Monday, September 23, 2013

பூஜை ஜபத்தின் போது மடி ஆசாரம் ஏன் பார்க்கப்படுகிறது??...

பூஜை ஜபத்தின் போது மடி ஆசாரம் ஏன் பார்க்கப்படுகிறது??...

மந்திர ஜபம் செய்யும்போது மனது ஒருமைப்பட்டு. மூச்சு மெலிந்து ஓட ஆரம்பித்தால் உடலில் காந்த மின் சக்தி {எலக்ட்ரோ மாக்னெடிசம்} பெருகும். அதனால் உள்ளடக்கப்படும் பிராணவாயுவின் இயக்கம் உடலின் கேந்திரப்பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு எத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் அ...வற்றைப் போக்கிவிடும் ஆனால் அப்படி நிகழ வேண்டுமானால் அந்த மின் சக்தி உடலில் தங்கிருக்க வேண்டும். மந்திர ஜபம் செய்ய கீழே அமரும்போது, அந்த மின் சக்தி பூமியால் ஈர்க்கப்பட்டு ஒழுகிவிடக்கூடும். அப்படி நேராமல் இருப்பதற்க்காகதான் மாந்தோல் அல்லது பலகையை மணையாகப் போடுகின்றனர். பஞ்சகச்சம் ஆடையை உடுப்பதும்கூட அந்த ஆடை உடுத்தும் முறையில் நுனி தொங்காது இருப்பதனால் மின் சக்தி தரையில் ஒழுகாது தடுக்கப்படும். அதேபோல மந்திர ஜபம் செய்யும் போது மற்றவர் யாரேனும் அவரை தீண்டினாலும் அக்கணமே அவர் மூலமாக இச் சக்தி தரையை நோக்கி நழுவி ஓடிவிடும். அதன் காரணமாக இந்த அடிப்படையில் ஏற்பட்டதுதான் என்னை தொடாதே என்று சொல்லிக் கொண்டு “ மடி “ என்ற ஆசாரத்தைக் கடைப்பிடிப்பதும்

No comments:

Post a Comment