Wednesday, December 31, 2014

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.
1    உத்தமனாய் இருப்பவர்    தேவனாகிறார்
2    உத்தமனாய் இல்லையெனில்    முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்
3    தருமவான்    தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன்.  மூலிகைச் செடியாவான்  முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.
4    வலையில் சிக்கிய மீன்    எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;
5    கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம்    பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது
6    மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன்    விருச்சிகப் பிறவி அடைகிறான்
7    தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன்    நண்டாக பிறக்கிறான்
8    குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர்    வெளவாலாக தொங்குகின்றான்
9    தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள்    மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்
10    கூர்மையான நோக்குள்ளவர்    வல்லூராக பிறப்பார்
11    பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர்    பருந்துப் பிறவி வாய்க்கும்
12    மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர்    கொக்காக பிறக்கிறார்
13    குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர்    புலியாக பிறக்கிறார்
14    நண்பனுக்கு துரோகம் செய்தவர்    நரியாக, கழுதையாக பிறக்கிறார்
15    காது கேளாதவரை இகழ்பவர்    அங்கஹீனனாக பிறக்கிறார்
16    தாகத்துக்கு தண்ணீர் தராதவர்    காக்கையாக பிறக்கிறார்
17    பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர்    புழுவாகப் பிறக்கிறார்
18    விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர்    புpசாசாக அலைய நேரிடும்
19    பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர்    ஆவியாக அல்லாடுவர்
20    கொலை, கொள்ளை, செய்பவர்    100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்
21    தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு    ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்
22    மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர்    திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்
23    தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர்    மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்
24    விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர்    பன்றியாக, கோழியாக பிறக்கிறார்
25    கோள் சொல்பவர்    பல்லியாக, தவளையாக பிறக்கிறார்
26    உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர்    அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்
27    மாமிசம் புசிக்கின்றவருக்கு    சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன
28    அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர்    கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்
29    தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர்    ஊமையாக பிறக்கிறார்
30    தெய்வ நம்பிக்கை இல்லாதவர்    பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது
ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.

No comments:

Post a Comment