Tuesday, February 8, 2011

சன்னியாசம் என்பது

சன்னியாசம் என்பது
1. சன்னியாசம் என்பது துறத்தல். துறப்பதால் துறவி என்று பொருள் கூறலாம்.
2. சன்னியாச உபநிஷத்தில் ஒருவன் சொத்தையெல்லாம் தானம் செய்து விட்டு பூணூலை எடுத்துவிட்டு மொட்டை அடித்துக் கொண்டு வடக்கு நோக்கி எல்லாவற்றையும் துறந்து செல்ல வேண்டும் என்றும்; கிராமத்தில் ஓரிரவும் நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக் கூடாது என்றும்; மழைக்காலத்தில் கிராமமோ, நகரமோ எங்கிருந்தாலும் நான்கு மாதம் வரை தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
3. இதமான ஆடைகளை அணியாமல், பழைய வஸ்திரங்களை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவன் தினமும் ஒருவேளை மட்டும் பதினைந்து கவளத்திற்கு மேற்படாமல், ஏழு வீடுகளுக்குள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
4. பிச்சை எடுக்கும் வீடுகளில் உரல், அம்மி சத்தம் நின்றபிறகு, மதியத்திற்கு மேல் சென்று, "பவதி' என்று நிதானமாக உச்சரிக்க வேண்டும். இல்லறத்தான் வீட்டிற்குள் செல்லக்கூடாது. யாராவது புகழ்ந்து பிச்சையிட்டால் அதை உண்ணக்கூடாது. திருமணமாகாதவர்க்�� �ு ஒரு பலாச தண்டம் வைத்துக் கொள்வதுபோல், துறவி மூன்று மூங்கில் குச்சிகளைச் சேர்த்துக் கட்டி தண்டமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
5. ஒரே வஸ்திரத்தை அணிய வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். தேன் போன்றவற்றையும் மாமிச உணவுகளையும் உண்ணக் கூடாது.
6. பிச்சை வாங்கும்போது தரையைப் பார்த்த வாறு இருக்க வேண்டும். துறவியின் பார்வை ஆறு அடிக்குமேல் செல்லக்கூடாது. ஆனால் மோட்சத்தை விரும்பும் துறவியைவிட அவனுக் குப் பிச்சையிடும் குடும்பஸ்தனே உயர்ந்தவன். அவனுக்கே மோட்சம் உண்மையில் எளிதில் கிடைக்கும்.
7. சன்னியாசிகளை குடீசகன், பஹூதகன், ஹம்ஸன், பரமஹம்சன் என்று நான்கு வகை யாகப் பிரிக்கலாம்.
8. குடீசகன் என்பவன் தன் மகன் அல்லது உறவினர்களுடன் ஊர் எல்லையில் குடிசை அமைத்து, பாகவத எண்ணங்களுடன் குறைந்த அளவு உணவு உட்கொண்டு எப்போதும் ஆத்மாவைத் தியானிக்க வேண்டும்.
9. பஹூதகன், மூங்கில் கம்பு (த்ரிதண்டம்), கமண்டலம், ஜல பவித்ரம் போன்றவற்றைக் கொண்டு தினமும் அக்னி வளர்க்கும் வீட்டில் பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மேலும், நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

