Saturday, October 31, 2015

மூன்று ஆண்டுகளில் முழுவிதியையும் மாற்றும் ரகசியம்

மூன்று ஆண்டுகளில் முழுவிதியையும் மாற்றும் ரகசியம்
ஒரு நாளுக்கு இரண்டுமுறை(காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம்) பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் பெயர்களை ஜபித்துவரவேண்டும்;
மூன்றாம் நாள் முதல் சில சிறு அனுபவக் காட்சியை உணர்வீர்கள்;
16 ஆம் நாளில் இருந்து நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ஆச்சரியங்கள் உங்கள் வாழ்வில் நிகழத் துவங்கும்;
90 ஆம் நாளில் இருந்து உங்கள் தினசரி வாழ்க்கையில் சிறு சிறு பயங்கள் உங்களை விட்டு நீங்கியிருக்கும்;
120 ஆம் நாளில் இருந்து நீங்கள் எதை எதிர்பார்த்து நீண்ட நாட்கள் போராடினீர்களோ அதை நோக்கிப் பயணிக்கத் துவங்கியிருப்பீர்கள்;உங்களுக்கு எதிரான அனைத்து சதிகளும்,பொறாமைகளும் சின்னாபின்னமாகியிருக்கும்;

அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு,வீட்டில் காலை 7 மணிக்குள் (காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள்) ஏதாவது 30 நிமிடமும்,மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் ஏதாவது 30 நிமிடமும் பின்வரும் அன்னை அரசாலையின் பெயர்களை ஜபித்து வருக! வசதியாகவும்,நிம்மதியாகவும்,வளமாகவும்,தைரியமாகவும் வாழ்க!!!
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவா
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Friday, October 30, 2015

திறமையாகப் பேச வேண்டுமா?

திறமையாகப் பேசி பிறரைக் கவர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். அது ஆசை யாக மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டுமா?
சிறிது முயன்று பாருங்கள், நாளையே உங்கள் பேச்சைக் கேட்க நாடு காத்திருக்கலாம்.
ஏதேனும் பிடித்தமான தலைப்பைப் பற்றி நன்கு சிந்தித்து, சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு ஒரு சில நிமிடங்கள் பேசுங்கள்.
அவ்வாறு பேசும்போது அதை ஓர் ஒலிநாடா வில் பதிவு செய்யுங்கள். அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைச் சரிபார்த்து திருத்திக் கொள்ளலாம்.
1. உங்களது பேச்சு மிக அதிகமாகவோ, குறைவாகவோ அமைந்துள்ளதா?
2. பேச்சு விட்டுவிட்டோ, பாடுவதாகவோ, கேள்விக்கணை போன்றோ உள்ளதா?
3. திருப்தியற்ற குழந்தை பேசுவது போல் உற்சாகமில்லாமல் பேச வேண்டாம்.
4. ஏகராகத்திலோ அல்லது தனக்குள்ளேயே பேசிக் கொள்வது மாதிரி இருக்கக் கூடாது.
5. ‘உம்’, ‘வந்து’, ‘சரியா’, ‘என்ன சொல்ல வந்தேன்னா’, ‘புரிந்ததா’ போன்ற வார்த்தை களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியிருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டியவை. ஆங்கி லத்தில் அதை ‘Speechtics’ என்பர்.
6. தொண்டையை அடிக்கடி கனைக்காதீர்கள்.
7. குரல் தொனியை ஏற்றியும், இறக்கியும், இடத்திற்கு ஏற்றவாறு மென்மையாகவும், வன்மையாகவும் பேசி வார்த்தைகளுக்கு மெருகூட்டியிருக்கிறீர்களா?
8. நிமிடத்திற்கு 150 முதல் 170 முடிய வார்த் தைகள் வெளிப்பட்டால் நல்ல பேச்சு எனலாம்.
திறமையாகப் பேச வேண்டுமென்றால், கீழே குறிப்பிட்டுள்ள செயல் திறமைகள் மிகவும் இன்றியமையாதவை.
1.பேச்சுக்கு எடுத்துக்கொண்ட கருத்துகளைத் திறமையாக அமைத்துக் கொள்ளுதல்-Subject Skills. இது இல்லையென்றால், நல்ல கருத்துகள் கூறினாலும் நீங்கள் ‘போர’டிப்பீர்கள்.
2.கவர்ச்சியான பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளுதல். Oral Communication Skills. உங்கள் பேச்சு வெறும் கவர்ச்சியாக இருந்தால் ‘கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் விஷய மில்லையே’ என மக்கள் அங்கலாய்ப்பார்கள்.
3. மற்றவர்கள் உரைப்பதை உன்னிப்பாகக் கேட்கக் கற்றுக் கொள்ளுதல்.-Listening Skills. இந்தத் திறமை இல்லையென்றால், ‘நம்மைப் புரிந்து கொள்ளாமல், இவர் பேசிகிட்டே போகிறார்’ என்றுதான் எல்லோரும் கூறுவர்.
4. மற்றவர்களுடன் நல்லுறவுடன் பழகக் கற்றுக் கொள்ளுதல்.-Inter Personal Skills.
5. தலைமை ஏற்புத் திறமையுடன் பழகுதல்- Leadership skills. இந்தப் பண்பு இல்லாமல் பேச்சாற்றல் வளர்த்துக் கொண்டவர்கள் Leader ஆக மாறாமல் வெறும் Reader-ஆகவே இருப்பர்.
பேசுபவருக்கு வேண்டியவை:
1.எண்ணங்களில் தெளிவு, 2. வார்த்தைகளில் இனிமை, 3. உச்சரிப்பில் தெளிவு, 4. பேச்சிற்கு ஏற்ற முகபாவம், 5. ஒருங்கிணைந்த செயல்.
கூட்டத்தில் ஒருவரது முகத்தை மட்டும் பார்த்துப் பேசக் கூடாது. பார்வையை எல்லோரது திசையிலும் திருப்ப வேண்டும்.
கேட்பவருக்கு வேண்டியவை:
1. ஆழ்ந்த கவனம், 2. பொறுமை, 3. பேசுப வரை முழுமையாகக் கேட்டல், 4. ஆராய்ந்து புரிந்து கொள்ளுதல், 5. பிறர் கருத்துகளை ஆமோதித்தல்.
நன்கு சிந்திப்பவனே நல்ல முறையில் பேச முடியும். அதோடு, பேசுபவர் மற்றவர்களை நன்கு கவனிக்கக் கூடியவர்களாக இருப்பதும் மிக அவசியம்.
நீங்கள் நன்கு கேட்பவராக இருந்தால், மற்றவர்களும் உங்கள் கருத்துகளுக்குச் செவிசாய்ப் பவராக மாறுவர்.

