Wednesday, June 25, 2014

உலகின் முதல் சோதனை குழாய் குழந்தைகள்..

லகின் முதல் சோதனை குழாய் குழந்தைகள்..
காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை அத்தினாபுரத்துக்கு அழைத்து வந்து திருதராஷ்டிரனுக்கு மணம் முடித்தனர்.
அப்போது பார்வையில்லாத ஒருவருக்கு தன்னை மணம் முடித்ததை அறியாத காந்தாரி தானும் பார்வை அற்று இருக்க கண்களை திரையிட்டுக் கட்டிக் கொண்டாள்.
மூத்தவராக இருந்தும் பார்வையற்று இருந்ததால் அவருக்கு அரியணை மறுக்கப்பட்டது திருதராஷ்டிரனுக்கு சட்டம் தெரியும் ஆதலால் மறுப்பு தெரிவிக்கவில்லை,விசித்திரவீரியனின் மூத்தமகன் என சில விதிகள் ஏற்றுக் கொண்டாலும் சில விதிகள் மாறாக இருந்ததால் அமைதியானான்.
அவனது உள் மனம் பாண்டுக்கு முன் தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகிவிட வேண்டும், அப்பொழுதான் தனக்கு மறுக்கப் பட்ட உரிமையை தனது மகன் உரிமையோடு அடையமுடியும் என சபதமெடுத்தது.
திருதராஷ்டிரனது மனம்போலவே காந்தாரி கற்பமுற்றாள் கற்பம் இரண்டு வருடங்களுக்கு நீடித்தது. தனக்குப் பிறகு கற்பமுற்ற குந்தி முதல் குழந்தையை பெற்றுவிட்டாள் என்பதை அறிந்து பொறுக்க முடியாமல் கருவிலிருந்து குழந்தையை வெளியே தள்ள முடிவெடுத்தாள்.
தனதுப் பணிப் பெண்களை அழைத்து ஓர் இரும்பு உலக்கையால் வயிற்றில் ஓங்கி,ஓங்கி அடிக்கச் செய்தாள்.முடிவில் அவள் வயிற்றிலிருந்து சதைப்பிண்டம் வெளியே விழுந்தது.குழந்தை அழவில்லையே ஆணா? பெண்ணா? என வினவினாள்.பணிப்பெண்கள் தயங்கினார்கள்,அதட்டினாள் காந்தாரி, பணிப்பெண்கள் உண்மையை கூறினார்கள். காந்தாரி அலறினாள் விதி உண்மையில் கொடூரமானது,வியாசரை அழைத்தாள் "நான் நூறு குழந்தைக்கு தாயாவேன் என்று சொன்னீர்களே?" "எங்கே குழந்தைகள்?" காந்தாரியை சமாதானப்படுத்தி சேடிப்பெண்களை அழைத்து சதைப் பண்டங்களை நூறு துண்டங்களாக வெட்டி நூறு நெய் நிறைந்த குடங்களில் போட்டு வைக்கச் சொன்னார் வியாசரை.
காந்தாரி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டுமென்றாள். வியாசர் மௌனமாய் சிரித்தார், பின் 101 நெய் குடங்களில் சதைப் பிண்டங்களை போட்டு வைத்தார்கள் பணிப்பெண்கள்... 100 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 101 குழந்தைகள் பிறந்து கௌரவர்கள் ஆனார்கள்.

நான் இறந்து போனால் என்னுடன் வருவது தருமம் ஒன்றுதானே!

தருமம் ஒன்றுதானே
துறவி ஒருவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு உண்மை பேசுபவர் யார் எனக் கேட்டறிந்து, அவர் வீட்டில் மதிய உணவு உண்பார். ஒரு நாள் ஓர் ஊருக்குச் சென்றவர், வழக்கம் போல் விசாரித்தார். அதோ அந்த மாடிவீட்டுக்காரர்தான் உண்மை பேசுபவர். அவருக்கு லட்சரூபாய் சொத்து உள்ளது! என்றனர். அங்கு துறவி சென்றதும், வீட்டுக்காரர் ஓடிவந்து ஞானியின் பாதங்களில் விழுந்து, சுவாமி! எங்கள் இல்லத்தில் உணவருந்த வேண்டும்! என வேண்டினார். உமக்கு எவ்வளவு செல்வம் உண்டு? என ஞானி கேட்க. இருபத்திரண்டாயிரம் ரூபாய் சுவாமி! என்றார் வீட்டுக்காரர்.
கோபம் கொண்ட ஞானி, எங்கே உமது வரவு-செலவு கணக்கை காட்டுங்கள்! என்றார். அதில் அவரது சொத்து ஒரு லட்ச ரூபாய் என்பது தெரிந்தது. ஏன் பொய் சொன்னீர்கள்? என கோபத்துடன் கேட்டார் ஞானி. சுவாமி! அது பெட்டியில் உள்ள கணக்கு. இதோ பாருங்கள், தருமக்கணக்கில் இதுவரை இருபத்திரண்டாயிரம் மட்டுமே செலவழிந்துள்ளது. அதுதானே என்னுடையது. நான் இறந்து போனால் என்னுடன் வருவது தருமம் ஒன்றுதானே! இந்தப் பெட்டியில் உள்ள பணமா என்னுடன் வரும்? ஆகவே எனக்கு சொந்தம் வெறும் இருபத்திரண்டாயிரம்தான்! என்றார். இது கேட்டு பெரிதும் மகிழ்ந்த ஞானி, அவரை வாழ்த்திவிட்டு அங்கு உணவு சாப்பிட்டார்

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். 

எல்லாம் அவன் செயல்.....

எல்லாம் அவன் செயல்.....
மகாபாரதத்தில் ஒரு நாள்....
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் நடக்கிறது. போரில் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரும் வீர மரணம் எய்துகின்றனர். கௌரவர்கள் தரப்பில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பலர் சாய்ந்தனர். இறுதியாக கௌரவர்களின் சுயநலகாரன் துரியோதனன். பதினெட்டு நாள் பாரதப் போர் முடிவுக்கு வந்திருந்தது.பீமனால் தொடைகள் பிளக்கப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தான் துரியோதனன். தரையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல், குமுறும் கோபத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு, இரண்டு கைகளாலும் பூமியை அடித்துக் கொண்டு புழுதியில் புரண்டு கொண்டிருந்தான். மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய உடலைத் தின்பதற்காக, கழுகுகளும் நரிகளும் அங்கே சூழ்ந்திருந்தன. காத்துக்கொண்டிருந்தன.
துரோணரின் மகனும் துரியோதனின் நண்பனுமான அஸ்வத்தாமன், அங்கே ஓடோடி வந்தான். உயிர் போகமால் மரண வலியுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். அவனிருந்த நிலையைக் காணசகிக்காமல் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான். கோபத்தினால் சிவந்த விழிகளுடன் ஆக்ரோஷ்மமாக சொன்னான்: 'துரியோதனா! எனது தந்தை துரோணர் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதுகூட நான் இத்தனை வேதனை அடையவில்லை. ஆனால் உன்னை இந்த சூழலில் பார்க்கும்போது, மனம் எரிமலையாகக் கொதிக்கிறது. சத்தியமாக சொல்கிறேன். எதிரியின் கூட்டத்தில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமால் அனைவரையும் இன்றிரவே தீர்த்துவிடுகிறேன் என்று சபதமெடுத்துக் கிளம்பினான்.
போர் முடிந்தபின், வந்திருப்பவர்கள் பாண்டவர்கள் என்று தெரியாமல் காந்தாரியும், திருதாரஷ்டரும் இறுதியில் கேட்கிறார்கள் எனது பிள்ளைகள் ஜெயித்தார்களா! என்று, தர்மன் முன் சென்று போரைப்பற்றி சொல்லும் போது கிருஷணர் நீ நில் நான் சொல்கிறேன் என்று. காந்தரியிடம் பார்த்தாயா உனது பிள்ளைகள் கௌரவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். உனது பிரியமான பிள்ளையான துரியோதனன் தொடைகள் பிளக்கப்பட்டு இறந்துக்கிடகிறான் என்று ஆக்ரோஷமாக கிருஷணர் சொன்னார். இதானால் கோபமடைந்த காந்தாரி. ஹேய் கிருஷ்ணா ... இந்த போர் அனைத்துக்கும் நீதான் காரணம்(பாவம் இப்போதுதான் தெரிந்துருக்கிறது அவளுக்கு) என்று கூறி உனது குலம் அழிந்து போகும் என்று சாபம்விட்டாள்.
நடப்பவை அனைத்தும் இறைவனின்(கிருஷ்ணனின்) லீலை என்று நாம் உணர்ந்து நமது செயல் அனைத்தும் அவனுக்கு அர்ப்பணம் செய்வோம்

தன்னைத் தானுணர்தல்

தன்னைத் தானுணர்தல்.
ஒ-நாமி என்ற மல்யுத்த வீரன் மிகவும் புகழ் பெற்று திகழ்ந்தான். அவன் குருவையும் வெல்லும் ஆற்றல் பெற்றவன். ஆனால் ஓர் போட்டியில் தோல்வியை தழுவினான்.
ஒரு ஜென் குருவிடம் சென்று சந்தித்து தனது பிரச்சனையை கூறினான். அவன் மீது கருணை கொண்ட குரு ஒ-நாமியைப் பார்த்து,
ஒ-நாமி என்றால் பேரலைகள் என்பது உனது பெயர், "இன்று இரவு முழுவதும் இந்த மடத்திலேயே தங்கி இரு, நீ ஒரு மல்யுத்த வீரன் என்பதை மறந்துவிடு, அந்த அதிவேகமாக கரையை முட்டும் அலைகளைப் போல, பேரலைகள் உருவாகி பெரும் சப்தத்துடன் அதி வேகமாக வரும் போது, எதிரில் உள்ள அனைத்தையும் தவிடு பொடியாக்கும், அந்த பேரலைகளை கவனி. நீயே அலைகள் என உணர். அலையாகி விடு.. என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
ஒ-நாமி தரையில் அமர்ந்து தானே அந்த அலைகளாக எண்ணி தியானம் செய்ய ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக அலைகளின் வேகமும் உயரமும் பெரிதாகிக் கொண்டே வருவதை உணர்ந்தான். அந்த அலைகள் மடத்தின் உள்ளே இருந்த பூந்தொட்டிகளை வேகமாக தள்ளி கீழே விழவைத்தன. கொஞ்ச நேரத்தில் புத்த விக்ரத்தையும் அந்த அலைகள் விட்டு வைக்க வில்லை. காலை ஆவதற்குள் அந்த மடம் அலைகளின் நுரைகளும், சப்தமும் கொண்டு முழுவதுமாக பேரலைகளில் சிக்கி முழ்கியது.
காலையில் வந்த குரு, ஒ-நாமி தியானம் செய்து கொண்டு இருப்பதை பார்த்தார். புன்னகையோடு மல்யுத்த வீரனின் தோலில் தட்டி "இனி எதுவும் உன்னை தடை செய்ய முடியாது, நீ அந்த அலையாகி விட்டாய், " என்றார். அவன் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.
அன்றே ஒரு மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வென்றான். அதன் பிறகு ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிய வில்லை.
உண்மை குரு எதையும் நமக்கு உபதேசிப்பது இல்லை. நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார். அவ்வளவுதான். தன்னைத் தானுணர்தல் ஞானம்.

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே
ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாயினும் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுடனும், அறுபதை தாண்டிய முதியவர்களுடனும் செலவிட்டு பாருங்கள். அந்த நாள் சிறப்பாய் அமையும் என்கிறார்கள். அவர்களிடமே நமக்கு கற்பதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும். ஆனால் நாம் தயங்கி அந்த நல்ல சந்தர்பங்களை நழுவ விடுகிறோம்.
பின்வரும் சம்பவம் மனித உறவுகளுக்கான கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம் விவரித்தது. இது தன் பெற்றோருக்கு முதல் விமான டிக்கெட் வாங்கி வந்த நிகழ்வும், அதன் பின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சி பற்றியது. இனிஅவருடைய சொந்த உணர்வுகளில், ...
அன்று என் பெற்றோர் சொந்த ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள். அவர்கட்கான டிக்கெட்டை அந்த முறை JetAirways மூலம் பதிவு செய்தேன். அதற்கு முன் எனது தந்தை விமானத்தில் பயணித்தது இல்லை. டிக்கெட்டை அவர் கைகளில் கொடுத்த பொழுது முற்றிலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த நிமிடமே குதூகலம் அவர் முகத்தில் அப்பிகொண்டது. பயணிக்கும் நொடிக்கான காத்திருப்பு, ஒரு பள்ளி சிறுவன் போல் அன்று அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.
நாங்கள் அனைவரும் அன்று அவரை வழியனுப்ப அவருடன் விமான நிலையம் சென்று இருந்தோம். சுமைகளை எடுத்து செல்லும் டிராலி முதல், விமான நிலைய சோதனைகள், விமானத்தில் ஜன்னலோர சீட் என பரபரப்போடும், மகிழ்ச்சியோடும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த பயணத்தை அனுபவித்து செல்வது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும். அவரது மகிழ்ச்சியை, இந்த அனுபவத்தை கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அவர் விமான சோதனைக்கு செல்லும் முன் என்னை நோக்கி வந்தார். அப்படி வந்தவர் கண்களில் நன்றி பெருக்கிற்கான ஈரம் தெரிந்தது. நெகிழ்ச்சியோடு என்னிடம் தன் நன்றியை தெரிவித்தார். அந்த தருணத்தில் என் தந்தை மிக மிக உணர்சிவயப்பட்டவராய் காணப்பெற்றார். நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது அவருக்கு மிக பெரியதாக தோன்றியுள்ளது. நான் அவரிடம் நன்றி சொல்ல இதில் எதுவும் இல்லை என சொன்னேன்.
இந்த நிதழ்ச்சியுடன் பின்னர் என் வாழ்வை பற்றி நான் சிந்தித்து பார்த்தேன். நாம் குழந்தையாய் இருந்த தருணங்களில் நம் பெற்றோர் நம் எத்தனையோ கனவுகளை நனவாக்கி உள்ளனர். அவர்களின் அப்போதைய பொருளாதார நிலையை உணராமல், நாம் கிரிக்கெட் மட்டைகள், துணிமணிகள், பொம்மைகள் என அவ்வப்போது நச்சரித்து உள்ளோம். அவர்களின் இயலாமையிலும், நம்முடைய எல்லா தேவைகளையும், பூர்த்திசெய்திட முன்வந்துள்ளனர். நாம் எப்போதாவது, நம் பொருட்டு அவர்களின் தியாகத்தை எண்ணி உள்ளோமா? நம் விருப்பங்களுக்கு அவர்கள் எவ்வளவோ இழந்துள்ளனர்.
நாம் இதுவரை நம்பொருட்டு அவர்கள் செய்தவற்றிற்கு நன்றி செய்துள்ளோமா? நம் மகிழ்ச்சியை நன்றியை சொல்லி உள்ளோமா? அதே போல், இன்று நம் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது, நன்கொடையை பொருட்படுத்தாது நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளுக்கு சிறப்பான பொம்மைகள், சிறப்பான தீம் பார்க்குகள் என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால் நாம் ஒன்றை முற்றிலும் மறந்து விட்டோம். நம் பெற்றோர் நம் மகிழ்ச்சிக்காக செய்த தியாகத்தை மறந்துவிட்டோம்.
ஆகவே நம்முடைய கடமை, அவர்களின் சிறிய சிறிய கனவுகளை நனவாக்க முயல்வதே. அவர்கள் இளமையில் பெற முடியாததை, அந்த சந்தோஷ தருணங்களை மீட்டு தருவதே. இவற்றை நாம் அவர்கட்கு அளித்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் முழுமை அடையும்.
நிறைய தருணங்களில், என் பெற்றோர் சில கேள்விகளை கேட்பார்கள். அந்த தருணத்தில், பொறுமை இன்றி நான் பதில் சொல்லி உள்ளேன். ஆனால் அதற்கு மாறாக , இன்று என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைய மரியாதையோடு பதில் சொல்லிவருகிறேன். நான் தற்போது உணர்கிறேன். என் பெற்றோர் அடைந்த வருத்தத்தை, இன்று என்னால் உணர முடிகிறது.
முதியவர்கள் அனைவரும், தம் இரண்டாவது குழந்தை பருவத்தில் உள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். இதுவும் நம் குழந்தைகளை போற்றி பாதுகாப்பது போன்றதே. அதே அக்கறையும், அதே சிரத்தையும், நம்முடைய முதிர்ந்த பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.
அவர்கள் பொருட்டு நேரம் ஒதுக்குவதும், பணிவோடு பதில் சொல்வதும், அவர்கட்கு மிக மிக அவசியம். அவர்களின் கண்ணை பார்த்து, மிக்க மகிழ்ச்சி வெளிப்பட பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்கிறேன். பத்திரிக்கை படித்தவாறு ஒற்றை மொழியில் பதில் சொல்வதை தவிர்பேன். என்பொருட்டு அவர் நன்றி சொல்வதை விட்டு, இத்தனை காலம் அவரின் சின்ன சந்தோசத்தை நிறைவேற்றிட முன்வராமல் இருந்ததற்காக வருத்தபடுகிறேன். இன்று முதல் அவர்களின் சந்தோசத்திற்காக என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.
அவர்கள் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் எல்லா ஆசைகளையும், இனியும் பேர குழந்தைகளை எண்ணி விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கட்கும் நியாயமான ஆசைகள் நெஞ்சத்தில் உண்டு.
அக்கறையோடு பெற்றோரை காத்திடுங்கள். உங்கள் பெற்றோர் விலைமதிக்க முடியாதவர்கள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 36

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 36

பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருப்பவராகட்டும், அலுவலகத்தில் பணிபுரிபவராகட்டும்… அவர்கள் எப்படிச் செயல்படவேண்டும் தெரியுமா?

ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு ஞானத்தை வழங்கி, அவர்களைக் கைதூக்கிவிடுபவர்களாக இருக்கவேண்டும். குறிப்பாக, படிப்பில் மந்தமாக இருக்கிற மாணவர்களை அடையாளம் கண்டு, கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான், அந்த ஆசிரியர் அடுத்தடுத்த காலகட்டங்களில் தலைமை ஆசிரியராக, பள்ளி முதல்வராக எல்லாம் உயரமுடியும்.

அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவருக்கும் அடுத்தடுத்த உயர்பதவிகளை அடையவேண்டும் என்று விருப்பம் இருக்கும். தான் செய்கிற வேலையில் இருந்து விடுபட்டு, அடுத்த உயர் பதவிக்கு அவர் செல்லவேண்டும் என்றால், அவர் அதுவரை பார்த்து வந்த வேலையைத் திறம்படச் செய்வதற்கு, அவருக்குக் கீழே பணிபுரிபவரைத் தகுதியுள்ளவராகச் செய்து, தன் இடத்துக்கு உயர்த்திவிடவேண்டும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, அவருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்; அவருக்குக் கீழே இருந்த நபரும் முன்னுக்கு வந்துவிடுவார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. மகாபாரத யுத்தத்தில் வென்றவர் யார் என்றால் சாட்ஷாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்தான். இத்தனைக்கும் அவர் எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை; எவர் சிரசையும் கொய்து வீரத்தை நிலை நாட்டவில்லை. ஆனாலும், ஜெயித்தது அவர்தான். தர்மத்தை நிலைநாட்டியது கண்ண பரமாத்மாதான்.

‘அப்படியென்றால், பஞ்ச பாண்டவர்கள்தானே போரில் ஈடுபட்டார்கள்? அவர்கள்தானே கடும் சண்டையிட்டு, ஒவ்வொருவராக வீழ்த்திக் காட்டினார்கள்? அவர்களுக்கு அந்தப் பெருமை சேராதா?’ என்று கேட்கலாம்.

உண்மைதான். ஆனால், பஞ்ச பாண்டவர்களை உயர்த்துவதற்காக, தருமமே சிறந்தது என்று அறத்தின் வழியே வாழ்ந்தவர்களை கௌரவப்படுத்துவதற்காக ஸ்ரீகண்ணபிரான் செய்த விளையாட்டு அது! பஞ்சபாண்டவர்கள் போர் தொடுத்தார்கள்; ஆனால், அவர்கள் வெற்றியைத் தழுவுவதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர்தான் உறுதுணையாக, பக்கபலமாக இருந்தார். அதனால்தான் பகவானை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.

கண்ணபிரான் கால்நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தார். ஆனால், தூங்கவில்லை. அர்ஜுனனும் துரியோதனனும் வருவதை அறிந்தவர், தூங்குவதுபோல் நடித்தார். உள்ளே நுழைந்த அர்ஜுனன், அவரின் திருவடிக்கு அருகில் நின்றுகொண்டான். துரியோதனன் அவரின் திருமுடிக்கு அருகில் நின்றான்.

கண்களைத் திறந்த பகவானின் பார்வையில் முதலில் பட்டவன், திருவடி அருகில் நின்றிருந்த அர்ஜுனனே! ‘என்ன வேண்டும்?’ என்று பகவான் கேட்க, ”யுத்தத்துக்கு உதவி புரியவேண்டும்” என்றான் அர்ஜுனன்.

உடனே ஸ்ரீகிருஷ்ணர், ”என்னிடம் கோடிக்கணக்கான வீரர்கள் உள்ளனர். அந்தப் படை வேண்டுமா, அல்லது நான் ஒருவன் இருக்கிறேன். நான் வேண்டுமா? கேள் அர்ஜுனா?” என்றார்.
அதைக் கேட்டு துரியோதனன் திடுக்கிட்டான். சற்றே கோபமானான். ஸ்ரீகிருஷ்ணனின் பார்வையில் படும்படி வந்து நின்று, ”கண்ணா, நான்தான் முதலில் நுழைந்து உன் அருகில் வந்து நின்றேன். என்னிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அவனிடம் முதலில் கேட்பது சரியல்ல!” என்றான்.

”அடடா..! கண் விழித்ததும் எனக்கு முன்னே அர்ஜுனன் நின்றிருந்ததைத்தான் பார்த்தேன். போகட்டும், உன்னைவிட அவன் வயதில் சிறியவன் அல்லவா! எனவே, இளையவனிடம் முதலில் கேட்பதே முறையாக இருக்கும்” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

அதையடுத்து அர்ஜுனன், ”உன்னிடம் கோடி பேரென்ன… பத்து கோடி பேர் கொண்ட படை வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்களுக்கு அந்தப் படை வேண்டாம். நீ ஒருவன் மட்டும் எங்கள் பக்கம் இருந்தால் போதும், கண்ணா. யுத்தத்தில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்!” என்று உறுதிபடத் தெரிவித்தான்.

ஆமாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நாயகன்; சகாயன்; நாதன்; ஆசிரியன்; ஆபத்பாந்தவன். அதனால்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் துணையை பஞ்சபாண்டவர்கள் நாடினார்கள்; வெற்றியும் பெற்றார்கள்.

பகவான் கண்ணபிரான், நம்மை அழைத்துச் செல்கிறான். நமக்குத் தேவையில்லாதவற்றை எல்லாம் அழித்தொழித்துவிட்டுத் தேவையானவற்றை வழங்குகிறான். இதனை ‘நயதி’ அதாவது ‘அழைத்துச் செல்பவன்’ என்றும், ‘பிராபயததி’ அதாவது ‘தேவையானவற்றைத் தந்தருள்கிறான்’ என்றும் போற்றியுள்ளனர் பெரியோர்.

அதுமட்டுமா? நம்மை வழிநடத்துபவனே பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான். பாண்டவ சகோதரர்களை யுத்தத்தில் வழிநடத்தியதும் அவன்தானே! ‘அது எப்படி? சேனைக்கு அதிபதியாக, சேனாதிபதியாக இருந்தால்தானே அவன் யுத்தத்தை வழிநடத்தியிருக்கமுடியும்? அவன் வெறும் தேரோட்டிதானே?’ என்று சிலர் கேட்கலாம்.

சரி… தேரில் கண்ணபிரான் தேரோட்டுகிறான். பின்னே அர்ஜுனன் அமர்ந்திருக்கிறான். இப்போது வழிநடத்திச் செல்பவர் யார்? எவருக்குத் தரவேண்டும் மரியாதை?

முன்னே இருப்பவன் என்பதால், கண்ண பிரானுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? முதலாளி என்பதால் அர்ஜுனனுக்கு மரியாதை செய்யவேண்டுமா?

அர்ஜுனன் உட்பட இந்த உலகத்து மக்கள் அனைவருக்குமே மோட்சம் பெறவேண்டும் என்கிற விருப்பம் உண்டு. மோட்ச கதி அடையவேண்டும் என்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்கிற தேடல் இல்லாத மனிதர்கள் வெகு குறைவு.

வீட்டில் இருக்கும்போது வீட்டுக்கான கடமைகளைச் செய்து, அலுவலகத்தில் இருக்கிற நேரத்தில் நமக்குக் கொடுக்கப் பட்ட வேலையைச் சிறப்புறச் செய்து வாழ்வதுதானே வெற்றிக்கான வழி! அதேபோல், மோட்ச கதியை அடைய வேண்டும் என்றால், பக்தி யோகத்தில் திளைக்கவேண்டும்; ஞானத்தின் மீது விருப்பம் கொண்டு ஆழ்ந்து தியானிக்க வேண்டும். உண்மையான பிரார்த்தனையை உடனடியாக ஈடேற்றித் தருவான் பரந்தாமன். ஆக, தேடலும் ஆவலும் கொண்டு இருக்கிற அர்ஜுனன், ஜீவாத்மா. எனவே, அந்த நோக்கத்தின்படி பார்த்தால், அர்ஜுனனுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? அல்லது அந்த யோகத்தையும் ஞானத்தையும் தந்தருளும் பரமாத்மாவுக்கு முன்னுரிமை அளித்து, முக்கியத்துவம் தரவேண்டுமா?

தருபவன் இறைவன்; பெறுபவன் அடியவன். நமக்கு எங்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அவை அனைத்துக்கும் வித்தாக நிறைந்திருப்பவன், பரமாத்மாவே! அதனால்தான், ஸ்ரீகண்ணனை நாயகன் என்று போற்றித் துதிக்கிறோம்; கொண்டாடுகிறோம்!

எள் தானம் வாங்குபவர், கொடுப்பவரைப் பார்க்கக்கூடாது என்பது சாஸ்திரம்

சொந்த உழைப்பினால் கிடைக்கும்

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கும் நேரம்... அப்போது, 'பீடைகள் நீங்கட்டும்' என்பதற்காகச் செய்யப்படும், 'பீடா பரிஹார தானம்' செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 'தில தானம்' எனப்படும், எள்தானமும் ஒன்று. விவரம் அறிந்தவர்கள், அத்தானத்தை வாங்க மாட்டார்கள்.
மிகவும் தரித்திர நிலையில் இருப்பவர்களும், பண்பாட்டை உதாசீனம் செய்பவர்களும் தான், இத்தானத்தை வாங்குவர். அதனால், அத்தானத்தை வாங்க வைப்பதற்காக, 'எள்ளைக் கையேந்தி வாங்க முன்வருவோருக்கு, ஒரு தங்க கட்டி வழங்கப்படும்...' என, அறிவித்தார் வசிஷ்டர். அப்போதும் யாரும் வரவில்லை.
சில காலம் ஆயிற்று; அயோத்தி எல்லையில், உயர்ந்த தவசீலரான சிங்கார முனி என்பவர், தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்ததால், அவரின் மனைவி, எள் தானத்தை வாங்க தூண்டினாள்.
முனிவரோ, 'பெண்ணே... தங்கத்தின் மீது ஆசைப்பட்டு, அத்தானத்தை நான் வாங்கினால், என் தவம் முழுவதும் போய் விடும்....' என்று கூறி மறுத்தார்.

அதற்கு அவர் மனைவி, 'ஏன் கவலைப் படுகிறீர்... தானம் வாங்கியவுடன், அதைக் கொடுக்கும், ஸ்ரீ ராமரை உடனே நிமிர்ந்து பார்த்து விடுங்கள்; தோஷம் ஒன்றும் ஏற்படாது...' என்றாள். இதனால், மனச் சமாதானம் அடைந்த சிங்கார முனி, தானம் வாங்க அரண்மனைக்கு வந்தார். இந்த விவரத்தை அறிந்த வசிஷ்டர், சிங்கார முனி தானம் வாங்கியதும், ஸ்ரீராமரைப் பார்க்க முடியாதவாறு, திரை போட்டு மறைத்து விட்டார்.

எள் தானம் வாங்குபவர், கொடுப்பவரைப் பார்க்கக்கூடாது என்பது சாஸ்திரம்; அதனால் தான், வசிஷ்டர் அவ்வாறு செய்தார்.
தானம் வாங்கிய சிங்கார முனி, தன் எண்ணம் ஈடேறாமல், தவத்தையும், ஞான ஒளியையும் இழந்து, வீடு திரும்பினார்.

