Sunday, February 6, 2011

ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள் -

ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள் -
அதிகாலையில் எழுந்திரு.

படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.

கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.

கடவுளை வணங்கு.

மந்திரத்தை நினை -ஜபம் செய்.

காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.

உடனே குளித்து விடு.

ஆலயத்திற்கு செல்.

தெய்வ வழிபாடு செய்.

பின்னர் உன் தொழிலைக் கவனி.

தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.

நியாய முறையில் பொருளைத்தேடு.

அநியாயத்தை மனத்திலும் கருதாதே.

உலகத்தோடு ஒத்து வாழ்.

உன்னைப் போல் மற்றவரையும் நினை.

எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.

மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.

புகழொடு வாழ்.

பகைவா¢டத்திலும் இனிமையாகப் பேசு.

எல்லோ¡¢டத்திலும் அருவருப்பாகப் பேசாதே.

எவா¢டத்திலும் அருவருப்பாகப் பேசாதே.

அனைவா¢டத்தும் முக மலர்ச்சியுடன் பேசு.

நல்லவரைப் பின்பற்றுக.

நல்லவர் சொற் கேள்.

நல்லவர் போன வழி நீயும் போகுக.

நல்லோரைக் காண்பதுவும் நன்றே.

நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.

பொ¢யோ¡¢டத்தில் வணக்கமாய் இரு.

பொ¢யோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.

பொ¢யோர் பேச்சைக் கேள்.

பொ¢யோரைக் கண்டால் தாழ்மையுடன் நட

பொ¢யோர் வார்த்தையை மீறாதே

பொ¢யோர் சொற்படி நட.

தீயோருடன் சேராதே.

தீயோர் சொற்களைக் கேட்காதே.

தீயோருடன் பழகாதே.

தீயோரைக் கண்டால் தூர நட

தீயோரைக் காண்பதும் தீதே.

தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.

தர்மம் செய்க.

தர்மத்தைப் பேணிக் காக்க.

புண்ணியம் செய்க.

பாபத்தைச் செய்யாதொழிக.

இறைவனை (ஸ்வாமியை) வழிபடுக.

குருக்களை வணங்குக.

அற நூல்களை ஓதுக.

கொலை செய்யாதே.

பொய் பேசாதே.

கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.

திருடாதே (களவு செய்யாதே).

ஐம்புலனை அடக்குக.

பிரம்மசர்ய விரதம் காக்க.

பொருள்மீது பேராசைப் படாதே.

பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.

நீ மனிதனாக இரு.

நீ மனிதனாக வாழ்க.

விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.

பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.

பொறாமைப்படாதே.

கோபத்தை அடக்குக.

கர்வங் கொள்ளாதே.

வஞ்சனை செய்யாதே.

கபடம் செய்யாதே.

பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.

லோபத்தை விடுக.

அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)

அபய தானம் செய்.

கல்விக்கு உதவி செய்.

பிறர் பிணி நீக்குக.

பிறர் நலம் கருதுக.

தன்னலம் கருதாதே.

பிறரை இகழாதே.

தற்புகழ்ச்சி செய்யாதே.

எல்லோ¡¢டத்திலும் நேசமாயிரு.

எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.

யாருக்கும் கெடுதி செய்யாதே.

பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.

பிறருக்குக் கெடுதி யுண்டாவதைப் பற்றிப் பேசாதே.

ஊன் உண்ணாதே.

ஊன் உண்பது மனித இயல்பல்ல.

ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.

கள் குடிக்காதே.

கள் மயக்கத்தைத் தரும்.

கள் அறிவைக் கெடுக்கும்.

கள் மனித இயல்பைக் கெடுக்கும்.

கள்ளைக் கனவிலும் கருதாதே.

களவையும் கனவில் நினைக்காதே.

பிறர் பொருளை விரும்பாதே.

பிறர் மனை நயவாதே.

சூதாடாதே.

வேசியை நேசிக்காதே.

விபசா¡¢யை விரும்பாதே.

குருபத்தினியைக் கருதாதே.

கன்னியைக் கெடுக்காதே. குலமாதரைக் கெடுக்காதே.

மாதாவைத் தெய்வமாக நினை

செய்ந்நன்றி மறவாதே.

பித்ரு துரோகம் நினைக்காதே.

தாயாதி துரோகம் நினைக்காதே.

அண்டினவரைக் காப்பாற்றுக.

பிராணிகளை வதைக்காதே.

பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.

பிராணிகளை அடிக்காதே.

பிராணிகளுக்குச் சா¢யான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.

காலந் தவறி தீனி வைக்காதே.

காலந்தவறி தண்ணீர் காட்டாதே.

வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) அதிகக் சுமை ஏற்றாதே.

மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.

உதவி செய்யாமல் அடிக்காதே.

பசுங்கன்றுக்குப் பால் விடு.

பாலை அடியோடு கறக்காதே.

கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.

வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.

உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓ¡¢டத்தில்; புதைத்து விடு.

பொய்ப் பிரசாரம் செய்யாதே.

பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.

உண்மையற்றதை உலகில் பரப்பாதே.

ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.

ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. வெளியிடாமல் இருந்துவிடு.

பிறர் பொருளை அபகா¢க்காதே.

உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.

பிறர் பொருளை அபகா¢க்கக் கனவிலும் கருதாதே.

தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசா¡¢த்து அவருக்குக் கொடுத்து விடு.

அரசு ஆணையை மீறாதே.

அரசு சட்டப்படி நட

அரசுக்கு அடங்கி நட.

அரசை அவமதிக்காதே.

அரசு அன்று கொல்லும்.

தெய்வம் நின்று கொல்லும்.

ராஜா பிரத்யக்ஷ தேவதா.

பாலில் நீரைக் கலந்து விற்காதே.

தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.

அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.

அழுகிய பொருளை அகற்றி விடு. அதனைக் கலந்து விற்காதே.

வாங்கும்போது அதிக நிறுத்தலில் வாங்காதே.

விற்கும் போது குறைவான நிறுத்தலில் விற்காதே.

விலையைக் குறைத்தாலும் குறை அளவைக் குறைக்காதே.

அளவை மத்யஸ்தமாக அளத்தல் வேண்டும்.

வாங்கும்போது அதிக அளவில் வாங்காதே.

விற்கும்போது குறைந்த அளவில் விற்காதே.

திருட்டுப் பொருளை வாங்காதே.

சட்டத்திற்கு மீறி நடக்காதே.

பொருள்களை மிதமாக வைத்துக் கொண்டு வாழ்க.

அதிகமான பொருள்களைச் சேர்த்து வைக்காதே.

உன் தேவைக்கு அளவான பொருள்களைச் சம்பாதித்துக் கொள்.

அதிகமான பொருள்களை நீயே பொருளற்றவர் கட்குப் பங்கிட்டுக் கொடு.

எதிலும் அதிக ஆசைப் படாதே.

ஜாதி குல முறைப்படி மணம் செய்து கொள்.

மணம் செய்து கொண்ட மனைவியுடன் ஒத்து வாழ்.

மனைவி மனம் நோக எதையும் செய்யாதே.

தன் மனைவியிருக்க பிறர் மனைவியைச் சேராதே.

வேசியின் உறவு கொள்ளாதே.

புணர்ச்சி செய்வதில் அதிக ஆவல் கொள்ளாதே.

புணர்ச்சி செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளாதே.

மக்களைப் பெறுதற்கு மிதமாகப் புணர்தல் வேண்டும்.

புணர்ச்சி செய்வதற்கு¡¢ய அங்கத்தில் புணர்தல் வேண்டும்.

புணர்ச்சிக்கு¡¢ய காலத்தில் (இரவில்) புணர்தல் வேண்டும்.

பகலில் புணர்ச்சி செய்யாதே.

உறவினரை உள்ளன்போடு நேசி.

உறவினருக்கு உன்னால் இயன்ற உதவி செய்.

உறவினருக்கு விருந்தளி.

விருந்தினா¢டம் முகமலர்ந்து பேசு.

உபசா¢த்து உள்ளங்களித்து உப்பிலாக் கூழிட்டாலும் உண்பது அமிர்தமாகும்.

முகங்கடிந்து முப்பழமொடு பால் கொடுப்பினும் கடும்பசி யாகும்.

வீட்டிற்கு வந்தவரை வாவென்று அழைக்காமல் இராதே.

பிறருக்குக் கொடுப்பதில் உன்னிடம் உள்ளதை நல்ல எண்ணத்துடன் மறைக்காதே

பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படாதே.

உலகில் நல்லவனாக வாழ்க.

கெட்டவனென்று பேரெடுக்காதே.

உலகுக்கு உதவியாளனாக வாழ்.

உலகத்தார் விரும்பாத செயலைச் செய்யாதே.

உன்னுடைய வாழ் நாட்களை நல்லபடியே கழி.

வாலிபத்தில் எவ்விதமாயினும் வாழ்ந்து விடலாம். முதுமையில் வாழ இயலாது.

முதுமையில் உறவினருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்.

பெண்கள் தனித்து வாழ்தல் கூடாது.

பெண்கள் இளமையில் தந்தை தாயின் அடக்கத்தில் இருத்தல் வேண்டும்.

பெண்கள் வாலிபத்தில் கணவனுடன் கூடி வாழ்தல் வேண்டும்.

பெண்கள் முதுமையில் மக்களுடன் கூடி வாழ்தல் வேண்டும்.

மக்கள் இளமையில் நன் முறையில் இருக்க வேண்டும்.

மக்கள் மறுமையில் சுகத்துடன் வாழ முயலல் வேண்டும்

No comments:

Post a Comment