Monday, February 14, 2011

நெடுமாறநாயனார்

நெடுமாறநாயனார் புராணம்


கன்னன்மலி நெல்வேலிக் கவினார் மாறர்
கவுரியர்கோ னமணருறு கலக்க மெல்லாம்
பொன்னெயில்சூழ் சிரபுரக்கோ னணைய மாற்றிப்
புனிதமிகு நீறணிந்து போற்றி செய்து
மன்னுபுகழ் மங்கையருக் கரசி யாரா

மலர்மாது மணிமார்ப மகிழ்ந்து மாற்றார்வெந்நிடுதல் கண்டரசு புரிந்து காழி
வேந்தரருள் சேர்ந்தபெரு விறலி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, கூன்பாண்டியரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே பொய்மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தும், சோழராஜாவுடைய புத்திரியாருஞ் சைவசிகாமணியுமாகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும் குலச்சிறைநாயனாரை மந்திரியாராகவும் பெற்றிருந்தமையால், சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு பொர வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசியற்றிக் கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார்.




No comments:

Post a Comment