Friday, March 11, 2011

உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?

உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?
அன்றாட வாழ்வில் சிலர் பாரபட்சம் பார்க்காமல் விரும்பியதை சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதுபற்றிக் கேட்டல், சர்க்கரை நோய் இருக்கிறது, ரத்த அழுத்தம் இருக்கிறது என்று பதிலளிக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால், நோய் இல்லாத சில இளம் வயதினரும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பாதியளவு உப்பு, சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். உணவு தொடர்பான அச்ச உணர்வுக்கும், அவரது ஜாதக அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா?
பதில்: ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அந்தக் காலத்தில் ரத்தத்தின் சேர்க்கையிலும் மாறுதல் காணப்படும். செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் ரத்தத்தில் இரும்புச் சத்து, கால்சியம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற கூட்டு கிரக சேர்க்கை பெற்றவர்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம்.ஒரு சிலர் சிறு வயது முதலே வாகனத்தை அதிகம் பயன்படுத்துவர். 4 தெரு தள்ளி உள்ள மளிகை கடைக்கு கூட வாகனத்தில்தான் செல்வார்கள். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடைபயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும். ஒரு சிலர் சிறு வயதில் விரும்பியதைச் சாப்பிட்டாலும், குறிப்பிட்ட காலத்தில் உணவுக் கட்டுப்பாடு குறித்த பயம் வந்துவிடும். உதாரணமாக செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றுள்ளவர் குறிப்பிட்ட வயது வரை எதை வேண்டுமானாலும் சாப்பிடுவார். ஆனால் செவ்வாய் தசை துவங்கும் போது அவராகவே உணவுக் கட்டுப்பாட்டை துவக்குவார். இதற்கு காரணம் நோய் வந்துவிடும் என்ற பயம் மனதளவில் ஏற்படுவதுதான்.
இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
குறிப்பிட்ட தசை வரும் போது தாமாகவே முன்வந்து உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ளலாமா? அல்லது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க வேண்டுமா?மேற்கூறிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட தசை நடக்கும் போது அவர்களாகவே மருத்துவரைத் தேடிச் செல்ல வேண்டிய நிலையை கிரகங்கள் உருவாக்கிவிடும் என்பதுதான் உண்மை. எனவே, கடுமையான/மோசமான தசா புக்தி நடைபெறும் போது உணவுக் கட்டுப்பாடு விடயத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதே சிறந்தது. தேவைப்பட்டால் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment