.
புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை
ஒரு பெண் கருத்தரித்து, அக்கரு நல்ல முறையில் வளர்ந்து, அவளுக்கு சுகப்பிரசமாகி ...குழந்தை ஆரோக்கியமாக ஜனிக்கும் வரை பல விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டது. கடவுள் நம்பிக்கையின்றி தான்தோன்றித் தனமாக திரிபவர்கள கூட, இந்த காலகட்டங்களில் இறைவனே கதியென்று அவனை சரணடைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தாய்மையடைந்து கருவை சுமக்கும் அந்த 10 மாத காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தாய் சொல்வது, செய்வது, கேட்பது, புசிப்பது, என அனைத்தும் அக்குழந்தையை பாதிக்கும். எனவே கருவுற்ற தாய்மார்கள் நல்லதையே கேட்கவேண்டும். நல்லதையே படிக்கவேண்டும். நல்லதையே பேசவேண்டும். கோவில் மேல தாள சத்தங்கள், பக்தர்களின் குரல், மங்களச் சொற்கள், பஜனைகள், கோவில் மணியோசை, பசுக்கள் குளம்படி சத்தம், குழலோசை, மிருந்தங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்களின் சப்தங்கள், கதா காலக்ஷேபம், பக்தி பேருரை, உள்ளிட்டைவைகளை கருவுற்ற தாய்மார்கள் கேட்டுவந்தால் குழந்தை ஆரோக்கியத்துடனும் ஐம்புலன்களும் செம்மையாக அமையப்பெற்று பிறக்கும். விதிவசத்தால் அல்லது வேறு காரணங்களினால் (காதல் திருமணம் etc.) இவைகள் சரியாக அமையப்பெறாத கருவுற்ற தாய்மார்கள் உண்டு. நாம் பட்டியலிட்டிருக்கும் இது போன்ற சூழ்நிலைகள் சௌகரியமாக அனைத்து பெண்களுக்கும் அமைவதில்லை. கருவுற்ற காலத்தில் குடும்பப் பிரச்னைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக சரியான சத்தான உணவைக் கூட சாப்பிட இயலாத பல தாய்மார்கள் உள்ளனர். இது போன்ற நல்ல விஷயங்களில் நாட்டமிருந்தும் அவற்றுக்கு செல்ல முடியாமல் சூழ்நிலை கைதியாய் வாழும் தாய்மார்களும் உண்டு. திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை? இப்படிப்பட்டவர்கள் அனைவரும் அன்னை கர்ப்பரக்ஷாம்பிகையையே உற்ற துணையாக மனதில் கொண்டு அவளை தினசரி பூஜித்து வரவேண்டும். சோதனை அனைத்தும் நன்மைக்கே என்கிற திடசிந்தனையை வளர்த்துகொள்ளவேண்டும். தாயின் மனோதிடம் மற்றும் தெய்வ நம்பிக்கை சிசுவுக்கு சென்று அனைத்தையும் வெல்லும் ஆற்றல் உடைய குழந்தை அவர்களுக்கு பிறக்கும். கவலை வேண்டாம். இந்த பதிவில் அன்னை கர்பரக்ஷாம்பிகை தொடர்புடைய இரண்டு கதைகளை தந்திருக்கிறோம். இதை படிக்கும் நம் வாசகர்கள் கருவுற்ற தாய்மார்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு இந்த கதைகளை கூறி ஸ்ரவணத்தின் புண்ணியத்தை (இறைவனின் பெருமையை கேட்பது) அவர்களுக்கு அளித்து தாங்களும் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம். பாண்டவர்களின் வம்சத்தை அழியாமல் காத்த அன்னை குருஷேத்திர போரின் இறுதி கட்டத்தில் துரியோதனன் வீழ்ந்து கிடந்தான். அவன் உயிர் கொஞ்சகொஞ்சமாக போய்க்கொண்டிருக்கிறது. கௌரவர்களின் குல குருவான துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் துரியோதனனுக்கு ஏற்பட்ட நிலை கண்டு வருந்தினான். துரியோதனன் பக்கம் நியாயம் இல்லை என்பதை அவன் அறிந்திருந்தாலும் கர்ணனைப் போல செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவேண்டியே அவன் கௌரவர்கள் பக்கம் இருந்தான். தன்னை சந்திக்க வந்த அஸ்வத்தாமனிடம், பாண்டவர்களின் வம்சத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான் துரியோதனன். அதை கேட்டுக்கொள்ளும் அஸ்வத்தாமன், பாண்டவ புத்திரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களை வெட்டி வீழ்த்துகிறான். தங்கள் புத்திரர்கள் தூங்கும்போது படுகொலை செய்யப்பட்டிருப்பதை காணும் பாண்டவர்கள் அஸ்வத்தாமன் தான் அதை செய்தான் என்பதை அறிந்து அவனை தேடிச் சென்று அவன் மீது போர் தொடுக்கின்றனர். நேருக்கு நேர் போர் தொடுக்க முடியாத அஸ்வத்தாமன், ஆதிபராசக்தியின் அழிக்கும் சக்தியை மந்திரித்து அதை ஒரு தரப்பை புல்லின் மீது ஏவி, பாண்டவர்களின் ஒட்டுமொத்த வம்சத்தையும் அழித்துவிட்டு வரும்படி கட்டளையிடுகிறான். அது பாண்டவர்களின் ஒட்டுமொத்த வம்சத்தையும் அழித்துவிடுகிறது. தப்பிப்பது அர்ஜூனனின் மகன் அபிமன்யூவின் மனைவி உத்தரையின் கருவில் இருக்கும் சிசு மட்டும் தான். உத்தரை தீவிர தேவி உபாசகி. திருமணத்தன்றே பகவான் கிருஷ்ணன் அவளுக்கு அன்னை காத்யாயினியை உபாஸிக்கும் மந்திரம் ஒன்றை உபதேசித்திருந்தான். போரில் அபிமன்யூ சக்கர வியூகத்தினின்று வெளியே வர இயலாமல் கொல்லப்பட்டுவிட, தனது கருவில் இருக்கும் அபிமன்யூவின் வாரிசை காக்க வேண்டி அன்னையை தினசரி வணங்கி வந்தால் உத்தரை. பாரதப் போரில் எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று கிருஷ்ணர் சங்கல்பித்திருந்தபடியால், அவரால் அஸ்வத்தாமன் ஏவிய தர்பாஸ்திரத்தை தடுக்கமுடியவில்லை. தான் செய்த சங்கல்பத்தை காக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவனுக்கு தர்மத்தை காக்கவேண்டிய நிர்பந்தமும் உண்டல்லவா? உத்தரையின் கருவில் இருக்கும் சிசுவை காக்க உறுதி பூண்டான். கண்ணனின் வேண்டுகோளின் படி, சிசு இருக்கும் இடத்தில் அன்னை காத்யாயினி தான் சென்று அமர்ந்துகொள்ள, சிசுவை தாக்க வரும் தர்பாஸ்திரம் மந்திரமே வடிவமாயுள்ள அன்னையை என்ன செய்ய முடியும்? தர்ப்பாஸ்திரம் செயலிழந்துவிடுகிறது. அஸ்திரம் செயலிழந்தவுடன் மீண்டும் அன்னை சிசுவை அந்த இடத்தில் வைத்துவிட்டு தான் வெளியே வந்துவிடுகிறாள். அந்த சிசு யார் தெரியுமா? பரீக்ஷித்து மகராஜன்! உத்தரையின் கருவை காத்த அந்த அன்னை தான் திருக்கருகாவூரில் எழுந்தருளியுள்ள கர்பரக்ஷாம்பிகை! பாண்டவர்களின் வம்சத்தை அழியாமல் காத்த அன்னை ஆதலால் இவள் கருகாத்த நாயகி!! ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத் கருவுற்ற தாய்மார்கள் மேற்படி காயத்ரி மந்திரத்தை ஜெபித்துவந்தாள் சுகப் பிரசவம் உண்டாகும். உலகிற்கு முன் தோன்றியவள் இவள்! வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் பால்நிறமு மாம் பரஞ் ஜோதி தானாம்” என்று திருநாவுக்கரசர் ‘கருவாய் உலகுக்கு முன்னே தோன்றிய’ திருக்கருகாவூர் தலத்தைப் பாடியுள்ளார். முன் காலத்தில் முல்லை வனம் என்று இத்தலம் போற்றப்பட்டது. மகரிஷிகள் சிலர் தவம் செய்த போது அவர்களுக்கு நித்துருவர் என்பவரும் அவர் மனைவி வேதிகை என்பவரும் அவர்களுக்கு பணிவிடைகள் செய்துவந்தனர். வேதிகை தங்களுக்கு புத்திரபாக்யம் கிடைக்க வேண்டுமென்று, முல்லைவன நாதரை வழிபட்டாள். இறையருள் கூடியது. வேதிகை கருவுற்றாள். கருவுற்ற வேதிகை தனித்திருந்த சமயத்தில் கர்ப்ப வலியால் மயக்கமுற்று சுயநினைவிழந்து இருந்தபோது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்க மயக்கமுற்ற வேதிகையால் பிச்சையிட முடியவில்லை. இதை அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. உடனே அவள் முல்லைவனக் கோவிலுக்குச் சென்று அம்பிகை முன்பு மனமுடைந்து கதறி அழுதாள். வேதிகையின் கருவைக் காக்க, தேவி, அவள் முன்பு தோன்றினாள். “வேதிகை! வருந்த வேண்டாம். உன் கருவை ரக்ஷிப்பது இனி என்பணி” என்று தேவி அருள் செய்தாள். வேதிகையின் கருவை குடமொன்றில் வைத்துப் பாதுகாத்த அம்பாள் உரிய காலத்தில் கரு குழந்தையானதும் வேதிகையிடம் அளித்து, அவளை ஆனந்தப் பரவசமடையச் செய்தாள். “தேவி! என் கருவைக் காத்து ரக்ஷித்ததுபோல் உலகத்தில் கருவுற்ற எல்லாப் பெண்களையும் அவர் தம் குழந்தையையும் காக்க வேண்டுமம்மா!” என்று வேதிகை வேண்ட தேவியும் ‘அவ்வாறே ஆகுக’ என்று அபயக்கரம் காட்டினாள். முல்லை வனம் திருக்கருகாவூர் என்றும் தேவியின் திருநாமம் கர்ப்பரக்ஷாம்பிகை என்றும் பெயர் பெற்றன. அன்னை அருள்பாலிக்கும் இவ்வூரில் இதுவரை எந்த கர்ப்பிணிக்கும் கருச்சிதைவு என்பதே இல்லை. Karparakshambigai Thirukkalyanamஅருள்மிகு முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரக்ஷாம்பிகை திருக்கோவில் அமைந்த திருக்கருகாவூர் பாடல் பெற்ற தலம். இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகிலே அமைந்துள்ளது. முல்லைக் காடாக இருந்த இடத்திலே, சுயம்புவாகத் தோன்றியவர் முல்லைவனநாதர். ஆதிகாலம் தொட்டே, இயற்கைச் சீற்றம், போர்க்காலம் போன்ற துயர் சூழ்ந்த போது, கருவுற்ற பெண்கள் இக்கோவிலில் தங்கியிருந்திருக்கிறார்கள். இன்றும் கருத்தரித்த பெண்களின் கருவைக் காக்கும் கருணைத் தாயாக தேவி இக்கோவிலில் அருள் பாலிக்கிறாள். கருக்காத்த நாயகியாக கர்ப்பரக்ஷாம்பிகை தனிச்சந்நிதியில் அருட்கோலத்துடன் வீற்றிருக்கிறாள். குழந்தை நைந்துருவனுக்கு தாய்பால் இல்லாமல் அவன் ஒரு நாள் அழ, உடனே அன்னை காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச்செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியை கீறவும் பால்குளம் தோன்றியது. அது ஆலயத்திற்கு முன்புறம் ஷுரகுண்டம் என்று