Thursday, April 26, 2012

அட்சயபாத்திரம்

ஹரிதாஸ் என்ற விஷ்ணுபக்தர், வறுமையில் வாடிய போதும், நாலுபேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது இரக்க குணம் கண்ட இறைவன், அவருக்கு அட்சயபாத்திரம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
மனதில் எதை நினைத்துக் கொண்டு அதைத் திறக்கிறோமே அது நமக்கு கிடைக்கும். பசியால் வாடும் மக்களுக்கு சோறிட எண்ணிய ஹரிதாஸ் சோறு வர வேண்டும் என நினைக்கவே, சோறு வந்து கொண்டே இருந்தது. மக்கள் வயிறார சாப்பிட்டு
அவரை வாழ்த்தினர். அவருடைய புகழ் ஊரெங்கும் பரவியது.
பக்கத்துவீட்டில் கிரிதாஸ் என்ற பணக்காரர் இருந்தார். பணம் இருந்தும் தன்னை ஊரில் ஒருவரும் மதிப்பதில்லை. ஆனால், ஹரிதாஸை அனைவரும் புகழ்கின்றார்களே என பொறாமை கொண்டார்.
அட்சயபாத்திரத்தின் மூலம் ஹரிதாஸ் சோறிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். அன்றிரவு, ஹரிதாஸுக்குத் தெரியாமல் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இரவோடு இரவாக, ஹரிதாஸ் வீடு தீப்பிடித்து எரிய வேண்டும் என்று மனதில் எண்ணினார். ஆனால், கிரிதாஸ் வீடு தீப்பிடிக்க ஆரம்பித்தது.
அலறி அடித்தபடி ஹரிதாஸிடம் ஓடினார். தூங்கிக் கொண்டிருந்த ஹரிதாஸை எழுப்பி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். ஹரிதாஸ் அப்போதும் அவர் மீது இரக்கம் கொண்டு கடவுளை வேண்டினார்.
நொடியில் தீ அணைந்து போனது. பொறாமைத்தீ கொடியது என்பதை உணர்ந்த கிரிதாஸ் தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு பாத்திரத்தையும் ஒப்படைத்தார்.

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!


திருமாலும், லட்சுமியும் ஆதிசேஷனின் மீதுஅமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென திருமால் எழுந்தார். கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, "சுவாமி ஏறுங்கள்' என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம். பெருமாளும் கருடன் மேல் ஏறி, ""அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ,'' என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், ""வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு,'' என்றார்.
கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,""சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!'' என்றாள்.
திருமால் சிரித்தபடியே, ""லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்தபடியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப் பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான். நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத்தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். "ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை' என திரும்பி விட்டேன்,'' என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.

அடுத்தவர் சொத்தைப் பறிப்பவர்கள், அதை அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய்விடுவார்கள்.

மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், சகோதர பிரச்னையில் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டி பொருளைப் பறிப்பவர்கள்...யாரானாலும் பறித்த சொத்து நிலைக்காது. இதோ ஒரு சம்பவம்.
கலிங்கநாட்டை ஆட்சி செய்த வாகுலனுக்கு இன்பமுகன், நண்பமுகன் என்ற பிள்ளைகள். தன் மறைவுக்குப் பின், மூத்தவன் இன்பமுகன் ஆட்சி நடத்த வேண்டுமென்றும், அவனுக்குப் பின் இளையவன் ஆட்சி செய்ய வேண்டுமென்றும் எழுதி வைத்தான். ஒப்பந்தத்தை எழுதியது மற்றவர்களுக்கு தெரியாது. அன்றிரவே, வாகுலன் இறந்து விட, ஒப்பந்தத்தை இன்பமுகன் எரித்து விட்டான்.
தனக்குப் பின் தன் மகன் நாடாள வேண்டுமென்பது அவன் விருப்பம். தம்பி நண்பமுகனுக்கு பல தொல்லைகள் கொடுத்தான்.
இதையறிந்த நண்பமுகன் மனம் வெறுத்தான். சொந்த சகோதரனே, தனக்கு துரோகம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல், அரண்மனையை விட்டு வெளியேறினான். காலம் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தான். அவந்தி தேசத்துக்கு சென்றான். அங்கே, தன்னை இளவரசனாகக் காட்டிக் கொள்ளாமல், போர்ப்பயிற்சி தரும் ஆசிரியராகக் காட்டிக் கொண்டான்.
அந்நாட்டு மன்னன் இளங்கோவன், அவனது திறமை பற்றி கேள்விப்பட்டு, தன் அந்தரங்க பாதுகாவலனாக நியமித்துக் கொண்டான்.
இளங்கோவனின் மகள் சுந்தரி, பெயருக்கேற்றாற் போல் பேரழகி. கட்டிளங்காளையான நண்பமுகன் மீது அவளுக்கு காதல். அவனைத் திருமணம் செய்ய விரும்பி, தந்தையிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.
""மகளே! மன்னாதி மன்னர்களெல்லாம் உன்னை மணக்க போட்டியிடுகின்றனர். நீ சாதாரண வீரனை விரும்புகிறாயே! உலகம் என்னை மதிக்குமா?'' என்றான்.
""அப்பா! நீங்கள் வாள் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் என்னை மணக்க விரும்புவோர் பங்கேற்கட்டும். வெற்றி பெறுபவருக்கு, என்னை மணம் முடித்துக் கொடுத்து, நம் நாட்டின் மன்னனாகவும் ஆகலாம் என அறிவியுங்கள். நண்பமுகன் நிச்சயம் வெல்வார் என்று நம்புகிறேன்,''என்றாள்.
"மாபெரும் மன்னர்கள் முன்னால் நண்பமுகன் தூசாகிவிடுவான். யாரோ ஒரு மன்னன் தான் வெற்றி பெறப் போகிறான்! அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து விடலாம்' என இளங்கோவன் கணக்கு போட்டான். ஆனால், போட்டியில் நண்பமுகன் வென்றான்.
இளங்கோவன் நண்பமுகனிடம்,"" <உண்மையைச் சொல், ஒரு வீரனால் இங்குள்ள மன்னர்களை ஜெயிக்க முடியாது. நீ யார்?'' என்று கேட்டான்.
தான் கலிங்கதேச இளவரசன் என்றும், நடந்த விபரங்களையும் அவன் கூறவே, போட்டிக்கு வந்த அரசர்கள் எல்லாரும் அவனுக்கு நண்பர்களாயினர். எல்லாருமாக இணைந்து கலிங்கத்திற்கு வந்தனர். இன்பமுகனை விரட்டியடித்து விட்டு, நண்பமுகனை கலிங்கத்தின் ராஜாவாக்கினர். ஒன்றுக்கு இரண்டாக, கலிங்கத்தையும், அவந்தியையும் இணைத்து அவன் அரசாண்டான்.
அடுத்தவர் சொத்தைப் பறிப்பவர்கள், அதை அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய்விடுவார்கள்.

குபேரன்/குபேரனின் குணங்கள்

சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு திசை அதிபதி, அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர். இவர் வேறு யாருமல்ல, அனைவருக்கும் தெரிந்த குபேரர் தான். லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமான இவர், செல்வத்திற்கும், தனதான் யத்திற்கும் அதிபதியாக உள்ளார். குபேரரை வணங்குவதன் மூலம் இந்த செல்வங்களை பெறமுடியும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும், குபேரøனையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. இருவரையும் சேர்த்து, வழிபடும் பட்சத்தில் முழு பலனும் உடனே கிடைக்கும். ஏனெனில் லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமானவர் இவர்.


புத்தமதத்தில் குபேரன் 
சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை "சிரிக்கும் சிருஷ்டியாக' வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.

குபேரர் நிலதானியங்களுக்கு அதிபதி. விவசாயிகள் தங்கள் விவசாய விளைப்பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபட்டு, பின் விவசாயத்தை துவக்குகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படைவதாகவும் நம்பிக்கையுள்ளது. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளைபொருட்களை வழங்குகின்றனர்.

குபேரனின் குணங்கள் 
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணம் (பொறுமையுடன் பணி செய்தல்) அவசியம் என்பதை தன் குணத்தின் மூலம் உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது. அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உழைப்பவனுக்கு பொருளையும் அருளையும் அவர் வாரி வழங்குவார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது, மீனாசனத்தில் குபேரன் அமர்ந்துள்ளார். அவரது ஒரு கை அபயமுத்திரை காட்டுகிறது. சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே இந்த முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்ககிரீடம் சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளம். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.

* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

 செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

* கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.


* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது

* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது ?

சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

திருவிழா காலத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுவது ஏன்?

ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது என்றால் எல்லா தெய்வங்களுமே அங்கு வந்து செல்வர். கோயிலில் திருவிழா நடக்கிறது என்பதை உணர்த்தவும், எல்லா தெய்வங்களையும் வரவேற்கவும் இப்படிச் செய்யப்படுகிறது.

** மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

* வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?

பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.



* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி. 

Wednesday, April 25, 2012

பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?


பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?
இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது.

தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.

இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.

தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.

தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.

இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பசுவை வணங்காத சித்தர்களோ, சாமியார்களோ இல்லை என்று கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர்.

பசுவின் மகத்துவமும், தெய்வீகத் தன்மையும் நல்லவர்களுக்கே புரியும். உதாரணமாக ராமாயணத்தில் பரதனை விட்டு ராமனைப் பிரியும் போது, பரதன் வேதனை தாளாமல் புலம்புவார். உன்னை (ராமர்) பிரியும் அளவுக்கு என்ன பாவம் செய்தேன்; பசுவுக்கு உணவு வழங்காமல் இருந்தேனா; இல்லை கன்று பால் குடிக்கும் சமயத்தில் அதனை தாய்ப் பசுவடம் இருந்து பிரித்தேனா; பசுவை அடித்துத் துன்புறுத்தினேனா?... என்றெல்லாம் கூறி வருந்துவார்.

உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் தமிழ் மொழி பேசுகிறது என்பது வாரியாரின் அறிவுப்பூர்வமான வாதம். எனவே இறைவனால் படைக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பதும் அவரது கூற்று.

தெய்வீகத் தன்மை காரணமாகவே தேவலோகத்தில் கூட பசு (காமதேனு) வணங்கப்பட்டதாக புரணங்கள் கூறுகின்றன. எனவே பசுவை வணங்க வேண்டும்.

சிறந்த கிருமி நாசினி: கிராமப்புறங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவில் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள் ஏற்படும். அதே மாணவர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பும் போது வைத்தியர்களிடம் சென்றால், அவர்கள் பசுவின் சாணத்தை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளச் செல்வர்.

அப்படி கோமியம் கலந்த பசுவின் சாணத்தை கையில் அள்ளி சுத்தம் செய்வதன் மூலம், அது உடலின் பல்வேறு பகுதிகளிலும் கோமியம் கலந்த சாணம் படும் வாய்ப்பு ஏற்படும். பசுவின் சாணமும், கோமியமும் சிறந்த கிருமிநாசினி என்பதால் மாணவர்களின் தொற்றுகள் மறைந்து விடும்.

அதேபோல் பசுவின் சாணத்தை தலையில் சுமந்து சென்று கொட்டுவது, பசுவின் தொழுவத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை சிவனுக்கு தொண்டாற்றுவதற்கு சமமானது என இந்து மத நூல்கள் கூறுகின்றன.

சில 10 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிற்கு ஒரு பசு என்று இருந்த நிலை மாறி, தற்போது ஊருக்கு ஒரு கோசாலை (பசு மடம்) உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

தற்போதுள்ள பசு வதை தடுப்புச் சட்டம் கூட முழுமையாக அமலில் உள்ளதா எனச் சந்தேகமாக உள்ளது. எனவே பசு பாதுகாப்பு அல்லது மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் நாடு சுபிட்சமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பசுவின் சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை எந்தவித பாதிப்பும் இல்லாத நெல், அரிசி கிடைக்கும். இதனை உட்கொண்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இதர வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், ‘வெள்ளை நிறமுள்ள உணவுப் பொருட்களை தாம் ஒதுக்கிவிடுவதே தனது இளமையின் ரகசியம்’ என்று கூறியதில் இந்த வகை அரிசி இடம்பெறாது.

