Monday, February 7, 2011

பேச்சைக் குறைத்தால் போதும்

பேச்சைக் குறைத்தால் போதும்


திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மவுனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் வேலை செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மவுனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்குதேவியான சரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நட்சத்திரமான மூலத்தில் மவுனம் இருப்பதுண்டு. தினமும் அரைமணியாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.
தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளுடைய அருள் என்று கொள்ள வேண்டும்.
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும். சேதுவில் அணைக்கட்டும் ராமனுக்கு அணில் செய்த உதவிபோல,
மனிதனாகும் போது கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். கஷ்டங்களைக் கண்ட இடத்தில் போய்ச் சொல்வதற்குப் பதிலாக பகவானிடம் சொல்லிக் கொள்ளலாம்.
ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிறவரைத்தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின் இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள் என்ற அன்பு வந்துவிடும்.
ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக் கொண்டால் அல்லா அவனுடைய மானத்தைக் காத்துக் கொடுப்பான். இறை வணக்கம் செய்வதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம்தான்.
பேசுவது வெள்ளி என்றால் பேசாமலிருப்பது தங்கமாகும்.
தேவைக்குப் போக மீதிப் பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்யத் தயங்குகிறார், சேர்த்து வைக்கிறார். ஆனால் தேவையில்லாத பேச்சுக்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ் படிந்து அது இயங்கட்டும். இதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது. எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே.
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன் மீது அல்லா கோபமடைகிறான். அதிகமான பாவங்கள் நாவினால்தான் உண்டாகின்றன.
உன் நாவைப் பேணிக்கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்து. போர்க்களத்தில் அல்லாவுக்காக உயிர்த் தியாகம் சிந்தும் செந்நீரை விட அல்லாவின் பயத்தினால் அழுபவரின் கண்ணீர் பெருமைக்குரியதாகும்.
எவர் அதிகமாக வீண் பேச்சு பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலைமையை அடைவார்.

No comments:

Post a Comment