Tuesday, November 12, 2013

பலன் கருதாமல் பணி செய்வது எப்படி?

பலன் கருதாமல் பணி செய்வது எப்படி? சம்பளம் வாங்காமல் வேலை செய்ய வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

தாய் தனது குழந்தையை வளர்க்கும் முறையை எடுத்துக்கொள்வோம்.
எதிர்காலத்தில் குழந்தை தன்னை கவனிக்க வேண்டும் என்று பிரதிபலனை எதிர்பார்த்து தனது குழந்தையை வளர்க்க கூடாது.
நம்மிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் தான் துன்பங்கள் வருகின்றன.எனது மகனை எவ்வளவு செல்லமாக வளர்த்தேன் இப்போது என்னை மதிக்கமாட்டேங்கிறது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள்....
குழந்தையை வளர்க்கும் போதே அதனுடன் நமது ஆசைகளையும்,எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே வளர்க்கிறோம்.

இதே போல மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்புகிடைத்தால் பிரதிபலனை எதிர்பாராமல் உதவ வேண்டும்.

எனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறோம்,இப்போது அனைத்துயும் மறந்துவிட்டு நன்றிகெட்டவர்கள் ஆகிவிட்டார்களே என்று பலர் புலம்புகிறார்கள்.நாம் உதவி செய்தது போல அவர்களும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது தான் துன்பத்திற்கு காரணம்.

ஒரு அலுவலகத்தில் ஒருவன் சிறப்பாக பணியாற்றுகிறான்.தனது பணியை கண்டு உயர்அதிகாரிபோ அல்லது முதலாளியோ தன்னை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.ஒரு வேளை அந்த முதலாளி இவளது நேர்மையான கடினஉளைப்பை கண்டு கொள்ளாமல் இருந்தாலோ அல்லது ஏதோசிறு தவறை சுட்டிக்காட்டி அதை பெரிதுபடுத்தி பேசினாலோ மனம் வேதனையடைகிறது. மற்றவர்கள் சரியாக வேலை செய்வதில்லை அதை யாரும் கண்டு கொள்வதில்லை,சிறப்பாக வேலை செய்யும் என்னை அவமதிக்கிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது.தன்னை மற்றவர்கள் கௌரவப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் இந்த துன்பத்திற்கு காரணம்.

கடமையை சிறப்பாக செய்.அதன் பலனை எதிர்பார்க்காதே.
ஒரு வேளை உனது சிறந்த செயலை பலர் பாராட்டலாம்.அப்போது அதில் மதிமயங்கிவிடாதே. ஒரு வேளை பலர் இகழலாம்,அப்போது துன்பத்தில் துவண்டுவிடாதே. நடுநியோடு இரு.

No comments:

Post a Comment