இன்றும் இருக்கிறது. அதனால்தான் இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது. கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஆகிறது. இங்கு குடிகொண்டிருக்க்கும் கருக்காக்கும் நாயகியை பூஜிக்க வருகிற இளம் தம்பதிகள் எண்ணற்றோர். கரு உருவாகவும் உருப்பெற்ற கரு நிலைத்து சுகப்பிரசவம் ஏற்படவும் உறுதுணை புரிகின்ற கர்ப்பரக்ஷாம்பிகையைத் தொழுது துதிப்பதற்காக வருகிற பெண்களுக்கு, பிரசாதமாக நெய் வழங்கப்படுகிறது. பிரசாத நெய்யை நாற்பத்தி எட்டு நாள்கள் பக்தி சிரத்தையுடன் உண்டு வருபவர்களுக்கு கரு உண்டாகிறது. உண்டான கரு, நல்ல முறையில் பிறக்கவும் அருள் கிடைக்கிறது. “ஹமவத் யுத்தரரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிய பேது |” என்னும் சுலோகத்தை கருத்தரித்த பெண்கள் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் கூறிவரவேண்டும். தமிழ்நாட்டின் திருக்கருகாவூரில் வெட்டாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது. இத்திருக்கருகாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலும் கும்பகோணத்திற்கு தென்மேற்கே இருபது கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரு உண்டாவதற்கு அம்பாள் பாதத்தில் நெய் பிரசாதம் வைத்து மந்திரிக்க வேண்டும். மந்திரித்த நெய் பிரசாத்துடன் அறை கிலோ சுத்தமான நெய் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த நெய்யை தினமும் இரவு தூங்கச்செல்லும் முன், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளை நினைத்து வணங்கி தம்பதிகள் சாப்பிடவேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். கணவனால் தினமும் நெய் சாப்பிடமுடியாவிட்டாலும் மனைவி சாப்பிட்டுவரவும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் மற்றும் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதனையும் சாப்பிடலாம். பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்கள் நெய் சாப்பிடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளின் அருளால் மகப்பேறு உண்டாகும். நேரில் வர இயலாத வெளியூர் அன்பர்கள் ஆலய நிரவாகிக்கு நூறு ரூபாய் மணியார்டர் மூலம் அனுப்பி தபால்மூலம் மந்திரித்த நெய் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம். சுகப்பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்தல் கர்ப்பினி பெண்கள் சுகப்பிரசவம் அடைய இத்திருக்கோயிலின் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இந்த விசேஷமான எண்ணெய்… பிரசவ வலி ஏற்படும்போது கர்ப்பிணியின் வயிற்றில் தடவினால் எந்த விதமான கோளாறுகளோ பேறு கால ஆபத்துகள், பின்விளைவுகள் இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும் என்பது நெடுங்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கை இதுவரை வீண் போனதில்லை என்கிறார்கள் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள். திருக்கருகாவூர் தலத்தின் நாயகி