Monday, November 18, 2013

தீபம் ஏற்றும் முறைகள்

தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் மறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு1/ ஏழு தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளிற்கு 5 ,நாகஅம்மனுக்கு 4 தீபம், சிவனிற்கு 3 /9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மஹா லஷ்மிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். தீபங்கள் வாகனங்களுக்கு முன்பாக ஏற்றவேண்டும்.

சிவன் கோயிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் சிங்கம்/ நந்தி முன்பாக, பிள்ளையார் பெருச்சாளி முன்பாக, பெருமாள் கருடன் முன்பாக, முருகர் மயில் முன்பாக ஏற்ற வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்ற வேண்டும்.

தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment