Monday, February 7, 2011

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் -

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் -
ஒரு தோட்டத்தில் வசித்த பாம்பு ஒன்று, அங்கு வந்த மக்களை விரட்டி விரட்டி தீண்டியது. பலர் இறந்தனர். அதை அடிக்க முயலும் போதெல்லாம் தப்பி ஓடிவிடும். மக்கள், கிராமத்தில் வசித்த ஒரு துறவியிடம் இதுபற்றி கூறினர். அவர் பாம்பு வசித்த புற்றருகே சென்றார். ஏதோ ஒரு மந்திரம் சொல்லி பாம்பை வெளியே வரவழைத்தார்.
""நாகமே! நீ ஏன் மக்களை தீண்டுகிறாய்? கெட்டது செய்தவர்க்கு கெட்டதே நடக்கும். நீ சாந்தமாக இருக்க ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதைச் சொல்லிக்கொண்டே இரு. சாத்வீகமாகி விடுவாய்,'' என்றார். பாம்பும் அவர் சொன்னதற்கு கட்டுப்பட்டு, அந்த மந்திரத்தை சொல்லியபடியே வாழ்ந்தது. துறவி பாம்பை அடக்கிவிட்டார் என சந்தோஷப் பட்ட மக்கள் அமைதியாயிருந்த பாம்பை அடித்து துன்புறுத்தினர். அது காயங்களுடன் உணவுக்காக அலைந்தது. கிடைத்ததை சாப்பிட்டது. மிகவும் மெலிந்து விட்டது. வெளியூர் சென்றிருந்த துறவி, பாம்பின் இருப்பிடத்திற்கு வந்தார். அதைப் பார்த்தவர், ""ஏன் இப்படி இளைத்து விட்டாய்?'' என்றார்.
நடந்ததைச் சொன்னது பாம்பு.
""அட மடப்பாம்பே! உன்னை தீண்டக்கூடாது என்று தானே சொன்னேன். சீறக்கூடாது என்று சொல்லவில்லையே! நீ சீறியிருந்தால், உன் பழைய குணம் மாறவில்லை என நினைத்து மக்கள் உன்னை நெருங்கியிருக்க மாட்டார்களே!'' என்றார். நம்மை பிறர் துன்புறுத்தும்போது, பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால், கேடு செய்யக்கூடாது. புரிகிறதா

No comments:

Post a Comment