கிரகப்பிரவேசம் எப்படி செய்வது?

கிரகப்பிரவேசம் எப்படி செய்வது?
வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர்.
நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:...............
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.
தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடைïறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம்.
ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.
வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.
கோபூஜை:........... பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது.
பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்-மனைவி மாலை அணிந்து அமர்க.
முதலில் விநாயகர் பூஜை:-..............
வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு
செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத
ஐந்துகர மூன்று விழி நால்வா
யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்- விநாயகரை வணங்கிய உடன் விச்சின்ன அக்னி சந்தானம்-என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.
கலச பூஜை:-............ மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.
யாக வழிபாடு:- ..........இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.
ஓம் கம் கணபதியே நம.
சுவாகா
ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.
என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால்
ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா
- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம்.
லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,
ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.
சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள்.
விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.
பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு.
என்று கூறி தெளிக்க வேண்டும்.
பால் காய்ச்சுதல்:-............ ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும்.
கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
கலசதாரை வார்த்தல்:- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள்.
பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.
அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம்.
அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும்.
பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும்.
கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும்.
வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள்.
பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.
சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.
கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும்.
கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம்
சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை.
வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம்.
அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்.

உயிர் நம் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது?-சித்தர்கள் கூறும் விளக்கம் !!!

உயிர் நம் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது?-சித்தர்கள் கூறும் விளக்கம் !!!
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது.
உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
- திருமந்திரம் – 309
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
- திருமந்திரம் 197
இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள். மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
- திருமந்திரம் 1777
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
- மாணிக்கவாசகர்
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
- திருமந்திரம் 1797
“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
- சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு எனக் கூறப்படுகிறது.
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.
“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
- திருமந்திரம் 1823-
வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்.
ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால் ,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம். இதைக் கூறியது நம் திருமூலர்தான்.

இந்துமத சாஸ்த்திரப்படி பொதுவாக - மரணத்திற்கு பின்.

இந்துமத சாஸ்த்திரப்படி பொதுவாக - மரணத்திற்கு பின்.
இந்திரலோகம் - குடும்பத்தினருக்கும்,உற்றார் உறவினருக்கும் அபயம் கேட்டோருக்கும் நன்மை செய்தவர்கள் முடிவில் இந்திரலோகம் அடைவர்.
சத்யலோகம் - பொது நண்மைக்கு பாடுபடுபவர்கள், விஞ்ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும், மருத்துவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் முடிவில் சத்யலோகம் கிட்டும்.
வைகுண்டம் - நாடு முன்னேற பாடுபட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பெரும் தர்மவாங்களுக்கும், நல் வியாபர வணிகர்களுக்கும் இப்பதவி கிட்டும்.
கைலாயம் - தியாகிகளுக்கும், பாதுகாப்பு துறையினருக்கும், மதத்தலைவர்களுக்கும், சித்தர்களுக்கும், இப்பதவி கிட்டும்.
சுயநலமுடன் பாபங்களை செய்து மன இம்சை செய்வோர் பலவகையான நரகப்பிரிவுகளை அடைவர். நல்லவர் கஷ்டப்பட தீயவர் மகிழ்வது மாயத்தோற்றமே.