நடந்ததை அறிந்த அவரின் மனைவி, 'கவலைப்படாதீர்கள்...விழாவின் கடைசி நாளன்று, ஸ்ரீராமர் ஊர்வலம் வருவார். நம் குடிலின் அருகில் தான் ஊர்வலம் திரும்பும். அப்போது நீங்கள், இங்கேயே ஸ்ரீராம தரிசனம் செய்யுங்கள்; பாவம் போய், இழந்த தவ வலிமையை பெற்று விடுவீர்கள்...' என்றாள்.

சிங்கார முனியும் அப்படியே செய்து, தன் பாவத்தைத் தீர்த்துக் கொண்டார். அரண்மனையில் இருந்து வந்த தங்கத்தை, அதன் பின், அவர் தொடவே இல்லை.

சொந்த உழைப்பினால் கிடைக்கும் செல்வமே நிலைத்து நிற்பதுடன், 

மனதிற்கு சந்தோஷத்தையும் தரும். 

யார் நல்ல வாய் உடையவர்?

அருள்வாக்கு - யார் நல்ல வாய் உடையவர்?

முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண - இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும், தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம். 

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good & humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீன மாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் என்றால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது. அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 

21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர்\ கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.

மகா பெரியவா!

சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.

சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

'தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து....

Tuesday, June 24, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 35

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 35

மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்! அதாவது, ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான முகம் என்று சொல்ல வில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சூழலிலும் எத்தனைவிதமான முகங்களைக் கொண்டு செயல்படுகிறோம், பாருங்களேன்!
வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், வீடு- அலுவலகம் இரண்டிலும் இல்லாமல் வெளியே பொது இடங்களில் இருக்கும்போது வேறொரு முகம் என்று எத்தனை முகங்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்?! ‘அவரு ஆபீஸ்லதாம்பா இப்படி. வீட்டுக்குப் போனா பெட்டிப் பாம்பா அடங்கிடுவாரு’ என்று, அலுவலகத்தில் புலியாக இருப்பவர் தனது வீட்டில் பூனையாக இருக்கிற விஷயத்தை எவ்வளவு கேலியும் கிண்டலும் பொங்கச் சொல்கிறோம்!

அதுமட்டுமா? நண்பரோ உறவினரோ… எதிரில் நின்று பேசுகிற வரைக்கும் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு பேசுவதும், அவர் அங்கிருந்து நகர்ந்ததும் சட்டென்று வேறொரு முகம், வேறொரு நாக்கு, வேறொரு பேச்சு என்று அவரை ஏளனமாக ஏசுவதும் மனித வழக்கத்தில் இருக்கிறது. இப்படிப் பொய்முகங்கள் கொண்டு வாழ்கிற மனிதர்கள் நிறையவே உண்டு!
அதுசரி… பகவானே அப்படித்தான் பல முகங்களைக் கொண்டிருக்கிறான் என்று எவரேனும் சொல்லலாம்.

உண்மைதான். பெருமாளுக்குத் திருமுகங்கள் பல உண்டு. ஒரு முகத்தைக் காட்டியருளும்போது, மற்ற எல்லா முகங்களையும் மறைத்துக் கொள்கிறார். உலக பயன்பாட்டுக்காகவும், அடியவர்களுக்கு அருள்வதற்காகவும் பல முகங்கள், பல அவதாரங்கள் எடுத்துள்ளார் பகவான். ஆனால், மனிதர்களைப்போல் பொய் முகம் காட்டுகிற குணம் பகவானிடம் இல்லவே இல்லை. அவர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர். இன்ப- துன்பங்கள் அவருக்கு இல்லை. நன்மை- தீமை என்று இரண்டு வேறுபட்ட உணர்வுகள் அவருக்குக் கிடையாது. ஏனென்றால்… உலகையே உய்விக்கும் நாயகன், இறைவன்.

தேவை என்பது நமக்குள் வேறுபட்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையானது எனக்குத் தேவையில்லாததாகவும், எனக்குத் தேவையில்லை என்று நான் நினைப்பது உங்களுக்கு மிக மிக அவசியமானதாகவும் இருக்கிறது. எது எப்படியாயினும், உலகின் அனைத்து மனிதர்களும், தேவை என்று ஒவ்வொரு விஷயத்தை நினைக்கின்றனர். அந்த விஷயம் குறித்துக் குழம்புகின்றனர். அதற்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்று தேடுகின்றனர். அப்படி ஒரு விஷயத்தைத் தேடினால், அதற்கு உண்டான அர்த்தத்தை அறிய வேண்டும் என்று விரும்பினால், அவை அனைத்தும் எங்கே கிடைக்கும் தெரியுமா? மகாபாரதத்தில் நிச்சயமாகக் கிடைக்கும்.

நமக்கான மிகப் பெரிய வித்தும் சத்தும் அதில்தான் நிரம்பி இருக்கின்றன. மகாபாரதம், நம் தேசத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. இறைவன் தானே விரும்பி நமக்குத் தந்திருக்கிற கொடை! மகாபாரதத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அதனை வேறு எங்கே தேடினாலும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட மகாபாரதத்தைத் தந்தருளியதால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.
ராமாயணம், சீதையின் வைபவத்தை அழகுற நமக்குத் தந்தருளியது என்றால், மகாபாரதம் ஸ்ரீகிருஷ்ண வைபவத்தை முழுவதுமாகப் பறைசாற்றுகிறது.

ஸ்ரீராமரைப் போல் நாமும் வாழவேண்டும் என்பதே ராமாயணத்தின் சாராம்சம். ஸ்ரீராமரை முன்மாதிரியாக, ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீராம சரிதையின் நோக்கம்!
‘அப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணரைப்போல் வாழவேண்டும் என்பதைச் சொல்கிறதா மகாபாரதம்?’ என்று எவரேனும் குதர்க்க மாக யோசிக்கலாம்; கேட்கலாம்.

ஸ்ரீகண்ணன் திருடினான், மண்ணைத் தின்றான், ஏகத்துக்கும் பொய்கள் சொன்னான், பதினாறாயிரம் ஸ்திரீகளைக் கொண்டிருந்தான். அதற்காக, ஸ்ரீகிருஷ்ணரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் அப்படியிருக்கலாமே என்று நினைப்பது பெரும் தவறு. சிந்தனையில் பிழை இருப்பதாக அர்த்தம். ஒட்டுமொத்த வாழ்வியல் தத்துவங்களைச் சொல்கிற உபதேசம் அடங்கிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்குச் சொல்வதுபோல அகில உலக மக்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசங்களை மனத்துள் இறக்கி, அதன்படி வாழவேண்டும் என்பதே மகாபாரதத்தின் நோக்கம். ஒவ்வொரு மனிதனும் அந்த உபதேசங்களைச் செயல்படுத்தி, செம்மையாக வாழவேண்டும் என நினைத்தாலே, நம் தேசம் இன்னும் வளமாகிவிடும்!

அப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களைத் தந்த கீதையை அருளிய ஸ்ரீகண்ண பரமாத்மாதான் உலகுக்கெல்லாம் நாயகன்! அதனால்தான் அவனுக்கு ‘நாயகன்’ என்று திருநாமம் அமைந்தது.
பரந்துபட்ட உலகை வழிநடத்துபவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவனே நாயகன். அப்படியெனில் நாயகி? பிராட்டி ஸ்ரீருக்மிணிதேவிதான்!

ஒருவீட்டுக்கு நாயகனாகவும் நாயகியாகவும் இருப்பது பெற்றோர். எனவே, அவர்களின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் சொல்கிற விஷயங்களின்படி நடப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ரோல்மாடலாக இருக்கிற பெற்றோர் சரியாக நடந்தால்தான், பொய்யும் புரட்டுமின்றி வாழ்ந்தால்தான், குழந்தைகளும் அவற்றைப் பார்த்து, அதன்படியே நடக்கும். அதனால்தான் தந்தையை குடும்பத்தலைவன் என்றும், தாயை குடும்பத்தலைவி என்றும் சொல்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் தலைவனும் தலைவியுமாக, நாயகனும் நாயகியுமாக இருப்பவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவும் ஸ்ரீருக்மிணி பிராட்டியாரும்.

ஸ்ரீகிருஷ்ணன் நாயகன் என்றால், யுத்தத்தில் முன் நின்று அல்லவா போர் செய்திருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆமாம்… முன்னால்தான் நின்றுகொண்டிருந்தான் ஸ்ரீகிருஷ்ணன். ஒரு தேரைச் செலுத்துபவன் பின்னாடி இருந்துகொண்டு எப்படி ஓட்ட முடியும்? அர்ஜுனனை உட்காரச் சொல்லிவிட்டு, முன்னே ஏறிக்கொண்டுதானே தேரைச் செலுத்தினான்! என்னதான் அர்ஜுனன் வீரன், சூரன் என்றாலும்கூட, அம்பும் வில்லும் வைத்திருந்தாலும், தேர் எப்படிச் செல்லவேண்டும், எங்கே பள்ளம் இருக்கிறது, எந்தத் தருணத்தில் குதிரை திமிரும் என்பதை அறிந்து, அந்தத் தேரைச் செலுத்துவதற்கான கடிவாளம் பகவானிடம்தானே இருந்தது!

இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டுவிட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.

மனத்தைக் கடவுள் பக்கம் திருப்புங்கள். மொத்த மனத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி!

கடவுளிடம் சரணடைதல் என்பது உயர்வான விஷயம். உத்தமமான காரியம். அப்படி ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே பாக்கியவான்கள்!

இறைவன் தரும் வாய்ப்பு!

இறைவன் தரும் வாய்ப்பு!

எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.

அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது. 

அவனும் அதை கோட்டை விட்டான். துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.

விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான் 

இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.

அருச்சுனனுக்கு போரின்போது இந்த போது குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.

கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.

கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன். 

செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன். 

கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.

இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.

திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ 

அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.

இரணியனை எப்போது அவன் கொன்றான்?

பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....

ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை. 

இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.

அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான். 

இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்.

ராமாவதரத்திலும் அதுதான் நடந்தது.

ராமன் பரசுராமனை வென்றபோதே ராமாயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்பார்கள்.

ஏன் எனில் ராவனனை வென்றவன் கார்த்தவீரியார்சுனன்.கார்த்த வீரியாசுனனை கொன்றவன் பரசுராமன். பரசுராமனை ராமன் வென்றபோதே ராம,ராவன யுத்தத்தின் முடிவு தெரிந்துவிட்டது.

ராவணனை கட்டி வனமெங்கும் இழுத்துபோன வாலியை கொன்ரபோது அதுமீண்டும் ஊர்ஜிதமானது. 

அதன்பின் நடந்ததெல்லாம் ராவணன் திருந்த தரப்பட்ட சந்தர்ப்பமே...

ஆயுதமேந்தி தோற்ற ராவணனை அன்றே கொல்லாமல் "இன்று போய் நாளை வா" என சொல்லி அவன் திருந்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தந்தான்.

இறுதிவரை ராவணன் திருந்தவில்லை...இறுதியில் அவனை வேறு வழியின்றி மாய்த்தான்.

 

முனிவருக்கு ஏன் தண்டனை?

முனிவருக்கு ஏன் தண்டனை?

யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர்.

அவர்களின் தலைவன், ”முனிவரே… கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?” என்று கேட்டான்.

முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ”முனிவரே, நான் கேட்பது உங்கள் செவிகளில் விழுகிறதா… இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டான்.

அப்போதும் அவரிடம் இருந்து பதிலேதும் இல்லை. படைத் தலைவனின் கோபத்தைப் புரிந்து கொண்ட வீரன் ஒருவன், ”தலைவரே… முனிவர் ஆழ்ந்த நிஷ்டை யில் இருக்கிறார் போலும்! அவரிடம் பேசி எந்தப் பலனும் இல்லை!” என்று சமாதானம் செய்தான்.

அதை ஆமோதித்த படைத் தலைவன், நாலா திசையிலும் தன் பார்வையை ஓட விட்டான்.


‘ஆள் அரவம் அற்ற இந்த வனத்தில், முனிவரைத் தவிர வேறு எவரும் இல்லையே? கொள்ளையர்கள் பற்றி வேறு எவரிடம் விசாரிப்பது?’ என்று தனக்குள் புலம்பினான். அப்போது, வீரர்களில் ஒருவன் சற்று தூரத்தில் ஆசிரமம் ஒன்று இருப்பதைக் கண்டான்!

”கவலை வேண்டாம் தலைவரே! அதோ, அங்கு ஓர் ஆசிரமம் தெரிகிறது பாருங்கள். ஒருவேளை கொள்ளையர் அங்கு பதுங்கி இருக்கலாம் அல்லது அந்த ஆசிரமத்தில் வேறு எவரேனும் இருக்கலாம். அங்கு சென்றால் நிச்சயம் பலன் கிட்டும்!” என்றான்.

மறு கணம், வீரர்களுடன் அந்த ஆசிரமத்தை நோக்கி குதிரையை செலுத்தினான் படைத் தலைவன்.

அவர்கள் உள்ளே நுழைந்து தேடினார் கள். அந்த வீரன் கணித்தது சரிதான். அந்த ஆசிரமத்துக்குள் பொருட்களைப் பதுக்கி வைத்து விட்டு, ஆசிரமத்தின் பின்புறம் ஒளிந்திருந்தது கொள்ளையர் கூட்டம். பொருட்களைக் கைப்பற்றியதுடன் கொள்ளையரையும் கைது செய்து படைத் தலைவனின் முன் நிறுத்தினர்.

அவர்களைக் கண்டதும் படைத் தலைவனுக்கு முனிவரின் நினைவு வந்தது! அவன், முனிவரையும் கொள்ளையரையும் இணைத்து தப்புக் கணக்குப் போட்டான். ‘முனிவர் வேடத்தில் இருக்கும் அவனே இந்தக் கும்பலுக்குத் தலைவனாக இருக்கக் கூடும். அவனே கொள்ளைக்கு மூல காரணம்!’ என்று முடிவு செய்தவன் அரண்மனைக்கு விரைந்தான்.

நேராக அரசனிடம் சென்ற படைத் தலைவன், ”அரசே… கொள்ளையரையும், அவர்களின் தலைவனையும் பிடித்து விட்டோம்! இதுவரை நம் நாட்டில் நடந்து வந்த கொலை- கொள்ளைகளுக்கு மூலகாரணமான அந்தக் கயவன், முனிவர் வேடத்தில் கானகத்தில் தங்கி நம்மை ஏமாற்றி உள்ளான்!” என்றான்.

