Friday, April 4, 2014

நட்புக்கு துரோக செய்ய கூடாது

நட்புக்கு துரோக செய்ய கூடாது
===================================
** “ உயிர் நண்பனுக்கு நாம் எதை செய்ய கூடாது ? ஏன் ? “ என்று தருமர் வினா எழுப்பினார். அதற்கு பிதாமகர் “ நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது ” என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.
வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கு ஒரு திருடன். அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம். தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன். அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான். உண்ண உணவும், உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன். வாழ்க்கை நடத்த ஒரு கணவனை இழந்த நங்கையையும் அளித்தான். இவற்றை பெற்ற அந்த அந்தணன் இன்பமாக காலம் கழித்தான். நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான். கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஊரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான். வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டை தொழிலில் தேர்ச்சி பெற்றான். நாள் தோறும் காட்டு பறவைகளை கொல்வதை வழக்கமாக கொண்டான். இப்படிச் சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார். மரவுரி தரித்தவர். வேதம் அறிந்தவர். ஆசாரம் மிக்கவர். அவர் ஒரு பிரம்மச்சாரி. கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும். கௌதமரின் நண்பரும் கூட. உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார். அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான். அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் கையில் வில் இருந்தது. தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது. அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.
கௌதமனை நோக்கி “ என்ன காரியம் செய்தாய்? உயிர்களை கொல்லும் வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்? நீ வேதங்களை போற்றும் அந்தணன் என்பது மறந்தாயா ? உயிர்களை கொல்லும் கீழான செயலை செய்யலாமா? நீ உடனே இங்கிருந்து போய் விடு " என்று கூறினார்.
அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன், “ நான் ஏழை. அந்த வறுமை என்ன இந்த நிலைக்கு தள்ளிவிட்டது. இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன். ஓரிரவு மட்டும் இங்குத் தங்கி பின் வேறிடம் செல்லலாம் “ என்று கூறினான். அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை ஏற்று அங்கு தங்கினார் .
பொழுது விடிந்து, அவ்விருவரும் ஊரை விட்டு புறப்பட்டனர். பின் அந்தணரிடம் விடை பெற்று சென்ற கௌதமன் வழியில், கடல் யாத்திரை செய்யும் வணிகரை சந்தித்தான். அப்போது மத யானையால் வணிக கூட்டம் தாக்கப்பட்டது. கௌதமன் வட திசை நோக்கி பயந்தபடியே ஓடினான். யாருடைய உதவியும் இல்லாததால் காட்டில் தனியாக சென்றான். மரங்கள் நிறைந்த காடு அழகு மிக்கதாய் இருந்தது. பறவைகள் ஒலியெழுப்பி கொண்டிருந்தன. அந்த இனிய ஒலிகளை கேட்டுக்கொண்டே இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருந்தான்.
மணல் கடல் போல் விசாலமாக காட்சி அளித்தது. ஓரிடத்தில் பெரிய ஆலமரம் கண்ணில் பட்டது. குடை கவிழ்த்தது போல் அதன் கிளைகள் தாழ்ந்து நிழல் கொடுத்தன. மகிழ்ச்சியுடன் கௌதமன் அம்மர நிழலில் அமர்ந்தான். மிகவும் களைப்புடன் இருந்தவன், சற்று கண்ணயர்ந்தான். சூரியன் மறைய, அப்போது பிரம்ம லோகத்தில் இருந்து ஒரு பெரிய கொக்கு அங்கு வந்தடைந்தது. அது பிரம்மாவிற்கு நண்பன். காசியப்பருக்கு புதல்வன். கொக்குகளுக்கு அரசன். அதன் பெயர் நாடீஜங்கன். அந்த கொக்கின் இருப்பிடம் அந்த ஆலமரம். அது தேவ கன்னியரிடம் பிறந்ததால் அழகுடன் திகழ்ந்தது. அதன் உடலிலிருந்து எங்கும் ஒளி வீசியது. அந்தக் கொக்கு ராஜ தர்மா என்னும் பெயரையும் பெற்றிருந்தது.
கௌதமன், ஒளி வீசும் அக்கொக்கைக் கண்டு வியப்புற்றான். பசியுடன் இருந்த அவன் அதை கொல்ல நினைத்தான். ஆனால் அந்தக் கொக்கோ அவனை அன்றிரவு தன் விருந்தினராக இருக்க வேண்டி கொண்டது. அந்த கொக்கு அவனிடம் “ ஐயா, நான் காசியப்பரின் புதல்வன். என் தாய் தாட்சாயணி. என்று கூரி நல்ல உணவுகளை கொடுத்து உபசரித்தது. களைப்பை போக்க தன் சிறகால் விசிறிற்று. இலைகளால் ஆன படுக்கையையும் அளித்தது. பின் அவன் வருகைக்கான காரணத்தை கேட்டு அறிந்தது. பின், “ கவலை வேண்டாம். திரண்ட செல்வத்துடன் நீ திரும்புவாய் என்று சொல்லி, “ செல்வம் சேர்க்கும் வழிகள் “ என பிரகஸ்பதி சில வழிகளை சொல்லியிருக்கிறார். அவற்றில் நண்பன் மூலம் சேர்த்தல் சிறந்த வழியாகும். இப்போது உன் நண்பன் நான். உனக்குத் தேவையான வழியை கூறுகிறேன்' “ என உரைத்தது. “ அழகு மிக்கவனே, இவ்வழியே சென்றால் விருபாட்சன் என்னும் என் நண்பனை காண்பாய். அவன் அசுரர்க்கு அதிபதி. மிகவும் பலம் வாய்ந்தவன். என் சொல்லை கேட்டுப் பெரும் செல்வத்தை உனக்கு தருவான் “ என்றும் உரைத்தது.
கௌதமன் பின், அக்கொக்கு சொன்ன வழி சென்றான். இயற்கை காட்சிகளை கண்டு களித்தபடியே மனுவ்ரஜம் என்னும் நகரை அடந்தான். அந்நகரம் கற்களால் ஆன தோரணங்கலை கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது. அந்த அந்தணன் தன் நண்பனால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்த அசுரன் அவனை விருந்தினனாக உபசரித்தான். அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான். அந்தணன் கூறினான். நான் மத்திய நாட்டை சேர்ந்தவன். தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன் என்றும், தன் கடந்த ஓர் ஆண்டின் தொழில் மற்றும் வாழ்வை பற்றி கூறினான்.
இதை கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான். “ இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை. ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப்பட்டவன். ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றை தருவேன். மற்ற அந்தணருடன் உணவை இவனும் அருந்தட்டும். இனி சிந்திக்க ஏதுமில்லை. மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' “ என்னும் முடிவுக்கு வந்தான்.
அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான். மற்றவர்களை போல கௌதமனும் நிறைந்த செல்வத்தை பெற்று கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போல சுமந்துக்கொண்டு ஆலமரத்தை அடைந்தான். அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் ராஜதர்மா அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பை போக்கியது. அப்போது “ இந்த பெருஞ்சுமையை தூக்கி கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே, வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' “ என சிந்தித்தான்.
நன்றி கெட்ட கௌதமன், இந்தப் பறவை அதிகம் சதைப்பற்றுள்ளதாய் இருக்கிறது. இதனை கொன்று இதன் மாமிசத்தை எடுத்து சென்றால் தேவைக்கு அதிகமாகவே உணவு கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான். தேவ பக்ஷிகளில் சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி, கௌதமனின் அருகில் தூங்கலாயிற்று. கௌதமன், தூங்கி கொண்டிருந்த பறவையை தீயில் இட்டு பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்து கொண்டு கிளம்பினான்.
பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான். இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து, “ பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது. எனக்கு சந்தேகம் வருகிறது. அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன். இரக்கம் இல்லாதவன். நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா “ என்றான்.
மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கி சென்றான். அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு, அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதை கண்டான். கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான். அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர, பறவையின் எலும்புகளையும் எடுத்து கொண்டு அசுரனிடம் வந்தான். அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.
பின் அவன் தன் மகனை அழைத்து “ கௌதமனை கொல்ல வேண்டும். மகாபாவியான அவன் மாமிசத்தை, மனித மாமிசம் உண்ணும் அரக்கர்கள் உண்ணட்டும் “ என்றான். ஆனால் நன்றி கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை. அவனை துண்டு துண்டாக வெட்டி மாமிசம் உண்ணும் அரக்கி கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான். அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை. நன்றி கெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை. திருடனுக்கும், குடிகாரனுக்கும் கூட பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை.
அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்கு தீ மூட்டித் தகனம் செய்தான். சிதை தயாரிக்கப்பட்டு ஆடை, அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது. சந்தன கட்டைகள் அடுக்கப்பட்டன. சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது. அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது. விருபாட்சனுடைய நகரை அடைந்தது.
அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான். அந்த கொக்கு இந்திரனை நோக்கி “ தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்க செய்ய வேண்டும் “ என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்க செய்தான்.
இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றை கூறினான் “ அரக்க அரசனே, முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி " நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும், பரம்பொருளை அறியத்தக்கதுமான கொக்காக பிறப்பாயாக. பாவச்செயல் புரிபவனும், நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான். உன்னைக் கொல்வான். அப்போது உனக்கு விடுதலை கிடைக்கும். அந்த சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும். அந்த அந்தணனும் நரகத்தை அடைவான் " என்று கூறி தேவர் உலகை அடந்தான்.
பீஷ்மர் தொடர்ந்தார், “ தருமா....!!! இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார். நான் உனக்கு உரைத்தேன். நன்கு நினைவில் வைத்துக் கொள். நன்றி கெட்டவனுக்கு பிராயச்சித்தமே இல்லை. அவனுக்கு புகழும் இல்லை. இன்பமும் இல்லை. இதுபோலவே நண்பனுக்கு துரோகம் இழைத்தால் நரகம் தான் கிடைக்கும். எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும், நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் “ என்று எடுத்துரைத்தார்.
கங்கை மைந்தர் கூறிய இந்த கதையின் மூலம், நமக்கு உதவியவர்களுக்கு நாம் எக்காலத்திலும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, நம் சுற்றத்தாருக்கும் உணர்த்துவோம்....

பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல...