Monday, October 26, 2015

பர்த்ருஹரி நீதி சதகம்

• அரசன் கெட்ட ஆலோசனையால் வீழ்கிறான்.
• ஸன்யாஸி விஷயங்களில் பற்றுதல் அடைந்தால் வீழ்ச்சியடைகிறான்.
• வாலனையால்(குறையை மறைத்து கொண்டாடுவதால்) புத்ரன் கெடுகிறான்.
• பிராம்மணன் வேதாத்யயனம் செய்யாததால் நசிவடைகிறான்.
• நல்ல குலம் கெட்ட பிள்ளையால் கெடுதல் அடையும்.
• நற்குணமானது துஷ்ட ஸஹவாசத்தால் கெட்டுப் போய்விடுகிறது.
• கள்குடிப்பதால் வெட்கம்போகிறது.
• பரஸ்பர அன்பு தேசாந்திர வாஸத்தினால் குறைந்து விடுகிறது.
• ஸம்பத்தானது நீதிமுறை தவறியகார்யத்தாலும், பணமானது சக்திக்கு மீறிய செலவாலும் கவனக்குறைவாலும் இழக்கப்படுகிறது.
_பர்த்ருஹரி நீதி சதகம் -33

பால் வேண்டுமானால் அழு..!

பால் வேண்டுமானால் அழு..!
நமது கோரிக்கைகளை கடவுள் முன்னால் வைத்து பிரத்தனை செய்வது சரியாக இருக்குமா? அதாவது இந்த கேள்வியின் நோக்கம் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்கிறோம் அப்படி இருக்க நாம் சொல்லி தான் கடவுள் நமது குறைகளை அறிந்துகொள்ள வேண்டுமா? என்று பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு
முக்காலத்தையும் உணர்ந்தவர் இறைவன் முக்காலத்தையும் படைத்தவரும் அவர் தான் அப்படிப்பட்ட கடவுளுக்கு நாம் சொல்லி தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை நான் செய்கின்ற பாவம் நான் உணராமலே நான் சொல்லாமலே கடவுளுக்கு தெரியுமென்றால் எனக்கு வரும் கஷ்டத்தை மட்டும் அவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்பது அறிவுடைய வாதம் போல் தோன்றும் ஆனால் இது அறிவுடைய வாதமல்ல அறியாமையின் உளறல் என்றே சொல்லலாம்
கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைவிட மேன்மையானது காரணம் இந்த ஜென்மாவில் என்னை பெற்றவள் எனது கடந்த ஜென்மாவிலோ வரப்போகும் ஜென்மாவிலோ என்னை பெற்றாள் பெறுவாள் என்று சொல்ல முடியாது கணக்கற்ற சங்கலி தொடர்போன்ற பிறப்பிறப்பு தொடரில் எத்தனையோ தாய் எத்தனையோ மக்கள் ஆனால் அந்த ஜென்மத்திலும் சரி இந்த ஜென்மத்திலும் சரி இனி வரப்போகும் பிறப்பானாலும் சரி கடவுள் என்பவர் ஒருவர் மட்டுமே
ஆகவே நமக்கு நிரந்தரமான நித்தியமான சொந்தக்காரன் இறைவன் ஒருவனே அவனை விட்டால் வேறு எந்த சொந்தமும் நிச்சயமானது அல்ல இப்படி ஜென்மாந்திர உறவான இறைவனின் உறவு நமது உயிரோடு கலந்ததாகும் அப்படிப்பட்ட உறவுக்காரனிடம் தான் மனமிட்டு பேச முடியும் தாயிடம் கூட மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ எண்ணங்கள் மனிதனுக்கு உண்டு அவை அத்தனையையும் அறிந்தவன் இறைவன் அதை அவனிடம் நான் சொல்வதில் எந்த வெட்கமும் கிடையாது.
இறைவன் தீர்மானித்ததை யாராலும் மாற்ற முடியாது எனக்கு வரும் துன்பங்கள் கூட இறைவன் தீர்மானித்தபடி தான் நடக்கிறது. தண்டனை கொடுத்த நீதிபதியிடம் தானே எனக்கு மன்னிப்பு கொடு பிராயச்சித்தம் கொடு என்று கேட்க முடியும் கோர்ட் டாவாலியிடமா கேட்க முடியும் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி இறைவன் எனவே அவனிடம் முறையிட்டு அழுவதில் தவறில்லை காரணம் என் தண்டனையின் தாக்கத்தை தணிக்கும் சக்தி அவன் ஒருவனிடம் மட்டும் தான் இருக்கிறது
ஒரு தாய்க்கு ஐந்து பிள்ளைகள் ஐவருக்கும் பசி எடுக்குமென்று அம்மாவுக்கு தெரியும் ஆனாலும் அம்மா முதலில் உணவை யாருக்கு கொடுப்பார் எந்த குழந்தை பலகீனமாக பசியை தாக்குபிடிக்கும் சக்தியில்லாததாக இருக்கிறதோ அதற்கு தானே கொடுப்பாள் அதாவது அழுகின்ற குழந்தைக்கு தானே பால் கிடைக்கும்
என் பசி அம்மாவுக்கு தெரியும் எப்படியும் சோறு தருவாள் என்று நம்புகின்ற குழந்தை நல்ல குழந்தை தான் சக்தி வாய்ந்த குழந்தையும் கூடத்தான் ஆனால் அம்மா வரும்வரை தாக்குபிடிக்க வேண்டும் பசிகொடுமையை தாங்க வேண்டும். நான் தான் பலகீனமாணவனே என்னால் எப்படி காத்திருக்க முடியும் அதனால் கால்களை உதைத்து தரையில் உருண்டு அழவில்லை என்றாலும் கூட எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்லலாம் தானே
எனவே கடவுள் எல்லாம் அறிந்தவர் அவரிடம் நான் சென்று முறையிட என்ன இருக்கிறது என் கஷ்டங்களை போக்கும் போது போக்கட்டும் தீர்க்கும் போது தீர்க்கட்டும் என்று நினைப்பது தத்துவ ரீதியில் சரியானதே அதற்காக பசிக்கிறது என்று சொல்வது தவறு என்று யாரும் சொல்ல முடியாது தாயினும் சாலப்பரிவுடைய எம்பெருமான் நீ கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்கிறான் முழுமையாக உன்னை என்னிடம் ஒப்புவித்து சரணாகதி அடைந்துவிடு என்கிறான் என்னோடு நீ அடிமையாக மட்டுமல்ல தோழனாகவும் இரு என்கிறான் அதனால் என்கஷ்டம் அவனுக்கு தெரிந்தாலும் நான் கஷ்டபடுகிறேன் என்று உரிமையோடு அவனிடம் முறையிடுவது எனக்கொரு ஆறுதல் என் குரலையும் அவன் கேட்பான் என்ற நம்பிக்கை
அப்படி நல்ல நம்பிக்கையை தருவது தான் பிராத்தனை அந்த பிராத்தனையை தொடர்ந்து செய்தால் மனச்சுமை குறையும் எப்படியும் நான் வெல்லுவேன் என்ற நம்பிக்கை தொடர்ந்து வரும்.

