Monday, February 14, 2011

முனையடுவார்நாயனார்

முனையடுவார்நாயனார் புராணம்

பொன்னிவளந் தருநாட்டுப் புகழு நீடூர்ப்
பொருவிறிரு மலிவேளாண் டொன்மை மிக்கார்
முன்னியவர் முனையடுவா ரிகலார் போரின்
முரணழிவார் தமக்காக மொழிந்த கூலி
மன்னுநிதி கொண்டுசயங் கொடுத்து வந்த
வளர்பொருளா லிறைவனடி வழுவா வன்பர்க்
கன்னமவர் நசையின்மிக மிசைய நல்கு
மன்பர்துன்ப மவையாவு மகன்று ளாரே.

சோழ நாட்டிலே, திரநீடுரிலே, வேளாளர் குலத்திலே சிவனடியார்களிடத்தே மிகுந்த பக்தியுடைய ஒரு பெரியவர் இருந்தார். அவர் சத்துருக்களுடைய போர்முனையிலே தோற்றவர்கள் தம்மிடத்தில் வந்து கூலிபேசினால், அவர்களுக்காகப் போய்ப் போர்செய்து வென்று, பொருள் சம்பாதித்து, சிவனடியார்களுக்குச் சொன்ன சொன்னபடியே நிரம்பக்கொடுத்து அவர்களைத் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு முனையடுவார் நாயானாரென்னுந் திருநாமம் உண்டாயிற்று. அவர் நெடுங்காலம் இவ்வருமையாகிய திருத்தொண்டைச் செய்துகொண்டிருந்து சிவபதம் பெற்றார்.



No comments:

Post a Comment