Thursday, May 15, 2014

நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை

நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13.

ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |
விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |
சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் ,
தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் ,
விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் ,
விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் ,
விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும் ,
அக்ஷரம் -அழிவற்றவரும் ,
பரமம் பதம் -அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும் ,
நாராயணம் தேவம் -நாராயணன் என்னும் தெய்வத்தை.

,எண்ணற்ற தலைகளை உடையவரும் ,ஒழி மிக்கவரும் ,அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் ,
உலகைத்தை விளைவித்து ,மங்கலத்தைச் செய்பவரும் ,அணைத்து உலகிலும் நிறைந்து , விரிந்து பரந்தவரும் ,
அழிவற்றவரும் ,மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன் .’                                                                     1

2.
விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |
பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம் |
விஸ்வத-இந்த உலகத்தைவிட ,
பரமான் -இதற்கு அப்பாற்பட்டு ,மேலானவரும் ,
நித்யம் -என்றும் உள்ளவரும் ,
விஸ்வம் -உலகமாய் விளங்குபவரும் ,
ஹரிம் -அவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவரும் ,
நாராயணம் -நாராயணனை

இந்த உலகிற்கு அப்பாற்பட்டு ,இதனை விட மேலானவரும் ,என்றும் உள்ளவரும் ,பெயரை உச்சரித்த
மாத்திரத்தில் துன்பங்களைக் களைபவரும் ,ஆகிய நாராயணனை த்யானம் செய்கிறேன் .

3.பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்
னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

விஶ்வ’ஸ்ய-இவ்வுலகிற்கு ,
பதிம் -தலைவரும் ,
ஆத்ம ஈஸ்வரம் -அனைத்து உயிர்களின் தலைவரும் ,
சாஸ்வதம் -என்றும் உள்ளவரும்,நிலை பெற்றவரும் ,
சிவம் -மங்கள வடிவானவரும் ,
அச்யுதம் -அழிவற்றவரும் ,
மகாக்யேயம் -சிறந்த அறிவினால் அறியத்தக்கவரும் ,
விஸ்வ ஆத்மானம் -அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவரும் ,
பராயணம் -சிறந்த புகலிடமாக இருப்பவருமான ,
நாராயணனை.

அனைத்து உலகிற்கும் தலைவனை ,என்றும் நிலையாய் இருப்பவரும் ,மங்கள வடிவினரும் சிறந்த அறிவால்
அறியத்தக்கவரும் ,எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும் ,சிறந்த புகலிடமாக இருப்பவருமான
நாராயணனை ,த்யானிக்கிறேன் .

4.னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |
னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

“நாராயண பர ஜ்யோதி -நாராயணனே சிறந்த ஒளி ,
நாராயண : பர : ஆத்மா -நாராயணனே அனைத்தையும் கடந்த பரமாத்மா ,
நாராயண : பர ப்ரஹ்ம-நாராயணனே பர ப்ரஹ்மம்.
நாராயண :பர தத்வம் -நாராயணனே மேலான உயர்ந்த உண்மை .
நாராயண : பர த்யாதா -நாராயணனே த்யானம் செய்பவர்களுள்,த்யானம் செய்யப் படுபவர்களில் சிறந்தவர் .
நாராயண ; பர த்யானம் -நாராயணனே சிறந்த த்யானம் .
5.யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||
அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |
ஜகத் சர்வம் -உலகனைத்திலும் ,
யத்ய கிஞ்சித் த்ருச்யதே -காணப்படுவது எதுவாயினும், மிகுந்து காணப் படுவத்ஹயினும் ,
அபிவா -அல்லது ,
ஸ்ரூயதே -கேட்கப் படுவது எதுவாயினும் ,
தத் சர்வம் -அவை அனைத்தையும் ,
அந்த -உள்ளும் ,
பஹி : ச -புறமும் ,
வ்யாப்ய -வியாபித்தபடி, நிறைந்தபடி ,ஊடுறிவியபடி ,
நாராயண : ஸ்தித : இருக்கிறார் .

உலகனைத்தும் காணப்படுவது , கேட்கப்படுவது எதுவாயினும் ,அவை அனைத்தையும் உள்ளும் புறமும்
வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்


6.அனம்மவ்யயம்’ விக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |
 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |
.அனந்தம் -எல்லையற்றவரும், முடிவற்றவரும் ,
அவ்யயம் -விளக்க முடியாதவரும் ,விளக்கித்திற்கு அப்பாற்பட்டவரும் ,
கவிம் -அனைத்தும் அறிந்தவரும் ,
சமுத்ரே -சம்சாரப் பெருங்கடலின் ,
அந்தம் -முடிவில் ,இருப்பவரும் ,
விஸ்வ சம்புவம் -உலகம் விளையக் காரணமானவரும் ,மங்கலம் செய்பவரும் ,
ஹ்ருதயம் ச அபி – இதயம் ,
அதோ முகம் -கீழ் நோக்கிய ,
பத்ம கோச ப்ரதீகாசம் -தாமரை மொட்டு போல் ,

முடிவற்றவரும் ,அனைத்தும் உணர்ந்தவரும் ,அறிந்தவரும் ,சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும் ,
உலகிற்கு நன்மை செய்பவரும் ,ஆகிய நாராயணனை ,கீழ் நோக்கிய தாமரை மொட்டு போல் அமைந்துள்ள
இதயத்தில் த்யானிக்கின்றேன் .

