Saturday, March 5, 2011

ஜோதிடமும் கணிதமும்!

ஜோதிடமும் கணிதமும்!
ஜோதிடமும் கணிதமும்!பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகளும் முன்னோர்களும் வானில சாஸ்திரத்தை ஆராய்ந்து ஜோதிடக் கலையைக் கண்டுபிடித்து ஜனங்களுக்குப் போதித்தார்கள். ஜோதிடத்திலிருந்துதான் கணிதம் பிறந்தது போல எண்களுக்கும் ஆதாரம் இதுவே என்பதை நம் தசாம்சத்தை ஏற்றுக் கொண்டது மூலம் புரிகிறது. ஒருவர் நீண்ட ஆயுளோடு இருக்க சில சுகங்களையும், சில குறைகளையும் மாறி மாறி அனுப்பிக் கவேண்டும். இதுவே உலக நியதி. இதற்கு மாறாக சில ஜோதிடர்கள் அவர்களிடம் வருபவர்களுக்கு சாதகமாக பேசிவிட்டு, அவை நடக்காமல் போக, பொதுவாக மக்களுக்கு ஜோதிடத்திலுள்ள நம்பிக்கைப் போய்விடுகிறது.
சூரியன் நம்பூதிரி
திரு சூரியன் நம்பூதிரி அவர்கள் சிறு வயதிலிருந்தே, தலை சிறந்த குருமார்களிடமிருந்தும், பல அரிய நூல்கள் மற்றும் சுவடிகளிலிருந்தும், இந்தக் லையை பரிபூர்ணமாகவும், பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விற்பன்னராகியுள்ளார். ஒரு ஜாதகத்தை ஒருவர் கொண்டு வந்தால் அது அவருடையதுதானாவென்று ஆராய்ந்தறிந்த, பிறகுதான் கிரஹங்களைப் பார்த்துப் பலன்களைச் சொல்லுவார். வந்திருப்பவர் எந்த காரணத்திற்காக வந்திருக்கிறாரோ அது நூறு சதவீதம் நடக்குமென்றால்தான் அது ஜயம் அளிக்குமென்பார். இல்லையென்றால் அது ஜாதகப்படி நடக்காது என்று சொல்லி விடுவார். பரிஹாரம் சொல்லும் போதும் அது நூறு சதவீதம் ஜயத்தைக் கொடுக்குமென்றால் தான் சொல்லுவார். இல்லையெனில் பரிஹாரம் செய்தும் பலனளிக்காதுயென்று சொல்லிவிடுவார்.
குறைகளும் நிவர்த்திகளும்

1. கல்வி

2. விவாகம் தடைப்படுதல் / ஜாதகம் பொருத்தம் பார்த்தல்.

3. குழந்தைப் பேறு இல்லாதவர்கள்.

4. தம்பதிக்குள் மனக்கசப்பு / விவாக ரத்து.

5. உத்தியோகம்

6. வியாபாரம் / பணப்புழக்கம்

7. உடல்கோளாறு

8. நீதி மன்றங்களில் வழக்குகள்

9. வீடு / மனை வாங்குதல்

10. மந்திரித்துக் கொடுப்பது
ஜோதிடமும் கணிதமும்!


வாஸ்து சாஸ்திரப்படி வீடுகள் எப்படி கட்டப்பட வேண்டுமென்றும், மாறாக இருந்தால் என்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமென்றும் விபரமாக எடுத்துச் சொல்லுவார். பொதுவாக ஜனங்கள் எல்லாவிதமான இராசி கற்களையும் ஒரே தருணத்தில் அணிந்து கொள்வது உச்சிதமில்லாமலிருப்பதுடன் நல்லது செய்வதற்குப் பதில் கெடுதல்களைச் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் ஜாதகப்படி எந்த ராசி நடக்கிறதென்று கணித்து அதற்குகந்த எந்த இராசிகற்கள்அணிவது நன்மையென்று எடுத்துரைப்பார்.
பரிகாரங்கள்
பரிகாரங்கள் என்பவை திடீரென்று ஆகாயத்திலிருந்து குதித்தவையல்ல. இவை ஆதிசங்கரரால் அங்கீகரிக்கப்பட்ட வேத சாஸ்திரங்களுடன் தொடர்புள்ள தாந்திரீக க்ரந்தங்களில் முக்கியமான, "ஸாரதா திலகம் தாந்திரீக க்ரந்தத்தில்" கூறப்பட்டுள்ள தோஷ பரிஹாரங்கள். இந்த பரிஹாரங்களை திரு. சூரியன் நம்பூத்திரி அவர்கள் கூறியபடி செய்து கொள்ள வேண்டியவர்கள் அவரவர் சௌகரியப்படி எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்து கொள்ளத் தெரியாதவர்களோ அல்லது மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாதவர்களோ, திரு. நம்பூத்திரி அவர்களிடம் செய்து கொள்ளலாம். அவர் வீட்டில் இருபத்திநான்கு மணி நேரமும் வருடம் முழுவதும் ஸ்வாமிமுன் நெய் விளக்கெறிந்து கொண்டேயிருக்கும். பரிஹாரம் செய்து கொள்ள எவரேனும் விருப்பப்பட்டால், ஒரு சுப நாளில் ஆரம்பித்து 41 நாட்கள் பூஜையில் வைத்துப் பிறகு ஒரு சுப நாளில் அந்த நபரிடம் கொடுத்து அதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற விதிகளையும் எடுத்துறைப்பார். அந்த நபர் பூஜை நடக்கும் பொழுது சில முக்கியமான நாட்களிலாவது பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.உலகில் எல்லோரும் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் நிம்மதியும் சாந்தியும் நிறைந்த வளமான வாழ்க்கை வாழவேண்டும். அது சாத்தியமில்லாமல் மேற்கூறிய இன்னல்களோ அல்லது வேறெதாவது ப்ரச்சனைகள் நேர்ந்தால், சாஸ்திரீக முறைபடியுள்ள பரிஹாரங்களை அறிய ஆவலுள்ளவர்கள் கீழ்க்கண்ட விலாசத்தை அணுகவும்.

No comments:

Post a Comment