10. ஹம்ஸன், திரிதண்டம், கமண்டலம் இவற்று டன் விரதம் இருந்து தன் ஆத்மாவின் சொரூபத் தைத் தியானிக்க வேண்டும்.
11. பரமஹம்ஸன், ஹம்ஸனுக்குச் சொல்லியபடி குணங்களைக் கொண்டு வடதிசை நோக்கிச் சென்று பிற்பகலில் எட்டு கவளம் மட்டும் தினமும் உண்டு, ஆத்ம சொரூபத்தில் திளைக்க வேண்டும்.
12. சன்னியாசிக்கு எவ்விதமான சித்திகளும் கிடையாது.
13. நாம் சாமியார் என்று ஒரே வார்த்தையில் எல்லாரையும் அழைக்கிறோம். சன்னியாசிகள் மற்றவர்களை ஆசீர்வாதம் செய்வதுகூட கூடாது. அதாவது நிஜ சன்னியாசி, "நிர்நமஸ்காரம் நிராசிஷம்' என்று அவரைப் பற்றி சொல்லியுள்ளது. அதனால் யாருக்கும் "நீ நன்றாக இரு' என்று ஆசீர்வாதம் செய்ய வேண்டிய அவசியமும் துறவிக்குச் (சன்னியாசிக்கு) கிடையாது.
14. பொன், வெள்ளி, பணம் இவற்றைக் கையாளுவதையோ, மற்றவர்களைப் புகழ் வதையோ, தன்னைப் புகழ்வதைக் கேட்டு ரசிப்பதையோ கட்டாயம் சன்னியாசி விலக்க வேண்டும். சன்னியாசிக்கு என்று சிறு இடமோ வீடோ கட்டாயம் இருக்கக் கூடாது.
15. இவ்வாறு சொல்லி வரும்போது மடங்களைப் பற்றி உங்களுக்குக் கேள்வி வரும். பாரம்பரிய மடாதிபதிகள் இந்து தர்மத்தைக் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் இருக்கின்றனர். மத துவேஷத்தை ஒழித்து நாராயணனே பரம்பொருள் என்று உலகுக்கு உணர்த்திய ராமாநுஜரும், எல்லா மதங்களையும் ஒருங் கிணைத்து ஷண்மத ஸ்தாபனம் செய்து கடவுள் நம் உள்ளே இருக்கிறார் என்ற அத்வைதத்தை உலகுக்குப் பறைசாற்றிய ஆதிசங்கரரும், தமிழ் என்பது இறைவனுக்கு நெருக்கமான மொழி என்று நிரூபித்த ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றவர்களும் ஏற்படுத்திய மடங்களும் இந்த சன்னியாச தர்மத்தில் இருந்து வேறுபடுகிறது.
16. இவர்களை நமஸ்கரிக்கும்போத�� �கூட உள்ளே இருக்கும் நாராயண பரம்பொருளை முன்னிட்டு அதிகபட்சம், "நாராயணா' என்று மட்டும் சொல்வார்கள். தர்மம் செழிக்க நினைத்து வணங்குபவரை அதிகபட்சமாக "க்ஷேமமாக இரு' என்று மட்டும் சொல்வார்கள். இதுகூட தர்மத்தின் பொருட்டு சொல்வதாகும்.
17. வைணவ சந்நியாசிகளுக்கு தலையில் சிகையும் (குடுமியும்) பூணூலும் உண்டு.
18. இவர்கள் ஆசார்ய புருஷர்களாகவும், (குரு) தர்மகர்த்தாக்களா�� �வும் (மொழி மற்றும் தத்துவங்கள்), துறவிகளாகவும் மூன்றுவித தோற்றத்தில் இருக்கின்றனர்.ஆகை� ��ால் இவர்கள் முன்பு சொன்னவர்கள் கூறிய தத்துவங்களைக் காப்பாற்றவும், அவற்றைப் பரப்பவும் கடமைப் பட்டவர்களாக ஆகின்றனர்.
19. ஏற்கெனவே மஹரிஷியின் வாக்குப்படி பொன், வெள்ளி, தனம் கையாள வேண்டி இருந்தால், தனது என்ற சிந்தனை இல்லாமல் சன்னியாசி தர்மகர்த்தாவாகத் திகழலாம் என்ற வாக்கியபடி இவர்கள் மடத்திற்காகத் தனியாக அறக் கட்டளைகளை ஏற்படுத்தி நிர்வகிக்கின்றனர�� �. நிர்வாகக் காரணத்திற்காக ஒரே இடத்தில் நீண்ட காலமாக வசிக்கின்றனர். ஆகையால் இவர்களை வெறும் சன்னியாசி களாக மட்டும் பார்க்கக்கூடாது.
20. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் ரமண மகரிஷி வரை எத்தனையோ மகான்கள் தத்துவங்களை எளிதில் சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். இவ்வளவு விஷயம் இருக்கையில் சிறு சச்சரவுக்காக சன்னியாசி ஆக நினைப்பதும், பணம் கையில் இருப்பதால் மடாதிபதியாக நினைப்பதும் தவறானதாகும். Reply With Quote .