Sunday, October 25, 2015

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பு
கட்டுரை :🌼
சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ" என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக
வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம,
விஷ்ணு, சிவ சொரூபம்.
அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும்
படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே
காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.
அந்த இறைவனின் அருவுருவமான லிங்க
மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே
அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.
🌼 அன்னாபிஷேக பொருள் விளக்கம்:🌼
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது
படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி
மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும்
சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம்
ஐயன் சிவபெருமானின் அருவுருவமான
லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம்
செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு
கலைகளுடன் பூரண சோபையுடன்
விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த
கலையாகும். அத்தகைய ஐப்பசி
பௌர்ணமியன்று அறுவடையான புது
நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து
சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு
போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர
வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி
பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால்
பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும்
அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது
வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு
பாகனை அன்னாபிஷேகம் செய்து
வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது
உண்மை.
தில்லையிலே அனுதினமும் காலை
பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு
அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம்
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக
வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை
அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை
சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த
அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை
ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன
ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேக தரிசன பலன்:
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின்
மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு
பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே
அன்று சிவதரிசனம் செய்தால் கோடி
சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 16
பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம்
அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்
செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
🌞ஆகமத்தில் அன்னாபிஷேகம்:🌞
ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க
ு உரிய பொருளால் சிவபெருமானை
வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம்
இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய
அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.
முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி
பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து
வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக
விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே
அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல.
அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும்
புறமும் குளிரும் போது எல்லா
ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையின
ால் குளிர்வது இயற்கைதானே.
அன்னத்தின் சிறப்பு :
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ
எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல்
அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில்
வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும்
பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம்
அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி
முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி
அடைக்கலமாகின்றது. அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது
புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
முக்கிய குறிப்பு :
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை
பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்
உண்டு என்பது ஐதீகம்.
❄❄ அன்னாபிஷேக மஹத்வம் : ❄❄
இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம்
செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த
பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய
பலன்கள் சேர்கின்றன.
🐜🐜சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில்
வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த
அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,h
ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக
நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து
நன்மையடைவோமாக.

பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )

பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம், சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் . பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் . வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் . பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் . அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் . அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் . கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் . முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க பகவான் கிருஷ்ணர் சொன்னார் (இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் ) " பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் ! இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் . பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார் u

கண்ணன் செயல்கள் - சூழ்ச்சிகளா? தர்மமா?

கண்ணன் செயல்கள் - சூழ்ச்சிகளா? தர்மமா?

