Friday, February 11, 2011

விரதம் - உபவாசம்'

விரதம்என்பது

“ மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும். ”

- ஆறுமுகநாவலர்.

உபவாசம்' என்பது
'உபவாசம்' என்பதுதான் விரதத்துக்குரிய சொல். உபவாசம் என்பதற்கு முழுமையான அர்த்தம் இறைவனோடு நெருங்கி வசிப்பது. அதாவது, இறைவன் மீது முழு பக்தியோடு இருக்கும்போது எந்த உணவும் தேவைப்படாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆக, உணவு தேவைப்படாத நிலைதான் விரதமே தவிர, 'நான் சாப்பிடவில்லை' என்ற எண்ணத்துடன் பட்டினி கிடப்பது விரதமல்ல. அப்படி வலுக்கட்டாயமாக 'நான் விரதம் இருக்கிறேன்' என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், 'தான் மட்டும் பட்டினி கிடக்க வேண்டியிருக்கே, மற்றவர்களெல்லாம் சாப்பிடுகிறார்களே' என்று நினைப்பும், தொடர்ந்து கோபமும்தான் வரும். இதனால் இரிட்டேஷன் ஏற்படும். விரதம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் சர்க்கரை அளவு மாறும். சிலருக்கு அசிடிட்டி ஏற்படும். எனவே, விரதம் இருப்பதற்கு முன் அதற்கு உங்கள் உடலும் மனமும் தகுதியாக இருக்கிறதா என்பதை அறியுங்கள். இருப்பின், ஆரோக்கியமான விரதமிருங்கள்! என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், விரதம் என்பது மென்மையாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையாக இருக்கக்கூடாது. பிறரை துன்புறுத்துவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம் தன்னை துன்புறுத்திக் கொள்வதும். உடலுக்கு எதிரான இந்த விஷயம் கடவுளுக்கும் எதிரானது. பொதுவாக சித்தர்களும் புத்தர்களும் விரதத்தை விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. பக்தர்கள்தான் அதை பிடிவாதமாக கையாளுகிறார்கள். கடும் விரதத்தை எந்த கடவுளும் ஏற்றுக் கொள்வதுமில்லை

No comments:

Post a Comment