Tuesday, July 16, 2013

** கோயிலில் பின்னமாக (சிதிலமடைந்த) உருவம் கொண்ட தெய்வச்சிலையை வணங்கலாமா?

** கோயிலில் பின்னமாக (சிதிலமடைந்த) உருவம் கொண்ட தெய்வச்சிலையை வணங்கலாமா?
தெய்வச் சிலையின் உருவத்தை மூன்றுவகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அவை அங்கம், உபாங்கம், பிரத்யங்கம். கை, கால் விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் ஆகியவை பிரத்யங்கம். இவற்றில் பின்னமிருந்தால் தோஷமில்லை. தொடர்ந்து வழிபாடு செய்து கும்பாபிஷேகத்தின் போது சரிசெய்து கொள்ளலாம். கை,கால்கள், தலை முதலியன உபாங்கம். இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடனே சரிசெய்து பிராயச்சித்த கும்பாபிஷேகம் செய்த பிறகே வழிபட வேண்டும். முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்கள். இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால் வேறு விக்ரஹம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இந்த விதிகள் பொதுவானவை. சுயம்புவாக தோன்றிய தெய்வச் சிலைகளுக்கு இது பொருந்தாது. எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து வழிபாட்டைச் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment