார்த்தல்:- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.
அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும்.
பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும்.
கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.
சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு. கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.
கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்