7.
அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |
ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

நிஷ்ட்ட்யா -குரல் வளைக்கு ,
அத :- கீழே ,
நாப்யாம் -தொப்புளுக்கு ,
உபரி -மேலே ,
விதஸ்யா : அந்தே -ஒரு சாண் தூரத்தில் ,
திஷ்டதி – இருக்கிறது .
விச்வச்ய -அனைத்து உலகிற்கும்,
மகத் -உயர்ந்த , சிறந்த ,
ஆயதனம் -உறைவிடம்.
ஜ்வாலமால குலம் -சுடர் வரிசையால் சூழப்ப்பட்டார்ப்போல் ,
பாதி -ப்ராகசிக்கிறது .

குரல் வளைக்குக் கீழே ,தொப்புளுக்கு மேலே , ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது .
உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம் ,சுடர் வரிசையால் சூழப்பட்டற்போல் பிரகாசிக்கிறது .

8.
ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |
தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |


ஆகோச சந்நிபம் -தாமரை மொட்டு போன்ற இதயம் ,
சந்ததம் -நான்கு புறங்களிலும் ,
சிலாபி -நாடிகளால் ,
லம்பதி -தொங்குகிறது ,
தஸ்ய -அதன் ,
அந்தே -உள்ளே ,
சூக்ஷ்மம் -நுண்ணிய ,
சூக்ஷிரம் -ஆகாசம் ,
சர்வம் -அனைத்தும் ,
தஸ்மின் -அதில் ,
ப்ரதிஷ்டிதம் -நிலை பெற்றுள்ளன .

தாமரை மொட்டு போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது .
அதன் உள்ளே ஆகாசம் உள்ளது .அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன .

9. தஸ்ய மத்யே’ ஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |
ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |
தஸ்ய -அதன் ,
மத்யே -நடுவில் ,
விச்வார்ச்சி -எங்கும் ஒழி வீசுபதாகவும் ,
விச்வதோ முக :-எல்லாத் திக்கிலும் செல்வதாகவும் ,
மகான் -சிறந்த ,
அக்னி -அக்னி ,
அக்ரபுக்- முதலில் உண்பதாக ,
ஆகாரம் -உணவை ,
விபஜஸ் -பிரித்துக் கொடுப்பதாக ,
திஷ்ட்டன் - நிலைத்து நிற்பதாக .
அஜர :- பழுது படாதததாக .
கவி -அனைத்தையும் காண்பதாக .


எங்கும் ஒளி வீசுபதாகவும் ,எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்னி ,அந்த ஆகாசத்தின்
நடுவில் உள்ளது .
பிராணனாகிய அந்த அக்னி ,முதலில் உண்பதாகவும் , உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும் ,நிலைத்து
நிற்பதாகவும் ,தான் பழுது படததாதாகவும் ,அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

10.
திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |
ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |
தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ
.தஸ்ய -அந்த பிராணனின் ,
ரச்மைய -கிரணங்கள் ,
த்ரியக் -குறுக்கிலும் ,
ஊர்த்வம் -மேலும் ,
அத :- பரவி ,
சந்ததா -எப்போதும் வியாபித்திருக்கின்றன .
ஆபாத தல மஸ்தக :-உள்ளங்கால் முதல் உச்சந்த்தலை வரை ,
ஸ்வம் தேகம் -தனக்குரிய உடலை ,
சந்தாபயதி -உஷ்ணமுள்ளதாகச் செய்கிறது .
தஸ்ய -அதன் ,
மத்யே -மத்தியில் ,
அணீய -மெலிதான ,
வஹ்நிசிகா -நெருப்புச்சுடர்,
ஊர்த்வா -மேல் நோக்கி அமைந்துள்ளது .


அப்பிராணனின் கிரணங்கள் ,குறுக்கிலும் ,நெடுக்கிலும் ,மேலும் கீழும் பரவி ,உடல் எங்கும் நிறைந்துள்ளன .
உச்சி முதல் பாதம் வரை தனது உடலை சூடுள்ளதாகச் செய்கிறது .
இதன் நடுவில் மெலிதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்துள்ளது .

11.
 னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |
னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |
நீலதோயாத மத்யஸ்தாத் ‘கருத்த மேகங்களின் மத்தியில் இருந்து ,
பாஸ்வரா -ஒளி வீசுகின்ற ,
வித்யுத் லேகா இவ -மின்னர்க் கொடி போல் ,
-
நீவார சூகவத் -நெல் மணியின் சிறு முளை போல் ,
தன்வீ -மெல்லியதாக ,
பீதா -பொன்னிறமாக ,
அணு உபமா -நுண்ணியதான அணுவைப் போல் ,
பாஸ்வதி -ஒளிர் விட்டுக் கொண்டு இருக்கின்றது .

12.
தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ
| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

தஸ்யா -அந்த ,
சிகாயா -சுடரின்
மத்யே -மத்தியில் ,
பரமாத்மா -அனைத்தையும் கடந்த இறைவன் வீற்றிக்கிறார் .
ஸ : அவரே ,
பிரம்மா -பிரம்மா,
ஸ -அவரே ,
ஹரி -விஷ்ணு ,
ஸ -அவரே ,
சிவ -சிவன் ,
ஸ -அவரே ,
இந்த்ர -இந்திரன் ,
ஸ -அவரே ,
அக்ஷரே -கட்டுக்குள் அடங்காதவர்,அழிவற்றவர் ,
ஸ்வராட் -தனது ஒளியுடன் பிரகாசிப்பவர் .
பர : அவருக்கு மேல் எவரும் இல்லாதவர் .

அச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிக்கிறார் .அவரே பிரம்மா ,அவரே சிவன் ,அவரே ஹரியாகிய விஷ்ணு ,
,அவரே இந்திரன் ,அவர் அழிவற்றவர் .தன சுய ஒளியுடன் பிரகாசிப்பவர் .அவருக்கு மேல் எவரும் இல்லாதவர்.

13.
றுதக்‍ம் த்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |
ர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பா வை னமோ னமஃ’ ||
ரிதகும் -காணும் பொருள்களின் அழகாகவும் சீராகவும் ,
சத்யம் -காண் பொருட்களுக்கு ஆதாரமாகவும் உள்ள ,
பரம் ப்ரஹ்ம -பரம் பொருளை ,
புருஷம் -உடலனைத்தும்,உடல் தோறும் உறைபவனை ,
கிருஷ்ண பிங்கலம் -கரு மேனித் திருமாலும் ,செம்மேனிச் சிவனும் ,
இணைந்த வடிவை ,
ஊர்த்வரேதம் -சக்தி கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் இறைவனை ,
விருபாக்ஷனை -முக்கண் உடயோனை ,
விச்வரூபாய வை -அனைத்தையும் தன வடிவாய்க் கொண்டவனை ,
நமோ நம -பன் முறை வணங்குகிறேன் .

காணும் பொருள்களின் ஆதாரமாகவும் அவற்றின் எழிலாகவும் உள்ள பரம் பொருளை ,உடல்கள்
அனைத்திலும் ,உறைபவனை ,கருமேணித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒருங்கிணைந்த வடிவை
,தூயவனை,முக்கண்ணனை அனைத்தையும் தன வடிவைக் கொண்டவனை பன் முறை வணங்குகிறேன்
ஓம் னாராணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||
நாராயணாய -நாராயணனை ,
வித்மஹே -அறிந்து கொள்வோம் .
வாசுதேவாய -வாசு தேவரின் புதல்வனாகிய வாசுதேவனை ,
தீமஹி -த்யானிப்போம் .
தத் விஷ்ணு -அந்த விஷ்ணு ,
ந ;நம்மை ,
ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
நாரணனை அறிந்து கொள்வோம் .
அந்த வாசுதேவனைத் த்யாநிப்போம் .
அந்த விஷ்ணு அவரைத் த்யானிக்க நம்மைத் தூண்டட்டும் .
ஓம் || ஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |
விஶ்வம்’னாராய’ணம் தேக்ஷரம்’ பமம் பதம் |
விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராணக்‍ம் ஹ’ரிம் |
விஶ்வ’மேவேதம் புரு’-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |
திம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’க்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்
னாராணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் ராய’ணம் |
 னாராணப’ரோஜ்யோதிராத்மா னா’ராணஃ ப’ரஃ |
 னாராணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராணஃ ப’ரஃ |
னாராணப’ரோ த்யாதா த்யானம் னா’ராணஃ ப’ரஃ |
யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூதே‌உபி’ வா ||
அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராணஃ ஸ்தி’தஃ |
அனம்மவ்யயம்’ விக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |
 த்மகோஶ-ப்ர’தீகாக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |
அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |
ஜ்வாமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’னம் ம’ஹத் |
ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்த்யாகோஸன்னி’பம் |
தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ர்வம் ப்ரதி’ஷ்டிதம் |
ஸ்ய மத்யே’ ஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |
ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமரஃ விஃ |
திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |
ம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததமஸ்த’கஃ |
ஸ்யத்யே வஹ்னி’ஶிகா ணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ
னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கே பாஸ்வ’ரா |
னீவாஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |
தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேரமா”த்மா வ்யவஸ்தி’தஃ
| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பமஃ ஸ்வராட் ||
றுதக்‍ம் த்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |
ர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பா வை னமோ னமஃ’ ||
ஓம் னாராணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

No comments:

Post a Comment