Saturday, February 26, 2011

சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
பதில்: கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.


பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப்படும் சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர்.
அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்னர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி அவற்றை கோயில்களில் வைத்து மன்னர்கள் வழிபட்டனர். இதுபோல் மக்களுக்காக அளிக்கப்பட்ட கோயில் சிலைகளை திருடுவதும், அதை வீட்டில் வைத்து வழிபடுவதும் கடும் பாவத்திற்கு ஆளாக்கும்.
சிவன் சொத்து குல நாசம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், சிவன் சொத்தை அபகரித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் நாசமாகும் என்பதேயாகும். அப்படியிருக்கும் போது சிவன் சிலையை திருடிச் சென்று வீட்டில் வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் ஏழேழு ஜென்மத்திற்கும் பாவம் சுமக்க நேரிடும்.

No comments:

Post a Comment