Thursday, December 18, 2014

செவ்வாய்க்கு அங்காரகன் பெயர் வர காரணம்

செவ்வாய்க்கு, "அங்காரகன்'' என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே. செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்குத்தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி. தேவியைப்பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு `பூமி புத்திரன்' என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரிய பதவியை அடைந்தான். பரத்வாஜ முனிவரின் கருணையினால் அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்கு சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிப்பதால் இவர் அங்காரகன் என்று புகழ் பெற்றார்

No comments:

Post a Comment