Saturday, July 9, 2016

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?
கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில் ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற உலோகமானது இரும்பின் கலவை. இறை வழிபாட்டிற்கு இரும்பு ஏற்ற உலோகமல்ல.
பித்தளை, வெண்கலம், வெள்ளி முதலான உலோகங்களே பாரம்பரியமாக நமது பூஜை முறைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் வெறும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி வைத்துக் கூட வழிபடலாம். தற்காலத்தில் உற்பத்தியாளர்கள் கூட எவர்சில்வர் விளக்கு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கேள்வி

Friday, July 8, 2016

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.
சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்
பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய
பொருள் :
மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.

மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து!

மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து!
தமிழில் இன்று ஐந்து ஐயா ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் ஐ என்ற எழுத்து ஒரு காலத்தில் ஐ என்ற சொல்லாகத் தனித்து நின்று பெரியவர்கள் அண்ணன் தெய்வங்கள் தலைவன் போன்ற போன்ற பொருட்களைத் தந்திருக்கின்றது. ஆனால் இன்றைய தமிழில் அது ஒரு எழுத்தாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. அதற்குத் தனிப்பட்ட பொருள் இன்று கிடையாது. அது வேற்றுமை உருபு ஆவது வேறு செய்தி.
முதல் நாள் போரிலே அண்ணனை இழந்து மறுநாள் போரிலே கணவனை இழந்த பெண்ணொருத்தி மீண்டும் இன்று போர்ப்பறை கேட்க மகிழ்ந்து தன் மகனையும் வேல் கொடுத்துக் களத்துக்கு அனுப்பிய கதையைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் கொள்வோம்.
அதிலே மேனாள் உற்ற செருவில் இவள் தன் ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே (புறநானூறு 297) என்ற அடிகள் வரும். முன்பு நடந்த போரிலே யானையை வேலால் எறிந்து கொன்று விட்டு தானும் இறந்து போனான் இவள் அண்ணன் என்பது இந்தச் சங்கச் செய்யுள் அடிகளின் பொருளாகும். இங்கே ஐ என்பது அண்ணன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது.
திருக்குறள் படைச் செருக்கு அதிகாரத்திலே
என் ஐ முன் நில்லன்மின் பகைவீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்
என்று ஒரு குறள் காணப்படுகின்றது.
முன்பு என் தலைவன் முன்னே போர் செய்யவந்து இறந்து இன்று கல்லறையில் கிடப்பவர் பலர். அதனால் பகைவர்களே என் தலைவன் முன் நிற்காமல் அகன்று விடுங்கள் என்பது இதன் பொருள். இங்கே ஐ என்பது தலைவன் என்ற பொருளில் திருவள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பட்டினத்தார் தனக்கு நஞ்சு கலந்த சோறு தரப்பட்டபோது முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்று பாடினார். முன் ஐ இட்ட தீ முப்புரத்திலே என்றால் முன்பு இறைவன் வைத்த நெருப்பு மூன்று புரங்களை எரிப்பதற்காக என்று பொருளாகும்.
பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றியவள் மூதேவி. அவளின் பின்பு தோன்றியவள் இலக்குமி. அவள் சீதையாகப் பிறந்து இராவணனால் சிறையெடுக்கப் பட்ட போது அவளைத் தேடிப் போன அநுமனின் வாலிலே தீ வைத்தான் இராவணன். அந்தத் தீயைக் கொண்டு அநுமன் இலங்கை முழுவதும் பாய்ந்து தீ மூட்டினான் என்று சொல்லும் கம்பராமாயணம். அது அநுமன் வைத்த நெருப்பு அல்ல அவன் மூலமாக திருமகள் ஆகிய சீதை வைத்த கற்பின் நெருப்பு என்பான் விபீடனன்.
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?
(கம்பராமாயணம் - யுத்த காண்ணடம் - மந்திரப்படலம்)
அண்ணா! ஒரு குரங்கினால் இலங்கைக்குத் தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா? பிடித்தாலும் எரிந்து இவ்வளவு நாசம் வருமா? சானகியின் கற்பினால் வெந்து போன எங்கள் நாட்டைத் திரும்பத் திரும்ப குரங்கு சுட்டது என்று சொல்லிக் கொண்டிருக்காதே என்பது இதன் பொருளாகும்.
அதனால் தான் பட்டினத்தார் பின் ஐ இட்ட தீ தென் இலங்கையில் என்றார். இதை உணராத ஒரு பகுதித் தமிழுலகம் இன்றும் பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்ற தொடருக்கு பின்னொரு காலத்திலே வைக்கப்பட்ட தீ தெற்கு இலங்கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது.
இங்கே ஐ என்பது தெய்வங்களைக் குறிக்கும் சொல்லாக வந்து விடுகின்றது.
இனித் தொல்காப்பியர் ஐ என்ற எழுத்தை பெரியவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதைப் பார்ப்போம். சங்க கால காதல் ஒழுக்கங்களிலே தவறுகள் தலைகாட்ட முற்பட்ட போது பெரியவர்கள் அதைச் சீர் செய்வதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்ல வந்த தொல்காப்பியர்
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியல்)
என்று சொல்லிவிட்டுப் போனார். இதைக் கூட காதல் வாழ்விலே பிரச்சனைகள் ஏற்பட்ட போது பிராமணக் குருக்கள்மார் திருமணச் சடங்குகளை உருவாக்கினர் என்று தொல்காப்பியர் சொன்னதாக அடம்பிடிக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்து நோக்கினால் காதலித்து நெருங்கிப் பழகியவர்கள் தாம் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்து சில இன்னல்களை ஒருவருக்கொருவர் செய்து பொய்யும் தவறுமாக நடக்க முயன்ற போது அதை மாற்றியமைக்க பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வகுத்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகும்.
எனவே ஐ என்ற எழுத்து ஐ என்ற சொல்லாகிப் பயன்பட்ட காலம் போய் வெறும் எழுத்தாக மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலத்தில் எழுத்தாகவாவது நிலைக்குமா என்பது தெரியவில்லை. கணணி விசைப் பலகையில் ஐ என்பதை அய் என்று எழுதினால் என்ன என்று சிந்திக்கின்றார்கள். ஆம்! சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

தருமம் தலை காக்கும்!

தருமம் தலை காக்கும்!

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள்
தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.
ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.
'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.
குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.
கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.
கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.
இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!
துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.
அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!
அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.
அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.
சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.
தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் 

தர்மம் என்றால் என்ன

தர்மம் என்றால் என்ன
1. காளியின் காட்சி
குருநாதர் எம்மைக் காட்டிற்குள் கூட்டிச் சென்று, பல உபதேசங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, இரவில் சுமார் 12 மணி இருக்கும். திடீரென்று, காட்டிற்குள் ஒளி வெள்ளம் தெரிந்தது. எமக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.
அவ்வொளி வெள்ளத்தின் நடுவே, காளி உருவம் தெரிந்தது. அது மறைந்து, விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள் குவியலாகத் தெரிந்தது. அவைகள் வைரங்கள், வைடூரியங்கள், நகைகள் போன்றவைகளாக இருந்தன. குருதேவர், எம்மிடம் வந்து அவைகளைச் சுட்டிக் காட்டி, “இவைகள் பொய்யல்ல நிஜமானவைகள்தான், எடுத்துக் கொள்” என்றார்.
எம்மால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னால் இவ்வளவு நகைகளை யாம் கண்டதில்லை. மேலும், குருதேவர் தொட்டுப் பார் என்று கூறி, “நீ காண்பது கனவல்ல நிஜம்தான்” என்று சொல்லி, அதை நிரூபிக்க எம்மை நறுக்கென்று கிள்ளினார். எமக்கு வலி தெரிந்தது. நகைகளைத் தொட்டுப் பார்த்தோம், நிஜமானவைகள்தாம் என நம்பினோம்.
“இவைகளெல்லாம் உனக்குச் சொந்தமாக்கினால் என்ன செய்வாய்? என்று குருதேவர் எம்மிடம் கேட்டார்.
அவர் கேட்ட வேகத்தில், யாம் சொன்ன பதில் “ஏழைகளுக்கு தர்மம் செய்வேன்” என்றோம். பதில் சொன்ன வேகம்தான், எமக்குப் படாரென்று ஓர் அடி கன்னத்தில் விழுந்தது. அடித்தவர் குருதேவர், யாம் கதிகலங்கி விட்டோம். அந்த நிமிடம், அனைத்துப் பொருள்களும் மறைந்து போயின.
2. தர்மம் என்றால் என்ன?
குருநாதர் எமக்கு விளக்கம் கொடுக்கின்றார். தர்மம் என்று நீ செய்தால், நியாயமாக இருப்பவன் அருகில் வந்து வாங்க முடியாது.
சாப்பாடு போடுகிறாய், தர்மம் செய்கிறாய் என்றால், வருபவன் ஆயிரம் கஷ்டங்களைச் சொல்லி, அதை அவன் வாங்கி அது கெட்டதற்குத்தான் போகுமே தவிர, நீ நல்லதை தர்மம் பண்ணி நல்லதாக்க முடியாது. “தர்மம் என்றால் என்ன?” என்பதை நீ புரிந்து கொள் என்றார் குருநாதர்.
ஒருவன் சிரமப்படப் போகும் பொழுது,
நல்லதைச் செய்ய முயற்சிக்கின்றான் என்றால்,
அந்த நல்ல வழியைக் காட்டி,
நல்ல உபதேசத்தைக் கொடுத்து, நல்லதைச் செய்து,
அவனுக்குப் பொருளைக் கொடுத்தால்,
அவன் அதைக் காப்பான்.
அது இல்லாதபடி செய்தால், நீ தர்மம் செய்யப்படும் பொழுது, ஆயிரம் பொய்களைச் சொல்வான், இரக்கமாகச் சொல்வான். அதே சமயத்தில், நல்லவன் ஒருவன் இருந்தானென்றால், அவனை இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு உன்னிடம் ஒண்டுவான்.
கெட்டது எல்லாவற்றையும் அவன் மேலே சொல்லி, நல்லவனைக் கெட்டவனாக்கிவிட்டு, உன்னிடம் பாசமாக நடித்து, உன்னிடம் வாங்கித் தின்பதற்கு வருவான். இதுதான் தர்மமாகிப் போகும்.
ஆக, நீ சாப்பாடு போடுவதால், என்னென்ன நிலை இருக்கிறது? தர்மத்தை நீ எப்படியடா காக்கப் போகிறாய்? இவ்வளவு சிரமப்பட்டு தர்மம் செய்தால், முன்னாடி வருபவன், நல்லவனைத் தள்ளிவிட்டு விடுவான். நல்லவனுக்குப் போட முடியாது. ஆக நீ எந்த அளவில் தர்மம் போடப் போகிறாய்? என்று கேட்டார் குருநாதர்.
யாம் அவரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம். அவ்வாறு அந்த அடி வாங்கியபின் தான், தர்மம் என்றால் என்ன? என்று இந்த விளக்கத்தைச் சொல்கின்றார் குருநாதர்.
3. தர்மத்தைப் பற்றி அறிந்து கொள்ள நேரடி அனுபவம்
தர்மம் செய்வதைப் பற்றி அறிவதற்காக வேண்டி, குருநாதர் எம்மை இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். ஒருவருக்குப் பணம் வரவில்லை. அவர் எனது நண்பர். அந்த நண்பர் ஒருவருக்குக் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்த இடத்தில் இருந்து, பணம் திரும்ப வரவில்லை.
பணத்தைக் கொடுத்த, அந்த நண்பர் என்னைத் தேடி வருகிறார். நீ சாமியிடம் (குருநாதரிடம்) போய்க் கொண்டிருக்கின்றாயே, எப்படியாவது அவரிடம் சொல்லி, வராத இந்தப் பணம் வந்துவிட்டால், உனக்கு வேண்டியதைச் செய்கின்றேன், என்று எம்மிடம் சொல்கின்றார்.
அந்தப் பணத்தை அவனிடம் விடுவதற்கில்லை. இல்லை என்று சொல்லிவிட்டான். அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும். அந்தப் பணத்தை வாங்க வேண்டும். உன் குருநாதரிடம் சொல்லி வாங்கிக் கொடு, என்று எம் நண்பர் கேட்டார்.
என்னால் குருநாதரிடம் கேட்க முடியாது, இதெல்லாம் வம்பான நிலைகள். எதாவது ஆகிவிட்டால், நான் சிக்கிக் கொள்வேன் என்று, யாம் நண்பரிடம் கூறினோம்.
நண்பரோ, சும்மா உன் குருநாதரிடம் கேட்டுப்பார் என்றார்.
நான் இங்கிருந்து போனவுடன், குருநாதர் எம்மைப் பார்த்து, “நீ சரி என்று சொல்ல வேண்டியதுதானடா” என்கிறார். பணம் அனைத்தையும் உன்னிடம் தருகிறான், “வாங்கிக் கொள்ளடா” என்று சொல்கின்றார்.
எனக்குத் தெரியாது சாமி, என்றேன்.
தெரியாதவன் ஏன்டா இங்கு வருகிறாய்? அப்படியே எம்மிடம் வம்பு செய்து, அதைச் சொல்லி, இதைச் சொல்லி, கடைசியில் வாங்கிக் கொள் என்கிறார் குருநாதர். “கிடைக்கும்” என்று அவனிடம் போய்ச் சொல் என்று, சொல்கின்றார்.
அவ்வாறு சொல்லியவுடன், அவருக்குப் போன பணம் வந்துவிட்டது. அவர் என்ன செய்கிறார்? அவர்களிடம் பணத்தை விட்டுவிடக் கூடாது. எப்படியாவது, தர்மத்திற்காவது செய்து விடுவேன். விடக்கூடாது என்ற எண்ணத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு, நேராக எம்மிடமே கொண்டு வந்தார்.
கொண்டு வந்தவுடன், குருநாதர், சீட்டைக் கையில் கொடுத்து, பழனியில் எத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் சீட்டைக் கொடு என்கிறார்.
சீட்டைக் கொடுத்து நீ சொல்லும் பொழுது, இலவசமாக இரண்டு வேஷ்டி, அதில் 1¼ ரூபாய், முழுச் சாப்பாடு, அவர்களுக்கு வேண்டிய பலகாரம், பாயாசம் இதெல்லாம் உண்டு என்று சொல்ல வேண்டும் என்றார்.
ஆக, ஒரு இலைக்கு ரூபாய் 6 முதல் 8 ரூபாய் வரை ஆனது. எல்லாவற்றையும் இலை போட்டு, பந்தி போட்டுக் கொடுக்கச் சொன்னார். சுமார் 4000 பேர், பழனியில் பிச்சை எடுப்பவர்கள், சாமியார்கள் இருந்தார்கள்.
இவ்வளவு பேருக்கும் சாப்பாடு தயாராகிவிட்டது. அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து, எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்துவிட்டார் குருநாதர்.
அங்கே பழனி தேவாஸ்தான சத்திரத்தில் ஓட்டல் ஒன்று உண்டு. சாப்பாடு வந்தவுடன் முழுவதுமாகப் போட்டு விடவேண்டும். ஆனால், எல்லோரையும் ஒரே நேரத்தில் சாப்பிட வைக்க வேண்டும் என்று, அங்கே உள்ளவரிடம் குருநாதர் சொல்லிவிட்டார்.
வேஷ்டி, துண்டு எல்லாம் வாங்கிவந்து வைத்துக் கொண்டு, வரிசையாக வரச் சொல்கின்றார். டிக்கெட்டும் கொடுத்துவிட்டோம். எல்லோரும், “ஓம் ஈஸ்வரா”, ஒம் நமச்சிவாய” என்று சொல்லிவிட்டு, சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.
சாப்பிடும் பொழுது, வேஷ்டி, துண்டு, ரூபாய், எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். எல்லோரும் வரிசையாக நிறகும் பொழுது, அங்கிருந்து ஒருவன் ஓடி வந்தான், முதலில் வந்தான். அவனை உள்ளே விட்டு விடச் சொன்னார் குருநாதர்.
விட்டுவிட்டோம். அவனை விட்டவுடன், மற்றவர்களெல்லாம் முதலில் இருப்பவரை விலக்கிவிட்டு, கிடுகிடு என்று எல்லோரையும் தள்ளிவிட்டு, காசு துணிமணி போனாலும் பரவாயில்லை, நாம் அங்கு உட்கார்ந்து கொள்ளலாம், என்று வேகமாகத் தள்ளிவிட்டு, திமு திமு என்று சென்று, சாப்பாட்டை எல்லாம் மிதித்துவிட்டார்கள்.
“பார்த்தாயாடா? தர்மம் தலைகாப்பதை” என்று குருநாதர் எம்மிடம் சொன்னார். அவன் சாப்பாட்டிற்கும், துணிக்கும் தான் இந்த நிலை. சாப்பாட்டைப் பற்றி அவன் நினைக்கவில்லை. வேஷ்டி, துண்டை விற்றால், நாளைக்குக் கஞ்சா அடிக்கக் காசு கிடைக்கும் என்று, இப்படிச் செய்கின்றார்கள்.
அவன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல்
தவறான நிலைக்குப் போய்த்தான்,
இந்த நிலைக்கு வந்திருக்கின்றான்.
அவனுக்கு அறிவு இல்லையென்றால்,
நீ தர்மம் கொடுத்துப் பிரயோஜனம் இல்லை என்றார், குருநாதர்.
அவனுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும். ஆக, நீ முதலில் அறிவைக் கொடுத்து, பின் உணவைக் கொடுத்தால், அந்த உணர்வின் தன்மை இருக்கும் என்று, அந்த தர்மத்தைப் பற்றிக் கூறினார் குருநாதர். முதலில், அங்கே அடி கொடுத்ததற்குப் பதில், இங்கே அதைச் செய்தே காட்டுகின்றார்.
யாருக்கும் அறியாத சந்தர்ப்பம், முதலில் தீய நிலைகளில் இட்டுச் செல்கிறது. ஆனால், அவனறியாமலேயே அந்த வலைகளில் சிக்குகின்றான்.
அவனை மீட்டும் நிலைகளில்,
நீ எண்ணத்தைக் கொண்டு,
நல்லறிவை அவனுக்குப் புகட்டு.
அதன்பின், நீ கொடுக்கும் பொருள் அவனிடத்தில் வளரும் என்று, தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.
* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும்.
இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது.
ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)
* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்

காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்

இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்?
உண்மையில் பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததை விட நான் ஒரு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால் இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால் அந்த 12 ஆவது உங்களுக்கு நிறைய வேலையைக் கொடுக்கலாம்.
எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படிச் சிறப்பாக நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அதற்குமுன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒரு சில விஷயங்களில் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். உங்களுக்குப் போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் எப்படி உட்கார்கிறீர்கள், நீங்கள் எப்படி நிற்கிறீர்கள், நீங்கள் எப்படி பேசுகிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் என்ன செய்யவில்லை, எல்லாவற்றையும் நீங்களே உங்களை நன்கு கவனியுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக் கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதையெல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே குறைந்தபட்சமாக, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். சிலர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. மற்றவர்கள் உங்களிடமிருந்து மேலும் கூட எதிர்பார்க்கலாம். ஆனால் அதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடியாது. எனவே குறைந்தபட்சம் நீங்கள் உங்களை விரும்பும்படி முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதை நீங்கள் அவசியம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது குழந்தைகளுக்கு சரியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் சரியாக வளர இதுவே உத்தரவாதம் என்று சொல்ல முடியாது. மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும் உங்கள் வீட்டுச் சூழ்நிலையிலும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் வளர்ச்சியில் இருப்பார்கள். உங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவ்வளவு வாய்ப்புகள் உருவாக்கித்தர முடியுமோ அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா அல்லது அடங்காப் பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். எனவே, உங்கள் மனைவி கர்ப்பம் அடைந்து விட்டால் நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். ஏனெனில் இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காத பொழுது, இன்னொரு உயிரும் அந்த வழியில் போக வேண்டாம். அல்லவா? எனவே நாம் செய்யக் கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.
சரி, நான் அவர்களுக்கு எப்படி, எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதற்கு நான் என்ன சொல்கிறேன் என்றால், அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது, தெரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம் அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம். ‘எல்லாமே மோசம்’ என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள்.
இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள், தங்கள் மனதில் தோன்றும் எதைப் பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து, கேள்வி கேட்கலாம் என்பதைக் கொண்டு வந்தால், எதையும் சந்தேகத்தோடு பார்த்து எல்லாவற்றிலும் தப்புக் கண்டுபிடித்து ஒரு நோயைப் போலக் கேள்வி கேட்காமல் எதையும் ஆரோக்கியமான வழியில் கேட்க அனுமதித்தால், உங்கள் குழந்தை அதனுடைய அறிவைத் தொடர்ந்து உபயோகிக்கும்.
நீங்கள் இப்படிச் செய்வதால் அவன் ஒரு டாக்டர் ஆகிவிடுவான் அல்லது ஒரு இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உடலளவில் அவனுக்குத் தேவையானதையும், தேவையான கல்வியையும் எப்படியும் உங்கள் சக்திக்கேற்ற அளவு செய்வீர்கள். ஆனால் அத்துடன் அவனை எந்த அடையாளங்களும் இல்லாமல் வளர்க்க வேண்டும். அவனுடைய அறிவுத்திறனை எதனுடனும் அடையாளப் படுத்தாமல், சிக்கல் படுத்தாமல் வளர்த்தால், அவன் எதற்கும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு வளர்த்தால், அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான்.
அவன் வேறு யார் போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாமே அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளைப் பார்க்கிறான், ஆன்மீகச் சூழலைப் பார்க்கிறானா, போர்முனையைப் பார்க்கிறானா இவை அனைத்தையும் பொறுத்தது. ஆனால், இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை அல்லவா? ஆனால் நீங்கள் அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன், எதனுடனும் அடையாளப்படுத்தாமலும் அவர்களை வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
ஆனால் நீங்கள் உங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டீர்களா என்பதுதான் விஷயம். அவன் யாரையோ பார்த்து, ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். அது உங்கள் கையில் இல்லை. ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழிகளில் சென்றுவிடக்கூடாது. இல்லையா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தைக் கொண்டு வந்தால், பாரபட்சத்தைக் கொண்டு வந்தால், வெறுப்பைப் கொண்டு வந்தால் அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும். ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதைத் தவறிப் போகமுடியும்.
இது மன்னிக்க முடியாத குற்றம். எந்த பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்குச் செய்யக்கூடாது. ஆனால், இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் பயத்தையும், உங்களுடைய இது, உங்களுடைய அது, போன்ற உங்களுடைய குறைகளை எல்லாம் அவனுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய எந்தப் பலவீனத்தையும் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் மாற்றக்கூடாது.
நீங்கள் அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன், எதனுடனும் அடையாளப்படுத்தாமலும் அவர்களை வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். எல்லாப் பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது பல காரணங்களினால் இருக்கலாம். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது போல பல விஷயங்கள் இருக்கலாம்.
எனவே குழந்தைகள் இன்னும் சிறப்பாக வளர, நிறைய இடங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். எனவே இதற்கான அர்ப்பணிப்புடன் உள்ள தன்னார்வத் தொண்டர்களை வைத்துத்தான் இதை செய்ய முடியும். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின் மேல் அக்கறை கொண்ட யாரும் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒரு படி மேலாக இருக்க வேண்டும்.
இது மிக முக்கியம். அடுத்த தலைமுறையினர் அதிக ஆனந்தத்துடன், குறைந்த பயத்துடன், குறைந்த துன்பத்துடன், குறைந்த வெறுப்புடன் இருக்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும், இல்லையா? உங்களுக்கு 2 குழந்தைகள் என்றால் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். இரண்டு அடங்காப்பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களை விட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள் விட்டுச் செல்வதுதான் இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும்.