"
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் கண்ணன் தீட்டிய திட்டம், நெத்தியடி திட்டம் என்ற பாராட்டைப் பெறும்?
1) ‪#‎பீஷ்மர்‬ 2) ‪#‎துரோணர்‬ 3) கர்ணன் 4) ஜயத்ரதன் 5) துரியோதனன் 6) ‪#‎விதுரர்‬ ‪#‎மகாபாரதம்‬ .
********************************************************************************************
மகாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் கண்ணனின் ‘வேலை’ இருந்திருக்கிறது. கண்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.
அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் கண்ணன் தீட்டிய திட்டம்பிளான் தான் ‘சிறப்பு வாய்ந்ததாக ’ என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது ’ என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் – இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான். இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்? அவரை வீழ்த்தக் கண்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு முன்னிகழ்ச்சி.
யார் இந்த விதுரர்?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் ஒன்றவிட்ட சகோதரன் என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும்.
மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது பாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது. அவர் மகாவீரர்கூட. அவருடைய வில் அவர் கையில் இருக்கும்வரை அவரை யாரும் வீழ்த்த முடியாது என்பதும் பிரசித்தமான விஷயம்.
இந்த விதுரருடைய பூர்வாசிரமக் கதை என்ன?
மாண்டவ்யர் என்பவர் ஒரு பெரிய ரிஷி. ஒரு நாள், சில திருடர்கள் அவர் முன் அரண்மனையிலிருந்து களவாடிய பொருள்களைப் போட்டுவிட்டு அவருடைய ஆசிரமத்தில் ஒளிந்துகொண்டனர். அரசருடைய ஆட்கள் அங்கு வந்து அவர் சமாதியில் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவர் பாசாங்கு செய்வதாக நினைத்து அவரையும் மற்ற திருடர்களையும், களவு சாமான்களுடன் அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள்.
அரசனுக்குத் தகவல் சொன்னார்கள். அரசனும் தீர விசாரிக்காமலேயே யாவரையும் கழுமரத்தில் ஏற்றச் சொல்லிவிட்டான். எல்லாத் திருடர்களும் இறந்தனர். ஆனால் மாண்டவ்யரோ தன் யோக பலத்தினால் உயிருடன் இருந்தார். அரசன் இதைக் கேள்விப்பட்டு உடனே அவரை விடுவிக்கச் சொன்னான். காவலாளர்களால் அவரை கழுமரத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை.
அதனால் தலைக்கு மேலேயும் ஆசனத்துக்கு கீழேயும் இருந்த பகுதியை வெட்டி எடுத்தனர். அதனாலேயே அவருக்கு ஆணி மாண்டவ்யர் என்று பெயர் வந்தது.
மாண்டவ்யர் அரசனிடம் கோபப்படாமல் நேரே எமதர்ம ராஜனிடன் சென்று, “எனக்கேன் இப்படி ஒரு தண்டனை? நான் என்ன பாபம் செய்தேன்?” என்று கேட்டார். எமன் சொன்னார், “ரிஷியே, நீர் சின்ன வயதில் ஈக்களைக் கொன்று ஒரு குச்சியில் கோத்து விளையாடுவீர்.
நீர் செய்த ஜீவ இம்சைக்குத்தான் இந்த தண்டனை” என்றார்.
ரிஷிக்கு மகா கோபம் வந்துவிட்டது. “தர்மராஜரே, நீர் தருமத்தின் காவலர். உமக்குத் தெரியாதா? தண்டனை கொடுக்கும் முன் குற்றவாளியின் வயது, அவனுடைய அறிவுத்திறன் அறிந்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது நியதி.
நான் செய்தது அறியாப் பருவத்தில். என் குற்றத்திற்கு நீர் அளித்தது பெரிய தண்டனை. நீர் தருமத்திலிருந்து தவறிவிட்டீர். இதோ நான் உமக்கு ஒரு சாபமிடுகிறேன். நீர் பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து நான் பட்ட அவமானத்தைவிட நூறு மடங்கு அவமானத்தை அடைவீர்” என்று சாபமிட்டார்.
அந்த சாபத்தின் பாதிப்பு தான், எமதர்மராஜர் விதுரராகப் பிறந்தது.
இப்போது, மறுபடியும் கதைக்கு வருவோம்.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் கண்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ‘பலவீனம் ’. பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
மனு சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள். அதற்கான தண்டனை – யுத்தத்தில் மரணம்.
விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை-தர்மராஜர் – சமநிலை சரியாக வராதே?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் – போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மகாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது. எப்படி தடுப்பது?
கண்ணனின் ‘பெருந்திட்டம் ’ :::: கிருஷ்ணர், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், அதாவது சாதரணமான மனித உளவியலை நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, கிருஷணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்.
அவன் வருகிறான் என்று தெரிந்து திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார். சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, கிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
கிருஷ்ணரோ, “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன் இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார்.
விதுரருக்கு மகா சந்தோஷம். தன் பிரியமான கண்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது – விதுரருக்கும் கிருஷ்ணருக்கும். மறுநாள், அரச சபையில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக தாடினான். துரியோதனன் ஒரு ஊசி குத்தும் நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் ‘யுத்தம் நிச்சயம்’ என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். “சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.
கண்ணன் சொன்னார், “என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கண்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கண்ணன் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கண்ணனைத் தன் வீட்டில் உபசரணைசெய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக்கொண்டுவந்தது.
என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்துவிட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம் சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.
“எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கிகொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
கண்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?
அவரை வெல்ல, பாண்டவர்கள் கட்சியில் யாராவது இருக்கிறார்களா? பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?
இதுதான் கண்ணனுடைய பெருந்திட்டம்!! கடைசியில் அந்த திட்டத்தில் வெற்றியும் பெற்றார்

ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.

