Thursday, August 6, 2026

 மனித உடலில் "பஞ்ச பிராணன்கள்" (அல்லது பஞ்ச வாயுக்கள்) எனப்படும் ஐந்து முக்கிய சக்திகள்/காற்றுகள் இயங்குகின்றன. யோக மரபு மற்றும் ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, ஒருவரின் சுவாசம் அல்லது இருதய துடிப்பு நிற்பது மட்டுமே முழுமையான மரணம் அல்ல. இந்த ஐந்து வாயுக்களும் உடலை விட்டு குறிப்பிட்ட வரிசையில், வெவ்வேறான கால இடைவெளிகளில் வெளியேறுகின்றன.  

​உயிர் பிரிந்த பின் இந்த ஐந்து வாயுக்களும் வெளியேறும் முறை மற்றும் கால அளவு



வாயுவின் பெயர்உடலில் செய்யும் பணிஉயிர் பிரிந்த பின் வெளியேறும் காலம் & விதம்

1. சமான வாயு (Samana Vayu)உடலின் வெப்பம் மற்றும் செரிமானத்தை பராமரித்தல்.21 முதல் 24 நிமிடங்களுக்குள்: சுவாசம் நின்றவுடன் முதலில் வெளியேறும் வாயு இதுதான். இதனால் தான் உடல் உடனடியாகக் குளிர்ந்து போகத் தொடங்குகிறது.

2. பிராண வாயு (Prana Vayu)சுவாசம் மற்றும் சிந்தனை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்.48 முதல் 90 நிமிடங்களுக்குள்: சுவாச இயக்கம் மற்றும் மூளையின் நுண்ணிய அலைகள் முற்றிலும் நின்று, இந்த வாயு வெளியேறுகிறது.

3. உதான வாயு (Udana Vayu)உடலின் மிதப்புத் தன்மை (Buoyancy) மற்றும் தொண்டை/பேச்சு பகுதி.6 முதல் 12 மணி நேரத்திற்குள்: இது வெளியேறியவுடன் உடலின் கனத்தன்மை அதிகரிக்கும் (உடல் மிகவும் கனமாக மாறுவது போல இருக்கும்).

4. அபான வாயு (Apana Vayu)கழிவு நீக்கம் மற்றும் உடலின் கீழ்நோக்கிய ஆற்றல்.8 முதல் 18 மணி நேரத்திற்குள்: உடல் உணர்ச்சிகள் மற்றும் கழிவு மண்டலங்களின் பிடிப்பு முற்றிலும் விடுபட்டு வெளியேறுகிறது.

5. வியான வாயு (Vyana Vayu)உடல் செல்களை ஒன்றிணைத்து, உடலைப் பாதுகாக்கும் ஆற்றல்.11 முதல் 14 நாட்களுக்குள்: இதுவே மிக மெதுவாக வெளியேறும் வாயு. இயல்பான மரணங்களில், செல்கள் சிதையும் வரை இந்த ஆற்றல் உடலின் நுண் அமைப்புகளில் நிலைத்திருக்கும்.




​குறிப்பு (தனஞ்சயன் வாயு): முதன்மை ஐந்து வாயுக்கள் தவிர, 'உப வாயுக்கள்' ஐந்தில் ஒன்றான தனஞ்சயன் என்னும் காற்று, உடல் முற்றிலுமாக மக்கி அழியும் வரை அல்லது தகனம் செய்யப்படும் வரை உடலிலேயே தங்கியிருந்து இறுதியில் வெளியேறும் என்பது நம்பிக்கை.

  

​இதனாலேயே பண்டைய முறைப்படி உடலைத் தகனம் செய்யும் அல்லது அடக்கம் செய்யும் சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்யப்படுகின்றன

 தர்ப்பை:-



நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம்,
நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே!
நாம் அவற்றின் காரணத்தை உணராமல்,
அவற்றை நவீன கண்டு பிடிப்புகளுடன் ஒப்பிட்டு,
அதன் எளிமையான பயன் பாட்டையே நாம் புறக்கணிக்கிறோம்.
அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில்,
ஒரு சூட்சுமான செயல்பாடு தான் தர்ப்பை புல் பயன்பாடு.
தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது.
உலகம் தோன்றிய போதே தோன்றிய தொன்மையான புல் என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர்.
தர்ப்பை புல்லின் உச்சியில் சிவபெருமானும்,
மத்தியில் பிரம்மனும்,
அடியில் விஷ்ணுவும்
இருப்பதாக ஐதீகம்.
தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே தர்ப்பை புல்லின் சிறப்பாகும்.
தர்ப்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது.
இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்ப்பை புல்லுக்கு உண்டு.
தர்ப்பை புல்லில் ஏழு வகை உண்டு....
குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல்,
விசுவாமித்திரம், யவை
என்பவை அவை.
தோற்றத்தை பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.
நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண் தர்ப்பை எனவும்,
அடிப்பகுதி பருத்து இருந்தால் அது அலி தர்ப்பை எனவும்,
அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது.
தர்ப்பை புல்லின் மகிமைகளை யஜூர், அதர்வண வேதங்களிலும்,
சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும்,
நிகண்டு ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் காணலாம்.
தர்ப்பை புல்லினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்புக்கு பவித்ரம் என்று கூறுவர்.
பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.
பவித்ரத்தை எல்லா விதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்தில் இருந்தே உள்ளது.
நமது வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது.
இந்த விரலில் பவித்ரம் அணிந்து ஹோமம், ஜப வேள்வி சடங்குகளில் ஈடுபட,
அது அண்ட வெளியில் உள்ள ஆற்றலை மூளைக்கு கொண்டு சேர்க்கும்.
பவித்ரம் அணியாமல் மேற்கொள்ளும் எந்த ஆன்மீக சடங்குகளும்,
மின்சாரம் இல்லாத கணினி போல அவற்றால் எந்த பலன்களும் இல்லை.
தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,
அதே போல் தர்ப்பை அணிந்து இருப்பவரிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம சாஸ்திரம்.
உபாசனையில் ஜபம் மற்றும் வேள்விக்கு இடையூறு செய்யும் கண்ணுக்கு புலப்படாத,
அரக்கர்கள், பூதங்கள், பிசாசுகள், பிரம்மராக்ஷகர்
முதலியோர் நம் கையில் உள்ள தர்ப்பையை பார்த்ததும் விலகியே ஓடுவர்.
மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று ஆனால், மின்சாரத்தை விட பல மடங்கு செயல் திறன் கொண்டது.
அக்னி பரிசுத்தமானது தான்
என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
ஆகவே தான் இதற்கு அக்னி கர்பம் என்ற பெயர் உண்டு.
தர்ப்பை புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கி கொள்ளும் தன்மை மிக மிக அதிகம்.
ஆகவே அது தீய எண்ணங்களையும்,
கர்ம வினைகளையும்
நம்மிடம் ஒட்டாமல் இருக்க செய்யும்.
தர்ப்பை புல்லில் ஆன ஆசனம் மிகவும் விசேஷம்.
தர்பாசனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பல மடங்கு சக்தி உண்டு.
கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பார்கள்.
அந்த தர்ப்பையின் வழியாகத் தான் ப்ராண சக்தி கும்பத்துக்குள் வரும்.
சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும்,
பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த
தர்ப்பையில் அமர்கின்றனர்.
தர்ப்பை உஷ்ண வீரியமும், அதி வேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில்
தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு.
எனவே தான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையை பயன் படுத்துவார்கள்.
அதை நாடி சந்தானம்
அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள்.
கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய பின், அந்த நீரை கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இது தான்.
உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும்
தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம்.
நன்கு உரு ஏற்றிய
தர்ப்பையை எரித்து சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல
குழைத்து புருவங்களில் தடவ எல்லா விதமான தோஷங்களும் விலகி
ஓடும்; ஜன வசீகரம் ஏற்படும்.
பொதுவாக ஹோமங்களின் முடிவில் இதை ஹோமபூஜா ரக்ஷசையாக இதை செய்வார்கள்.
தர்ப்பை புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.
ஒரு புல்லை கொண்டு செய்யும் பவித்திரம்
இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும்,
இரண்டு புற்களை கொண்டு
செய்யப்படும் பவித்திரம்
தினசரி நடை முறைகளுக்கும்,
மூன்று புற்கள்
கொண்டு செய்யப்படும் பவித்திரம் அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார்
சடங்கு போன்றவற்றிலும்,
நான்கு புற்களினால் செய்யப்பட்ட பவித்திரம்
கோயில் நடை முறைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றது.
தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும்,
பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் தர்ப்பை புல்லை உபயோகப் படுத்துவர்.
சிராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆசனம், கூர்ச்சம் போன்றவைகள்
தர்ப்பை புல்லில் தான் செய்யப்படுகின்றன.
தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும்,
மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும்,
பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய
வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம்.
எனவே தான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய
கிருமிகளால் உணவு கெடாமல் இருக்க தூய்மையான தர்ப்பையை பரப்புகிறார்கள்.
தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும்.
தர்ப்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்து வர, அங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாது.
வீடுகளில், உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டி வைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்கும்.
வியாதி உள்ளவர்கள் தங்கும் இடங்களில் தர்ப்பை புல்லை வைக்க வியாதிகள் பரவாது நலம் பெறுவர்.
முன்பு திருநள்ளாறு தர்ப்பைப் புல் வளரும் காடாக இருந்து உள்ளது.
ஆகவே அங்கு வீற்றிருக்கும் ஈஸ்வரனுக்கு 'தர்பாரண்யேஸ்வரர்
என்று பெயர்.
திருநள்ளாறு கோயிலில் தர்ப்பை புல்லே தலவிருட்சமாக வணங்கப்படுகிறது