கடவுளுக்கு உயிர் பலி தேவையா?

ஓம் குருவே சரணம்.
கடவுள் சொன்னது என்ன? நாம் கடைப்பிடிப்பது என்ன? சிந்தித்து பாருங்கள்!
கடவுளுக்கு உயிர் பலி தேவையா?
இந்த வினாவிற்கு 'ஆம்' என்று கூறும் மக்களிடம் அடியேன் உரையாட வேண்டும்.
மக்களே! நீங்கள் சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் எப்படிப்பட்டவர் தெரியுமா? புல், செடி, பூண்டு என சிறியவை முதல் மலை, கடல், வானம், பூமி என்று பெரியவை அண்டசராசரங்களையும் படைத்தவர் கடவுள். அவர் பேரன்பாளராகவும், கருணை கடலாகவும் விளங்குகின்றார்.
" நான் எல்லா உயிர்களிலும் இருக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மாவும், " " அல்லாஹ் உயிர்களை கொடுமை செய்வதை ஒருபோதும் விரும்பமாட்டான் " என்று முகம்மது நபியும், " எந்த உயிரையும் கொலை செய்யாதே " என்று இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளனர். பிறகு ஏன் கடவுளுக்கு உயிர் பலி?.
இராமலிங்க அடிகளார் புலால் தின்று உடல் வளர்ப்பதை ஒரு பாவமாக குறிப்பிடுகிறார். திருமூலர் " புலால் மறுத்தல் " என்ற அதிகாரத்தை திருமந்திரத்தில் எழுதியிருக்கிறார். அறுசமயம் நிறுவிய பகவத்பாதர் ஆதிசங்கரரும் உயிர்பலியை கடுமையாக கண்டிக்கிறார்.
இன்னொரு முக்கியமானதை அடியேன் கூறுகின்றேன். கடவுளுக்கு உயிர் பலி கொடுப்பதும், அதனை வாங்கி புசிப்பதும் மிகப்பெரிய பாவச்செயலாகும். ஒரு வாயில்லா ஜீவனை கொன்று அதை தனக்கு சமர்ப்பிப்பதை கடவுள் ஒருப்பொழுதும் ஏற்கமாட்டார். கடவுள் அதை அருவருக்கிறார். மேலும் ஒரு உயிரை பலியிட்டு கடவுளுக்கு கொடுப்பது , ஒரு குழந்தையை பலியிட்டு அதின் தாயிடம் கொடுக்கின்ற மாதிரி. மேலும் இந்த பாவம் ஜென்ம ஜென்மமாக வந்து துன்புறுத்தும். இதற்கு பிறகாவது நீங்கள் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.
சரி. உங்கள் வழியிலேயே வருகிறேன். இந்த கருத்தை சம்பந்தப்பட்ட ஒரு ஆன்மீக கதையை பார்ப்போம்.
அந்த காலத்திலும் இது போன்ற கொடுமையான சம்பவங்கள் அரங்கேறியது. அக்காலத்தில் சில உக்ர தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பது வழக்கமாயிருந்தது. மக்கள் தாங்கள் செய்வது தவறு என்று அறியாமல் செய்து வந்தார்கள்.
இத்தகைய காலத்தில் ஹரிதாசர் என்ற மகான் வாழ்ந்து வந்தார். ஒரு சிறந்த திருமால் பக்தர். எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போல மதிப்பவர். அவர் தன் சீடர்களுடன் திருமாலின் நாமத்தை பாடிக்கொண்டே ஊர்ஊராக செல்வார். எல்லா ஊர்களுக்கும் சென்று திருமாலின் புகழை மக்களிடத்தில் பரப்புவார். மக்களின் மனதில் பக்தியையும் அன்பையும் எழச்செய்வார். இதுவே ஹரிதாசரின் நாள்தோறும் வழக்கமாயிருந்தது.
ஒரு நாள் ஹரிதாசர் வழக்கம்போல் தன் சீடர்களுடன் திருமாலின் புகழை பரப்பிவிட்டு கிளம்பினார். அப்பொழுது அவருக்கும் அவர் சீடர்களுக்கும் சற்று களைப்பாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். அப்பொழுது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு காளி அம்மா கோவில் இருப்பதை கண்டார்கள். அங்கே சென்று ஓய்வெடுக்கலாம் என்று முடிவுசெய்தனர்.
ஹரிதாசர் தன் சீடர்களுடன் காளி கோவிலை அடைந்தார். ஹரிதாசர் உள்ளே சென்று அம்மாவை தரிசனம் செய்தார். காளி அம்மா பிரம்மாண்ட கிரீடம் அணிந்து, முக்கண்களுடன், கையில் திரிசூலம் ஏந்திய வண்ணம், புன்னகை தவழ காட்சிக்கொடுத்தார். ஹரிதாசர் காளி அம்மாவை புகழ்ந்து பாடினார். அவரின் கவிப்பாடும் திறனால் காளி அம்மாவை மகிழ்வித்தார். காளி அம்மாவையே கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அந்த கொடுமையான சம்பவம் அரங்கேறியது.