இதைக் கேட்டுப் பெரிதும் சினம் கொண்ட அரசன், ”கணமும் தாமதிக்காமல் அவனை சூலத்தில் ஏற்றுங்கள்!” என்று உத்தர விட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்! கானகத்துக்குச் சென்ற படைத் தலைவன், அரசனின் ஆணையை நிறைவேற்றும் விதமாக, யோக நிலையில் இருந்த மாண்டவ்ய முனிவரை சூலத்தில் ஏற்றினான்.

நாட்கள் நகர்ந்தன. சூலத்தில் தொங்கிய நிலையிலும் தனது யோக சக்தியின் காரணமாக உயிருடன் இருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அங்கு வந்த முனிவர்கள் பலர், மாண்டவ்ய முனிவரின் நிலையைக் கண்டனர்.

”உமக்கா இந்த கதி?!” என்று வருந்தினர்.

”இந்த நாட்டு மன்னன் எனக்கு அளித்த வெகுமதி இது!” என்றார் மாண்டவ்ய முனிவர்.

‘மாண்டவ்யர் கொள்ளையன் அல்ல; பெரும் முனிவர். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது’ என்கிற செய்தி காட்டுத்தீ போல் நாடெங்கும் பரவியது. உண்மை அறிந்த மன்னன் ஓடோடி வந்தான். சூலத்தில் இருந்து முனிவரை விடுவிக்க ஆட்களை ஏவினான்.

அத்துடன், ”முனிவரே… உங்களது பெருமையை அறியாமல், அடியேன் செய்த பிழை யைப் பொறுத்தருள வேண்டும்” என்று கதறியபடி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான். முனிவர் அவனைத் தேற்றி, வழியனுப்பி வைத்தார்.

பிறகு, தனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள தர்மதேவதையிடம் சென்றார்.

”தர்ம தேவதையே, என்ன அநியாயம் இது? இந்த உபத்திரவத்தை அனுபவிக்கும் அளவுக்கு நான் செய்த பாவம் என்ன?” என்று ஆவேசமாக கேட்டார் மாண்டவ்யர்.

தர்மதேவதை அமைதியாகப் பதில் அளித்தாள்: ”முனிவரே, பட்சிகளையும் வண்டுகளையும் இம்சித்ததால் ஏற்பட்ட பாவத்தின் விளைவு இது!”

முனிவர் அதிர்ச்சி அடைந்தார்: ”நான் இம்சை செய்தேனா… எப்போது?” எனக் கேட்டார்.

”நீங்கள் குழந்தையாக இருந்தபோது!” என்றது தர்ம தேவதை. அவ்வளவுதான்! ஆவேசம் அடைந்தார் மாண்டவ்ய முனிவர்.

”தர்ம தேவதையே! இது அநியாயம்; அக்கிரமம். அறியா பருவத்தில் தெரியா மல் நான் செய்த தவறுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை தந்த நீ, பூலோகத் தில் மனிதப் பிறவி எடுக்கக் கடவது!” என்று சபித்தார்.

முனிவரின் சாபம் பலித்தது. அதன்படி பூமியில் விதுரனாக அவதரித்தாள் தர்மதேவதை.

மகாபாரத கதாபாத்திரங்களில் மிக முக்கியமானவர் இந்த விதுரர்; வியாசரின் புதல்வர். தர்ம சாஸ்திரத்திலும் ராஜ தந்திரத்திலும் சிறந்த ஞானியான விதுரரது உபதேச மொழிகள், ‘விதுர நீதி’ என்று புகழ் பெற்றவை!
..

உயர்வு தரும் பௌர்ணமி பூஜை

உயர்வு தரும் பௌர்ணமி பூஜை

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி ‘ஸ்ரீசந்திரிகா’ என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.

ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரேஞ் (Orange ) நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 33

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 33

கேட்பது என்பது வேறு; உணர்வது என்பது வேறு! கேட்டதை உணர்வதாக, உணர்ந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உணர்ந்ததையும் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல், வேறுவிதமாகக் கற்பனை செய்துகொள்கிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருநெல்வேலி அல்வா ரொம்பச் சுவையாக இருக்கும் என்று ஒருவர் சொன்னால்… அதைக் கேட்டுக் கொள்ளலாம். ‘அந்தச் சுவை என்ன? உண்மையில், நெல்லை அல்வாவுக்கு இணையா வேறு எதுவும் இல்லையா?’ என்பதையெல்லாம் வெறுமே கேட்டுவிட்டுச் சொல்லமுடியாது. ஒரு விள்ளலேனும் சாப்பிட்டுப் பார்த்தால்தான், அதன் ருசியை அறிந்து நம்மால் உணரமுடியும்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்த சத்காரியங்களை உபன்யாசமாகக் கேட்கலாம். புத்தகங்களைப் படித்தும் தெரிந்து கொள்ளலாம். கேட்பதும் படிப்பதும் ஒருவித தாக்கத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தும். ‘கிருஷ்ணா… கிருஷ்ணா’ என முணுமுணுக்கச் செய்யும். ஆனால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மதுராபுரிக்கே சென்று வந்தால், இன்னும் முழுமையாக அந்தக் கோபாலனை அறிந்து உணரலாம்.
ஸ்ரீராமரின் அருமை பெருமைகளை, அவரின் சாந்நித்தியத்தை உணர வேண்டும் என்றால் அயோத்தி மாநகருக்கும், ஸ்ரீகிருஷ்ணரின் லீலாவிநோதங்களை அறிந்து தெளிய வேண்டும் எனில் மதுராபுரிக்கும் செல்லவேண்டும் என்பார்கள்.

உண்மைதான். ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதம் பட்ட பூமியில், அவன் ஓடியாடி விளையாடிய மண்ணில், நம் பாதம் படுவது எவ்வளவு விசேஷம் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பெருமைக்கு உரிய அந்தப் பூமியில் நமது காலடி பட்டால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் எத்தனைப் புண்ணியம் என்பதை உங்களால் உணரமுடிகிறதுதானே? அதனால்தான், முக்கியத் தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் முன்னோர்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு ‘ப்ரக்ரஹ:’ எனும் திருநாமம் உண்டு. ப்ரக்ரஹ: என்றால், கடிவாளம் போட்டு, தனக்குக் கட்டுப்பட்டு வைத்திருந்தவன் என்று அர்த்தம். மதுராபுரியை அப்படித்தானே வைத்திருந்தான்! அவனுடைய ராஜாங்கமும் லீலா விநோதங்களும் விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நடந்த பூமி அல்லவா அது!

அதுமட்டுமா? மொத்த உலகையும் கட்டிக் காபந்து செய்யும் கண்ண பரமாத்மாவின் திருப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமியில், நம் கால் பட்டதும் நம் பாவங்களெல்லாம் பறந்தோடிவிடும்.

மதுராபுரியை மட்டுமா கட்டுக்குள் வைத்திருந்தான்! தன் அடியவர்கள் அனைவரையும் அன்பு எனும் கட்டுக்குள் வைத்திருப்பவன் அல்லவா, அவன்! அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து, அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்து, யுத்தத்தை நிகழ்த்தினான் பகவான். ஸ்ரீகிருஷ்ணரிடம், ‘நீ நேரடியாக யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் கிருஷ்ணா! எனக்குப் பக்கபலமாக இரு; அது போதும்!’ என்று கோரிக்கை விடுத்தான் அர்ஜுனன். ‘அப்படியே ஆகட்டும்’ என்று அதனை ஏற்றுச் செயல்பட்டார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

பிறகு, யுத்தம் எல்லாம் முடிந்து, பரமபதத்துக்குச் சென்றுவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். அதையடுத்து அர்ஜுனன் தனது காண்டீபத்தை எடுக்க முனைந்தபோது, அதை நகர்த்தக்கூட முடியவில்லையாம்! அதேபோல், அர்ஜுனனின் தேரும் நகரவில்லை. எந்தச் செயல்பாட்டையும் செய்யமுடியாது தவித்து மருகினானாம் அர்ஜுனன்.

அந்த அளவுக்கு அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்ததால்தான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரக்ரஹ: என்றும், மிக்ரஹ: என்றும் திருநாமங்கள் அமைந்தன. மிக்ரஹ: என்றால் மிகுந்த சாமர்த்தியங்கள் கொண்டவன் என்று அர்த்தம்.

ஆயுதம் ஏந்தாமல் சண்டை செய்தவன் அல்லவா ஸ்ரீகிருஷ்ணன்! அத்தனை வியூகங்களையும் தன் சாதுர்யத்தாலும் சாமர்த்தியத்தாலும் அல்லவா தவிடுபொடியாக்கினான்.

ஆனாலும் என்ன… எத்தனை சாமர்த்தியங்கள் இருந்தாலும், கண்ணனிடம் பொறுமை என்பது துளியும் இல்லை. எந்நேரமும் பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் ஸ்ரீகண்ணபிரான். ஒரு பக்கம் அர்ஜுனனையும் அவனுடைய சகோதரர்களையும் வழிநடத்திக்கொண்டு, திரௌபதிக்குச் சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு, தேரைச் செலுத்தியபடியே பீஷ்மாச்சார்யர் முதல் சகலரையும் ஒருகண் பார்த்துக்கொண்டு… என மின்னல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் பகவான். அதனால் ‘வியக்ரஹ:’ என்கிற திருநாமம் அவனுக்கு அமைந்தது. வியக்ரஹ: என்றால் பொறுமை இல்லாதவன் என்று அர்த்தம்.

சரி… மகாபாரத யுத்தத்தில் ஆயுதங்கள் ஏதும் வைத்திருந்தானா பகவான்? இல்லைதானே! அதனால்தான் அவனுக்கு ‘ஏக சிருங்கஹ:’ என்கிற திருநாமம் அமைந்தது. அதாவது ‘ஒரு ஆயுதமும் இல்லாதவன்’ என்று பொருள்.

ஆனால், இந்த யுத்தத்துக்காகவும் பஞ்சபாண்டவர்களுக்காகவும் என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்? பாண்டவ தூதனாகச் செயல்பட்டான். அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து தேரோட்டினான். சதுர்த்தசி நாளில், அமாவாசை என்று பொய் சொல்லித் தர்ப்பணம் செய்தான். ‘அட… இன்னிக்குதான் அமாவாசைபோல! கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் பண்றாரே…. வாங்க, நாமளும் தர்ப்பணம் பண்ணிடுவோம்!’ என்று எல்லோரையும் அமாவாசை என நம்ப வைத்தான்.

அதாவது, பாண்டவ சகோதரர்களுக்காக, தருமம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக… சாம, தான, பேத, தண்டம் என சகலத்தையும் பயன்படுத்தினான் கண்ணன். வியூகம் அமைத்து வெற்றி தேடித் தந்தான். ‘எப்பாடு பட்டாவது தனது அடியவர்களை, தன்னை நம்பியவர்களை ரட்சிக்க வேண்டும்’ என்பது மட்டுமே அவனுடைய நோக்கம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, என்ன செய்வதற்கும் அவன் தயாராக இருந்தான். அவ்விதமாகவே செயல்பட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அப்படித்தான்! தன்னுடைய அடியவர்களை அவன் ஒருபோதும் கலங்கவிடமாட்டான். கலங்கித் தவிக்கிற அடியவர்களை எந்நாளும் கைவிடமாட்டான். அர்ஜுன சகோதரர்களுக்காக அத்தனை செய்த பகவான், தனது அடியார்களுக்காக, அந்த அடியவர்களில் ஒருவராக இருக்கிற நமக்காக, எனக்காக, உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

‘நைக சிருங்கஹ’ என்கிற திருநாமம் அதனால்தான் அவனுக்கு வந்தது. அதாவது ‘எப்பாடு பட்டாலும் ரட்சிப்பவன் ஸ்ரீகிருஷ்ணன்!’

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவும் ஓடி வருவான்; ஏமாற்றுபவர்களின் கொட்டத்தை ஒடுக்கவும் ஓடி வருவான்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒன்றே ஒன்றுதான்… பகவான் ஸ்ரீகண்ணனை மனதார நினைக்கவேண்டும்!

ஏகாதசி' மகத்துவம்!

ஏகாதசி' மகத்துவம்!
பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ''உனக்காக நாங்கள் காத்திருக்க... நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே...'' என்று ஏளனம் செய்தார்களாம்.
அவர்களிடம், ''இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு... சுத்தம் பாகவதஸ்யான்னம்!'' என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.
''சுத்தம் பாகீரதி ஜலம் 
சுத்தம் விஷ்ணு பதத்தியானம் 
சுத்தம் ஏகாதசி விரதம்...''
அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,
கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
எனில், வைகுண்ட ஏகாதசியின் மகத்துவத்தை கேட்கவும் வேண்டுமா? அதிலும் வைகுண்ட ஏகாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினங்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது, மறுபிறப்பற்ற சொர்க்கத்தை தரவல்லது.

நந்தி தத்துவம் ................

நந்தி தத்துவம் ................
நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே.
நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. ஆக தர்மதேவதையே சிவ பெருமானின் வாகனமாக அமைந்துள்ளது.
சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). 
தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.
அவ்வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும்.
நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.
சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும்.
கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.
தருமவிடை சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார்.
அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
தருமம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது.
இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.
இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்

. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம்.
திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே.
சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார்.
நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு.
மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது.
மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு.
ருத் என்பது துக்கம். 
ரன் என்பது ஓட்டுகிறவன்.
துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். 
தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே!
சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*
நந்தி வழிபாட்டுக்கான கிழமைப்பலன்
ஞாயிறு- சுப மங்களத்தைத் தரும்.
திங்கள்- சோம சூத்ர பிரதட்சிணநாள். நல்ல சிந்தனைகள் தரும். பல அசுவமேத யாகங்கள் செய்த பலன்கிட்டும்.
செவ்வாய்- வறுமை விலகும்.
புதன்- புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை வலுப்பெறும்.
வியாழன்- குருவருளோடு, இறை அருள் கிடைக்க பித்ருக்கள் உதவுவார். அனைத்து ஆபத்தும் விலகிப் போகும்.
வெள்ளி- எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் வலுயிழப்பார்கள்.
சனி- மகா பிரதோஷ நாள். பதவி உயர்வு வரும். அஷ்ட லக்ஷ்மிகளின் பரிபூரண ஆசி கிடைக்கும்.