Friday, December 26, 2014

அனுமனின் பிறப்பு

அனுமனின் பிறப்பு
புஞ்சிகஸ்தலை என்னும் வானுலகப் பெண், ஒரு சாபத்தால் அஞ்சனை என்ற வானரப் பெண்ணாகப் பூலோகத்தில் பிறந்தாள். கேசரி என்பவனை மணந்தாள். அவளுக்கு வாயுவின் அம்சத்துடன் பிறந்த பிள்ளையே ஆஞ்சநேயர். ஒருநாள், சூரியனைப் பழம் எனக் கருதிய ஆஞ்சநேயர் பறந்து சென்று அதை விழுங்க முயன்றார். இதனைக் கண்டு கோபித்த இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆஞ்சநேயரை அடிக்க அவரின் தாடை முறிந்தது. அதனால் "அனுமன்' (தாடை முறிந்தவர்) என பெயர் பெற்றார்.
தன் அம்சமான குழந்தையை இந்திரன் அடித்ததைக் கண்டு கோபம் கொண்ட வாயுவின் (காற்று) இயக்கம் நின்று போனது. காற்றில்லா விட்டால் உலகம் ஏது? உயிர்கள் வருந்தின. அவரைச் சமாதானப்படுத்தும் விதத்தில் தேவர்கள் அனுமனுக்கு எந்த அஸ்திரத்தாலும் துன்பம் நேராத வரம் அளித்தனர். அத்துடன் சூரியனே குருவாக வந்து சகல கலைகளையும் உபதேசித்தார்.
இதனால் அனுமனின் சக்தி பெருகியது. இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. கந்தமாதன பர்வதத்தில் உள்ள கதலி வனத்தில், ராம தியானத்தில் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்வதாக ஐதீகம்

No comments:

Post a Comment