Thursday, November 28, 2013

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 108 போற்றி போற்றி

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 108 போற்றி போற்றி


1. ஓம் அருள் தரும் கணபதி தாயே போற்றி
2. ஓம் அன்பின் உருவமே அங்காளியே போற்றி
3. ஓம் அருள்மிகு அங்காள அம்மனே போற்றி
4. ஓம் அகிலம் காக்கும் அன்னையே போற்றி
5. ஓம் அசுரரை அழித்த அங்காளியே போற்றி போற்றி!
6. ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி
7. ஓம் ஆதி சங்கரன் தேவியே போற்றி
8. ஓம் ஆனந்த அறிவொளி அன்னையே போற்றி
9. ஓம் ஆதிக்கம் அனைத்தும் நீயே போற்றி
10. ஓம் ஆக்கும் சக்தியே அங்காளியே போற்றி! போற்றி
11. ஓம் இருளும் ஒளியும் ஆனாய் போற்றி
12. ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி
13. ஓம் இணையிலா ஈஸ்வரி தாயே போற்றி
14. ஓம் இன்பச் சுமையை ஏற்றுவாய் போற்றி
15. ஓம் இயக்கும் சக்தியே அங்காளியே போற்றி! போற்றி
16. ஓம் ஈசனின் பிரம்மை நீக்கினாய் போற்றி
17. ஓம் ஈசனின் பாதியே இறைவி போற்றி
18. ஓம் ஈடில்லா தெய்வம் ஈஸ்வரியே போற்றி
19. ஓம் ஈகை குணவதி தாயே போற்றி
20. ஓம் ஈசன் துணைவி அங்காளியே போற்றி! போற்றி
21. ஓம் உலகை படைத்த உமையே போற்றி
22. ஓம் உடுக்கை ஒலியில் வருவாய் போற்றி
23. ஓம் உடனிருந்து காப்பாய் அன்னையே போற்றி
24. ஓம் உள்ளத்தில் இருக்கும் தாயே போற்றி
25. ஓம் உன்னையே தொழுவோம் அங்காளியே போற்றி! போற்றி
26. ஓம் ஊழி பலகண்ட உமையே போற்றி
27. ஓம் ஊடல் நாயகி தாயே போற்றி
28. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
29. ஓம் ஊழ்வினை ஒழிக்கும் அம்மையே போற்றி
30. ஓம் ஊக்கம்  அளிப்பாய் அங்காளியே போற்றி! போற்றி!
31. ஓம் எம்குல தெய்வம் இறைவி போற்றி
32. ஓம் எளிமையின் தோற்றமே தாயே போற்றி
33. ஓம் எங்கள் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி
34. ஓம் எதையும் தாங்கும் இதயமே போற்றி
35. ஓம் எங்கள் அங்காள அம்மனே போற்றி! போற்றி
36. ஓம் எங்கும் எங்களைக் காப்பாய் போற்றி
37. ஓம் ஏக்கம் தீர்க்கும் இறைவி போற்றி
38. ஓம் ஏழைக்கு இரங்கும் அம்மையே போற்றி
39. ஓம் ஏட்டில் எழுத்தான ஈஸ்வரி போற்றி
40. ஓம் ஏகாந்த ரூபிணி அங்காளியே போற்றி! போற்றி!
41. ஓம் ஐயன் சிவனை படைத்தாய் போற்றி
42. ஓம் ஐயம் அகற்றும் அம்மையே போற்றி
43. ஓம் ஐம்புலன் சக்தியும் நீயே போற்றி
44. ஓம் ஐம்பூதம் படைத்த தேவியே போற்றி
45. ஓம் ஐஸ்வரியம் தருவாய் அங்காளியே போற்றி! போற்றி!
46. ஓம் ஒரு போதும் நான் உனை மறவேன் போற்றி
47. ஓம் ஒப்பில்லா தாயே நீயே போற்றி
48. ஓம் ஒழுக்கம் அருளும் அன்னையே போற்றி
49. ஓம் ஒலி ஒளியான அம்மையே போற்றி
50. ஓம் ஒடுக்குவாய் ஆணவத்தை அங்காளியே போற்றி! போற்றி!
