மரத்துக்கும் உணர்வுண்டு
ஒருநாள் ஒரு தாய் தன் மகனை அழைத்து, ""டேய் நாமு! ஓடிப்போய், அந்த பூவரசு மரத்தின் பட்டையை வெட்டி வா'' என குரல் கொடுத்தார். நாமுவும் கோடரியுடன் ஓடினான். மரத்தின் அருகே சென்றதும் லேசாக வெட்டினான். ஏதோ பொறி தட்டியது. தன் காலை வெட்டிப்பார்த்தான். வலித்தது, ரத்தம் வழிந்தது. அம்மா இதைப் பார்த்து ஓடோடி வந்தாள்.
""பைத்தியக்காரா! மரப்பட்டையை வெட்டச் சொன்னால் ஏனடா காலை வெட்டுகிறாய்! உனக்கு என்னாயிற்று?'' என்றாள்.
""அம்மா! பட்டையை வெட்டினேன், பின்பு காலை வெட்டினேன். வலித்தது. இதே போலத்தானே இந்த மரத்துக்கும் வலிக்கும். அதனால் மேற்கொண்டு வெட்ட மனம் வரவில்லை,'' என்றான் கண்களில் நீர் மல்க.
அதைக்கேட்டு அம்மாவும் அழுதுவிட்டாள். எவ்வளவு இரக்கமுள்ள மனது நம் மகனுக்கு!
அந்த நாமு தான் பிற்காலத்தில் "நாமதேவர்' என்ற மகான் ஆனார்.

No comments:
Post a Comment