ஒரு கையில் கத்தியையும், மறுக்கையில் ஆட்டுக்குட்டியையும் ஏந்திக்கொண்டு ஒருவர் காளி அம்மா கோவிலுக்கு வந்தார். தன் ஒருக்கையில் இருந்த ஆட்டுக்குட்டியை காளி அம்மாவின் காலடியில் வைத்தார். தன் இருக்கைகளிலும் கத்தியை பிடித்துக்கொண்டு நின்றார். ஹரிதாசருக்கு அவர் செய்தது வியப்பாக இருந்தது. இவர் என்ன செய்யப்போகிறார் என்று யோசித்தப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த கணம் அவர் செய்த காரியத்தை பார்த்த ஹரிதாசருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால், அந்த ஆட்டுக்குட்டியை வெட்டினார். அந்த ஜீவனை பலியிட்டு, காளி அம்மாவுக்கு சமர்ப்பித்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த கொடுமையான செயலைப் பார்த்த ஹரிதாசர் துடிதுடித்தார்.
அந்த கோவிலுக்கு வந்தவர் செய்த காரியமும், அதை பார்த்துக்கொண்டு அசையாமல் இருக்கும் அம்மாவின் புன்னகை தவழ்கின்ற முகமும் ஹரிதாசரின் மனதில் கலங்கத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை காளி அம்மாவின் முகத்தை ஏறெடுத்து பார்த்தார். மேலும் அந்த ஆட்டுக்குட்டியின் அழுகைக்குரல் ஹாரிதாசரின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் யோசித்து பார்த்தார். " ச்சே... இதெல்லாம் என்ன தெய்வம். தன் கண்ணுக்கு முன்னே நடக்கும் கொடுமையை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றுக்கொண்டிருக்கிறது. ஒரு தெய்வம் எப்படி உயிர்பலி கேட்கும் " என்று அலுத்துக்கொண்டார்.
ஹரிதாசர் தன் சீடர்களுடன் கோவிலை விட்டு வெளியேற தீர்மானித்தார். அவர் தன் சீடர்களுடன் கோவிற்வாசலை நோக்கி நடந்ததுதான் தாமதம். சட்டென்று காளி அம்மா ஹரிதாசருக்கு தரிசனம் அளித்து, அவரையும் அவரின் சீடர்களையும் தடுத்து நிறுத்தினார்.
அண்டசராசரத்திற்கும் அன்னையாக விளங்கும் காளி அம்மா ஹரிதாசரை புன்னகை தவழும் முகத்துடன் நோக்கினார். " ஏன் ஹரிதாசரே, உங்கள் அன்னையின் மீது இவ்வளவு கோபம் " என்று கேட்டார். ஹரிதாசர் அம்மாவை நோக்கி " உன் கண்ணிற்கு முன்னால் நடக்கும் கொடுமையை பார்த்துக்கொண்டு நீ அமைதியாக இருக்கின்றாய். உயிர்பலி நடக்கும் இடத்தில் யாம் இருக்கமாட்டோம். அதனால் இப்பொழுதே இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறோம்" என்று கூறினார்.
அதற்கு காளி அம்மா, " தயவுசெய்து இந்த இடத்தை விட்டு போகாதீர்கள். தங்களை போல மகான் கால் பதித்ததால் இது புண்ணியம் அடைந்தது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார். ஹரிதாசர் அம்மாவிடம் " தாங்கள் இன்று முதல் எந்த உயிர்பலியையும் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே காளி அம்மா " இன்று முதல் நான் உயிர்பலி ஏற்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தார். ஹரிதாசர் மனமகிழ்ந்து காளி அம்மாவை போற்றினார். காளி அம்மாவும், ஹரிதாசர் மற்றும் அவருடைய சீடர்களும் சைவ உணவினை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.
அன்று முதல் இன்று வரை எந்த தெய்வமும் உயிர்பலி ஏற்பதில்லை என்பது நிச்சயமான உண்மை.
எனவே மக்கள் அனைவரும் வாயில்லா ஜீவன்களை பலியிடுவதையும், அதை புசிப்பதையும் ( அசைவம் உட்கொள்வதையும் ) நிறுத்திவிட்டு சாத்வீக முறையில் வாழ்ந்து நலன் பெறுங்கள்.

