புத்தாண்டு அன்று முக்கியமாக செய்ய வேண்டியது புதுபஞ்சாங்கம் படித்தல். அன்று 
அதிகாலை நீராடியதும், சுவாமி அறையில் பஞ்சாங்கம் வைத்து அதற்கு பொட்டு, பூவைத்து 
பூஜை செய்ய வேண்டும். பஞ்சாங்கத்தை ஒரு தேவதையாக எண்ணி வணங்கி அனைவரும் கேட்கும் 
வண்ணம் வாசிக்க வேண்டும். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக்கொண்டது. முதல் அங்கமான 
திதியை அறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும், 
மூன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீர்வதும், நான்காவதான யோகத்தை அறிவதால் 
நோயற்ற வாழ்வும், ஐந்தாவதான கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் உண்டாகும். 
பஞ்சாங்கங்களை கோயில்கள் சிலவற்றிலும் படிப்பர்.
No comments:
Post a Comment