Tuesday, March 1, 2011

குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா?

 குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா?
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சப்தங்கள், ஒலி அலைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானவையே.
அஸ்வினி என்றால் அ, இ, உ, ஏ என்று வர வேண்டும். எனவே அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து வரக் கூடிய ஒளிக் கீற்றின் அலை நீளத்தையும், இந்த எழுத்துக்களின் அலை நீளத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றாக இருக்கும். எனவே தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த எழுத்தின் துவக்கத்தில் பெயர் இருந்தால் நல்லது என்று சொல்லியிருக்கின்றனர்.
ஜோதிடம் என்பது என்ன... வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறவும், பிரச்சினையை எதிர்கொள்ளவும் தேவையான வழி முறைகளை கூறுவதானே.பிரச்சினைக்குரிய காலக்கட்டத்தில் எந்த முறையான அணுகுமுறையை கொண்டிருந்தால் பிரச்சினையை சமாளிக்கலாம் என்று கூறுவது. எதிர்கொள்ளலாமா, பணிந்துவிடலாமா, மோதிப் பார்த்துவிடலாமா என்று சொல்கிறது.முன் காலத்தில் நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால்தான் நட்சத்திரங்களைக் கொண்ட பழமொழிகள் அதிகம்.
இப்போது நட்சத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களது கிரக அமைப்பையும் பார்த்து பிறந்த தேதிக்கான கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்து பெயரை அமைக்க வேண்டும். அந்த பெயருக்கான கூட்டு எண்ணிக்கையில் எண் கணிதத்தையும் பார்த்து அந்த எழுத்துக்களை அமைக்கலாம். அப்போதுதான் அவரது பெயருக்கான நல்ல பலன்களை அவர் அடைய முடியும்.

No comments:

Post a Comment