கலியுகத்தில் சன்னியாசம் தேவையில்லை
21. கலியுகத்தில் ஆசையைத் துறப்பதும், தாங்கள் செய்யும் தொழிலில் பற்றில்லாமல் நேர்மையாகச் செய்வதுமே உண்மையான சந்நியாசமாகும்.
22. ஆகையால் பணத்தை குழந்தைகளுக்கும், மனைவிக்கும் செலவழியுங்கள். ஏழைக் குழந்தை களின் கல்விக்குக் கருணை காட்டுங்கள். சன்னியாசத்தால் அடைய முடியும் மோட்சத்தை தர்மத்தாலேயே அடைய முடியும்.
23. யாதவப் பிரகாசர் எழுதிய நூலும், மனுஸ்மிருதி யும் சன்னியாசத்திற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
24. வேதத்தில் சன்னியாசத்தைப் பற்றி விரிவாகச் சொல்லப்படவில்லை. கிருஷ்ண யஜுர் வேதத்தில் மஹாநாராயண உபநிஷத்தில் இதைப்பற்றி காணப்படுகிறது.
25. சுக்ல யஜுர் வேதத்தில் ஒரு பகுதியான ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும் இதைப்பற்றிக் காணப்படுகிறது. பரமஹம்ச உபநிஷத்தும் சன்னியாசத்தைப் பற்றிப் பேசுகிறது.
26. பொதுவாக மஹரிஷிகளின் வாக்கு- கலியுகத்தில் சன்னியாசம் தேவையில்லை.
ஆசை பூர்த்தியாகாமல் மேலே போக முடியாது.
1. ஒரு நிலை பூர்த்தியாக வேண்டும் எனில் அந்நிலைக்குரிய அறிவு, நுகர்வு, திறமை பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
2. குடும்பஸ்தனுக்கு சன்னியாசம் வாங்கும் தகுதியும் நோக்கமும் இருந்தாலும், புத்திர சந்தானம் மனதிலிருப்பதால் குழந்தை பிறக்கும்வரை சன்னியாசம் பலிக்காது.
3. ஆசைகள் சிறியவை, பெரியவை, நல்லவை, தவறானவை எனப் பலவகைகள் உண்டு.
4. எல்லா ஆசைகளுக்கும் சட்டம் இதுவே. ஆசையை அனுபவித்துப் பூர்த்தி செய்ய வேண்டும் எனில், அடுத்த கட்டம் போக அது நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டும்.
5. அரசியல் தொண்டன், தலைவனாகும் தகுதி பெற்றிருந்தாலும் செல்வம் சேகரம் செய்யும் ஆசையிருந்தால், அது பூர்த்தியாகும்வர�� � தலைவர் பதவி கிடைக்காது. செல்வத்தை நேர்மையாகப் பெறாவிட்டால், செல்வம் கிடைக்குமே தவிர அடுத்த கட்டமான தலைமை கிடைக்காது.
6. ஆசை பூர்த்தியாகாமல் மேலே போக முடியாது. எனவே சன்னியாசம் சித்திக்க ஆசைகள் நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டும் என்பதும் அவசியம்.
சன்னியாசம் அவசியமா?
1. பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்ல�� �.
2. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?
3. இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா?
4. அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை.
5. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?
6. பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள்.
7. அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.
8. தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறே�� �் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.
9. ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை
10. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும்.
11. தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.

No comments:

Post a Comment