Monday, February 7, 2011

1. மந்திரம் என்பதற்கு பொருள்:

1. மந்திரம் என்பதற்கு பொருள்:


( மந் – நினைப்பவன் -- திர -காப்பது )
நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடையது. வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு வகைப்படும் என்றபடியாயிற்று.
1.இலிங்கம் என்பதற்குப் பொருள்:
இதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர்.

2.சிவலிங்கம் இருவகைப்படும்:

1. பரார்த்த லிங்கம்
2. இட்ட லிங்கம் -- என இருவகைப்படும்.

பூஜைக்குரிய இலைகள்
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள்பூஜைக்குரியன

No comments:

Post a Comment