Thursday, November 7, 2013

காக்கை குருவி எங்கள் ஜாதி

"அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்து..ன்னு அர்த்தம். நம்ம பித்ருக்கள் எல்லாருமே காக்கா ஸ்வரூபமா வர்றதா ஐதீகம்! கா....கா......ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலாமோல்லியோ? அதுமட்டுமில்லே...பகவான் எல்லா ஜந்துக்கள்கிட்டயும் ஆத்மாவா இருக்கான். காக்காய்க்குள்ளேயும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணறச்சே... அவன் சாப்டறதை நம்மளால பாக்க முடியலே! அவனே காக்காயா வந்து, நாம போடற சாதத்தை சாப்பிடறச்சே, நம்மளால பாக்க முடியறது. ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா,காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவுது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"

அத்வைதம் இத்தனை எளிதா? அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா! அதைத்தான்
மஹாகவி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று அனுபவத்தில் பாடியிருக்கிறார்

No comments:

Post a Comment