Monday, February 7, 2011

வாழ்க்கையில் முன்னேற.....


வாழ்க்கையிலும் ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள்
1. உடல் நலம் காப்பது:
அளவாக உண்ணுங்கள். இறைவனுக்குப் படைத்து அதைப் பிரசாதமாக உண்ணுங்கள். சாத்விகமான உணவை உட்கொள்ளுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடியுங்கள். அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
2. சக்தியைக் காப்பது:
கூடியவரை பிரம்மசரியத்தைக் கடைப்பிடியுங்கள்.  சக்தியை காப்பாற்றுங்கள். மனப்பக்குவம் பெற்றபின் உடல் உறவைக் கடைப்பிடியுங்கள்.
தினமும் இரண்டு மணி நேரம் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு மணி நேரத்திற்குக் குறையாமல் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள்.
3. பண்புகளைக் காப்பாற்றுங்கள்:
மென்மையாகப் பேசுங்கள். கூடியவரை உண்மையே பேசுங்கள். கோபப்படாமல் பேசுங்கள்.
எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். செயலில் நேர்மையைக் காட்டுங்கள். நியாயமற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
4. வைராக்கியத்தை வளருங்கள்:
வாரம் ஒரு முறை உப்பைக் கைவிடுங்கள். மாதம் ஒரு வாரம் சர்க்கரையைக் கைவிடுங்கள்.
மனதைக் கெடுக்கும் பயனற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள். உங்கள் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவு; உடை, பழக்கங்கள் எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடியுங்கள்

No comments:

Post a Comment