Sunday, November 27, 2016

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும். அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்
”ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா”
என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்

Monday, November 21, 2016

சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.
ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.
ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்
 • மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 • ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
 • ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
 • ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
 • இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
 • ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
 • ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
 • ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 12, 2016

செவ்வாய் தோசம் என்றால் " ..................

செவ்வாய் தோசம் என்றால் "
( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் )
இந்த செவ்வாய் தோஷம் என்பது வெறும் தோஷமே ஆகும்.இதற்காக பயப்பட தேவையில்லை.இது ஆயுளை கெடுப்பது கிடையாது.
சில சோதிடர்கள் செவ்வாய் களத்திரத்தின் ஆயுளை கெடுக்கும் என பயமுறுத்தியதன் விளைவாக பல பெண்களுக்கும்/ஆண்களுக்கும் திருமணம் என்பது நடைபெறுவது கால தாமதமாகி பலர் முதிர்கன்னிகளாகவே இருக்கிறார்கள்.
செவ்வாய் தோஷம் என்பது ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2,4,7,8,மற்றும் 12 ம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷமே ஆகும்.
இதில் என்னைப்பொறுத்தவரை இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இந்த ஸ்தானங்களில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல ஏனெனில் இவை யாவும் திருமணவாழ்வு சிறக்க உகந்த இடமாதலால் இதுபோன்ற இடங்களில் பாவியாய செவ்வாய் பகவான் அமர்தல் கடுமையான செவ்வாய் தோஷத்தை உண்டுபண்ணும் என்பது என் அனுபவ உண்மையாகும்.
இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரைதான் ஜோடியாக இணைக்கவேண்டும் .இதற்கான காரணத்தை அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செவ்வாய் தோஷத்தை பொறுத்தவரை மூன்று வகையாக அவை தரும் பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கலாம்.அவையாவன:-
1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்.
2)தாம்பத்ய உறவை பாதிக்கும் செவ்வாய் தோஷம்
3)உயிரைக்கெடுக்கும் செவ்வாய் தோஷம்
என பிரித்து பார்க்கலாம்.
1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்:
-
செவ்வாய் என்பது நமது உடலில் உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல. உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் ஆகும்.எனவே தாய் பாலை அருந்திய குழந்தைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாக உள்ளார்கள்.மற்றொன்று ஆண்டிபாடி ஆகும்.ஆண்டிபாடி என்றாலே "எதிர்ப்பு சக்தி" என்று பொருள்.இது இரத்தத்தில் மிகுதியாக இருப்பது நல்லது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
இதை ஏன் இவ்வளவு தூரம் ஒரு அறிவியல் ஆசிரியாக விளக்கினேன் ஏன் எனில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களது இரத்தத்தில் இந்த ஆண்டிஜென் எனும் நுண்கிருமி அதிகமாக இருக்கும்.இந்த கிருமிகளை எதிர்க்கும் சக்தியான ஆண்டிபாடியும் அவர்களது இரத்தத்தில் அதிகப்படியாக இருப்பதால் அது அவர்களை பாதிக்காது.ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை மணக்கும்போது இந்த நுண்கிருமிகள் செவ்வாய் தோஷமில்லாதவர் உடலில் நுழைந்து நாளுக்குநாள் உடல் மெலிந்து நோயாளியாவர்.
ஆண் ஜாதகத்தில் இரண்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் செவ்வாய்பகவான் இருந்து அவருடன் ராகு அல்லது கேது பகவான் இணைந்திருந்தால் (இது மனைவி ஸ்தானத்திற்கு ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆக வரும்) இதனால் அவனுக்கு வரும் மனைவிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமிருந்தால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு மாதாவிலக்கு கோளாறுகள்,கர்ப்பபையில் கட்டிகள்,அதிகமான உதிரப்போக்கு,அடிக்கடி கருச்சிதைவு மற்றும் இரத்தசோகை போன்ற நோய் உண்டாகலாம்.இதனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.இது செவ்வாய் திசையினிலோ அல்லது செவ்வாயுடன் சேர்ந்த ராகு,கேது திசைகளில் மேற்படியான பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
இதேபோல பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்திலோ அல்லது பணிரெண்டாமிடத்திலோ செவ்வாய் இருந்து அவருடன் ராகு மற்றும் கேதுபகவான் இணைந்திருந்தால் அவளுக்கு வரும் கணவனுக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்றால் இரத்தத்தில் கிருமிகளின் தாக்குதல்,விரை வீக்கம் ஏற்படுதல் மற்றும் அறுவை சிகிச்சை பாதிப்புகள் செவ்வாய் திசையிலோ அல்லது ராகு/கேது திசைகளில் தரலாம்.
2)தாம்பத்ய சுக்த்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்;-
பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமா இருக்கும்.காம உணர்வு மிகுதியாக இருக்கும்.இரத்தத்தின் தன்மை அதிக வீரியத்துடன் இருக்கும்.உயிர் திரவம்(விந்து/அண்ட அணுக்கள்) கெட்டித்து இருக்கும்.தாம்பத்ய உறுப்புகள் வலிமை மிக்கதாக இருக்கும்.தாம்பத்ய உறவில் தீவிரமான ஈடுபாட்டில் இருப்பார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை அதிகமாக விரும்புவுவார்கள்..இவர்கள் இரத்தத்தில் ஆண்டிஜென் மிகுந்திருக்கும்.
செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.காம உணர்வு சராசரியாக இருக்கும்.இவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவார்கள்.தங்களின் எதிர்பாலினத்தாரை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.தாம்பத்ய உறவுக்கு அதிகம் முக்கியத்துவம் தரமாட்டார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை விரும்பி பேசமாட்டார்கள்.இவர்களது இரத்தத்தில் ஆண்டிஜென் அதிகம் இருக்காது.
எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மற்ற நபரை இணைக்கவேண்டும்.இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ளவரை இத்தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது அவர்களது காம உணர்வுக்கு இத்தோஷமில்லாதவர்கள் ஈடுகொடுக்க இயலாததால் அவர்கள் வேலி தாண்டிய வெள்ளாடு ஆக மாறும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
ஆண்/பெண் ஜாதகத்தில் செவ்வாய் நான்கு,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் இருந்து அவருடன் பாதிக்கப்பட்ட சுக்கிரன் (நீசம்,அஸ்தங்க மற்றும் வக்கிர) இணைந்து சுபர் பார்வை பெறாவிடில்
இவர்களை செவ்வாய் தோஷமில்லாதவரோடு இணைக்கும்போது அவனோ /அவளோ காம மிகுதியால் அதாவது உடல் உறவில் திருப்தியில்லாமல் பல மலரில் தேன் எடுக்கும் வண்டாவாள் அல்லது தனியாக பிரிந்து வாழும் சூழ்நிலையை உருவாக்கும்.இது செவ்வாய் அல்லது சுக்கிரதிசையில் நடக்கலாம்.
3)உயிரை கெடுக்கும் செவ்வாய் தோஷம்:-
கால புருஷ லக்கனத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் தனக்கு சத்ருவான செவ்வாய் பகவனோடு இரண்டு,நான்கு,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர்ந்து அவனுக்கோ/அவளுக்கோ வரும் ஜோடிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து விவாகம் செய்தால் செவ்வாய் திசை சனிபுத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ தன் துணையை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு லக்கனத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதி வலுக்குறைந்த நிலையில் செவ்வாய் தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது இந்த செவ்வாய்தோஷமே தாரதோஷமாக மாறி தோஷம் இல்லாதவரின் உயிரை பறித்து விடும்.அதேநேரத்தில்( 2,7 ஆம் அதிபதி ) வலுவான நிலையில் தோஷமில்லாதவருக்கு திருமணம் செய்யும்போது உடல் நலக்குறைவும்,தாம்பத்ய குறைபாடும் உருவாகலாம்.