51. ஓம் சக்தியே நீயே போற்றி
52. ஓம் ஓமெனும் மந்திரம் படைத்தாய் போற்றி
53. ஓம் ஒட்டிடும் எம்துயர் அன்னையே போற்றி
54. ஓம் ஓதியே துதிப்போம்  தாயே போற்றி
55. ஓம் ஓங்கார ரூபிணி அங்காளியே போற்றி! போற்றி!
56. ஓம் கனகவல்லி தாயே போற்றி
57. ஓம் கலையின் உருவமே நீயே போற்றி
58. ஓம் கர்ம வினைகளை நீக்குவாய் போற்றி
59. ஓம் கணேசரை ஈன்ற ஈஸ்வரி போற்றி
60. ஓம் கல்லிலே உயிரான அங்காளியே போற்றி! போற்றி!
61. ஓம் காற்றும் கடலும் ஆனாய் போற்றி
62. ஓம் கார்மேக மழையே போற்றி
63. ஓம் காந்திமதி தாயே போற்றி
64. ஓம் காட்சி அளிக்கும் அம்மையே போற்றி
65. ஓம் காக்கும் அங்காள பரமேஸ்வரியே போற்றி! போற்றி!
66. ஓம் சங்கரி சாம்பவி அம்மையே போற்றி
67. ஓம் சஞ்சலம் தீர்க்கும் தாயே போற்றி
68. ஓம் சங்கடம் நீக்கும் அன்னையே போற்றி
69. ஓம் சப்த ரிஷிகளின் நாயகியே போற்றி
70. ஓம் சர்வ மங்கள அங்காளியே போற்றி! போற்றி!
71. ஓம் சாந்த வதியான அம்மையே போற்றி
72. ஓம் சாமந்தி மலர்மாலை சூடுவாய் போற்றி
73. ஓம் சாந்தி அளிக்கும் அன்னையே போற்றி
74. ஓம் சாமுண்டி ஈஸ்வரி தாயே போற்றி
75. ஓம் சாதனை படைத்த அங்காளியே போற்றி! போற்றி!
76. ஓம் சிவலோக நாயகி போற்றி
77. ஓம் சிவகாம சுந்தரி அன்னையே போற்றி
78. ஓம் சிவனின் பாதி ஆனாய் போற்றி
79. ஓம் சிவசக்தி தாயே நீயே போற்றி
80. ஓம் சிம்ம வாகினி அங்காளியே போற்றி! போற்றி!
81. ஓம் சீற்றம் தணிக்கும் தாயே போற்றி
82. ஓம் சுந்தர வல்லி அம்மையே போற்றி
83. ஓம் குங்கும ரூபிணி அம்மையே போற்றி
84. ஓம் செல்வ செழிப்பின் அரசியே போற்றி
85. ஓம் சேனைத் தலைவி அங்காளியே போற்றி! போற்றி!
86. ஓம் சைவ நெறி கண்ட ஆத்தாளே போற்றி
87. ஓம் சொக்க நாதனின் துணைவியே போற்றி
88. ஓம் ஞானாம்பிகை தாயே போற்றி
89. ஓம் ஞானச் சுடர் ஒளி ஆனாய் போற்றி
90. ஓம் ஞானம் அளிக்கும் அங்காளியே போற்றி! போற்றி!
91. ஓம் தமிழர் குல தெய்வமே போற்றி
92. ஓம் தன்னிகர் இல்லாத தாயே போற்றி
93. ஓம் தாண்டவ ஈஸ்வரி அன்னையே போற்றி
94. ஓம் திரிபுர சுந்தரி அன்னையே போற்றி
95. ஓம் தீந்தமிழ் அங்காள பரமேஸ்வரியே போற்றி! போற்றி!
96. ஓம் தென்னவன் தேவி நீயே போற்றி
97. ஓம் தேன்மொழி அம்மை தாயே
98. ஓம் தையல் நாயகி அம்மையே போற்றி
99. ஓம் நடமாடும் கலியுகக் கடவுளே போற்றி!
100. ஓம் நல்லதை செய்யும் அங்காளியே போற்றி! போற்றி!
101. ஓம் பக்தர் குறைகளை நீக்குவாய் போற்றி
102. ஓம் பார்வதி அம்மை தாயே போற்றி
103. ஓம் பெரியபாளைய ஆத்தாளே போற்றி
104. ஓம் பொற்கொடி அம்மை நீயே போற்றி
105. ஓம் மலையனூர் அங்காள அம்மையே போற்றி! போற்றி!
106. ஓம் மாயா சொரூபிணி நீயே போற்றி
107. ஓம் மலையரசன் மகளே போற்றி
108. ஓம் புட்லூர் அங்காள பரமேஸ்வரி போற்றி! போற்றி

No comments:

Post a Comment