சனி பகவான்
இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு உஷாதேவி, சாயாதேவி என்ற இரு மனைவிகள். சனீஸ்வர பகவான் சாயாதேவியின் புதல்வன் ஆவார்.
சூரியனுக்கும், சுவர்கலா தேவிக்கும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இமய தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர். சூரியனுடன் சுகவர்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.
சூரியனின் மனைவியான சுவர்க்கலா தேவிக்கென்று சிவசக்தி இருந்தது. தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு சாயாதேவி என்று பெயர் சூட்டினாள்.
தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், `நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்’ என்று கூறினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, `சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.
தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.
அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக முன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.
அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேத ராக காட்சி அளித்தார்.
அப்போது சிவபெருமான் சனிபக வானை நோக்கி, `உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு சனி பகவான், `எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்’ என்றார்.
மேலும், `உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்’ என்றும், `இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்’ என்றும் வரம் கேட்டார் சனிபகவான்.
அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு `சனீஸ்வரர்’ என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.
பெயர் பெற்று விட்டால் மட்டும் போதுமா?
நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.
சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.

No comments:
Post a Comment