Tuesday, February 8, 2011

அமாவாசை, பவுர்ணமியில் பிறந்தவர்கள் அதே திதியில் பிறந்தவர்களை மணக்கலாமா?

அமாவாசை, பவுர்ணமியில் பிறந்தவர்கள் அதே திதியில் பிறந்தவர்களை மணக்கலாமா?

பவுர்ணமி திதியில் பிறந்தவர்கள், அதே திதியில் பிறந்தவர்களை திருமணம் செய்வதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதேபோல் அமாவாசை திதியில் பிறந்தவர்களும், அதே திதியில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால், தம்பதிகள் ஒருவரும் ஒரே மாதம் வரும் அமாவாசை/பவுர்ணமி திதியில் பிறந்திருந்தால் அது பல கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக சித்திரை மாத பவுர்ணமியில் பிறந்தவரை, அதே மாதம் பவுர்ணமியில் பிறந்தவருக்கு திருமணம் செய்யக் கூடாது. இதுபோன்ற அமைப்புகளை தவிர்க்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, அமாவாசை திதியில் பிறந்தவர்களை, பவுர்ணமி திதியில் பிறந்தவர்களுடன் சேர்க்கக் கூடாது. இருவருக்கும் முற்றிலும் மாறுபட்ட எண்ண ஓட்டங்கள் காணப்படும் என்பதால் வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது.
ஈர்ப்பு சக்தி உண்டு: அமாவாசை, பஞ்சமி, நவமி ஆகிய திதிகளில் பிறந்தவர்களும், அதே திதியை உடைய மற்றவர்களுக்கும் பொதுவாகவே ஈர்ப்புத் தன்மை இருக்கும். அமாவாசை திதியில் பிறந்த ஒருவர், அதே திதியில் பிறந்த மற்றொருவருடன் மிகவும் நட்புறவுடன் இருப்பார்.

No comments:

Post a Comment