வரப்ரஸாதி. அவளுடைய அருளைப் பெற்றால் விவாகப் பிராப்தி கிட்டும். தேக ஆரோக்யம் பெறலாம். புத்திர பாக்கியத்தையும் வேண்டுவோர்க்கு நல்குவாள். சௌபாக்யங்களையும் வழங்குவாள். தர்மத்தைக் காக்கும் தலைவியாக, தாயாக, கருவைக் காக்கிற கர்ப்பரக்ஷாம்பிகையை, திருக்கருகாவூரில் தரிசித்து வரம் பெறலாம். திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம். *மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர். *தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும். *இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். குழந்தை பாக்கியம் பெற கீழ்கண்ட ஸ்லோகத்தை பக்தியுடன் தினமும் அம்பாளை நினைத்து கூறி வரவும்: ஸ்ரீ மத்கல்பக விக்நராஜபிமலம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம்பிகை ஸூரனும் வ்ருத்தகாவேர ஜவர நதீ கூலேஸ் திதிம் தக்ஷிணே பக்தாநாம் அபய ப்ராதந நிபுணம் ஸ்ரீ மாதவீ காநந÷க்ஷத்ரஸ்தம் ஹ்ருதிபாவயே கஜ முகம் விக்நோபசாந்த்யை ஸதா !! காவேர ஜாததட தக்ஷிணா சாஸ்தி தா லயஸ்தாம் கருணாஸ்பூர்ணாம் !! ஸ்பாத பத்மாச்ரித பக்த தாரா கர்பாவனே தக்ஷத ராம்நமாமி ஸ்ரீமல்லிகாரண்யபதே ஹ்ருதிஸ்தாம் ஸ்ரீ மல்லிகா புஷ்ப லஸத் கசாட்யம் ஸ்ரீ மல்லிகா புஷ்ப ஸீபூஜி தாங்கரீம் ஸ்ரீ மல்லிகாரண்ய கதாம் நமாமி பக்தாவளி நாம் அபய ப்ரதாத்ரீம் ரிக்தாவளீனாம் அதிவித்த தாத்ரீம் சாக்தாவளீனாம் ஸூகமோக்ஷதா த்ரீம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம் அஹமாச்ரயேம்பாம் !! பக்தி ப்ரதானா வனபக்த தீஷா ஸ்த்ரீ கர்ப்பரக்ஷõக ரணே திதிக்ஷõ ! பக்தாவனார்த்தம் ஜித சத்ரு பக்ஷõ விபாதி பர்த்ரா ஸஹ கர்பரக்ஷ காவேர ஜாதா வரதீர ராஜத் ப்ரஸித்த தேவாலயகா பவாநீ ! ஸ்ரீ மல்லிகா காநாந நாத பத்னீ ஸர்வான் ஜனான் ரக்ஷது கர்பரக்ஷõ ஸ்ரீ மல்லிகாரண்ய பதிப்ரியாம் தாம் வித்யுல்லாதாப ஸ்சரீரகாந்திம் உத்புல்ல பத்மாப் பதாப்ஜயுக்மாம் ஸ்ரீ கர்பரக்ஷõம் சரணம் ப்ரபத்யே யாகர்பரக்ஷõ கரணேப்ரஸித்தா ஸூபுத்ர தாநேபி மஹாப்ரஸித்தா ஸர்வேஷ்ட தாநேப்யதி ஸுப்ரஸித்தா தாம் கர்பரக்ஷõம் சரணம் ப்ரபத்யே ஸ்வல்பம் க்ருஹீத்வா நிஜபக்தவர்காத் அனல்பவித்தம் ப்ரததாதி யாம்பா லக்ஷ்மீ பதேர் ஸூப்ரிய ஸோதரீயா தாம் கர்பரக்ஷõம் சரணம் ப்ரபத்யே காவேர ஜாஸேசித பாதபத்மாம் காவேர ரனே கார்த்தத வாக்ப்ர தாத்ரீம் குபேரமித்ராங்க கதாம் பவானீம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம் ப்ரணமாமி நித்யம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம்புர ஸம்ஸ்திதாநாம் பக்தோத்தமானாம் தநதான்ய தாத்ரீம் தீர்காயுராரோக்ய ஸூகப்ரதாத்ரீம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம் ப்ரணதோஸ்மி நித்யம் அனந்தகல்யாண குணஸ்ரூபாம் ஸ்ரீமத் சிதாநந்த ரஸஸ்ரூபாம் ப்ராண்யந்த ரங்கஸ்த குஹாந்த ரஸ்தாம் ஸ்ரீ கர்ப்பரக்ஷõம் ப்ரணதோஸ்மி நித்யாம்
No comments:
Post a Comment