நகரத்தில் உள்ள பசுக்கள் போஸ்டர்களை தின்று விட்டு பால் கறக்கிறது. அதனைப் பருகுவதால் வேண்டுமானால் நோய் வரலாம். ஆனால் காராம் பசுவின் பால் எந்தக் கெடுதலும் செய்யாது.

பதப்படுத்தப்பட்ட பால் என்று விற்பனை செய்யப்படுவது சுத்தமான பசுவின் பால் கிடையாது. அதில் எருமைப்பால் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காராம்பசுவின் பாலை குடித்தால் எந்த நோயும் வராது.

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.

பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் அது அமைகிறது.

அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.

தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.

இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.

என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.

அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.

இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது என்பது நல்லது.

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது

கோ தான பலன்கள்


தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத் திருப்தியையும், 1ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன.

பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தணர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தர வேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன்மீது அணிவித்து, அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும், அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்.
ஆலயங்களுக்கு பசு தானம் செய்தல்
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.
கோ தான பலன்கள்இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானத்தின் வகைகள்கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக Ôஉக்ராந்தி கோ தானம்Õ என்று செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு Ôவைதரணி கோ தானம்Õ என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து, தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக் கேட்டு, பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது.
பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை, அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனைக் கொடுக்கும். பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்

கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?


பாரத யுத்தத்தின் கதைச்சுருக்கம்:

ஹஸ்தினாபுரத்தில் விசித்திரவீரியன் என்ற மஹாராஜாவிற்கும் அம்பிகா என்ற அவர் மனைவிக்கும் பிறந்தவர் த்ருதராஷ்டடிரன். த்ருதராஷ்டிரருக்கும் அவர் மனைவி காந்தாரிக்கும் பிறந்த 100 புத்திரர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப் பெற்றார்காள். அதே விசித்திரவீரிய மஹாராஜாவிற்கும் அம்பாலிகா என்ற இன்னொரு மனைவிக்கும் பிறந்தவர் பாண்டு. பாண்டுவுக்கும் அவர் மனைவி குந்தீ தேவிக்கும் பிறந்த 5 பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப் பெறறார்கள். த்ருதராஷ்டிரர் மூத்தவரானாலும் பிறாவிக் குருடனானதால் அவருக்கு பதில் பாண்டு அரசரானார், பாண்டுவின் மூத்த மகன் தருமபுத்திரன் யுவராஜாவானார். இதனால் த்ருதராஷ்டிரனின் மூத்த மகன் துர்யோதனன் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களுக்குப் பல இன்னல்களை விளைவித்தான். இடையில் பாண்டு இறந்து தருமபுத்திரர் பால்ய பருவத்திலிருந்ததால் ராஜ்யப் பொறுப்பை ஏற்ற த்ருதராஷ்டிரன் தருமபுத்திரர் இந்த்ரப்ரஸ்தம் எனும் ராஜ்யத்தை ஆளுமாறும் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை ஆளுமாறும் அமைத்தார். ஒரு சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே. சூதாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் துர்யோதனன், தன் மாமா சகுனியின் சொற்படிக்கு சூதாட்டத்தில் சூழ்ச்சியால் தருமபுத்திரரைத் தோற்கடித்து அவர்பால் உள்ள ராஜ்யத்தையும், சதுரங்கப் படைகளையும், எல்லா சொத்துக்களையும், தம்பிகளாகிய பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்பவர்களையும், தன்னையும் இழக்கச் செய்தார். கடைசியில் தருமபுத்திரர் தங்களது மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்து அதிலும் தோற்கடிக்கப் பெற்றார். பாஞ்சாலியை ராஜ சபைக்கு தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் கௌரவார்கள். அப்போது பஞ்சாலி ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டி சரணாகதி அடைந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வஸ்திரத்தைக் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றினார். பிறகு தங்களது ராஜ்யங்கள் கௌரவர்களிடம் சிக்கியதால் ராஜ்யமில்லமால் பாண்டவர்கள் மீண்டும் ஆடிய சூதாட்ட நியதிப்படி 12 வருடம் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞாத வாசமும் செய்தார்கள். ஆனால் அந்த 13 வருடங்களில் அவார்களை வாழ விடாமல் கௌரவர்கள் இடையூறுகள் பல செய்தார்கள். ஆனாலும் பாண்டவர்கள் நியதிப்படி 13 வருடங்களை முடித்து வந்து ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டபொழுது தர மறுத்து விட்டார்கள் கௌரவர்கள். முடிவில், பாண்டவர்களின் மித்திரராகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், கௌரவர்களிடம் பாண்டாவர்களுக்காகத் தூது சென்று பாண்டவர்களுக்கு ஒரு ராஜ்யமோ, ஒரு தேசமோ, ஐந்து கிராமமோ தருமாறு வேண்டினார். பயனில்லை. துர்புத்தி படைத்த துர்யோதனன், மாமா சகுனியின் போதனையால் ஒரு ஊசி குத்துவதற்குக் கூட இடம் தர மறுத்துவிட்டார். இதனால் சினமூண்டு பாண்டவர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போர் 18 நாட்கள் நீடித்தது.

கீதோபதேசம்:

பாண்டவர்களின் மூன்றாமவனான அர்ஜுனன் மிகப் பெரிய வில்லாளி. அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்தார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். யுத்த களத்தின் மத்தியில் அர்ஜுனன் எதிரியின் ஸேனையைப் பார்த்து அதில் தன்னுடைய சுற்றத்தார்கள் இருப்பதையும் யுத்தத்தில் எல்லோரும் மரணமடையத் தான் காரணமாகப் போவதையும் சுட்டிக்காட்டி, தன்னால் இந்த பாபத்தை செய்ய முடியாது. அப்படி எல்லோரையும் வதைத்துக் கிட்டும் இராஜ்யம் தமக்கு வேண்டாம் எனப் புலம்பினான். அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் விஷாதத்தைக் கண்டு அவன் அஞ்ஞானத்தைப் போக்க அவனுக்கு போர்க் களத்திலேயே, இரண்டு ஸேனைகளுக்கு மத்தியில் தந்த வாழ்வின் இரகசியம், வாழ்க்கை என்பது என்ன, அதில் மனிதனின் தருமம் என்ன, நம் ஜன்ம இரகசியம் என்ன, வாழ்க்கை எப்படி தருமப் பிரகாரம் வாழ வேண்டும், மனிதனின் கடமை என்ன முதலிய கருத்துக்களை எடுத்துரைத்து அர்ஜுனனுக்கு திவ்ய திருஷ்டியைத் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பித்து, வாழ்க்கையின் தத்துவத்தை விளக்க, அர்ஜுனன் மாயை நீங்கிப் போர்க்களத்தில் யுத்தம் செய்து பாண்டவர்கள் விஜயிக்குமாறு செய்தான். அந்த உபதேசம்தான் இங்கு கீதோபதேசமாகத் தரப்பட்டுள்ளது. இது, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல், நம் எல்லோருக்கும், கால, தேச, சமய, ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கை எப்படி தருமத்துடன் வாழ வேண்டும் என்ற தத்துவம், ஸனாதன தருமத்தின் ஸாரம், வேத வேதாந்தக் கருத்துகளடங்கிய உபதேசமாகக் கருத வேண்டும். இதை ஐந்தாவது வேதமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள். அத்துணைத் தத்துவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இது மஹரிஷி வேதவியாஸரால் இயற்றப்பட்டு மஹாபாரத கிரந்தத்தின் மத்தியில் தரப்பட்டுள்ள ஒரு மஹா காவ்யம். இதைப் படித்து இதன்படி வாழ்ந்தால் நமக்கு முக்தி நிச்சயம்.

கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?

பாரத யுத்த்ததிற்குக் காரணமாக நிகழ்ந்த விஷயங்கள் இன்றும் நம்மிடையே தோன்றுகின்றன. எத்தனை அனாசாரங்கள், எவ்வளவு கொலை கொள்ளைகள், எப்பேர்ப்பட்ட துராசாரங்கள்? அந்தக் காலத்தில் நடந்த எல்லா விதமான் துர் நடவடிக்கைகளும் இப்பொழுதும் நடைபெறுகின்றன. குடும்ப சச்சரவு, ராஜ்யத்தில் கலகம், சமூஹத்தில் அனாசாரம், நீதியின்மை, பலாத்காரம், உயிர்ப் பொருள் சேதங்கள் என்னென்ன? எல்லோரும் தங்கள் சுகத்தை நாடியே வாழ்கிறோம். மற்றவருக்கு இழைக்கப்படும் தீங்கைப் புறக்கணிக்கிறோம். இதைவிட துஷ்கர்மாக்கள் வேறு என்ன வேண்டும்? அதர்மம் தலைவிரித்தாடுகிறது.. இந்த சமயத்தில் இந்த கீதோபதேசம் மிக ஆதரவாக அமைந்துள்ளது. இதில் சொன்ன ஒவ்வொரு நீதியும் இந்தக் கலியுகத்திலும் கடைபிடிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காலத்திற்கும் அவை மிகப் பொருத்தமாகத் திகழ்கின்றன. அர்ஜுனனை வியாஜமாக வைத்து நமக்கு இந்தக் காலத்தில் நடக்க வேண்டிய தரும வ்ருத்திகளைப் பறைசாற்றுகின்றன. ஆகையால் தான் கீதாஸாரம் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லோராலும் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஒரு பெரும் உபதேசமாகக் கருதப்படுகிறது. விவேகத்தால் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யாதி துஷ்ட குணங்களை வென்று, மனதை ஓர் நிலையில் வைத்து, தருமம், ப்ரேமை, கருணை, ஸமபாவம், பரோபகாரம், வைராக்யம், த்ருட நிச்சயம் என்ற நல்வழியில் வாழ்ந்து, அஹம் என்ற பாவத்தை விட்டு, பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து, பக்தியெனும் ஓடத்தில் ஞானமெனும் துழவுகோலின் உதவியால், ஸம்ஸாரம் எனும் மஹா சமுத்திரத்தைக் கடந்து ப்ரம்ம நிலையை அடைய உதவி புரியும் மஹா காவியம் இந்த பகவத்கீதை.

பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது,


மனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது,
காவோ வை ஸர்வா தேவதா: என்பதாக பசுவின் உடலில் வால் நுனியிலிருந்து கால் குளம்பிலிருந்து கொம்பின் நுனிப்பகுதி வரை ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தெய்வம் வாஸம் செய்வதாக நமது சாஸ்திரம் தெரிவிக்கிறது,
கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் பசுவுக்கும் வேதம் கற்ற அந்தணர்களுக்கும் எப்போதும் மங்களம் உண்டாகட்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறோம்,
கோ ப்ராஹ்மண ஹிதர் (பசுவுக்கு நன்மையைச் செய்பவர்) என்றும் கோபாலர் கோவிந்தர் (பசுவை பாதுகாப்பவர்), என்றும் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் பாலலீலை செய்த இடம் கோகுலம் என்று அழைக்கப்படுகிறது,
பசுவை பராமரிக்கும் (யாதவ) குலத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார்.
கோ வை பராமரிக்கும் குலத்தில் பிறந்த கோபிகளே ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.
பசுமாடு நமக்கு பால் (தயிர் நெய்) தந்து உதவுகிறது, பசுவின் சாணமும் மூத்திரமும் அனைத்தையும் சுத்திசெய்யும் தன்மை வாய்ந்தது, ஆகவேதான் பசுவின் பால் தயிர் கோமயம் கோமூத்திரம் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்ச கவ்யம் என தயார் செய்கிறோம், பஞ்சகவ்யமானது அதைச் சாப்பிடுபவரின் உடல் தோல், மாம்ஸம், ரத்தம், மற்றும் எலும்புப் பகுதி வரை உள்ள பாபங்களை (அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல்) எரித்து விடுகிறது என்கிறது சாஸ்திரம்.
கோமூத்திரத்தை சிறிது தலையில் தெளித்துக் கொள்வதே கங்கா ஸ்நானம் செய்த பலன்,
பசுவை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்வதால் பூ (உலகம் முழுவதும்) பிரதக்ஷிணம் செய்த புண்யம்,
பசுவை பூஜித்தால் ப்ருஹ்மா விஷ்ணு ருத்ரர் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்யம்,
கோக்ராஸம் (பசுவிற்கு புல் கொடுத்தல்), கோகண்டூயனம் (பசுவிற்கு கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தல்) மஹா பாபத்தையும் போக்கடிக்கும்,
பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்பும் ஸந்த்யாகாலம் மிக பவித்ரமான கோதூளி காலம் (லக்னம்) எனப்படுகிறது,
பசு நடக்கும் போது எழும் புழுதி மேலே படுவது எட்டுவகை ஸ்னானங்களில் ஒன்றாகும்,
மா என்று கத்தும் பசுமாட்டின் சப்தம் அந்தப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது என்கிறது வேதம்,
கவாம் கோஷ்டே தகுணம் என்பதாக பசுமாட்டின் அருகில் பசுவஸிக்குமிடத்தில் அமர்ந்து செய்யும் மந்திரஜபம் மற்றும் தர்ம கார்யங்களுக்கு நூறு பங்கு பலன் .
மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு , யமன், யம தூதர்கள், பசு மாட்டின் கண்களுக்கு மட்டும் தெரிவார்கள், ஆகவே தான் ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது,
பர (யம) லோகத்துக்கு (யம) தூதர்களால் அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வெந்நீர் ஓடும் வைதரணீ என்னும் நதியைத் தாண்ட முடியாமல் தவிக்கும் போது (தானம் செய்யப்படும்) பசுமாடு வந்து உதவுகிறது, அதன் வாலைப்பிடித்துக் கொண்டு ஜீவன் வைதரணீ நதியைக் கடக்கிறான் என்கிறது கருட புராணம்,
இன்னும் ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு (நாகரீக வளர்ச்சியால்) ஏற்படும் சில இயற்கை மாறுதலால் உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் வெளியிட்டுள்ள ஓர்ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது,
ஆகவேதான் பசுக்களின் பெருமைகளை நன்கு புரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பசுமாட்டை வளர்த்து பாதுகாத்து வந்தார்கள், தற்சமயமும் பலர் ஆங்காங்கே கோசாலைகள் நிறுவி மொத்தமாக பசுவைப் பாதுகாக்கிறார்கள், முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள்,.
ஆனால் வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை வெளி மாநிலத்துக்குக் கொண்டு சென்று துன்புறுத்துகிறார்கள் வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது,
கோஹத்தி மிகப்பெரும் மஹாபாபம், அதைச்செய்வபருக்கு தனியான நரகம் உண்டு, பசுவின் பெருமைகளை உணர்த்தி, பசு துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,
தற்சமயம் ஒரு சிலர் பசுவை (துன்புறுத்த) அழைத்துச்செல்வதை தடுத்து நிறுத்தி ஓரிடத்தில் வைத்து (ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பாராமல்) பாதுகாத்து வருகிறார்கள், பசுவை பாதுகாப்பது மிகப்பெரும் புண்யம், தர்மம், அது குடும்பத்தையே தேசத்தையே பாதுகாக்கும், இவர்களுக்கு ஆதரவு தந்து உதவ வேண்டும்,
பசுக்கள் பாதுகாக்கப்படும் கோசாலைகளுக்குசென்று பசுக்களை பூஜை செய்து ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்வதுடன், பசு இருக்குமிடத்தை சுத்தப்படுத்துதல் பசுவுக்கு சொறிந்து தந்து புல்தந்து சுச்ரூஷையும் செய்யலாம்,
பசுவிற்கு பணிவிடை செய்ததால்தான் வெகு நாட்களாக குழந்தை இல்லாதிருந்த திலீபன் ஸுதக்ஷிணை தம்பதிகளுக்கு நல்ல புத்ரன் பிறந்தான் என்கிறார் காளிதாஸர்,
எங்கு பசுக்கள் பக்தியுடன் பராமரிக்கப்படுகிறதோ அங்கு மஹாலக்ஷ்மி உள்பட அனைத்து தேவதைகளும் ஸான்னித்யமாக இருப்பார்கள், மங்களமும் ஆரோக்யமும் ஏற்படும்,
ஆகவே ஆங்காங்கே பால் (கறவை) நின்ற வயதான பசுக்கள் துன்புறுத்துவது நிறுத்தப்பட்டு, பசுக்களின் மஹிமைகளை தெரிந்து கொண்டு பசுவை கோமாதாவை பாதுகாத்து பூஜித்து தேசத்துக்கும் மனித ஸமூகத்துக்கும் நன்மையைச் செய்ய ஸ்ரீ பகவான் அனுகிரஹிக்கட்டும்