Thursday, November 10, 2016

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்.......

நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன. எனவே, ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாகிறது. கால்களுக்கு, நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
எனவே, தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதைத் தவிருங்கள்! குறிப்பாக, சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. இதனால், ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் (சம்மணமாக) அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிடச் சாப்பிடச் சாப்பாடு ஜீரணமாகி விடும்.
ஆனால், இப்பொழுது பலர் காலை மடக்கி உட்காரவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்; அது மலம் கழிக்கும்பொழுது. யாருடைய வீட்டில் இந்திய பாணிக் கழிப்பறை (Indian style toilet) என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமரும்படியான கழிப்பறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால், மேலைப் பாணிக் கழிப்பறை (European style toilet) உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு, முழங்கால் வலியும் அவை சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. ஏனென்றால், இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.
முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால், இப்பொழுது சிறு குழந்தைகள் கூட மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துவதால் அவர்களும் தரையில் அமர முடியாமல் தவிக்கிறார்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்காரக் கூட முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
எனவே, ஏற்கெனவே மூட்டு, முழங்கால் வலி முதலான ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் பரிந்துரைப்படி மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் தயவு செய்து அதைப் பயன்படுத்த வேண்டாம்! அதற்குப் பதிலாக இந்திய பாணிக் கழிப்பறை பயன்படுத்துங்கள். இதனால், குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைப் போல் அமர்ந்து எழ வேண்டியிருக்கும்.
முடிந்த வரை காலைத் தொங்க வைத்து அமர்வதைத் தவிருங்கள்! கட்டிலிலோ, சோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்! சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால், அந்த நாற்காலியில் காலைத் தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடுங்கள்!
இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால், ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். மூட்டு வலியும் கால் வலியும் வராது!