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம்  பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்

திருமூலர் சொன்ன யானைக் கதை:

திருமூலர் சொன்ன யானைக் கதை:
திருமூலர் சொன்ன யானைக் கதை: தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்!
யானையும் ஆறு அந்தகர்களும் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. இந்தக் கதையை புத்த மதம், சமண மதம், சூஃபி முஸ்லீம்கள், ஆங்கிலக் கவிஞன் ஆகியோர் பயன்படுத்தினர். ஆனால் இது திருமூலர் பாடிய திருமந்திரத்தில் இருந்து பல இடங்களுக்குப் பரவியது பலருக்கும் தெரியாது.
...
திருமூலர் பாடுகிறார்:
முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும்
இதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே
அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே (திருமந்திரம்– 1507)
பொருள்: உறுப்பு, உறுப்பைத் தாங்கி இருக்கும் யானை முதல் ஒன்றாகும். அந்த யானையின் மலை போன்ற முதுகையும் துடைப்பம் போன்ற வாலையும், தண்டு போலும் உறுதியான தந்தத்தையும், முறம் போன்ற காதையும், உலக்கை போன்ற துதிக்கையையும், உரல் போன்ற காலினையும் கண்ணில்லாத அந்தகர் பலர் ஒவ்வொரு உறுப்பினையும் மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்பது மலையே, துடைப்பமே, தண்டே, முறமே, உலக்கையே, உரலே என்று கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். இது போலத்தான் ஆறு சமயத்தவர்களும் தத்தம் சமயமே பெரிதென்று கூறி வாதிடுதல்.
ஒவ்வொரு உறுப்பை மட்டும் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு அந்தகனும்
மலை போன்ற முதுகு
முறம் போன்ற காது
துடைப்பம் போன்ற வால்
உரல் போன்ற கால்
உலக்கை போன்ற துதிக்கை
தண்டு போன்ற கொம்பு/தந்தம்
என்றனர். இவைகளை கையால் தடவி உணர்ந்த கண் பார்வையற்றோர் அந்தந்த உறுப்பு போன்றதே முழு யானையும் என்று நினைத்தனர்.
இதே கதை ஒவ்வொரு நூலிலும் சிறிது வேறுபட்டும் காணப்படும். எடுத்துக் காட்டாக தூண் போன்ற கால், மரக்கிளை போன்ற துதிக்கை, கயிறு போன்ற வால் என்று கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும். ஆனால் சொன்ன வந்த கருத்துக்கள் ஒன்றே.
அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே. இதையே கடவுளுக்கும், சமயங்களுக்கும் பலர் உதாரணமாக, உவமையாகப் பயன்படுத்தினர்.

சித்திர புத்திர நாயனார்

சித்திர புத்திர நாயனார்
அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..
இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என்றும், சித்திரபுத்திரன் என்றும் அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார். சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.
சித்திர குப்தனுக்கு பதவி: ஒருநாள் யமதர்ம ராஜன் சிவபெருமானிடம் “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன். அதற்கு சிவன் இதற்கான தீர்வை பிரம்மனிடம் சென்று கேள் என்றார். உடனே பிரம்மா! சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-பண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.
அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுபோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.
நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் – துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவில் நினைக்காமல், இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து, “இது புண்ணிய ஆத்மா” என்று சித்திர குப்தன், அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால், அடுத்த பிறவி இல்லை, அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார். சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரண்டு இரட்டிப்பாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து, சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி, அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான-தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான-தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல், எந்த பிறவியும் வளமாகும். வாழ்வே இனிதாகும்.

சமித்து :

சமித்து :
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப்பிடித்தது...
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப்பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
--------------------------------------------
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.

மாயை என்பது என்ன?

மாயை என்பது என்ன?
மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகே மாயை என்று ஞானிகள் சொல்கிறார்கள். உலகில் பலவற்றை கண்ணால் பார்க்கிறோம். தொட்டு உணர்கிறோம். எத்தனையோ நிகழ்வுகள் உலகில் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் நாமும் பங்கு கொள்கிறோம். இப்படி எல்லாம் இருக்கையில் உலகே மாயை என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்தக் கேள்விக்கு ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பதிலைப் பார்ப்போம்.
கிருஷ்ண பரமாத்மாவிடம் நாரதர் மாயை என்பது என்ன என்று விளக்கும்படி ஒரு முறை கேட்டுக் கொண்டார்.
”எனக்குத் தாகமாக இருக்கிறது. எனக்குக் குடிக்க சிறிது தண்ணீர் கொண்டு வா. நான் பிறகு விளக்கம் தருகிறேன்” என்றார் கிருஷ்ணர்.
நாரதர் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர அருகில் இருந்த ஆற்றிற்குச் செல்கிறார். சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நிமிரும் போது ஆற்றங்கரையில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறார். அவள் அழகின் வசப்பட்ட அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவளைக் கேட்கிறார்.
அவளோ சற்று தள்ளி வசிக்கும் தன் பெற்றோரிடம் சம்மதம் கேட்கச் சொல்கிறாள். நாரதர் அவளுடைய பெற்றோரிடம் சென்று சம்மதம் வாங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி பல குழந்தைகள் பெறுகிறார். ஒரு நாள் ஆற்றில் பெருவெள்ளம் வருகிறது. அந்த வெள்ளத்தில் சிக்கி அவரது மனைவியும், குழந்தைகளும் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
தாங்க முடியாத துக்கத்துடன் நாரதர் அழுது கொண்டிருக்கையில் கிருஷ்ணர் வந்து கேட்கிறார். “தண்ணீர் கொண்டு வர வந்தவன் சொம்புத் தண்ணீருடன் ஏன் இங்கேயே நிற்கிறாய்?”
நாரதருக்கு அப்போது தான் கிருஷ்ணர் கேட்டு இங்கு தண்ணீர் எடுத்து வர தான் வந்தது நினைவுக்கு வருகிறது. தன் கையில் சொம்புத் தண்ணீர் அப்படியே இருப்பதையும், அதே உடைகளுடன் அப்படியே தான் இருப்பதையும் அவர் கவனிக்கிறார். திகைப்புடன் நாரதர் கிருஷ்ணரைக் கேட்கிறார். “அப்படியானால் இது வரை நடந்ததும், நான் கண்டதும்?”
“அது தான் மாயை” என்று கிருஷ்ணர் விளக்கினார்.
இந்த மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த சில நிமிடக் கனவில் மிக நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும் உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை அனைத்தும் நிஜமாகவே தெரிகிறது. விழித்த பின் தான் நிஜமல்ல என்பதை உணர்கிறோம்.
விழிக்கும் வரை கனவு நிஜம் தான். விழிக்காமலேயே கனவு தொடருமானால் அது உண்மை என்ற நம் அபிப்பிராயமும் அப்படியே தொடரும். அதே போல ஆத்ம ஞான விழிப்புணர்வு வரும் வரை இந்த உலகம் நிஜம் போலவே தோன்றும் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.
மாயை என்றால் முற்றிலும் பொய்யானது, உண்மையின் அடிப்படையே இல்லாதது என்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். அது சரியான அர்த்தம் ஆகாது. மாயை என்பதைத் தற்காலிகத் தோற்றம் என்பதாகச் சொல்லலாம். உதாரணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம். கானல் நீர் கண்ணுக்குத் தெரிவது நிஜம். அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனால் அப்படித் தெரியும் கானல் நீர் ஒருவரின் தாகம் தீர்க்க உதவாது. கண்ட காட்சியை நிஜம் என்று தாகத்தோடு அதை அணுகினால் செல்பவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
உண்மையை அறிந்தவர்கள் தங்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் கானல் நீர் உண்மை அல்ல தோற்றமே என்பதை உணர்வது போல ஞானிகளும் உலகம் என்பதை தற்காலிக தோற்றமாகவும், நிரந்தர உண்மை அல்ல என்றும் உணர்வதால் தான் உலகமே மாயை என்று கூறுகிறார்கள்.
திடப்பொருள்களைப் பிளந்து கொண்டே போய் கடைசியில் அணுவைக் கூட பிளந்து பார்த்த அணு விஞ்ஞானிகள் கடைசியாக மிஞ்சுவது சக்தி அலைகளே என்றும் திடப் பொருள் என்று சொல்ல முடிந்த ஒரு துகள் கூட இல்லை என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் வெளித் தோற்றத்தில் அப்படியா தெரிகிறது? பாறை, நாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, இரும்புக் கம்பி எல்லாம் திடப்பொருள் போல் அல்லவா தெரிகிறது. இதிலேயே சாதாரண பாமரனின் பார்வையும் விஞ்ஞானியின் அறிவும் வேறு வேறாக அல்லவா இருக்கிறது. இந்த உதாரணத்திலும் கூட நாம் காணும் உலகம் மாயை என்பதை விஞ்ஞானமும் சேர்ந்து அல்லவா சொல்கிறது!
அப்படி என்றால் மாயை என்பது இகழத் தக்கதா என்று கேட்டால் அல்ல என்பதையே நம் ஞானிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கான வழி மாயையை வெறுத்து ஒதுக்குவதோ, மாயையை ஒரு தடையாக நினைப்பதோ அல்ல என்றும் அப்படிச் செய்வது ஞானத்தைத் தந்து விடாது என்றும் அவர்கள் நம்பினார்கள். மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, அதன்பின் மாயையைக் கடந்து செல்வதே ஞானம் அடையும் வழி என்று அவர்கள் கருதினார்கள்.
”என்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மமாக இருக்கையில் நானே மாயையாக இருக்கிறேன்” என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். மாயையை நம் முன்னோர்கள் அன்னையின் வடிவிலேயே கண்டார்கள். மஹா மாயை என அவளைத் துதித்தார்கள்.
”பிரபஞ்சம் மாயை தான். ஆனால் இதற்கு ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது என்கிறது அத்வைதம்” என்று காஞ்சி மகா பெரியவர் தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். மாயை என்பது உலகம் இயங்குவதற்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்றும் மாயை மிக நுண்ணியது என்றும், ஒரு சிறு விதை எப்படி பெரும் காடு உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது எனச் சொல்கிறது சைவசித்தாந்தம்.
ஞானி மாயையின் பின் இருக்கும் பிரம்மத்தை, இறைவனைக் காணத் தவறுவதில்லை. காஞ்சி மகா பெரியவர் மேலும் சொல்கிறார். “ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான்.”
பலவிதமான பொம்மைகளாய் தெரிவது மாயை. அந்தப் பொம்மைகள் அனைத்தையும் சர்க்கரையாய் அறிவது ஞானம். மாயை வேறுபாடுகளைக் காட்டும். ஞானம் ஒருமைப்பாட்டை விளக்கும்.
எனவே வெளித் தோற்றத்தையே நிஜம் என்பதை நம்பி ஏமாந்தால் மட்டுமே மாயை மனிதனை அலைக்கழிக்கும் துக்க காரணியாக மாறி விடுகிறது. அதன் பின் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ளும் ஞானம் பெற்று விட்டால் அதனால் அலைக்கழிக்கப்படாமல் மனிதன் பரிபூரண அமைதி பெறுகிறான்.

அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது!

..."
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது!
குடியிருக்கும் வீட்டை "க்ருஹ லட்சுமி' என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோட...ு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும் கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை,
பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்து பலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்

நண்பர், பகைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?