1. பீஷ்மர் வதம்.
-------------------------


சிகண்டியுடன் அனைவருமே போரிடுகின்றனர். பீஷ்மரைத் தவிர. சிகண்டி பீஷ்மரைக் கொல்வேன் எனச் சபதமிட்டு இருக்கும் ஒருவன். அப்படி இருக்க அவனுடன் போரிட இயலாது என்பது பீஷ்மரின் தர்மம் என்றால், அவர் நிராயுதபாணியாக மரணிப்பதே தர்மமாகும் அல்லவா?

சந்திரவம்சத்தின் இரண்டாவது ஆள், புதன். அவர் ஆண்தன்மையும், பெண்தன்மையும் கலந்தவர்.

அடுத்து வைவஸ்வத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன். ஆக சந்திர குலத்தின் ஆதியே முழுஆண் / முழுப்பெண் வமிசமல்ல. அப்படி இருக்க சிகண்டியுடன் போரிடமாட்டேன் எனப் பீஷ்மர் எப்படிச் சொல்ல இயலும்?

கண்ணன் என்ன செய்திருக்கலாம்? அர்ச்சுனனை, பீஷ்மரைக் காக்க யாரும் வராதபடிக்கு பீஷ்மர் சிகண்டியைத் தனிப்படுத்தச் சொல்லியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், பீஷ்மரின் அங்கங்கள் சிகண்டியின் வாளால் துண்டிக்கப்பட்டு அவர் முண்டமாகக் கிடத்தப்பட்டிருக்கலாம்.

சிகண்டியின் எதிரே ஆயுதங்களைத் துறக்கும் பீஷ்மர், அதன் பிறகு ஆயுதம் ஏந்தும் உரிமையைத் தர்மப்படி இழக்கிறார். போரில் ஆணாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகண்டியை எதிர்த்துப் போராடததால், அவன் அறைகூவலை ஏற்காததால், அவர் வேறு எவருடனும் போரிடக் கூடாது.

இப்படிப்பட்டக் கேவலமெல்லாம் பீஷ்மருக்கு சேரவிடாமல், அர்ச்சுனன் அம்புகள் அவரை அம்புப்படுக்கையில் படுக்க வைத்தது, அவருக்கு கிருஷ்ணன் அளித்த மரியாதை ஆகும். அதை அர்ச்சுனனின் வீரம் என்று சொல்ல இயலாதுதான். ஆனால் அதர்மம் எனச் சொல்லக்கூடாது.

குருஷேத்திர யுத்தத்தை விட மிகப் பெரிய யுத்தம் பீஷ்மரின் மனதில் நடந்தது என்பதே உண்மை.

பீஷ்மரை பொறுத்தவரை அவர் அஸ்தினாபுரத்து அரசன் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் . அந்த ஒரே காரணத்தினால் அவர் துரியோதனனுக்காக போரிட்டார்.

பீஷ்மரின் மரண இரகசியம் ஒன்றும் அவ்வளவு இரகசியமல்ல. சிகண்டிக்குத் தெரிந்ததுதான். கண்ணனுக்குத் தெரிந்ததுதான்.  சிகண்டி போருக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் துரோணர் அசுவத்தாமன், கிருபர், சல்லியன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், கிருதவர்மன், பூரிசிரவசு, விகர்ணன், சுசர்மன இப்படி துரியோதனின் படையில் இருந்த எவரும் அர்ச்சுனன் பீஷ்மரை நெருங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். தர்மனைச் சிறைபிடிக்க அர்ச்சுனனை விலக்கியது போல் பீஷ்மரின் மரணமான சிகண்டியையும், துரோணரின் மரணமான த்விட்டத்வீமனையும் குறிவைத்து யுத்தம் நடத்த ஆரம்பித்திருக்கலாம். அதனை துரியோதனன் செய்யவில்லை.

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக   நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை,  நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார்.  அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுயவாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது.  தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார். போரில் மட்டும்தான் தர்மன் எதிரி, பாசறையில் பேரன்தான். அவனுக்கு எதையும் செய்யும் உரிமை பீஷ்மருக்கு உண்டு.

ஆனால் சிகண்டி அர்ச்சுனன் தேரில் உடன் வரவேண்டும் என பீஷ்மர் சொல்லவில்லை. அது கிருஷ்ணனின் திட்டம். சிகண்டியை அஸ்வத்தாமனோ, துரோணரோ, கிருபரோ சல்லியனோ மடக்கி விடாமல் இருக்க செய்த திட்டம் அது.

பீஷ்மரின் தெளிவுதான் அவரை விஷ்ணு சகஸ்ர நாமம் எழுத வைத்தது.

பீஷ்மர் கிருஷ்ணனை மரியாதையான இறப்பைக் கொடு எனக் கேட்டார். அந்த இறப்பினைக் கிருஷ்ணன் அளித்தார்.

இது பீஷ்மர் விரும்பிய மரணம் என்பதால் இதை அதர்மத்தில் சேர்க்கவே இயலாது.


துரோண வதம்
------------------------
--

துரோணர் ஒரு அந்தணர். அந்த அந்தணர் தன் புத்திரப்பாசத்தினால் தன் நெறி மாறுகிறார். பாஞ்சால மன்னனிடம் அவமானப்பட்ட பிராம்மணர் தன் நெறிமறந்து அஸ்தினாபுரத்திற்கு அடிமையாகிறார். தன் நெறியை கோபத்தினால் விட்டார். அதற்குக் காரணம் அவரது புத்திரபாசம்.

அந்தணரான அவர், அரசனுக்கு அடிமையானார். துருபதனை வெல்ல வேண்டும் என்றால் அவரே போரிட்டிருக்கலாம். அப்போது அவர் போரிடவில்லை. அப்போது ஆயுதம் ஏந்தாதது என்ன தர்மம்? தன் ஷத்ரிய மாணவர்களைக் கொண்டு துருபதனை வென்று பாதி நாட்டைப் பறித்து அவனை அவமானப்படுத்தினார். அதற்காக தன்னையே விற்று விட்டார். அன்று தன் பாசத்துக்காக துருபதனுக்கெதிராக வில் உயர்த்தி இருந்தால் அவர் இவ்வளவு பெரிய சங்கடத்தில் மாட்டி இருக்க மாட்டார். ஆனால் தன் மானத்துக்காக ஏந்தாத அஸ்திரங்களை எதற்காக ஏந்தினார்? தன் மகனுக்காகச் செய்யாத போரை பின்னர் தன் மகனுக்காகவே செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

அவருடைய மரணத்தையும் கண்ணனே திட்டமிடுகிறான்.

அந்த நொடியில் எது தர்மம் என யோசிப்பவன் சாதாரண மனிதன். ஆனால் கண்ணன் அப்படியல்ல. அவன் எது தர்மம் என விளக்கப் பிறந்தவன்.

பிள்ளைப் பாசத்தினால் பிராம்மணத்துவம் விட்டார் துரோணர். இது அவர் பரசுராமருக்குச் செய்யும் துரோகமல்லவா? பரசுராமர் தன்னுடைய ஆயுதங்களை துரோணருக்குத் தானமளித்தார். அந்த ஆயுதங்களை ஷத்ரியர்களைக் காக்க அவர் உபயோகிக்கலாமா?

பிள்ளைப் பாசத்தினாலேயே துரோணரின் பாவங்கள் தொடங்குகின்றன. தொடர்கின்றன. அந்தப் பிள்ளைப் பாசமே அவருக்கு எமனாய் அமைவதுதானே தர்மம்? அதைத்தான் கண்ணன் செய்கிறான்.

துரோணர் எந்த ஒரு மன்னனிடம் சென்றும் பிச்சை கேட்டு தன் மகனை வளர்த்திருக்கலாம். துருபதனிடம் சென்று நட்பைக் காட்டிதான் பசு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானமாக அளிக்க வேண்டிய கல்வியைத்  தன்மானம் காக்க விற்றார். இவருக்கு முன் கல்வியை யாரும் விற்றதாக நான் அறிந்ததில்லை. அஸ்வத்தாமனை அரசகுமாரர்களுக்கு இணையாக வளர்க்க ஆசைப்பட்டார்.

பிள்ளைக்காக துருபதனைப் பகைத்து, தன் பிராம்மணத்துவத்தை விட்டு, அடிமையாகி, அதர்மத்தின் பக்கம் நின்றவர்... அதர்மங்கள் தன் கண்ணெதிரே நடந்தபோது கையாலாகதவராக நின்றவர்.

அதுதான் கண்ணனின் தர்மம். பிள்ளைக்காகச் செய்தவர் பிள்ளையின் பெயர் சொல்லியே மாய்க்கப்பட்டார்.

கீதையை ஆழமாகப் படித்து உணர்ந்து கொண்டபின் யுத்த அதர்மங்களை ஆராய்ந்தால் அதில் கண்ணனின் தர்மங்கள் புரியும்.

மற்ற எந்த வகை மரணமும், தர்மத்தை நிலை நாட்டி இருக்காது.


கர்ண வதம்
-------------------
-

கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான்.

ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும்.

கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் - நாராயணாஸ்திரம் - பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது.

கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான்.

கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம்.

பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான்.

பீஷ்மருக்கு ஞானம் வழங்கி அவர் ஆசையை  நிறைவேற்றினான். துரோணருக்கு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல பிள்ளைப்பாசத்தால் சாகவைத்தான்.

கர்ணனுக்கு?

கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை.  ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார்.

கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா?

பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது.

ஐந்து வீடுகள் கொடுக்க விரும்பாமல்தான் இத்தனைப் பெரிய வீரர்களைப் பலியிட்டான் என துரியோதனனின் மேல் கோபமே வரவில்லை அல்லவா?

கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை.


