Monday, February 7, 2011

மாணவர்களே இதைப் படியுங்க முதல்லே

மாணவர்களே இதைப் படியுங்க முதல்லே
பெற்ற தந்தை குழந்தைகளைக் கண்டிக்கிறார் என்றால் அது அவர்களது நன்மையைக் கருதியே ஆகும். "நன்றாகப் படி, "டிவி' பார்க்காதே, எப்போதும் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்காதே, இன்டர்நெட்டில் உருப்படியான விஷயங்களைப் பார்' என்று சொல்கிறார் என்றால் அவை எவ்வளவு நன்மையான வார்த்தைகள் என்பதை மதிக்க வேண்டும்.
விஷ்ணு பக்தனான பிரகலாதனின் தந்தை இரண்யன். பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே, நாரதர் மூலம் நாராயணனின் பெருமைகளை அறிந்தான். அதனால், அவன் நல்லதையே பேசினான், பிறருக்கு நன்மையே நினைத் தான். தன் தந்தை நாராயண பக்தியில் இருந்து வழுவ வேண்டும் என்று அவனுக்கு சொன்ன நேரத்திலும் தந்தைக்கு அறிவுரை பல சொன்னான். தந்தையோ அதைக் கேட்காமல் பல கொடுமைகளைச் செய்தும் கூட அதற்காக அவரிடம் கோபிக்கவில்லை. இப்படிப்பட்ட தந்தையை நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து பகவான் கொன்றார். பின்னர் பிரகலாதனிடம், ""உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்,'' என்றார்.
தன் தந்தை கொடுமைக்காரனாக இருந்தும் கூட, பிரகலாதன் என்ன கேட்டான் தெரியுமா?
""என் தந்தைக்கு நல்ல கதியை தர வேண்டும், வைகுண்டத்தில் அவரும் இடம் பெற வேண்டும்,'' என்றான்.
பிரகலாதனின் தந்தை கெட்டதை போதித்தார். அப்படிப்பட்ட தந்தைக்கே பிரகலாதன் தகுந்த மதிப்பளித்தான். நம் தந்தையோ நல்லதையே போதிக்கிறார். அவருக்கு நீங்கள் செய்ய வேண்டிய மரியாதை ஏராளம்...ஏராளம்.

No comments:

Post a Comment