பூனை..எலி கதை
** தருமர் பீஷ்மரை நோக்கி “ நண்பர், பகைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? “ என கேட்க, “ ஆபத்துக் காலத்தில் நண்பர் பகைவர் இவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறேன் கேள் “ என்றார் பிதாமகர்.
பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான். அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம். மக்களிடம் பகை, நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை. இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்ப செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை ஆகியவற்றை புரிந்து கொண்டு நம்பவும் வேண்டும், நம்பாது இருக்கவும் வேண்டும். நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும். உயிரை பாதுகாத்து கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டும். எந்த சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன். மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான். காரியத்தின் பயனை புரிந்து கொண்டு பகைவனிடம் நட்பாகலாம். நண்பனிடம் பகை கொள்ளலாம். இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்..... என்று கூறி பூனை எலியின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது. அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன. அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வளையில் “பலிதம்” என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது. அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளை தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது. அதன் பெயர் “லோமசம்”.
அந்த காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளை பிடித்து தின்று வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளை கொண்டது. ஒருநாள் அந்த பூனை அந்த பொறியில் மாட்டி கொண்டு தவித்தது. அதை கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓட தொடங்கியது. ஒரு மாமிச துண்டு பூனை சிக்கியிருந்த பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது, அதை எடுத்து தின்று கொண்டிருந்த போது “அரினா” என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டது. அதே சமயம் ஆலமரத்தின் மீது “சந்திராகா” என்னும் கோட்டானையும் பார்த்து பயப்பட தொடங்கியது.
என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனை தோன்றியது. “ அறிவுள்ளவன் ஆபத்தை கண்டு அஞ்சமாட்டான் “ அதிலிருந்து தப்ப வழியை பார்ப்பான். எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடி தப்பிக்கலாம், பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது, அதனால் அதுவும் சமாதானத்திற்கு சம்மதிக்கும். ஆகவே அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு உயிரை காக்கலாம் என எண்ணியது. மேலும், ஆபத்து காலத்தில் உதவி செய்பவனே நண்பன். உதவி செய்யாதவன் பகைவன். சில சமயம் நண்பன் நழுவி விடுவான்.ஆனால் ஆபத்தில் உதவி செய்தால் பகைவன் உதவி செய்வான். பகைவனாயிருந்தாலும், பூனை என்னால் விடுவிக்கப்படுமானால் எனக்கு உதவி செய்யக்கூடும். எனவே ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் “ என முடிவெடுத்தது. பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.
“ பூனையாரே...!!! நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன். நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனால் எனக்கும் நன்மை உண்டாகும். பயம் வேண்டாம். இப்பேராபத்தை போக்கி விடுகிறேன். என் கூரிய பற்களால் இப்பொறியை துண்டுதுண்டாக கடித்து உங்களை வெளியே செல்ல செய்கிறேன். நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன். இதனால் நாம் நண்பர்கள் ஆவோம். இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் என் கதி அவ்வளவுதான். எனக்கு பயமாக இருக்கிறது. நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது.
பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது. ஆனால் பூனையும் வஞ்சனையுடையது. எனவே சாமர்த்தியமாக பேசியது. “ எலியே. உன் பேச்சு அழகாய் உள்ளது. நீ கூறியபடி என்னை சீக்கிரம் விடுதலை செய். என்னை போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய். இது எனக்கு வருத்தத்தை தருகிறது. நம் காரியம் நிறைவேற ஒரு உடன் பாட்டிற்கு வருவோம். நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன் “ என்றது. உடன் எலி “ பூனையாரே..! இனி என் பயம் தொலைந்தது. ஆனால் தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னை கொன்றுவிடக் கூடாது. தவிர்த்து கோட்டான், கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது. பூனை “ என் உயிர் நண்பனே, உன்னால்தான் நான் பிழைக்க போகிறேன். இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு. செய்கிறேன். இனி நான் உன் நண்பன் அல்லவா? “ என்றது. பூனையின் ஆறுதலை கேட்ட எலி, நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது. அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாட தொடங்கியது. இது கண்டு கோட்டானும், கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.
இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாக கடிக்க துவங்கியது. பூனையோ “ ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய்? சீக்கிரம் அறுத்து விடு “ என்றது. உடன் எலியோ “ எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன். இப்போது உம்மை விடுவித்தால், என்னை கொன்றிடுவீர். தக்க சமயத்தில், வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன். அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவி போய் விடலாம், நானும் வளைக்குள் போய் விடுவேன். அப்படிப்பட்ட அவசர நிலையில் தான் நானும் தப்பிக்க முடியும். இல்லையேல் உமக்கு பலியாகி விடுவேன். “ என்றது.
இதை கேட்டு அந்த பூனை வருத்தம் அடைந்தது. தாமதம் செய்த எலியை பார்த்து “ உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள். நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தை போக்கினேன். நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிராய். இது நல்லதல்ல. மேலும் நீ தாமதப் படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும் “ என்றது. புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி, “ நண்பரே! சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன். பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர். உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை. ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிரான். அவனே தீமை செய்யும் போது பகைவனாக கருதப்படுகிறான். சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும். காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை. ஆதலால் எந்த செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும். உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னை தின்னும் எண்ணத்தை கைவிட்டு ஓடி விடுவீர். நானும் தப்பித்து பிழைத்து விடுவேன். அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறு தான். சற்றுப் பொறுமையுடன் இருங்கள். அதையும் அறுத்து விடுகிறேன் “ என உரைத்தது
அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன். பூனை அவனை கண்டு பயந்து “ இப்போது என் நிலையை பார்த்து, என்னை விடுவிப்பாயாக “ என கெஞ்ச, எலியும் தாமதமின்றி கயிற்றை துண்டித்தது. உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது. வேடனை கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறைந்தன. எலியும், தன் பணி முடிந்து வளையில் ஒளிந்து கொண்டது. பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான். பின் பூனை எலியை நோக்கி “ ஆபத்தில் உதவி செய்தவரே..நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம். என்னிடம் உனக்கு பயம் வேண்டாம். பயப்படாமல் வா “ என்றது.
பூனையின் நோக்கத்தை புரிந்து கொண்ட எலி “ உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். நண்பர், பகைவர் பற்றி ஆறாய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர். நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம். இந்த பகையும், நட்பும் நிலையானது அல்ல. ஏதோ ஒரு நோக்கத்தை கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன. செயலின் நுட்பத்தை அறியாமல் நண்பர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொள்வதும், பகைவரிடம் அளவு கடந்த அவநம்பிக்கை கொள்வதும் ஆபத்தில் முடியும். என்னிடம் தாங்கள் பேசும் ஆசை வார்த்தைகளுக்கு காரணம் உண்டு. மனிதன், ஏதோ ஒரு காரணம் கொண்டே நட்புடன் திகழ்கிறான். ஒரு காரணத்தால் பகைவன் ஆகிறான். ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கூட சுயநலம் காரணமாக அன்பு செய்வர். உலகில் காரணம் இன்றி அன்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் உடன் பிறந்த சகோதரரும், மனைவியும் ஏதோ ஒரு காரணத்தால் அன்பு கொண்டாலும் நாளாவட்டத்தில், நிலையான தூய அன்பு உடையவர்களாக ஆவர். உலகில் ஏதோ காரணத்தால் தான் அன்பு ஏற்படுகிறது. அந்த காரணம் மறந்ததும் அன்பும் மறைகிறது. என்னை சாப்பிட வேண்டும் என்னும் காரணத்தால் தான் உமக்கு என் மீது அன்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே உமது பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. இச்சமயத்தில் உம்மிடம் நட்பு கொள்வது அறிவுடைமையாகத் தோன்றவில்லை. இயற்கையாகவே தாங்கள் எங்கள் குலத்திற்கு விரோதி ஆவீர். ஏதோ ஒரு முறை ஏற்பட்ட நட்பை மறந்து விடுக. பகையை மேற்கொள்க. “
மேலும் எலி தொடர்ந்தது “ நண்பரே! உபசார வார்த்தைகளால் பயனில்லை. நெடுந்தொலைவில் இருந்தாலும் உம்மை கண்டு நான் அஞ்சுகிறேன். சுயநலமின்றி எந்த காரியமும் இல்லை. புத்தியுள்ளவன் எல்லாப்பொருள்களை இழந்தேனும் தன் உயிரை காப்பாற்றி கொள்வான். என்னதான் பகைவன் அன்பு உள்ளத்தோடு பழகினாலும் அவனை சந்தேக கண் கொண்டே காண வேண்டும்.” என்றது. பூனை எவ்வளவோ பேசியது. ஆனாலும் எலி ஏமாறவில்லை. பூனையை நோக்கி கூறியது “ நம்பத்தகாதவனை நம்ப கூடாது. நம்பத்தகுந்தவனையும் அதிகம் நம்பக்கூடாது. அதே நேரத்தில் தன் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்ய வேண்டும். பூனையாரே! உம் போன்ற பகைவரிடமிருந்து எப்போதும் நான் என்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். நீங்களும் உங்களை பிடிக்க பொறி வைப்பவரிடமிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். “ இவ்வாறு பலம் இல்லாததாயினும் அறிவுள்ள ஒரு எலி மிக்க பலமுள்ள பகைவர்களை சாமர்த்தியமாக வென்றது.
எனவே தருமா...!!!! பலமுள்ள பகைவனாயினும் அவனுடன் சில சமயம் சமாதானம் செய்துக் கொண்டு வெற்றி காண வேண்டும். ஒன்றொடொன்று பகையுள்ள எலியும், பூனையும் சங்கடமான நேரத்தில் நட்பு கொண்டன. அதே நேரத்தில் அவை குரோதத்துடன் இருந்தன. அவற்றில் அறிவில் சிறந்தது வென்றது. அதுபோலவே அறிவு மிக்கவனும் விழிப்புடன் இல்லையெனில், அறிவு குறைந்தவனால் வெல்லப்படுவான். பயம் அற்றவன் போல தோற்றமளிக்க வேண்டும். ஆனால் பயம் உள்ளவனாக அஞ்சி நடக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவன் போல இருக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அதாவது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையேல் ஆபத்து நேரிடும் “ என்று தன் அறியுரையை முடித்தார் பீஷ்மர்..

....தாய், தந்தை, குரு சிறப்பு



தாய், தந்தை, குரு சிறப்பு






** தருமர், பீஷ்மரிடம் “ தருமத்தில் பல இருக்கின்றனவே? எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும், மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்? “ என வினவினார்.
பீஷ்மர் சொன்னார் “ தருமா.....!! தாய், தந்தை, குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும். நன்கு வணங்கப்படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும். தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும். தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும், குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் வென்றுவிடுவாய். எனவே தருமா அவர்களை வழிபடு. மூன்று உலகிலும் புகழ் அடவாய். எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும். அம்மூவரை போற்றாதாரை உலகம் போற்றாது. நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன். அதனால் தான் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.
நல்ல ஆசாரியர், வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர். உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர். தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர். தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள். ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.
எனவே உபாத்தியாயரையும், ஆசாரியரையும், தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக்கூடாது. அவர்களை சொல்லால் நிந்திக்க கூடாது. நிந்தித்தால் பாவம் பெருகும். துன்பம் கூடும் “ என்றார் பீஷ்மர்





தாலிக்கயிற்றில் தொங்கவிடக்கூடாதது என்ன?

தாலிக்கயிற்றில் தொங்கவிடக்கூடாதது என்ன?

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, த...ிங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம்.
இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.
மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.
இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம்.
அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.
எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

பகவானை ஆராதிப்பது, ஒரு கடமை

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முட...ியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று
சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.
இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள்.

ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்

ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்
ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,”இன்று போய் நாளை வா’ என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், “மயில் ராவணன்’ என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-ல...ட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக “பஞ்சமுக ஆஞ்சநேயர்’ விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் “ஜய மங்களா’ என்றும் அழைக்கப்படுகிறார். தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. .

