Thursday, November 21, 2013

விநாயகர் பெருங்கதை விரத நூலில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள்

விநாயகர் சஷ்டி விரதம் என அழைக்கப்படும் பிள்ளையார்பெருங்கதை விரதம் எமது கோவிலில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இருபத்தியொரு நாட்களும் பிள்ளையார் பெருங்கதை எனும் யாழ்பாணத்து சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய நூல் பாராயணம் செய்யப்படுகின்றது. சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் அனைவரும் வந்து இப் பெருங்கதை புராணத்தை படித்தும் கேட்டும் துதித்தும் வளம் பெறுகின்றனர்.

இப்பெருங்கதை விரத நூலில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்களை நாம் நோக்குமிடத்து அதன் சாராம்சங்களை பின்வருமாறு காணலாம்.

1.சிவபெருமான் உமாதேவியார் திருமணம்...
2.விநாயகப்பெருமானின் தோற்றம்
3.விநாயகப்பெருமான் தீமைகளை அழித்தல் (அசுர வதம்)
4.ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியின் மகத்துவம்
5.விநாயகர் சஷ்டி விரதம் அதாவது விநாயகர் விரதம் தோன்றிய விதம்
6.விநாயகர் விரத மகிமைகள்
7.சரவணபவனின் தோற்றம், சூரசம்ஹாரம்
8.மகாவிஷ்ணு விநாயகவிரதம் நோற்று சாபவிமோஷம் அடைதல்
9.உமை அம்மையார் விநாயகவிரதம் நோற்றல்
10.விநாயக விரதம் ஏற்று அதனை அலட்சியம் செய்வதால் ஏற்பட்ட தீமைகளும் அதனை அவ்வையார் தீர்த்து வைத்தல் என்பன அடங்குகின்றன.

முழுமுதற்கடவுளாம் கணபத்தக்கு இவ் இவ்விருபத்தியொரு நாட்களும் சிறப்பானவையகும். இந்த நாட்ளில் ஒரு வேளை மட்டும் உண்டு ஒவ்வொரு கணமும் 'ஓம்' எனும் மந்திரத்தை மனதில் நிறுத்தி விநாயகருக்கு பிடித்தமான உண்டிகளை பரவி அவரின் திருவடிகளை தியானிக்க நாம் நினைத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்

No comments:

Post a Comment