பூரிசிரவசு
----------
--------

தன் உதவிக்கு வருபவர்களைக் காப்பது ஒரு போர்வீரனின் கடமை.  சாத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்தவன். பூரிசிரவசு மயங்கிக் கிடக்கும் சாத்யகியை கொல்லப் போகிறான். அவனைக் காப்பது அர்ச்சுனனின் கடமை ஆகிறது. அதனால் அம்பை விடுகிறான் அர்ச்சுனன். இது நேரடியாகவே தர்மம்தான். எத்தனையோ முறை துரியோதனன், கர்ணன், துரோணர் போன்றோரே மற்றவர்களினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பகதத்தன் சிகையை அவிழ்த்தது
-------------------------------------------------------


இதுவும் நேரடி யுத்த தர்மமே.. இது தர்மமில்லையெனில் ஒருவனின் ஆயுதத்தை அழித்தவுடன் அவனைக் கொல்லவே இயலாது. அப்புறம் எல்லோரையும் மல்யுத்தம் புரிந்துக் கழுத்தை நெறித்துதான்  கொல்ல வேண்டும். அர்ச்சுனனின் நாணைக் கர்ணன் எத்தனையோ முறை அறுத்தாலும் அடுத்த அம்பு தொடுப்பதற்குள் நாணேற்றி அம்பு விடுவான் அர்ச்சுனன். சாரதி, கொடி, இரதம், குதிரை, யானை இப்படி அனைத்தும் போரில் நொறுக்கப்படும். பகதத்தன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது அவன் முடி அவன் கண்ணை ஒரு வினாடி மூடுவது யுத்த நியதியின் பாற்பட்டதே ஆகும். 

பீமன் துரியோதனின் தொடையுடைத்தது
--------------------------------------------------------------------


இதை கண்ணன் வாயிலாக வியாசரே விளக்கி இருக்கிறார். எப்பொழுது துரியோதனன் போர்களத்தை விட்டு அகன்றானோ அப்போதே அவன் தோற்றுவிட்டான். அதற்கு மேல் நடந்தது அறத்தின் வேலை மட்டுமே. ஒரு பெண்ணை இராஜசபையில் துகிலுரித்து தன் மடியில் அமரச் சொன்னதிற்கு தண்டனை.

தன்னுடைய அனைத்து உறுப்புகளையும் வைரம்பாய்ச்சி இரும்பாக்கிக் கொள்ள முடிந்த துரியனால் தன் தொடையை வைரம் பாய்ச்சிக் கொள்ள இயலாததான் காரணம் அதுதான்.


இதற்கு முன்னரான நிகழ்வைக் கூர்ந்து கவனியுங்கள்.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.

நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

பீமன் - துரியோதனனுடன் மல்யுத்தம் செய்திருக்கலாம். அதில் தொடையை முறித்திருக்கலாம். அது பீமனின் வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் அது தர்மத்தின் வெற்றியாக இருந்திருக்குமா?

கண்ணன் பீமனைப் பார்த்து துரியோதனனைப் பார்த்து மல்யுத்ததிற்கு அழை எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. துரியோதனின் பலமான கதையுத்ததிற்கு பீமன் அழைக்கிறான்.

துரியோதனின் பலம் கதையுத்தம். அதிலும் அவனின் பலவீனமானத் தொடைகள் வெளிப்படாதது அதில்தான். அதனால்தான் அவன் அந்த யுத்தத்திற்கு உடன்படுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மத்தின் மீதான கடமை மற்றும் உரிமை உண்டு.

ஒவ்வொரு முறை தர்மத்தின் மீதான கடமையை மீறும்பொழுதும் தர்மத்தின் மீதான உரிமையை இழக்கிறான்.

துரியோதனன் தர்மத்தின் மீது தன் உரிமையை இழந்துவிடுகிறான்.

பீமனைத் தட்டிக் கேட்கும் உரிமையை அனைவருமே இழந்து நிற்கிறார்கள். பலராமன், கிருபர், த்ருதராஷ்டிரன், காந்தாரி, வியாசர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் உட்பட யாருக்குமே உரிமையில்லை.

பீமனா -- அர்ச்சுனனா --- தர்மமா?

தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும், அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது.

தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்.

கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்.

மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல.

தர்மம் வென்றது. தர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

பாண்டவர்கள் எல்லாவற்றையும் அவர்களின் சுயதர்மப்படி செய்து வென்றிருந்தால் தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருப்போம்.

எது தர்மம் என்ற கேள்வியே பிறந்திருக்காது. தர்மத்தின் சூட்சுமம் புரிந்திருக்காது. தெளிவுகள் கிடைக்காது.

அதனால்...

அனைத்து வீரம் பலம் சாகசம் இவை எல்லாவற்றையும் விட

தர்மமே உயர்ந்தது என அறிவோமாக. என்னுடைய தர்மம் எனப் பார்க்காமல் பொதுதர்மத்தை அறிந்து செய்வோமாக. அதர்மங்கள் தங்கள் வலையில்  நம்மை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்வோமாக
- See more at: http://mahabharatham.arasan.info/2014/09/are--deeds-of-Krishnaconspiracy-or-virtue.html#sthash.149y3y18.dpuf