சமாதி

சமாதி
சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையா...க சொல்லப் படுகிறது.
இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -
"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
“எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது… முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து விபத்து, நோய் இப்படி ஏதாவது ஒன்னு வருது. நிம்மதியே இல்லை…” என்று நினைப்பவர்கள் கீழ்கண்டவற்றை அவசியமகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
“எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது… முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து விபத்து, நோய் இப்படி ஏதாவது ஒன்னு வருது. நிம்மதியே இல்லை…” என்று நினைப்பவர்கள் கீழ்கண்டவற்றை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை விலக்கவேண்டும்.
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
1. தன்னம்பிக்கையற்றவர்கள்
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள்
இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள். இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்
மகாலட்சுமி வாசம் என்றால் ஏதோ காசு பணத்தோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று.
மேற்கூறிய பாவச்செயல்களை கூசாமல் செய்துகொண்டு உலாவரும் எத்தனையோ பணக்காரர்களை நான் பார்க்கிறேனே என்று நீங்கள் சொன்னால்… அது உங்கள் அறியாமையே அன்றி வேறில்ல. காரணம்… செல்வம் என்பது வேறு… லக்ஷ்மி கடாக்ஷம் என்பது வேறு.
ஒருவன் செல்வந்தனாக இருப்பது அவன் பிராரப்த கர்மாக்களில் ஒன்று. அவ்வளவு தான். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது இறைவன் தரும் பரிசு.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377)
என்பது வள்ளுவர் வாக்கு.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
செல்வந்தர்களால் நிம்மதியாக ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு உடலில் நோய்களின் ராஜ்ஜியம் இருக்கும். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் செல்வத்தோடு நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.
ஒருவேளை செல்வந்தர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் புத்திரர்கள் நன்றாக இருக்கமாட்டாகள். பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றோரில் பெயரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பார்கள்.
செல்வந்தர்கள் இல்லம் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைவு இருக்காது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் இல்லம் உண்மையில் திருமகளின் வீடு போல இருக்கும்.
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பரந்து விரிந்த பொருளை கொண்டது. புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்.
‘அதிர்ஷ்டம்’ யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ எல்லாருக்கும் கிடைக்காது.
இப்போது சொல்லுங்கள்… நீங்கள் பார்க்கும் செல்வந்தர்கள் எத்தனை பேரிடம் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கிறது? தெரிந்துகொண்டு அவற்றை விலக்கவேண்டு
1. தன்னம்பிக்கையற்றவர்கள்
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள்
இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள். இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்சயம்
மகாலட்சுமி வாசம் என்றால் ஏதோ காசு பணத்தோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று.
மேற்கூறிய பாவச்செயல்களை கூசாமல் செய்துகொண்டு உலாவரும் எத்தனையோ பணக்காரர்களை நான் பார்க்கிறேனே என்று நீங்கள் சொன்னால்… அது உங்கள் அறியாமையே அன்றி வேறில்ல. காரணம்… செல்வம் என்பது வேறு… லக்ஷ்மி கடாக்ஷம் என்பது வேறு.
ஒருவன் செல்வந்தனாக இருப்பது அவன் பிராரப்த கர்மாக்களில் ஒன்று. அவ்வளவு தான். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது இறைவன் தரும் பரிசு.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377)
என்பது வள்ளுவர் வாக்கு.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
செல்வந்தர்களால் நிம்மதியாக ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு உடலில் நோய்களின் ராஜ்ஜியம் இருக்கும். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் செல்வத்தோடு நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.
ஒருவேளை செல்வந்தர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் புத்திரர்கள் நன்றாக இருக்கமாட்டாகள். பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றோரில் பெயரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பார்கள்.
செல்வந்தர்கள் இல்லம் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைவு இருக்காது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் இல்லம் உண்மையில் திருமகளின் வீடு போல இருக்கும்.
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பரந்து விரிந்த பொருளை கொண்டது. புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்.
‘அதிர்ஷ்டம்’ யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ எல்லாருக்கும் கிடைக்காது.
இப்போது சொல்லுங்கள்… நீங்கள் பார்க்கும் செல்வந்தர்கள் எத்தனை பேரிடம் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கிறது

மெய்கர்பம் , பொய்கர்பம்

பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.
சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து ...இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.
மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...
இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.

பூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம்

பூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம் போகர் அருளிய "போகர் 700" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஜால வித்தைகளின் உண்மைத் தன்மை மற்றும் அவை அருளப் பட்டதன் நோக்கம் தொடர்பில் பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு. நமது நோக்கம் தகவல் பகிர்வு மட்டுமே என்பதால், இந்த பதிவினை அந்த அளவில் மட்டும் அணுகிட வேண்டுகிறேன்
இனி போகரின் வரிகளில் தாழிட்ட கதவைத் திறக்கும் ஜாலத்தை பார்ப்போம்.
மறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்...
மைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே
வளைநோக்கி ஆதிநாளிரவு தன்னில்
மைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்
வளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து
வாயிலே கவ்விக் கொண்டோடும் போது
வளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்
மைந்தனே மேலோடிப் போமே

போமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து
புகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்
ஆமென்ற இரை தேடி மேயப் போகும்
அச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு
தாமென்ற வகைஎடுத்து சாம்பிராணியின்
தனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு
காமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே
காட்டினால் தான் திறக்கும் புதுமைதானே
எலிகளில் மூஞ்சூறு, சுண்டெலி, பெருச்சாளி, வெள்ளெலி, கல்லெலி, சரெவெலி, வயல் எலி, வீட்டெலி என பல வகைகள் உண்டு. போகரின் இந்த ஜாலத்தில் குறிப்பிடப் படும் எலியின் பெயர் கல்லெலி என்பதாகும். இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து வாழக் கூடியவை. மற்ற எலிகளைப் போல் இல்லாமல் இவை தங்கள் வளைகளின் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்குமாம். அதனலால் இந்த எலிகள் கல் எலி என அறியப் படுகிறது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகே ஒரு தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமாம்.வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக் கொண்டு கிளம்புமாம். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும் என்கிறார்.
வெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கி விட்டு இரைதேடிப் போய்விடுமாம். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணையோடு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட பூட்டியகதவு தானாக திறந்து கொள்ளும் என்கிறார்.

Thursday, April 3, 2014

வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல முடியும்

விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம் அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில் பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல முடியும்.

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து

(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)

1. சுவாமிக்கு நகைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம். இப்படி செய்வது வெறும் அழகு உணர்ச்சிக்காக மட்டுமா? அன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பழங்காலத்து மன்னர்கள் தாங்களும் தங்கள் ...
மனைவிமார்களும் அணிந்திருந்த நவரத்தின அணிகலன்களைப் பொதுவுடைமையாகச் செய்தார்கள். தனியுடைமை என்றைக்கும் அழிந்து போகும். பொதுவுடைமை என்றைக்கும் இருக்கும். நளச் சக்கரவர்த்தி தான் அணிந்திருந்த அணிகலனை கொல்லூர் மூகாம்பிகைக்கு அணிவித்து இருக்கிறான்.

நளச் சக்கரவர்த்தி எந்த காலத்தில் வாழ்ந்தானோ! அவன் இன்று இல்லை. ஆனால் அவன் இட்ட அணிகலன்கள் இன்றும் இருக்கின்றன. ஆகவே, மன்னர்கள் தமக்குச் சொந்தமாய் இருந்த தனிவுடமையை பொது உடைமைகளாக செய்தவைகள் தான் அணிகலன்கள்.

மேலும், ஒருவன் தன் மனைவி, அணிகலன்களை அணிந்து இருந்தால் ஒருவரும் பார்க்க இசைய மாட்டான். இறைவிக்கு அணிவித்து இருந்தால் யாரும் தரிசித்து மகிழலாம் அல்லவா ?

2. இறைவனுக்கு வேர்ப்பதில்லை. ஆனால் வெண் சாமரம் வீசுகிறோம். அவனுக்கு எந்த அழுக்கும் சேர்வதில்லை. ஆனால் அவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவன் இறைவன். அவனுக்கு நிவேதனம் புரிகிறோம். இவை எல்லாம் தேவை தானா சுவாமி?

வேரிலே தண்ணீர் விட்டால் மரங்களுக்கெல்லாம் போகும். அப்படி இறைவன் எல்லாவற்றிலும் உறைகிறான்.

"உரைசேரும் எண்பத்து நான்கு நூறு
ஆயிரமாம் யோனி பேத
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய்
அங்கங்கே நின்றான்" என்பார் ஞான சம்பந்தப் பெருமான்.

எனவே, இலைகளுக்கு தண்ணீர் விட்டால் வேருக்குப் போகாது. வேருக்குத் தண்ணீர் விட்டால் விருட்சம் முழுதும் பரவும். அவ்வாறு இறைவனுக்கு நாம் ஒரு பொருளை அபிஷேகம் செய்கிற பொழுது அகில உலகிற்கும் அந்த பலன்போய் நன்மை செய்கிறது.

ஆகவே, இறைவனுக்குச் செய்வதெல்லாம் உயிர்களுக்குச் செய்வது போல். அதனால் தான் அபிஷேக ஆராதனைகளை எல்லாம் நம் முன்னோர்கள் வைத்தனர்.

உபதேசம்

உபதேசம்
வேடன் ஒருவனுக்கு, "மற்றவர்களைப் போல படிப்பறிவு இல்லையே, கடவுளை அறியும் அறிவும் இல்லையே, காட்டிலுள்ள முனிவர்களைப் போல் மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடிவதில்லையே' என்று பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில், எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.
ஒருமுறை ஒரு துறவியைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். தன்னை நாடி வரும் அன்பர்களிடம் பெறும் தட்சணையும...், பால், பழமும் பெற்று உண்டு கொழுத்து உடம்பை நன்கு வளர்த்திருந்தார். அவரது உள்ளத்தில் அருள்நாட்டமே இல்லை. அவரை வேடன் பணிந்தான்.
""குருவே! நான் வேடனாய் பிறந்தும் மாமிசம் உண்பதில்லை. சிவனருளை எண்ணி எண்ணி தூக்கம் வருவதில்லை. அருள் மார்க்கத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்.'' என்று வேண்டினான்.
வேடனின் வேண்டுதலைக் கேட்ட துறவி, ""கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன்? பக்திக்கும் உனக்கும் வெகுதூரம். காட்டில் கிடைக்கின்ற தேன்,பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனிவகைகளை எனக்கு கொண்டு வந்து கொடு, உனக்கு உபதேசம் செய்வது பற்றி பிறகு பார்க்கலாம்,'' என்று சொன்னார்.
எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற ஆவலில் வேடன் மீண்டும் காட்டிற்கு சென்றான். குருநாதர் கேட்ட கனிவகைகள், தேன், தினைமாவை தட்சிணையாக எடுத்துக் கொண்டு மடத்தை வந்தடைந்தான்.
குருவினை வணங்கி, ""ஐயனே! தாங்கள் கேட்டதை கொண்டு வந்து இருக்கிறேன். பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள்.'' என்று வேண்டினான்.
""ஏ! வேடனே! "சிவாயநம' என்று தினமும் ஜபம் செய். உனக்கு விரைவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால், ஒரு நிபந்தனை. அவ்வப்போது எனக்கு காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உனக்கு ஈசனருள் கிடைக்காது'' என்று சொல்லி அனுப்பினார்.
காட்டிற்கு திரும்பிய வேடன் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். தூக்கத்திலும் அவன் "சிவாயநம' என்றே உளறுவான். தனக்கு உபதேசித்த குருவின் மீது அலாதி நம்பிக்கை கொண்டிருந்தான். அவர் சொன்னபடி நிச்சயம் தனக்கு ஈசனின் காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. ஒரு நாள், சிவன் அவனுக்கு ஆசியளிப்பது போல கனவு கண்டான்.
அன்று முதல் அவனுக்கு தெளிந்த ஞானம் உண்டாயிற்று. பாசபந்தங்களை விட்டான். காண்பதெல்லாம் சிவ காட்சியாகவே தென்பட்டது. தன் குருநாதரான துறவியைக் காணச் சென்றான். தன் சிவானுபவத்தை குருவிடம் சொன்னான்.
வேடனின் வார்த்தைகள் அவ்வளவும் உண்மை என்பதை துறவி உணர்ந்தார். அவனது முகத்தில் தெய்வீக ஒளி இருந்தது. உண்மை ஞானம் உள்ளம் சார்ந்தது என்ற உண்மையை துறவி உணர்ந்தார்.
""குருவாக இருந்து பலகாலம் ஆசாபாசங்களில் சிக்கிக் கிடந்த அற்பனாகிய நான் இனிமேல் குருவல்ல! என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீ தான் எனக்கு குரு! என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் சுவாமி!'' என்று வேடனின் கால்களில் விழுந்து, தன்னைப் பற்றிய உண்மையையும் கூறி மன்னிப்பும் கேட்டார்

இதயபூர்வமாக பிரார்த்தனை செய்தால் இறைவன் நம் கண் முன்னே தோன்றுவார்

பொது தரிசனம் ! சிறப்பு தரிசனம் !
ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெது...வாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,
'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்.......
இதயபூர்வமாக பிரார்த்தனை செய்தால் இறைவன் நம் கண் முன்னே தோன்றுவார் !

மந்திர ரகசியம்

மந்திர ரகசியம்
உயர்நிலையை, முக்தியை, அதாவது, மீண்டும் பிறவாத நிலையை அடைய வேண்டும். அடைவதற்கு முயற்சியைச் செய்ய வேண்டும். நம்முடைய ஞான நூல்கள் பலவும் சொல்லக்கூடிய தகவல்தான் இது. நாம் முயற்சி செய்யாமலேயே, தெய்வம் நமக்கு முக்தி அளிப்பதற்கு வருவதாக வைத்துக்கொள்வோம். தெய்வம் நம்மிடம் வந்து, ‘‘பக்தா! உன் பக்திக்கு மெச்சினேன். வா என்னுடன். நான் உனக்கு முக்தி தருகிறேன்’’ என்று சொன்னால், ‘ஆகா! தெய்வமே வந்து முக்தி தருகிறது’ என்று குதூகலித்து, எத்தனை பேர் இறைவனுடன் போவோம்? ‘‘அடுத்த வீட்டுக்காரனுக்கு முக்தி கொடு! எதிர்த்த வீட்டுக்காரனுக்கு முக்தி கொடு! அவர்களைக் கூட்டிக்கொண்டு போ! என்னை விடு! நான் பின்னால் வருகிறேன்’’ என்றல்லவா சொல்வோம்?
ஒருக்காலும் போக மாட்டோம். மற்றவர்கள் நிலை எப்படியோ? இக்கட்டுரையை எழுதும் அடியேன், ‘‘ஆ! சுவாமி முக்தி தருகிறார். இதோ! புறப்பட்டு விட்டேன்’’ என்று ஒருக்காலும் போகமாட்டேன். அப்படியென்றால், அந்த ஞானநூல்கள் எல்லாம் எதற்காக அப்படிக் கூற வேண்டும்? நாம் இங்கு இருக்கும்போதே, அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காகவே, அந்த ஞானநூல்கள் அவ்வாறு கூறின. அதற்கு உண்டான நல்வழிகளைத் திருமூலர் எளிமையாகக் கூறுகிறார்.
‘‘இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு அந்த வழியா, இந்த வழியா, எந்த வழியில் செல்வது என்று தடுமாறாதீர்கள்! அஷ்டாங்க யோகமாகிய தவ வழியிலே சென்று, தன்னை மறந்த சமாதி நிலையிலே நில்லுங்கள்! நன்மை தரும் இந்த வழியிலே செல்பவர்களுக்கு, ஞானயோக நிலை கைகூடும். அவ்வாறு ஞானயோக நிலையை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறவி இல் லை. முக்தி அடைவார்கள் அவர்கள்’’ என்கிறார், திருமூலர்.
அந்நெறி இந்நெறி என்னாது
அட்டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியிலே நின்
மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில்
ஏகலாம்
புன்னெறி ஆகத்தில் போக்கில்லை
ஆகுமே
(திருமந்திரம் - 551)
தடுமாற்றம் வேண்டாம், இது தான் வழி என்று சொன்ன திருமூலர், மேலும் சில விவரங்களைக் கூறுகிறார். ஓர் ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், முன்னேற்பாடுகள், வழியில் உள்ள சௌகரியங்கள் முதலானவைகளைப் பார்க்கிறோமல்லவா? அதுபோல, யோகநிலைக்கு உண்டான வழிமுறைகளை விரிவாகவே கூறுகிறார் திருமூலர். எட்டு வகை யோகங்கள் என்று பொதுப்படையாகச் சொன்ன திருமூலர், அந்த அஷ்டாங்க (8) யோகங்கள் எவையெவை எனவும் கூறுகிறார். இயமம், நியமம், பலவிதமான ஆசனங்கள், நலமிக்க பிராணாயாமம், பிரத்தியாகாரம், வெற்றிமிக்க தாரணை, தியானம், சமாதி என்னும்
எட்டுவிதமான யோகங் களும் முக்தியை
அளிக்கும் என்கிறது திருமூலரின் பாடல்,
இயமம் நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே!
(திருமந்திரம் - 552)
இப்பாடலில் உள்ள ஒருசில அடைமொழிகளைக் கவனிக்க வேண்டும். பிராணாயாமம் ஆயுள் விருத்திக்கும் காரணம். அதனால், அதை ‘நயமுறும் பிராணாயாமம்’ என்றார். அடுத்து, சமாதி-தியானம்-தாரணை ஆகியவை வெற்றி தரும். ஆதலால் அவற்றிற்கு ‘சயமிகு’ என அடைமொழி கொடுத்தார்.
இவ்வாறு அஷ்டாங்க யோகங்களில் பெயர்களைக் கூறிய திருமூலர், அடுத்து அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிக்கிறார். முதலில் இயமம் - கொலை செய்யாதவன், பொய் சொல்லாதவன், திருட்டுக்குணம் இல்லாதவன், மதிக்கும்படியான நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவன், நல்லவன், அடக்கம் உடையவன், நடுநிலையாளன், கிடைத்ததைப் பிறருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்பவன், குற்றம் அற்றவன், கள் குடிக் காதவன், காமவேட்கை அற்றவன் (மாற்றான் மனைவியை விரும்பாதவன்) எவனோ, அவனே இயமம் என்னும் பயிற்சியில் நின்றவன் ஆவான். அதாவது, மேற்கண்ட குணங்களைக் கடைபிடித்து ஒழுகுவதே - இயமம் என்பது கருத்து.
கொல்லான் பொற்கூறான் களவிலான் எண்
குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள்
காமம்
இல்லான் இயமத்திடையில் நின்றானே!
(திருமந்திரம் - 554)
இயமத்திற்கு இவ்வாறு சொன்னவர், அடுத்து நியமத்திற்கு உண்டானவைகளை விவரிக்கிறார். அதில் பத்துவிதமான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தூய்மையான மனம், கருணை காட்டும் உள்ளம், குறைந்த அளவு உண்பது, பொறுமை, நேர்மை, உண்மையே பேசுதல், நடு நிலைமை தவறாது இருத்தல், பெண்பித்து, திருட்டு, கொலை ஆகிய தீயவைகளை நீக்குதல் என்னும் பத்துவிதமான பண்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிப்பவனே நியமத்தன் எனப்படுவான்.
தூய்மை அருள் ஊன்சுருக்கம் பொறை
செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றும்
இவை
காமம் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே!
(திருமந்திரம் - 556)
இதற்கு அடுத்ததாகத் திருமூலர், நூற்று இருபத்தாறு ஆசனங்கள் என்று சொல்லி, அதற்கு மேலும் ஆசனங்கள் உண்டு எனக்கூறி இருக்கிறார். இவ்வாறு, ஒவ்வொன்றின் அடிப்படை உண்மையையும் உணர்ந்து செயல்பட்டால், சிவனருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், நம்மை அனுபவசாலியாகவும் ஆகச் சொல்கிறார். அனுபவத்தில் வராதவரை, எதுவாக இருந்தாலும் சரி! அது பயன்படாது. உதாரணமாக, கல்லூரியில் ஒருவர், ‘ஆட்டோமொபைல்’ பற்றி விரிவாகப் படித்தவர், அதில் முதல் வகுப்பில் தேறியவர். சந்தேகமே இல்லை.
ஆனால், சில ஆண்டுகள் கல்லூரியில் படித்த அவரைவிட, ஓர் ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவன், பழக்கத்தின் மூலமாக ஒரு வண்டியை முழுவதுமாகப் பிரித்துப் போட்டு, அதிவிரைவில் மறுபடியும் பூட்டி விடுவான். அனுபவம் அந்தச் சிறுவனுக்குக் கை கொடுக்கும். அதே நேரம், அந்தச் சிறுவனுக்கு நூலறிவும் (படிப்பறிவும்) இருந்திருந்தால், அவனே ஒரு முதலாளியாக ஆகியிருக்க மாட்டானா? ஆகையால், வள்ளுவர் கூறியதைப்போல, நூலறிவும் வாலறிவும் (அனுபவ அறிவும்) மிகவும் தேவையானவை. ஞான நூல்களில் சொல்லப்பட்டிருப்பனவற்றை முதலில் அறிய வேண்டும். அவை எந்தக் காரணத்திற்காகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை உணர வேண்டும். அவற்றில் சொல்லப்பட்டவை அனுபவத்தில் கொண்டு வரவேண்டும்.
‘‘அதை விடுத்து, ஞான நூல்களில் சொல்லப்பட்டிருப்பனவற்றை உண்மைகளை உணராமல், அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அவன் மூடன்’’ என்கிறார், திருமூலர். இதற்காக அவர், நமக்குத் தெரிந்த கதையை ஒரு சில வார்த்தைகளில் சொல்லி, அக்கதையின் உண்மைப் பொருளை விரிவாகவே சொல்கிறார். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனை வேண்டி வரம் பெற்றிருந்தார்கள். அதாவது, அவர்களுக்குத் தங்கக் கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்று மூன்று கோட்டைகள் இருந்தன.
அவற்றில் ஏறி, அவர்கள் நினைத்த இடத்திற்கு அப்படியே பறந்து செல்வார்கள். நினைத்த இடத்தில் அப்படியே கோட்டையுடன் கீழே இறங்குவார்கள். அப்படி இறங்கும் கோட்டைகளின் அடியில் அகப்பட்டு, ஏராளமானோர் உயிர் துறப்பார்கள். அதைக்கண்டு, அசுரர்கள் மூவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மூன்று கோட்டைகளும் ஒன்று சேரும்போது, சிவபெருமானால் அழிக்கப்பட வேண்டும். மற்ற யாராலும் அழிவு வரக்கூடாது என்று அந்த அசுரர்கள் வரமும் பெற்றிருந்தார்கள்.
இது கதை! அப்படியே இருக்கட்டும்! அக்கதையில் சொல்லப்பட்ட அந்த மூன்று அசுரர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்காவது கோட்டைகள் போய், அப்படியே பறந்து சென்று ஏராளமானோர் மேல் விழுந்து அழிக்குமா என்றெல்லாம் கேள்விகள் வருகிறதல்லவா? இவற்றிற்கெல்லாம் திருமூலர் விடை சொல்கிறார். அக்கதையில் சொல்லப்பட்ட அசுரர்கள் நாம்தான்! அந்த மூன்று கோட்டைகள் - ஆணவம், கன்மம், மாயை. மூன்று கோட்டைகள் அப்படியே பறந்து போய், நினைத்த இடத்தில் இறங்க, அதனடியில் சிக்கி ஏராளமானோர் உயிர் துறக்கிறார்கள் என்பது, அந்த மூன்று தீய குணங்களின் வசப்பட்ட நாம், நினைத்த மாத்திரத்தில் கன்னாபின்னாவென்று, முறைகேடான காரியங்களைச் செய்கிறோம்.
அதன் காரணமாக ஏராளமானோர் துயரப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அதைக்கண்டு அசுரர்கள் மகிழ்ந்தார்கள் என்பது, அடுத்தவர்களைத் துயரப்படுத்தி அதில் நாம் ஆனந்தம் கண்டுகொண்டிருக்கி றோம் என்பதைக் குறிக்கிறது. முப்புரங்களையும் சிவபெருமான் அழித்தார் என்பது, நம்மிடம் உள்ள ஆணவம்-கன்மம்-மாயை ஆகியவற்றை நீக்கி சிவ பெருமான் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்துகிறது. இதுவே ‘திரிபுர சங்கார உண்மை’. இதை உணராமல் கதையை மட்டும் படித்துக் கொண்டிருந்தால், அவர்கள் மூடர்கள் எனத் திருமூலர் இடித்து ரைக்கிறார்.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் என்பது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறிவாரே!
(திருமந்திரம் - 343)
இந்தப் பாடலில், எல்லோருக்கும் தெரிந்த ஒரு மிகப்பெரும் கதையை ஒருசில வார்த்தைகளில் சொல்லி, அதன் உட்பொருளை, உண்மையை எடுத் துரைத்து, இறைவன் அருள்செய்த விவரத்தையும் கூறியிருக்கிறார் திருமூலர். ‘‘இறைவன் அருள், அந்த ஆனந்த அனுபவம் யாருக்குத் தெரியும்?’’ என்று கேள்விக் குறியோடு ‘‘ஆரறிவாரே’’ என்று முடித்திருக்கிறார். ஞானிகள் அவ்வாறு, தொட்டுக்காட்டி சுட்டிக்காட்டி இருப்பதைப் புரிந்துகொண்டு அவ்வழியில் உழைத்து, அனுபவ ஆனந்தத்தை அடைய வேண்டியது நமது கடமை.

'ஆலயம் ஏன்?

'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)
சுவாமி, கருவறைக்குள் தான் இறைவன் அமர்ந்திருக்கின்றார். நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று மண்டபங்கள், பெரிய பெரிய பிரகாரங்கள் இவை அத்தனையும் தேவை தானா ? இடத்தை அடைத்துக் கொண்டு இவ்வளவும் இருக்க வேண்டுமா?
தனித்தனியாக வீட்டில் வணங்க முடியாத ஏழை மக்களும் உண்டு, இடவசதி இல்லாததால். இவ்வளவு பெரிய இடம் அமைந்து இருப்பதே பொதுவுடைமையை போதிப்பதற்குத் தான். முடிமன்னர்கள் இப்பட...ி விசாலமான ஆலயங்கள் அமைத்தது குடிமக்களின் நன்மை கருதித் தான். அது மட்டுமல்ல. ஆலயங்கள் மிகச் சிறந்த சமுதாய நிலயங்கள் ஆகவும் விளங்கி இருக்கின்றன.
பொது மக்களின் முறையீட்டை விசாரித்துத் தீர்ப்பை அளிக்கும் நீதிமன்றங்களாகவும் இருந்து இருக்கின்றன. சுந்தரருக்கும் சிவபெருமானுக்கும் நேர்ந்த வழக்கு திருவெண்ணை நல்லூர்க் கோயிலிலும், பழையனூர் நீலிக்கும் வணிகனுக்கும் நேர்ந்த வழக்கு திருவாலங்காட்டுக் கோயிலிலும், விசாரிக்கப் பட்டு இருக்கின்றன.
இன்றும் திருவோத்தூர், திருமாற்பேறு, திருப்பனந்தாள், கூகூர், திருவெறும்பியூர் முதலிய தலங்களில் உள்ள கல்வெட்டுகள் ஆலயங்கள் நீதி மன்றங்களாக இருந்ததைத் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல. திருக்கோயில்கள் மருத்துவ மனைகளாகவும் சமயத்தில் இருந்து இருக்கின்றன. திருமுக்கூடல் கல்வெட்டின் மூலம் இதை அறியலாம்.
இன்னும் இயற்கை உற்பாதங்களான புயல், மழை, வெள்ளம் பெருகிய போது அந்த பாதிப்பில் இருந்து தப்ப, மக்களுக்குத் திருக்கோயில்கள் தான் அடைக்கலம் தந்திருக்கின்றன. போர்கள் நிகழும் பொழுது பொது மக்களுக்குப் புகலிடமாகவும் திருக்கோயில்கள் திகழ்ந்து இருக்கின்றன.
இப்படிப் பலப்பல நற்காரியங்கள் நடைபெறத் தான் திருக்கோயில்களை விரிவாகக் கட்டி இருக்கின்றார்கள்.

Wednesday, April 2, 2014

நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.
அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.
...
அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'
'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'
'பல் இருந்ததா?'
'இல்லை.'
'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.






நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்
மனிதர்கள் அனைவருக்குமே கனவுகள் தோன்றுகின்றன. கனவுகள் பற்றி இதுவரை எத்தனையோ விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். கனவுகளுக்கும், நமது வாழ்க்கைக்கும் சில தொடர்புகள் இருப்பதை நாம் பல நேரங்களில் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம்.
அந்த வகையில், கனவுகள் தோன்றுவதற்கும், அதற்கு உள்ள தொடர்பு குறித்தும் இங்கே காணலாம்..
...
கனவில் ஆலயம் தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் செய்யும் தொழில் வளர்ந்தோங்கும்: தருமப் பணியால் புகழ் உண்டாகும். தெய்வத் திருவுருவம் இல்லாத ஆலயம், அல்லது பாழடைந்த ஆலயம் கனவில் தோன்றினால் தொழில் நலிவடையும். புகழ் கெடும்.
ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபடுவது போன்று கனவு தோன்றினால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும்.
கனவில் அரண்மனையைக் கண்டால் அது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார். பூர்வீக சொத்து வந்து சேரும். பரிசுகளை வெல்வார்கள். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
அடுக்கடுக்காய் வழை இலைகளை கனவில் கண்டால் அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். தான் வாய்விட்டு அழுது கொண்டிருப்பது போல் கனவு தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில் இடையூறுகள் உண்டாகும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். தன்னைப் பிறர் அலங்கரிப்பது போலக் கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும். தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், சிறி சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும். தான் பெரியோர்களை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், அவ்வாறு கண்டவரது முதலுக்கு மோசம் வரும்.
பச்சைக் கிளி கனவில் வந்தால், புதிய நட்பு கிடைக்கும் என்றும், பச்சைக் கிளி பறப்பது போல கனவு கண்டால், வாழ்கையில் முன்னேற்றம் என்றும் நம்பப்படுகிறது.









இராமபாணம் வீண்போகாது.....

இராமபாணம் வீண்போகாது.....
மிதிலாபுரியிலிருந்து அயோத்தி நோக்கி தசரத மன்னனுடைய கூட்டம் புறப்பட்டது. பயணம் ஆரம்பத்தில் இன்பம் நிறைந்ததாயிருந்தது. ராஜகுமாரர்கள் நால்வரும் நல்ல பயற்சி பெற்றிருந்தனர். இல்வாழ்வில் பிரவேசிப்பதற்கான மணச் சடங்கும் அவர்களுக்குச் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவையாவற்றையும் எண்ணிப் பார்த்த மன்னார் மட்டில்லா மகிழ்வில் ஊறியிருந்தார். ஆயினும் இடைவழியில் எதிர்பாராத வண்ணம் திடிரென்று விபத்து ஒன்று வாய்ப்பதாயிற்று. காற்று பயங்கரமாக வீசியது. வானம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக காட்சி கொடுத்தது. பயங்கர மூர்த்தியாகிய பரசுராமன் திடிரென்று அயோத்தி அரச கூட்டத்தில் எதிரே தென்பட்டார். சத்திரியர்களை துடைத்துத் தள்ளுவது அவருடைய வாழ்க்கை செயல். ஒரு தோளில் பெரிய வில் ஒன்றையும் மற்றொரு தோளில் தமக்குச் சின்னமாய் அமைந்திருந்த கோடரியையும் அவர் தங்கியிருந்தார். அவர் சிரசில் தாங்கியிருந்த ஜடாமுடி பார்ப்பதற்குப் பயங்கரமாய் இருந்தது. அவர் முகத்தினின்று தீப்பொறி பறந்துகொண்டிருந்தது. இத்தகைய காட்சியை தசரதர் எண்ணவில்லை. அவர் திகைத்து போனார். தழதழத்த குரலிலே தம் இளம் தனயனாகிய இராமனுக்கு உயிர்ப்பிச்சை தரும்படி அவர் கெஞ்சிக் கேட்டார்.
பயங்கர மூர்த்தியாகிய பரசுராமனோ தசரதனைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. அரசர் கூட்டத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. வசிஷ்ட மகரிஷியையும் ஏனைய முனிவர்களையும் அவர் மனதில் வாங்கவில்லை. தசரத ராமன் ஒருவனே அவர் நாடி வந்த உயிர் பிராணியாகும். அந்த இளைஜனைப் பார்த்து கர்ஜிக்கிற பாங்கில் இங்ஙனம் அவர் அறைகூவினார்.
பரசுராமன்:- "அடே சத்திரியப் பதரே, துருபிடித்தப் போன ஒரு சிவ வில்லை ஒடித்துக் கயவர் கூட்டத்தில் நீ வீராதி வீரன் என்று மிக எளிதில் கீர்த்தியைப் பெற்றுவிட்டாய். இதோ பார், என் கையிலிருப்பது விஷ்ணு தனுசு; இதில் நாண் ஏற்றி என்னோடு போர் செய்; போரில் மடிந்து போ. அது உனக்கு இல்லாவிடில் உன்னையும் உன்னுடைய கூட்டத்தையும் விட்டில் பூச்சி போன்று துடைத்து தள்ளத் தீர்மானித்திருக்கிறேன்".
தசரத ராமனுடைய முதல்விடை:- "போற்றுதற்குரிய பெரியோய்! தங்களைப் போன்ற முதியோர்களைப் பார்த்து இளையவர்களாகிய நாங்கள் நல்லியல்பையும் நல்லொழுக்கத்தையும் சாந்தத்தையும் கற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால் தாங்களோ ஒரே பதைபதைப்பும் சினமும் பூண்டவராகக் காட்சி கொடுக்கின்றீர்கள். நல்லொழுக்கத்தை நாடி இனி நாங்கள் யாரிடம் போவது?'
மேலும் ராமன் கூறியதாவது:- "போற்றுதற்குரிய பெரியோய்! என்னை சத்திரிய குலத்தில் பிறந்தவன் என அவமதித்தீர். என் பிறப்புக்கு நான் பொறுப்பாளி அல்லன். அது தெய்வாதீனமாக நிகழ்ந்தது. சான்றோர் ஒருவர் மானுடனொருவனுடைய பண்பை மட்டும் கருத்தில் வாங்கிக் கொள்கிறார். பிறப்பை அவர் பொருட்படுத்தவில்லை.
முன்கோபமே வடிவெடுத்திருந்த பரசுராம முனிவர் தாம் பிழையை உணர்ந்தார். ஆனால் வாய்விட்டு ஒன்றும் பேசவில்லை. ரகுராமன் பொழிந்த இக்கருத்தும் பரசுராமனுக்குப் பிரதிகூலமாகப் போயிற்று.
மீண்டும் ராமன் கூறியதாவது:- "ஆராதனைக்குரிய அரும் தவத்தோய்! தம் ஆணைக்குட்பட்டு தமது வில்லில் நாண் ஏற்ற முயலுகிறேன். என்னுடைய வல்லமையைக் காட்டும் முன்னீட்டம் என்னிடத்தில் இல்லை. ஆன்றோர் ஆணைக்கு அடிபணிவதே என் பாங்கு. இதோ அம்பைத் தொடுக்கிறேன். தொடுக்கிற அம்பு ஒருபொழுதும் வீண் போகாது. அதற்கு இலக்கு யாது என்று தாம் இயம்பி அருள்வீராக."
பரசுராமன்:- "பிரபோ, தாம் யார் என்பதைத் தம் அருளால் நான் இப்போது அறிய வருகிறேன். என்னுடைய வீண் செருக்கை கிருபை கூர்ந்து தாம் கழற்றிவிட்டீர். அறம் காக்க தாம் அவனியில் அவதரித்துள்ள புருஷோத்தமன். தமது அம்பை என் ஆணவ அகங்காரத்தின் மீது தொடுத்து அவைகளை அழித்து அருள்வீராக!"
அயோத்தி ராமன் பரசுராமனுடைய வேண்டுதலை மானசீகமாக நிறைவேற்றுகிறான். பரசுராமனுக்கு ஞானம் உதயமாகிறது. ஸ்ரீராமன் அருளை வாரி உலகக்கு வழங்க வந்த அண்ணல். மக்களைப் பண்படுத்திப் பெருநிலைக்குக் கொண்டு வந்த அரிய செயல்களுள் இது முதல் செயலாகிறது. ராமபாணம் வீண்போகாது என்னும் கோட்பாட்டுக்கு இது முதல் விளக்கமாகிறது
மிதிலாபுரியிலிருந்து அயோத்தி நோக்கி தசரத மன்னனுடைய கூட்டம் புறப்பட்டது. பயணம் ஆரம்பத்தில் இன்பம் நிறைந்ததாயிருந்தது. ராஜகுமாரர்கள் நால்வரும் நல்ல பயற்சி பெற்றிருந்தனர். இல்வாழ்வில் பிரவேசிப்பதற்கான மணச் சடங்கும் அவர்களுக்குச் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவையாவற்றையும் எண்ணிப் பார்த்த மன்னார் மட்டில்லா மகிழ்வில் ஊறியிருந்தார். ஆயினும் இடைவழியில் எதிர்பாராத வண்ணம் திடிரென்று விபத்து ஒன்று வாய்ப்பதாயிற்று. காற்று பயங்கரமாக வீசியது. வானம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக காட்சி கொடுத்தது. பயங்கர மூர்த்தியாகிய பரசுராமன் திடிரென்று அயோத்தி அரச கூட்டத்தில் எதிரே தென்பட்டார். சத்திரியர்களை துடைத்துத் தள்ளுவது அவருடைய வாழ்க்கை செயல். ஒரு தோளில் பெரிய வில் ஒன்றையும் மற்றொரு தோளில் தமக்குச் சின்னமாய் அமைந்திருந்த கோடரியையும் அவர் தங்கியிருந்தார். அவர் சிரசில் தாங்கியிருந்த ஜடாமுடி பார்ப்பதற்குப் பயங்கரமாய் இருந்தது. அவர் முகத்தினின்று தீப்பொறி பறந்துகொண்டிருந்தது. இத்தகைய காட்சியை தசரதர் எண்ணவில்லை. அவர் திகைத்து போனார். தழதழத்த குரலிலே தம் இளம் தனயனாகிய இராமனுக்கு உயிர்ப்பிச்சை தரும்படி அவர் கெஞ்சிக் கேட்டார்.
பயங்கர மூர்த்தியாகிய பரசுராமனோ தசரதனைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. அரசர் கூட்டத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. வசிஷ்ட மகரிஷியையும் ஏனைய முனிவர்களையும் அவர் மனதில் வாங்கவில்லை. தசரத ராமன் ஒருவனே அவர் நாடி வந்த உயிர் பிராணியாகும். அந்த இளைஜனைப் பார்த்து கர்ஜிக்கிற பாங்கில் இங்ஙனம் அவர் அறைகூவினார்.
பரசுராமன்:- "அடே சத்திரியப் பதரே, துருபிடித்தப் போன ஒரு சிவ வில்லை ஒடித்துக் கயவர் கூட்டத்தில் நீ வீராதி வீரன் என்று மிக எளிதில் கீர்த்தியைப் பெற்றுவிட்டாய். இதோ பார், என் கையிலிருப்பது விஷ்ணு தனுசு; இதில் நாண் ஏற்றி என்னோடு போர் செய்; போரில் மடிந்து போ. அது உனக்கு இல்லாவிடில் உன்னையும் உன்னுடைய கூட்டத்தையும் விட்டில் பூச்சி போன்று துடைத்து தள்ளத் தீர்மானித்திருக்கிறேன்".
தசரத ராமனுடைய முதல்விடை:- "போற்றுதற்குரிய பெரியோய்! தங்களைப் போன்ற முதியோர்களைப் பார்த்து இளையவர்களாகிய நாங்கள் நல்லியல்பையும் நல்லொழுக்கத்தையும் சாந்தத்தையும் கற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால் தாங்களோ ஒரே பதைபதைப்பும் சினமும் பூண்டவராகக் காட்சி கொடுக்கின்றீர்கள். நல்லொழுக்கத்தை நாடி இனி நாங்கள் யாரிடம் போவது?'
மேலும் ராமன் கூறியதாவது:- "போற்றுதற்குரிய பெரியோய்! என்னை சத்திரிய குலத்தில் பிறந்தவன் என அவமதித்தீர். என் பிறப்புக்கு நான் பொறுப்பாளி அல்லன். அது தெய்வாதீனமாக நிகழ்ந்தது. சான்றோர் ஒருவர் மானுடனொருவனுடைய பண்பை மட்டும் கருத்தில் வாங்கிக் கொள்கிறார். பிறப்பை அவர் பொருட்படுத்தவில்லை.
முன்கோபமே வடிவெடுத்திருந்த பரசுராம முனிவர் தாம் பிழையை உணர்ந்தார். ஆனால் வாய்விட்டு ஒன்றும் பேசவில்லை. ரகுராமன் பொழிந்த இக்கருத்தும் பரசுராமனுக்குப் பிரதிகூலமாகப் போயிற்று.
மீண்டும் ராமன் கூறியதாவது:- "ஆராதனைக்குரிய அரும் தவத்தோய்! தம் ஆணைக்குட்பட்டு தமது வில்லில் நாண் ஏற்ற முயலுகிறேன். என்னுடைய வல்லமையைக் காட்டும் முன்னீட்டம் என்னிடத்தில் இல்லை. ஆன்றோர் ஆணைக்கு அடிபணிவதே என் பாங்கு. இதோ அம்பைத் தொடுக்கிறேன். தொடுக்கிற அம்பு ஒருபொழுதும் வீண் போகாது. அதற்கு இலக்கு யாது என்று தாம் இயம்பி அருள்வீராக."
பரசுராமன்:- "பிரபோ, தாம் யார் என்பதைத் தம் அருளால் நான் இப்போது அறிய வருகிறேன். என்னுடைய வீண் செருக்கை கிருபை கூர்ந்து தாம் கழற்றிவிட்டீர். அறம் காக்க தாம் அவனியில் அவதரித்துள்ள புருஷோத்தமன். தமது அம்பை என் ஆணவ அகங்காரத்தின் மீது தொடுத்து அவைகளை அழித்து அருள்வீராக!"
அயோத்தி ராமன் பரசுராமனுடைய வேண்டுதலை மானசீகமாக நிறைவேற்றுகிறான். பரசுராமனுக்கு ஞானம் உதயமாகிறது. ஸ்ரீராமன் அருளை வாரி உலகக்கு வழங்க வந்த அண்ணல். மக்களைப் பண்படுத்திப் பெருநிலைக்குக் கொண்டு வந்த அரிய செயல்களுள் இது முதல் செயலாகிறது. ராமபாணம் வீண்போகாது என்னும் கோட்பாட்டுக்கு இது முதல் விளக்கமாகிறது

தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான்

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமய...த்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை.. இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கண நேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன். தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி..

விருந்தினர் தெய்வத்திற்குச் சமம்

விருந்தாளி என்றால் உறவினர் என்றுநினைக்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு ரத்தசம்பந்தம் இல்லாதவர்களைத் தான் விருந்தாளிஅல்லது அதிதி என்று குறிப்பிடுவர். விருந்தாளியை தெய்வமாக, அதிதி தேவோ பவ என்கிறது வேதம். ஒருமுறை எமலோகத்தில் எமதர்மன் இல்லாத சமயத்தில், விருந்தாளியாக ஒரு அந்தணச் சிறுவன்வந்தான். ஏதோ வேலையாக வெளியில் சென்ற எமன் திரும்பி வர மூன்று நாட்களானது. அதனால், சிறுவன் ஏதும் சாப்பிடாமல் பட்டினி கிடக்க நேர்ந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு உணவிடாத பாவம் தன்னைச் சேருமே என எமன் வருந்தினான். அதற்கு ஈடாக மூன்று வரங்களை, அவனுக்கு அளிக்க முன் வந்ததாக கடோப உபநிஷதம் என்னும் நூல் கூறுகிறது. வீட்டுக்கு வந்த விருந்தினர் தெய்வத்திற்குச் சமம் என்பதால் அவர்களுக்கு உணவு தராமல் இருப்பது பாவம் என்கிறது சாஸ்திரம்.

சங்காபிஷேகம்

இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்றுதான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பி...ரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது. அபிஷேகத்திற்கு சங்கைப் பயன்படுத்துவானேன் என்று கேட்கலாம். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.
ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி
தந்ந சங்க ப்ரேசோதயாத்
கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

பூஜைக்கு உகந்த மலர்கள்

பூஜைக்கு உகந்த மலர்கள்
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது. இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்குத் தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல் இறைவன்.
ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு நன்றிக் கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.
இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.
இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.
அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்றுநீர், ஆற்றுநீர் ஆகியவை சிறந்தவை.
இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது. நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம். இவை பொதுவானவை. எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த மலர்களை உபயோகிக்க வேண்டும் என்பதை பின்னால் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும். தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, சண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்.
பூக்களுள் சிறந்த பூ
பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல்.
வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ.
இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும்.
முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பூக்களின் குணங்கள்
வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். சிவப்பு வர்ணப் பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத்தரும். பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும், மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது. எல்லா நிறங்களையும் உடைய பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வது உத்தமமான பூஜை.
எத்தனை நாள்களுக்குள் பயன்படுத்தலாம்.
தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.
தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம். இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.
பூஜைக்கு ஆகாத பூக்கள்
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.
பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.
தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.
தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்
அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
கண்மலரால் கிடைத்த சக்கராயுதம்
ஜலந்திராசுரன் மரணம் அடைந்த பிறகு அவனுடைய பிள்ளைகள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தனர். எனவே தங்களைப் பாதுகாக்கச் சொல்லி தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களே சிறிது காலம் பொறுத்திருங்கள், நான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து ஜலந்திரனைக் கொன்ற சக்கராயுதத்தைப் பெறவேண்டும் என்றார் திருமால். இவ்வாறே திருமால் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதனை தினமும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில் ஒரு நாள் ஒரு மலரை மட்டும் ஈசன் மறைத்து விட்டார். உடனே ஹரி தன் கண்மலரை எடுத்து ஈசனின் திருநாமத்தைக் கூறி அர்ச்சனையை செய்து முடித்தார். அவருடைய பக்திக்கு மெச்சி எதிரே தோன்றி தரிசனம் அளித்த ஈசன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
தேவர்களை மறுபடியும் அசுரர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். ஆகவே ஜலந்திரனை அழித்த சக்கராயுதத்தை எனக்கு தரவேண்டும். அதன் மூலமாக அசுரர்களை அழிக்கும் வலிமையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்விதமே திருமாலுக்கு சக்கராயுதத்தை அளித்ததோடு, தனக்காக ஹரி அர்ப்பணித்த கண்மலரையும் திரும்ப அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பூஜைக்கு மலர்கள் எத்தனை அவசியம் என்பதையும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நம் அன்பையும், பக்தியையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மலர்களுக்கு பதிலாக தன்னுடைய கண் மலரை சமர்ப்பித்ததன் மூலமாக திருமாலுக்கு ஈசனின் தரிசனம் கிடைத்ததோடு, சக்கராயுதமும் கிடைத்தது. எனவே மலர்களைக் கொண்டு நாம் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும் என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.
காலத்திற்கு ஏற்ற பூக்களும் பயன்களும்
நீலோற்பலமலர் எல்லா பூக்களைவிடவும் சிறந்தது என்பதை எல்லா ஆகமங்களும் தெரிவிக்கின்றன. சில ஆகமத்தில் அலரி சிறந்தது என்றும், வேறு சில ஆகமங்கள் கொக்குமந்தாரை சிறந்தது என்றும், இவ்வாறே மலைப்பூ, தாமரைப்பூ என்ற பலவிதமான பூக்களை ஒவ்வொரு ஆகமமும் சிறந்ததாகக் கூறுகிறது.
வசந்த ருதுவாகிய சித்திரை வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்பமலர், புன்னாகமம், தருப்பை, கண்டங்கத்திரி என்றும் இவ்வகையான பூக்களால் சிவபெருமானை பூஜித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.
பாடலி புஷ்பம், நூறு இதழ்களை உடைய தாமரைப்பூ மல்லிகைப் பூக்கள் ஆகியவற்றால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி, மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சிக்க அக்கினிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.
வருஷ ருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரை, மல்லிகை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம்.
சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் புஷ்பங்களினால் சிவபெருமானை பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
அலரி, சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் பூக்களினால் ஹேமந்தருதுவான மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூஜை செய்தால் நூறு யாகங்கள் செய்த பலன்களை அடையலாம்.
சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை கர்ணிகாரப் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் ஒரு சேரச் செய்தால் எத்தனை பலன் கிடைக்குமோ அத்தனை பலன்களையும் தடையில்லாமல் பெறலாம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உடன்பை பெற்றதன் பயன் என்ன?
இறைவனுக்கு ஆட்பட்டு இருப்பது அல்லவா நாம் இந்த உடலைப் பெற்றதன் உண்மையான பயன். ஆகவே பூக்களைக் கையில் கொண்டு, உள்ளன்போடு இறைவன் திருவடிகளை பூஜை செய்யாத இந்த உடம்பால் ஒரு பயனும் இல்லை. வழிபாடு செய்யாத யாக்கை வற்றிப்போன தோல்பையே என்பது முன்னோர் கருத்து. இதனை
ஆக்கையால் பயன் என்? -அரன்
கோவில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப்போற்றி என்னாத இவ்
ஆக்கையால் பயன் என்?
என்று கேட்கிறார் அப்பர் சுவாமிகள்.
இரைதேடி அலமந்து கழியச் செய்து பிறகு காக்கைக்கே இரையாகும் இந்த யாக்கையை பெற்றதன் உண்மையான பயனை அடைவதற்கு மலர்களை எடுத்து இந்தத் தீபாவளித் திருநாளில் அவன் திருப்பாதங்களில் அர்ச்சனை செய்வோம். பிறவி பெற்றதன் பயனை அடைவோம், மகிழ்வோம்.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாகமாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு ச...தவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.
இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....
நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

காயத்ரி மந்திரத்தின் மகிமை!
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். “மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்”. அந்த அளவு சிறப்பு வாய்ந்தது காயத்ரி மந்திரம். இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று சொல்லப்படுகிறது. அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரம் இது.
காயத்திரி மந்திரம் 24 அட்சர சக்திகள் கொண்டது. அவைகள் ஒலி வடிவானவை. காயத்ரி மந்திரத்தைப் பற்றி முழுவதுமாக அறியும் முன் ஒலியின் சக்தி பற்றியும், மந்திரங்களின் சக்தி பற்றியும் நாம் அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஒலிக்கு நிறைய ஆற்றல் உண்டு. அதுவும் தகுந்த இசையோடு உச்சரிக்கும் போது அதன் சக்தி அளப்பரியதாக மாறி விடுகிறது. இதை ஜெர்மானிய இசை வல்லுனரும், இயற்பியல் விஞ்ஞானியுமான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (Ernst Florence Friedrich Chladni) (1756-1827) என்பவர். 1787 ஆம் ஆண்டு இவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' (Discoveries in the Theory of Sound)' என்ற நூலாக எழுதி வெளியிட்டார்.
க்ளாட்னி தான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் பல சோதனைகள் மூலம் உலகிற்கு நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலினை நிறுத்தி அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இசை பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்! இவற்றை அவர் தொகுத்தார். அந்த தட்டுகளும் ’க்ளாட்னி ப்ளேட்ஸ்’ என்று உலகப் புகழ் பெற்றன.
இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர்.
ஆனால் இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது முனிவர்கள் முன்பே மிகவும் முன்னேறி இருந்தனர். அவர்கள் அதன் சூட்சும ஆற்றலை அறிந்திருந்தனர். ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நுணுக்கமாக அறிந்திருந்தனர். அதனால் அர்த்தமுள்ள வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர்.
அப்படி அவர்கள் குரு சிஷ்ய பாரம்பரியம் மூலம் கற்பிக்கக் காரணம் தவறானவர்கள் கையில் இந்த மந்திரங்கள் சேரக் கூடாது என்பதும், மந்திரங்களை பிரயோகிக்க தகுந்த மன, உடல் தூய்மை தேவை என்பதும் தான்.
அவர்கள் மந்திரங்கள் பலிக்க உச்சரிப்பு, நியமம், கட்டுப்பாடு, உபகரணம், நம்பிக்கை ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்று நம்பினார்கள். அவர்கள் நேரடிப் பார்வையில் கற்பிக்கப்படும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டு, ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவை என்று பண்டைய அறிஞர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல ஆன்ம ஞானத்திற்கே வழி வகுக்க வல்லவை மந்திரங்கள் என்றும் புரிந்து கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட மந்திரங்களுக்கே தலையாய காயத்ரி மந்திரம் இது தான்
“ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இங்கு கொடுத்துள்ள படியே ஓம் முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.
”பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்” என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.
இந்த மந்திரத்தில் தனிப்பட்ட தெய்வ வழிபாடு இல்லை. சிலர் சூரியனை வேண்டி சொல்லப்பட்டது என்று பொருள் கொண்டாலும் ஞான சூரியனாகிய பரம்பொருளிடம் வேண்டுவதாகவே இது உள்ளது என்பது பெரும்பாலான ஆன்மிக அறிஞர்களின் கருத்து.
இந்தப் பிரார்த்தனை மந்திரத்தில் எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள். ’உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது’ எவ்வளவு அறிவுபூர்வமான பிரார்த்தனை. எல்லாப் பிரச்சினைகளும் அறிவின் குறைபாட்டால் அல்லவா வருகின்றன? உயர் அறிவு வந்து விட்டால் மனிதனுக்கு என்ன தான் பிரச்சினை? அந்த உயர் அறிவைப் பெற்ற பின் மனிதனால் முடியாதது தான் என்ன?
காயத்ரி மந்திரச் சிறப்புப் பற்றி புனித நூல்களும், மகான்களும், பேரறிஞர்கள் இப்படிப் புகழ்ந்து கூறுகிறார்கள்.
”இவ்வுலகத்திலும், பரவுலகத்திலும் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தவத்தை வளர்க்க காயத்திரியை விட மேலான மந்திரம் இல்லை” என்கிறது தேவிபாகவதம்.
”மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருபவன் வாயுபோல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை அடைவான்” எனக் கூறுகின்றது மனுஸ்மிருதி.
”நான்கு வேதங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு சமமாக காயத்ரியை மட்டும் மறுதட்டில் வைத்தால் எடை சரியாகவிருக்கும். காயத்ரி வேதங்களின் தாய். சகலபாவங்களையும் போக்குபவள். காயத்ரியைப் போல பவித்திரமான மந்திரம் மண்ணுலகிலும் இல்லை, விண்ணுலகிலும் இல்லை. காயத்ரிக்கு மேலான ஜபம் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை” என்கிறார் யக்ஞவல்கியர்.
ஸ்ரீ ராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்களும், மகாத்மா காந்தி போன்ற தலைவர்களும் காயத்ரி மந்திரத்தை மிகவும் பாராட்டிப் பேசி இருக்கிறார்கள்.
காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும். அது எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும். எனவே இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம். சந்தியா காலங்களில், அதாவது காலை மாலை நேரங்களில், காயத்ரி மந்திரம் சொல்வது மிகவும் நல்லது.
இந்த காயத்ரி மந்திர ஜபத்தை சிரத்தையுடனும், அர்த்தம் நினைவில் வைத்தும் தொடர்ந்து சொல்லி வந்தால் மனதில் நிதானமும், அமைதியும் ஏற்பட ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையில் சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியும். மாணவர்கள் பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.
இந்த மகா மந்திரத்தைப் பயன்படுத்தி முன்னேறுவோமாக