Friday, November 8, 2013

பிராமணர் மட்டும்தானா உலகில் ஆசாரம் உள்ளவர்கள்

!பிராமணர் மட்டும்தானா உலகில் ஆசாரம் உள்ளவர்கள். ஏனைய குலத்தவர் ஆசாரம் இல்லாதவர் என்று எப்படிச் சொல்லலாம்? ஏனைய குலத்தவரை தாழ்வாக சொ்ல்லலாமா?
 
 ஆதிசங்கரர் முன்பாக சிவபெருமான் தாழ்ந்த புலையர் குலத்தவன் போன்ற தோற்றத்துடன் வரும்போது, "தள்ளிநில் கிட்டவராதே" என்று ஆதிசங்கரர் என்னும் பிராமணர் சொல்கிறார். அப்போது சிவபெருமான் கேட்கிறார் "நீ தாழ்வு எனக்கருதுவது அழிகின்ற இந்த உடலையா அல்லது என்றும் நித்தியமான உயிரையா என்று. அதன் அர்த்தத்தை உணர்ந்த ஆதிசங்கரர் புலையன்வேடத்தில் இருந்த சிவனின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார். இறை அவதாரங்களே சாதிவேற்றுமையின்றி அனைவரையையும் தீண்டிய வரலாறுகள் உண்டு. ஆசீர்வாதம் செய்யும்போதும் குழந்தைக்கு சடங்குகள் செய்யும்போதும் பிராமணர் மற்ற ஜாதியினரை தீண்டத்தானே வேண்டும்

No comments:

Post a Comment