Sunday, April 1, 2012

முதலில் கடமை... அடுத்து உரிமை.

ஏழையான ஷெர்வுட் ஆண்டர்சன் என்ற ஆங்கில எழுத்தாளர், புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். ஒரு பதிப்பகத்தினர் அவர் எழுதும் புத்தகத்தின் தரத்தை எப்படியோ மோப்பம் பிடித்து தெரிந்து கொண்டு விட்டனர். அதைத் தாங்களே பதிப்பித்தால் நல்ல லாபம் பெற முடியும் எனக் கணக்கிட்டனர்.
பதிப்பக உரிமையாளர் ஆண்டர்சனுக்கு வாரத்துக்கு ஒருமுறை ஒரு தொகைக்குரிய செக்கை கொடுத்து அனுப்பினார். ஆனால், ஆண்டர்சன் அந்தக் காசோலைகளைத் திருப்பி அனுப்பி விட்டார்.
பதிப்பக உரிமையாளருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டர்சனை நேரில் சந்தித்தார்.
""ஐயா! என் மேல் அன்பு கொண்டு பணம் அனுப்பியமைக்கு நன்றி. இதை நான் பயன்படுத்தியிருந்தால் பசியின்றி நிம்மதியாக எழுதியிருப்பேன் என்பது உண்மையே! ஆனால், பணம் வந்து விட்ட தைரியத்தில் புத்தகம் தரமாக அமைந்திருக்காது. புத்தகத்தை எழுதி முடித்த பிறகு, உங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.
உலகம் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆண்டர்சனைப் போல
நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும். நம் வேலையை தரமாக முடித்துக் கொடுத்த பிறகே, கூலியை எதிர்பார்க்க வேண்டும்.
முதலில் கடமை... அடுத்து உரிமை... செய்வோமா!

No comments:

Post a Comment