 "எல்லா கோயிலிலும் மூலஸ்தானத்திற்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருக்கும்!ஏன்?"




கோவிலுக்கு வருபவன் கர்ப்பக்கிரஹத்தில் மூலஸ்தானத்தில் இருக்கிறான் என கருதி உள்ளே வந்து பூஜித்து அர்ச்சித்து தரிசித்து பிரசாதம் பெற்று திரும்பினால் நேர் எதிரே இருப்பது அந்த பெரிய நிலைக்கண்ணாடியே!
அதை பார்த்து அதிலும் சுவாமி உருவம் தெரிவதையும் காண்பான்?
பூசாரி தரும் விபூதியை சரியாக இட்டுக் கொள்ளவா?
கூட்ட நேரத்தில் அது விழியாக பார்க்கவா?
*அடேய், மடையா கடவுள் மூலஸ்தானத்தில் இல்லையடா!*
*உன்னுள் தான் இருக்கிறார்!*
அதை நீயே உன் கண் மூலமாக பார் என உணர்த்தவே!?
கண்ணாடியில் சுவாமியும் தெரியும் நம் உருவமும் தெரியுமல்லவா?
அதை நம் கண்ணால் தானே பார்க்கிறோம்!
கண்ணாடி வழியே தான் பார்க்க முடியும்?!
கண்ணை நாடி - கண்ணிலே ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியை நாடிப்பார் என்பதே!
அந்த ஜோதி தான் ஆதி!
நமது கண்ணும் கண்ணாடி போன்றதே!
நம் உருவத்தை எதிரில் நிற்பவர் கண்ணில் அதனுள் ஒளியில்வை!
காண்பாய் உன்னை நீயே!
நீயே ஆத்மா

 தமிழ் கடவுள் முருகனுக்குஇரண்டு மனைவியர் ஏன்..?




தமிழ் கடவுள் முருகன் என்கிறோம். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர்.
கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள சாதாரணமான மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது.
இருப்பினும் அவருக்கு மனைவியர்
இரண்டு பேர் எதற்கு என்பதை
சற்று வேறு கோணத்தில் சந்திப்போம்.
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.
மகான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினைபாருங்கள்.
நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா".
சுழுமுனை என்பது மானுட உடலில்
உள்ள ஒரு மைய நரம்பு.
நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்
இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்.
7. தலை உச்சி (சகஸ்ராதாரம்)
6. நெற்றிக் கண் (ஆக்கினை)
5. தொண்டைக் குழி (விசுக்தி)
4. நெஞ்சுக்குழி (அனாகதம்)
3. தொப்புள் குழி (மணிப்பூரகம்)
2. தொப்புள் குழிக்கு சற்று கீழ்ப் பகுதி (சுவாதிஷ்ட்டானம்)
1. முதுகுத் தண்டின் அடிப்பாகம் உடலுக்கு உள் புறம் (மூலாதாரம்)
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
இந்த ஏழு சக்கரங்களும் மையம் கொண்டிருக்கும் மைய நாடியே
சுழுமுனை நாடி.
ஒவ்வோரு உயிரிலும்
உள்ள சுழுமுனையே முருகன்.
இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே
வள்ளி தெய்வானை.
ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால்,இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே.
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை.
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
அவர் எந்த வடிவும் இல்லாத பேராற்றல்.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை

 பூஜை  துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?




சங்கல்பம் என்னும்  உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...


சங்கல்பம்


சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.


அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.


கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.


இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.


“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 

ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”


என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 


ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.


பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.


“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…

என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.


இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.


அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.


இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.


ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,


வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;


இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;


ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;


அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;


பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;


சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;


இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;


சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;


ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;


இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;


மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;


அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;


ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;


அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;


பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;


சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;


பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;


சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 


இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;


பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;


பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;


எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;


நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;


ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;


யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;


ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:


மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.


கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;


மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;


அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;


உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;


சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;


இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.


இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.

1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.


2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.


3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.


4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.


5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.


6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?