Monday, May 7, 2012

கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்


கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் கூறுங்கள்.

எல்லா தெய்வங்களும் கும்பாபிஷேக நேரத்தில் சங்கமிக்கிறார்கள். தெய்வத்தின் சக்தியை வரவழைக்கும் அற்புத நிகழ்ச்சி அது. அந்நேரத்தில் தரிசித்தால், எல்லா தெய்வங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் கவலை நீங்கும். எண்ணியதெல்லாம் வெற்றி பெறும்.




நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது உண்மையா? சொர்க்கம் நரகம் போன்ற உலகங்கள் எங்கிருக்கின்றன?

எல்லா உலகங்களும் உங்கள் கண்ணெதிரிலேயே உள்ளன. அறிவாற்றலைப் பெருக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான். மனதை அடக்கும் சக்தி இல்லாவிட்டால் நாம் வாழும் சூழலே நரகமாகி விடுகிறது. பேரின்பநிலையை அடையும் வரை உயிர் வேறு வேறு உருவில் பிறப்பு, இறப்பை அடைந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில் பிறவிகளுக்கு எண்ணிக்கையே கிடையாது. ஏழு ஜென்மம் என்பது ஒரு வரையறைக்காக சொல்வதாகும். இவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு தேவையான அறிவாற்றல் பெற பக்தி செய்வதே நம் கடமையாகும்.

*பூஜையறையில் ஏற்றும் விளக்கை லட்சுமிவிநாயகர் போன்ற தெய்வ உருவம் பொறித்த பித்தளை தாம்பாளத்தின் மீது வைக்கலாமா?

கீழே தெய்வ உருவம் இருக்கும்போது அதன்மீது விளக்கேற்றி வைப்பது கூடாது. சாதாரண தாம்பாளத்தில் ஏற்றி வைக்கலாம். தெய்வ உருவம் பொறித்த தாம்பாளங்களில் பூ, பழம் வைத்து பயன்படுத்தலாம்.

* நாடிஜோதிடம் உண்மையா? அதில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்தால் குறை தீருமா?

நாடி என்ற சொல்லுக்கு காலஅளவு என்று பொருள். இந்த நாழிகையில் இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் இன்னின்ன நிகழ்வுகள் என்பதை தமது தவவலிமையால் வசிஷ்டர், அகத்தியர் போன்ற முனிவர்கள் நாடிஜோதிடத்தை எழுதி வைத்துள்ளனர். மனிதவாழ்வு மட்டுமின்றி இயற்கைநிகழ்வுகளான மழை, புயல், அமாவாசை, பவுர்ணமி, சூரியசந்திர கிரகணம் பற்றிய குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அதனால் நாடிஜோதிடம் உண்மையே. கஷ்டநிவர்த்திக்காக பரிகாரம் செய்வதும் சரியே. ஆனால், ஜோதிடர் நம்பகம் உள்ளவராக இருப்பது மிகமிகஅவசியம். ஒருசிலரின் தவறான போக்கால் ஜோதிடம் மூடநம்பிக்கையாகி விடுகிறது.



வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

No comments:

Post a Comment