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"
பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்
பாகவே இருக்கிறது. அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!
"அதிசய சித்தர் போகர்' என்ற நூலில்.

Tuesday, July 5, 2016

இல்லற தர்மம் :

இல்லற தர்மம் :
கட்டிய மனைவியை கடைசி வரை
கண் கலங்காமல் காப்பவன்
தவம் செய்ய தேவையில்லை.
இருபத்தியொரு வயது வரை அவனவன்
சொந்த ஆன்மா கர்ம செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை
தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும்.
96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே
அதன் பிறகே அவன் சொந்த கர்மாவானது
கர்ம செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு துணை சேர வேண்டும்.
த்யான மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
என சிரசு ஏற பல வழிகள் உள்ளது.
ஆனால் சிறந்த மூலம்
இல்லற தர்மம் ஒன்றே.
சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது.
சக்தி மாறி சிவம் சேர்ந்தால்
பிறவியே சிக்கலே.
உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை
ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அப்பேற்பட்ட சக்தியோடு
சிவம் சேரும் போது
ஸர்வமும் ஸாந்தியாகும்.
சிவசக்தி சங்கமத்தில்
ஊடலும் கூடலும்
உற்சாகம்தானே.
ஆனால் சக்தியின்
கண்ணீர் துளிகளுக்கு
சிவன் காரணமானால்
அதை விட கொடிய
கர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம்
வழிகள் தர்மத்தில் உள்ளது உண்மையே.
ஆனால் உறவுகளைக் கொண்டே
உலகம்தன்னை வெல்வதும்
பிறவிப்பிணி அறுக்கவும்
உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை
அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை.
நட்பு என்பது பழைய பாக்கி என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தன் கர்மாவின் தார்மீக கணக்கே
என தனித்தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை.
உனது எதிரியும் நீயே உனது செயலே கர்மாவாகி
அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கெதிராக
பயன்படுத்துகிறது என நீ உணரும் போது.
உன் எதிரி முகத்தில் உனது கர்மா
உன் கண்களுக்கு தெரியவந்தால்.
எதிரி உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவைப்படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும்
உன்னோடு பிறக்கும் பழைய கணக்காய்.
பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம்
சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து
பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனக்கு
பக்கத்தில் சரிபாதி அமரும் மனைவி
யார் என்று உனக்கு புரியும்.
தாய் தந்தையரை அன்போடு பூஜிப்பவன்
தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்ம
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள்
பொருத்து உபகாரமாக உதவி வந்தால்.
எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்
உனது ஏழேழு ஜென்மத்து சமுதாய
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோவில்கள் செல்வதாலோ குடந்தை சென்று
மகாமக திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ
உன் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது
சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.
ஆனால் ஒரேயொரு உறவை நீ பூஜித்தால்
பிறவிப்பிணி இன்னல் மொத்தமாய் தீரும்.
அது அந்த புனிதமான உறவு
உன் அன்பு மனைவியே.
உலகிலேயே மனைவியை மகிழ்ச்சியாக
வைப்பது சிரமம் மட்டும் அல்ல.
அதுதான் உலகிலேயே தலைசிறந்த தவம்
தவம் என்பது சாமான்யர்களுக்கு சிரமமே.
தாலி கட்டிய மனைவியையும் உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற
நேசித்து உன்னதமாக உனது வாழ்வை
ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே
உலகின் தலைசிறந்த தர்மம் சிறந்த தவம் ஆகும்.
தினமும் தன் தாய் தந்தையரை வணங்குபவன்
பித்ருதோஷம் நீங்க இராமேஸ்வரம் போக தேவையில்லை.
தன் உற்றார் உறவினர்களை மதிப்பவன்
கிரகதோஷம் நீங்க திருவண்ணாமலை சென்று
இடைக்காடரை தேட தேவையில்லை
நவக்கிரஹங்களையும் சுற்ற தேவையில்லை.
கட்டிய மனைவியை அவள்மூலம் பெற்றெடுத்த
குழந்தைகளை அன்போடு நேசிப்பவன்
அவர்களை ஒரு கஷ்டமும் இல்லாமல்
ஆனந்தமாக வைத்திருப்பவன்
கர்ம விமோசனம் தேடி பாபநாசம் சென்று
அகத்திய முனிவரை தேட தேவையில்லை.
இதற்காகத்தான் நமது முப்பாட்டன்
இல்லற வாழ்க்கை மூலம் அமைத்தான்
ஆதியோக வம்சம்.
மனைவி அழும் இல்லம் நரகம்
மனைவி சிரிக்கும் இல்லம் சொர்க்கம்.
உன் இல்லம் நரகமா சொர்க்கமா
என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்.
சக்தியை உணர்ந்தாலே போதும் - அங்கு
சிவம் ஜோதியாக ஜொலிக்கும்.

Monday, July 4, 2016

மகோற்சவம் பற்றிய விளக்கம்

மகோற்சவம் பற்றிய விளக்கம் 
மகோற்சவம் என்பது பல தத்துவமான
கருத்துக்களைத்
தெளிவுபடுத்துவதாயுள்ளது.
நல்லஞானத்தையும் போக மோட்சத்தையும்
ஆன்மாக்களுக்குத் அளிப்பது மகோற்சவம் ஆகும்.
உற்சவ ஆரம்பம் கொடியேற்றம் வரையான
கிரியைகள் படைத்தலையும்,
வாகனத்திருவிழா காத்தலையும் இரதோற்சவம்
அழித்தலையும், மௌன உற்சவம்
மறைத்தலையும், தீர்த்தஉற்றசவம் அருளலையும்
குறிப்பதாக நடாத்தப்படுகின்றது.
இப்படியான ஆலய உற்சவங்களில் பங்குபற்றுபவர்கள்,
வழிபடுபவர்களுக்கும் தீட்சை பெறா
விட்டாலும் தீட்சை பெற்ற பலன் கிட்டியதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன. ஆலயங்களில்
நடைபெறும் நித்திய பூசையில் உண்டாகும் குற்றங்களையும் நைமித்திய பூசைகள்
நீக்குவனவாக உள்ளன.
நைமித்திய உற்சவங்களில் சிறந்தது கொடியேற்றம் ஆகும். கொடிமரத்தின் மேல் மூன்று
குறுக்குத்தண்டுகள் இச்சாசக்தியாகவும், கிரியாசக்தியாகவும், ஞானாசக்தியாகவும்,
இரண்டு குறுக்குத்தண்டுகள் சூரியனையும், சந்திரனையும் கொடியேற்றும் கயிறு
அனுக்கிரக சக்தியாகவும், கொடி வாயுவாகவும், கொடியிலுள்ள மையப்படம்
அவ்வக்கோயில் மூலமூர்த்திகளின் சக்தியையும் குறிக்கும், சைவாகமங்களில்- மூன்று
பொருட்களான பதி,பசு,பாசம் என்பவற்றில் பசு எவ்வாறு பாசத்தினின்று விலகி
இறைவனைப் பற்றிக் கொள்வது என்பதையும் விளக்கி நிற்கின்றது.
கொடிமரம் பதியையும், கொடிச்சீலை பசுவையும் தர்பைக் கயிறு பாசத்தையும்
குறிக்கின்றது. கொடிக்கம்பத்தில் காணப்படும் முப்பத்திமூன்று கணுக்கள் மானுட
சரீரத்திலேயுள்ள முள்ளந்தண்டில் முப்பத்திமூன்று எலும்புக்கோர்வைகளை
குறிக்கின்றது.
உற்சவம் என்னும் சொல் விழா என்று பொருள்படும் இச்சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும்
மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள் கூறுவார். உற்சவம் மூன்று வகைப்படுகின்றது
நித்திய பூசையினிறுதியில் செய்யப்படுவது நித்தியோற்சவம், வருடம் தோறும் குறித்த
ஒரு காலத்தில் வருவது நைமித்திய உற்சவம், இட பூர்த்திகளின் பொருட்டு செய்யப்படுவது
காமிய உற்சவம் நைமித்திய உற்சவங்களில் சிறந்தது பிரமோற்சவம் ஆகும். நித்தியக்
கிரியைகளின் போது ஏற்படும் குற்றம் குறைகளை பிராயச்சித்தமாக அமைவது இந்த
மஹோற்சவம் ஆகும்.
மஹோற்சவ காலத்தை நிர்ணயிக்கும் வகை நான்கு கௌரவம், சாந்திரம்,நஷ்சத்திரம்,சாவனம்
என்பனவே அவை ஆகும். மஹோற்சவமானது கொடியேற்றம் முதல் தீர்த்தம் ஈறாக யாகம் பலி
என்பவற்றுடன் செய்யப்படுவது. ஐந்தொழில் விளக்கமாக இது அமைகின்றது. இதனை சாகல்யம்
என்ற பெயராலும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. கொடித்தம்பம் நந்தி பலிபீடம் என்பவற்றை
அடுத்து மனிதனின் முள்ளந்தண்டை நிகர்த்து நிமிர்ந்து நிற்க்கும்.
மூங்கில்,கருங்காலி,வில்வம்,தேவதாரு,பலாசு, தென்னை முதலிய மரங்களில்
ஒன்றுகொடிமரமாக பயன்படுத்தப்பட்டு இருக்கும் உலோகத்தகடுகளால் போர்த்தப்பட்டு மேலே
கொடிச்சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புக்களையும் கொண்டதாக உருவாக்க்பட்டிருக்கும்.
ஆன்மாவைப் பதிந்து நின்ற பாசமலங்கள்,பக்குவமடைந்து திருவருட் துணையால்
இறைவனை சேரும் போது வலிகுன்றி வாளாவிருக்கும் இதையே இங்கிருக்கும்
தர்ப்பக்கயிறு காட்டுகின்றது.
மஹோற்சவ ஆரம்பதினமாகிய துவரரோகண தினத்திற்கு (கொடியேற்ற நாளுக்கு) முதல்
நாள் மாலையிலேயே சில பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகிவிடும். ஆலயம் அமைந்துள்ள
கிராமத்திலுள்ள தீய சக்திகள், துட்டத்தன்மைகள் முதலியவற்றால் பெருவிழாவிற்கு
இடையூறு ஏற்படாமல் மங்கலமுண்டாகும் படி காவற்தெய்மாகிய வைரவப்பெருமானுக்கு
விசேட பூஜை ஓமம், பலி என்பன செய்தலே கிராம சாந்தி ஆகும். இதனைப்புரிந்து
கொள்ளாத பலர் மஹோற்சவத்துக்கு முதல் நாள் பேய் பிசாசுகளைக் கட்டிவைப்பதாகவும் ,
கொடியிறக்கநாளில் அவிழ்த்து விடுவதாகவும் கூறுவர். காவலை உறுதிப்படுத்தி
வைரவரிடம் வேண்டுதல் நடத்துவது போலவே மஹோற்சவ இறுதியில் வைரவரை
மகிழ்விக்கும் வகையில் வைரவர் மடை நடத்தப்படுகின்றது.
நிலத்திலுள்ள குற்றங்குறைகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவது வாஸ்து சாந்தி
என்னுங்கிரியை ஆகும். பூமிக்கு அதிபதி பிரம்மா , மழைக்கடவுள் இந்திரன் ,இவர்களை
மகிழ்வித்து வழிபாடியியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம் பெறுகின்றது. ரஷா என்பது
காப்பு காவலுக்கு கட்டப்படுவது காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். ஸ்நபன கும்ப
பூஜைகள் துவரரோகணத்துகுரிய கொடிப்படம், தம்பம், அஸ்த்திர தேவர், நந்தி, பலிபீடம்
முதலிய வற்றுக்கும் மூலமூர்த்திக்கும் விசேஷ அபிஷேகங்கள் செய்வதற்காக ஸ்நபன
கும்பங்கள் மண்டபத்திலே வைக்கப்படும்.
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பட்ட தேரானது அழித்தலை
குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும், அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன
அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுகின்றது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு
நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருள வைத்திருக்க வேண்டும்.
மறைத்தலாகிய தொழிலிலைக்குறிப்பது. சூர்ணோற்சவம். ஆன்மாக்களை ஆணவாதி
மலங்களில் அழுந்தச் செய்வது அகவாயிலாக இறைவயுணர்வு பெறச் செய்வது ஆண்டவனின்
அருள் நோக்கம் ஆகும். திருப் பொற்ச்சுண்ண மிடித்து, தீர்த்தமாடிய பின் சுவாமியை யாக
வாசலில் கொண்டு வந்து யாக தரிசனம் செய்வித்துப் பூர்ணாகுதி வழங்குவர்.
பத்தாம் நாள் இரவு சாயங்காலப் பூசைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேட பூசைகள்
நடைபெற்ற பின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர்.
நிதானமாகக் கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியங்களுடனும் இறக்கிக்
கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும், கொடிப்படத்தை நந்தியிடம் சமர்பித்து
நீராஐனம் செய்யப்படும்
பொதுவாக எல்லாக்கோயில்களிலும் பெருவிழாக்கள் பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம் .
ஆனால் சில திருக்கோவில்களில் பத்துநாட்களுக்கும் மேற்பட்டும் திருவிழாக்கள்
நடைபெறுகின்றன. அவைகளுக்கும் விதிகள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது ..

சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது ..
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.7. தெய்வீகத்தன்மை,சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்குநல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது

திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு – சக்தி, கொடித் துணி – ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு – பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது