Wednesday, February 2, 2011

கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைத்த பின் சாம்பிராணி புகையை அக்குழந்தைக்கு காட்டுவார்கள். காரணம் கேட்டால் குழந்தை குளித்துள்ளதால் 'ஜலதோஷம்' பிடிக்க வாய்ப்புண்டு. எனவே சாம்பிராணி போட்டால் நல்லது என்பார்கள். ஆனால் இந்த சாம்பிராணி புகை குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்கள் உடலுக்கும் கேடு என்று மருத்துவர்கள் ஒருபுறம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மூட நம்பிக்கையை ஒரு புறம் தள்ளிவைப்போம்.. தூபத்திரவியங்கள்



சாம்பிராணிப் புகை போட்டதும் வீடுமுழுக்க நல்ல மணம் கமழ்ந்து நல்ல மனநிலையை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்.


சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.


தூபத்திரவியம் வருமாறு:- பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், தக்கோலம், ஜாதிக்காய், இலவங்கம், குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை, முஸ்தா என்னும் கோரைக்கிழங்கு என்னும் இவற்றின் சூர்ணத்தாற் செய்யப்பெற்ற தூபத் திரவியத்திற்குயக்ஷகர்த்தமம் என்பது பெயர்.
சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், ஏலம், இலவங்கம், இலவங்கத்தின் தோல், அதன் இலை, அதன் புஷ்பம் குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை யென்னுமிவற்றின் சூர்ணமானது பிராஜாபத்தியம் எனப்பெயருடையது.
சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, இலவங்கப்பட்டை, குந்துருக்கும்பிசின், சர்க்கரை, கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணம் விஜயமெனப்படும்.
பச்சைக்கற்பூரம், கறுப்பு அகிற்கட்டை, குருவேர், குங்குமப்பூ, குந்துருக்கம், துருஷ்கம் என்னும் கஸ்தூரி, தாமரைத்தண்டு, சந்தனப்பொடி யென்னுமிவற்றின் சூர்ணம்முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டுப் பாகமான தேனுடன் சேர்க்கப்பட்டுச் சீதாம்சு எனப்படும்.
சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குந்துருக்கம்பிசின், கீழாநெல்லி, குங்கிலியம், கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணமானது கலியாணமெனப் பெயருடையதாகும்.
சந்தனம், அகில், கஸ்தூரி, கோரைக்கிழங்கு, குந்துருக்கம்பிசின் என்னுமிவற்றின் சூர்ணம் அமிர்தமெனப்படும்.
தக்கோலம், கமுகம்பூ, பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், இலவங்கமென்னுமிவற்றின் சூர்ணம் சுகந்தமெனப்படும்.
இவ்வாறு, வெவ்வேறு வகையான பெயரால் சிரசித்தமான தூபத்திரவியங்கள் பலவுள.
இவ்வாறு சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி, குங்கிலிய மென்னுமிவற்றுடன் நெய், தேன் கலந்த தூபத்திரவியங்களும், சந்தனம, அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி என்னுமிவற்றின் சூர்ணத்துடன் சர்க்கரை, நெய், தேன் என்னுமிவை கலந்த தூபத் திரவியங்களும், குங்குமத்தினின்றும் முறையே ஒன்று, நான்கு, ஆறு, எழு, பாகமுடைய பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், பிசின்பொடியென்னுமிவையும், முறையே ஒன்று, இரண்டு, மூன்று, பங்குடைய அகில, பிசின், சந்தனம் என்னுமிவற்றின் பொடியுடன் சிறிதுதேனும், பச்சைக்கற்பூரமும் சேர்த்து ஒரு தூபத் திரவியமும் தூபத் திரவியங்களெனப்படும்.

அகில், சந்தனம், விலாமிச்சைவேர் என்னுமிவற்றுடன் தேனைச் சேர்த்தல் ஒரு தூபத்திரவியமாகும். நெய்யுடன் கூடின கீழாநெல்லி, சந்தனப்பொடி யென்னுமிவையும், நெய்யுடன்கூடின சர்க்கரை, வில்வஇலை யென்னுமிவற்றின் பொடியும், குங்கிலியப்பொடியும், ஒன்றுங்கலவாத குங்கிலியம், பிசின், சந்தனம், அகில், சௌகந்திகம் முதலிய வாசனைத்திரவியங்களுள் யாதானுமொன்றன் பொடியும் தூபத்திரவியமாகு மென்றறிந்து கொள்க.
அவற்றுள் ஒன்றுங்கலவாத தனிக்குங்கிலியத் தூபம் ஏழு பிறவிகளிற் செய்யப்பெற்ற பாவங்ளை போக்கும். சந்தன தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். சௌகந்திகதூபம் எல்லாக்காரியங்களையுஞ் சாதித்துத் தரும். கரிய அகிலின்தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். வெண்மையான அகிலின் தூபம் முத்தியைக் கொடுக்கும். அரக்கு, கஸ்தூரி யென்னுமிவை சேர்ந்த தூபம் நான்கு வேதங்களையும் அத்தியயனஞ் செய்யும் நல்ல பிராமணப் பிறவியைத்தரும். நெய் சேர்ந்த குங்கிலிய தூபத்தைப் பதினைந்து நாட்கள் சமர்ப்பித்தால் ஆயிரங்கோடி கற்பகாலம் சிவலோககத்திலுள்ள போகத்தையும், சக்கிரவர்த்தியின் பிறப்பையும் தரும். எருமை நெய்யால் செய்யப்பட்ட குங்கிலியதூபம் இரண்டாயிரம் வருஷம் பலனைத்தரும். பச்சிலை மரப்பொடியுடன் கூடின குங்கிலிய தூபம் சிவசாயுஜ்யத்தைக் கொடுக்கும். ஈசான முதலிய ஐந்து முகங்களினும் முறையே மல்லிகை, கரியஅகில், வெள்ளைஅகில், சௌகந்திகம், குங்கிலியம் என்னுமிவற்றின் தூபங்கள் சிறந்தனவாகும். இவ்வாறு தூபோபசாரம் சமார்ப்பித்து பின்னர்த் தீபோபசாரம் சமர்ப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment